🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
18. அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 17
அதிகாரனின் அகிம்சா
📖 அதிகாரனின் அகிம்சா · Chapter 18 of 46

அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 17

  • 1 Oct 2026
  • 87 reads
  • ★ 4.7 (3)
  • 9 min read

Epi -17 

நாகா காரை நிறுத்திவிட்டு, அதர்வனை ஒருவிதத் தயக்கத்துடன் பார்த்தான். அதர்வன் நேர்த்தியாகக் காரிலிருந்து இறங்கிக்கொண்டு, “நாகா, ரெண்டு ஆட்களை ரெடி பண்ணி சசிரேகாவுக்கு பாடிகார்ட் போடு. அவள் எங்கே போனாலும் அந்த ஆளுங்க எப்பவும் வாட்ச் பண்ணணும். அவளுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது,” என்று உத்தரவிட்டுவிட்டு நடந்தான்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“அதர்வன் சொல்றது உன்னோட நல்லதுக்குத்தான் அகிம்சா… அவன் பேச்சைக் கேள்,” என அறிவுரை கூறியபடி, அவளை வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள் சசிரேகா.

வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த அந்த நொடிதான் மூவரும் கவனித்தார்கள்; மொத்தக் குடும்பமும் அங்கே கூடி நிற்க, சூர்ய நாராயணன் நடுகூடத்தில் அமர்ந்திருந்தார். அந்த இடமே ஒரு பிரம்மாண்டமான, அச்சுறுத்தும் அமைதியில் மூழ்கியிருந்தது.

அகிம்சாவுக்கு இந்த வீட்டிற்கு வரவே சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவள் எவ்வளவோ மறுத்தும், வம்படியாக இழுத்து வந்துவிட்டான் அதர்வன்.

கோபத்தின் உச்சத்தில் நரம்புகள் புடைக்கக் காத்திருந்தார் சூர்ய நாராயணன். அவரது கால்கள் தாளமிட்டபடி இருந்தன. அத்தனை கட்டுக்கடங்காத கோபம் மகன் மீது! கடந்த மூன்று நாட்களாக ‘Flash Daily’ பிரஸ் ஆபீஸ் பக்கம் அதர்வன் எட்டிப்பார்க்கவே இல்லை. பத்திரிகை சாம்ராஜ்யத்தின் தினசரிப் பணிகளும், முக்கிய நிர்வாக முடிவுகளும், அச்சுக்கூடத்தின் அடுத்தகட்டத் திட்டங்களும் அப்படியே ஸ்தம்பித்துப் போயிருந்தன.

நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இயங்கும் அந்த ஊடக நெட்வொர்க்கின் மொத்தப் பொறுப்பும், இந்த வயதில் மீண்டும் சூர்ய நாராயணனின் தலையிலேயே வந்து விழுந்திருந்தது. தொழில் வாழ்க்கையில் எதையும் மிக நேர்த்தியாக, ஒரு சாணக்கியத்தனத்துடன் கையாளுபவருக்கு, மகனின் இந்தத் திசைமாறிய நடத்தையும், பொறுப்பற்ற அலட்சியமும் அத்தனை ஆத்திரத்தைக் கொடுத்தன.

அதுமட்டுமன்றி, ஏற்கனவே அகிம்சா சசிரேகாவைப் பார்த்துத் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு வீட்டை விட்டு வெளியேறுவதாகச் சொன்ன நிலையில், மீண்டும் அவளுக்கு இந்த வீட்டிற்கு வரத் துளிகூட விருப்பமில்லை. அதைவிட, சூர்ய நாராயணனுக்கு அவளைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதற்கு காரணம், அன்று அதர்வன் திருமணத்தில் அவளின் திமிர்த்தனமான பேச்சுகள் அனைத்தும் அவருக்குள் ஆறாத கோபத்தைக் கொடுத்திருந்தன. இந்த நொடியே அவளை உடனடியாக இந்த வீட்டை விட்டே நிரந்தரமாகத் துரத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு அவர் பற்களைக் கடித்தபடி காத்துக்கொண்டிருந்தார்.

அதே நேரம், வீட்டின் மற்றொரு ஓரத்தில் லோகேஷ் தன் மனைவி ஆர்த்தியையும், மூன்று வயது மகன் ரிஷியையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தான். லோகேஷ் ஒன்றும் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல; ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞன். ஆர்த்தி ஆசைப்பட்டுவிட்டாள் என்ற ஒரே காரணத்திற்காகத் தனது மகளுக்குப் பிடித்தவனையே திருமணம் செய்துவைத்துவிட்டார் சூர்ய நாராயணன். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது—தனக்கு அடங்கிப்போகிற மாப்பிள்ளையாக இருக்க வேண்டும்; தன் வாக்கே வேதவாக்கு; தனது பேச்சுக்கு மறுபேச்சு இல்லை என அவரது கரமே உயர்ந்து நிற்கக்கூடிய ஒரு சம்மந்தி குடும்பமாக அது அமைந்தது.

இது எல்லாவற்றையும் தாண்டி, சூர்ய நாராயணனுக்குத் தன் மகள் ஆர்த்தி, ஆதினி, மற்றும் மகன் அதர்வன் ஆகியோர் உயிருக்கு உயிரானவர்கள். மகளின் விருப்பத்திற்கேற்ப அவளது காதலை ஏற்றுக்கொண்டார். அதுவும் தற்போது ஆர்த்தி இரண்டாவது முறையாகக் கருவுற்றிருக்கிறாள் என்ற இனிப்பான செய்தி தெரிந்ததிலிருந்து, சூர்ய நாராயணனின் பாசம் இரட்டிப்பாகியிருந்தது. “என் பொண்ணு இந்த நிலைமையில எந்தச் சிரமமும் படக்கூடாது!” என்று நேரில் சென்று, தன் செல்ல மகளையும், மருமகனையும், பேரனையும் தனது அரண்மனை போன்ற வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டிருந்தார்.

இன்னொரு பக்கம், உஷா ராணி உள்ளுக்குள் நடுக்கத்துடனும் கட்டுக்கடங்காத படபடப்புடனும் தவித்துக்கொண்டிருந்தார். அவரது நெஞ்சம் படபடவென அடித்துக்கொண்டது. நேற்று காலை அகிம்சாவிடம் தான் கோபப்பட்டு, “என் மகனைப் பிடித்த தரித்திரம், வீட்டை விட்டுத் தொலை!” என்று மிக மிக மோசமான வார்த்தைகளால் திட்டித் துரத்தியதும், அதன்பின் சில மணி நேரங்களிலேயே அவள் கடத்தப்பட்டு, அவளது இரு கைகளிலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்ட சம்பவமும் உஷா ராணியின் மண்டைக்குள் சுழன்று சுழன்று ஓடின. ‘நான் பேசுன பேச்சாலதான் அவளுக்கு இப்படி ஒரு நிலமையா? அந்தப் பொண்ணுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் அந்தப் பாவம் என் குடும்பத்தைச் சும்மா விடுமா?’ என்று குற்ற உணர்ச்சியால் அவரது கண்களில் முணுக்கென நீர் கொட்டியது.

இப்படி ஆளுக்கொரு தவிப்பிலும், ஆத்திரத்திலும், பதற்றத்திலும் இருக்க… அதர்வாவின் பின்னால், இரு கரங்களிலும் தடிமனான வெள்ளைக் கட்டுகளோடு, முகம் ரத்த ஓட்டமின்றி வெளுத்துப் போய், ஒவ்வொரு அடியையும் தயக்கத்துடன் எடுத்துவைத்து மெல்ல நடந்து வந்தாள் அகிம்சா.

அவர்களைப் பார்த்த அடுத்த நொடி… சூர்ய நாராயணன் சோஃபாவிலிருந்து கோபத்துடன் எழுந்தவர், “அதர்வா!” என அக்னிப் பிழம்பாகக் கத்தினார். அவனது குரல் அந்த அரண்மனையின் உயர்ந்த கூரையையே அதிரவைத்தது.

அனைவரின் பார்வையும் அவர்கள் மூவர் மீதும்தான் இருந்தது.

அதர்வன் பேச வருவதற்குள் கோபமாகக் கைகளை நீட்டித் தடுத்தவர், “எத்தனை முறை உனக்கு கால் பண்ணேன்? உன்னோட டெடிகேஷன் எங்கே? உன்னோட டிகினிட்டி எங்கே? உன்னோட ரெஸ்பான்சிபிலிட்டி உனக்கு ஞாபகம் இருக்கா? நீ எப்படி இருக்க தெரியுமா? அந்தப் பொண்ணுதான் நேத்தே வீட்டை விட்டுப் போறேன்னு சொல்லிட்டுப் போனாளே! அவளை வெளியில வழியனுப்ப வேண்டியதுதானே? நீ எல்லா விஷயத்தையும் ஏன் காம்ப்ளிகேட் பண்ணிட்டு இருக்க? அந்தப் பொண்ணை நேத்தே அனுப்பியிருந்தால் இந்த கடத்தல் விஷயமே நடந்திருக்காது!” என்று இஷ்டத்திற்குப் பொங்கியபடி பேசினார் சூர்ய நாராயணன்.

அங்கிருந்த குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் வைத்த கண் வாங்காமல் அகிம்சாவையே வட்டமிட்டுப் பார்த்தார்கள். குடும்பத்தின் மூத்தவர்களான தாமோதரன், பாக்யா இருவருக்கும் அகிம்சாவின் கைகட்டுகளைப் பார்த்ததும் ஒரு நொடி பதற்றமாக இருந்தது. என்னதான் அவளைப் பிடிக்கவில்லை என்றாலும், அவள் கஷ்டப்பட வேண்டும் அல்லது நன்றாக இருக்கக்கூடாது என்று யாரும் நினைக்கமாட்டார்கள் அல்லவா? அதே எண்ணத்தில்தான் அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“அண்ணே, விடுங்க…” என பெரியப்பா வெங்கடராமன் பரிந்து பேச முயல… “உனக்கு ஒன்னும் தெரியாதுடா! நீ அமைதியா இரு!” என ஆவேசமாகத் தடுத்தார் சூர்ய நாராயணன்.

பூஜா, பூர்வஜா, ஆதினி என அனைவருக்குமே உள்ளுக்குள் பயமாக இருந்தது. இப்படி சூர்ய நாராயணன் பேசி அவர்கள் பார்த்ததே இல்லை.

அருகில் நின்று இந்தச் சூழலைக் கவனித்துக்கொண்டிருந்த லோகேஷ், ஆர்த்தியின் தோளைத் தொட்டு, அவளது காதருகே குனிந்து, “ஆர்த்தி, உன் தம்பி தங்கக்கம்பி ஜெகஜால கில்லாடிதான் போல! ஒரு பக்கம் லவ்வர் சசிரேகா… அவகூட கை கோர்த்துட்டு சுத்துறான். இன்னொரு பக்கம் திடீர் பொண்டாட்டி அகிம்சா… அவளையும் கூட்டிட்டு ஒரே நேரத்துல வீட்டுக்கு வந்திருக்கான்!” என நக்கலாகக் கிண்டல் செய்தான்.

ஆர்த்திக்குக் கோபம் தலைக்கேறிட, கணவனின் கையை ஆவேசமாகத் தட்டிவிட்டவள், “மூடிட்டு சும்மா இரு லோகேஷ்! எதுவும் தெரியாம தேவையில்லாம உளறாதே!” என லோகேஷை முறைத்தாள். இருப்பினும், தன் தம்பி அதர்வனின் நிலைமையையும், வீட்டின் புயல் சூழலையும் பார்த்து வேதனையுடன் நோக்கினாள்.

நிலைமை மிகவும் மோசமாகப் போய்க்கொண்டிருப்பதை உணர்ந்து, ‘இதை இப்படியே விட்டால் சரிவராது’ என்று நினைத்த சசிரேகா கொஞ்சம் முன்னால் வந்து, “அங்கிள்…” என்று பேச வர… “ஏன்மா, நீயாவது சொல்லக்கூடாதா?” என்று அவர் அப்போதும் அதர்வனையே திட்டித் தீர்த்தார்.

அதே நேரம் சசிரேகாவின் எண்ணிற்குத் திரும்பத் திரும்ப அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. அழைப்பது அனைத்துமே அவளது தந்தை கிருஷ்ணமூர்த்திதான்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அகிம்சா முன்னால் வந்து, “சார், நான் பேசலாமா?” என்று ஆரம்பிக்க… “நீ என்ன பேசப் போற? எல்லாப் பிரச்சனைக்கும் காரணம் நீ மட்டும்தான்!” என கோபமாகக் கொதித்துப் பேசினார் சூர்ய நாராயணன்.

“அகிம்சா!” என கர்ஜனை குரலில் அவளைத் தடுத்து நிறுத்திய அதர்வன், அவளுக்கு முன்னால் சென்று அரணாக நின்றான்.

“அதர்வன்!” என சூர்ய நாராயணனும் அதர்வனும் நேருக்கு நேராக, இரு எதிரெதிர் துருவங்களாக நின்றுகொண்டிருந்தார்கள். சூர்ய நாராயணனின் கண்கள் ஆத்திரக் கனலைக் கக்கிக்கொண்டிருந்தன.

“அப்பா! என்னை என்ன வேணா பேசுங்க. இனி அகிம்சாவைப் பத்திப் பேச உங்களுக்கு எந்த ரைட்ஸும் இல்லை!” என்று அதர்வனின் சிம்மக் குரல் தாழ்ந்த அழுத்தத்துடன் வெளிப்பட்டது.

அங்கிருந்த அனைவரும் பேச்சற்றுப்போய் நின்றார்கள். சூர்ய நாராயணனுக்கு ஒன்றுமே புரியவில்லை. கோபமும் ஆத்திரமும் இன்னும் கூடிப்போக, “அதர்வன்! உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா, ராஸ்கல்?! அவள் யாருடா? அவளால இந்த குடும்பத்துக்கு எவ்வளவோ அவமானம்! அவளை இப்போவே, இந்த நிமிஷமே வீட்டை விட்டு அனுப்பு!” என அவனது சட்டையைப் பற்றினார்.

“முடியாது!” எனக் கையைத் தட்டிவிட்டான் அதர்வன்.

அந்த அரண்மனை போன்ற வீடே அப்படியே நிசப்தமாகிட, அதர்வன் தனது தந்தையைப் பார்த்து, “இன்னைக்கு நான் உங்க கண்ணு முன்னாடி நிக்கக் காரணமே அகிம்சாதான். அது உங்களுக்குத் தெரியும்தானே? இல்லை தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா? இவள் என்னோட உயிரைக் காப்பாத்தியிருக்கா!” என்றவன், அத்தோடு விட்டிருந்தால் பிரச்சனை அங்கேயே முடிந்திருக்கும்… ஆனால் மேலும் தொடர்ந்து, “இவள் என்னோட பொறுப்பு… என் பொண்டாட்டி! இவளை நான் இப்படியே விட்டுட்டு வரச் சொல்றீங்களா? வீட்டை விட்டு வெளியே துரத்தச் சொல்றீங்களா? இதைத்தான் உங்களுக்குத் தாத்தாவும் ஆத்தாவும் சொல்லிக் கொடுத்தாங்களா?” என அந்த இடமே அதிரும் அளவுக்குக் கர்ஜித்தான்.

அகிம்சா அத்தனை பதற்றத்தில் இருந்தாள். ‘எதற்கு இவன் சசிரேகாவின் முன்னால் கிறுக்கன் போல உளறிக்கொண்டிருக்கிறான்?’ என்று அவளுக்குத் தோன்றியது.

“இதுக்கும் மேலே உனக்கு என்ன விளக்கம் வேணும்? வெட்கமே இல்லாம இந்த வீட்ல இன்னும் நீ நிக்கலாமா?” என்று ஒரு குரல் கேட்க, மொத்தக் குடும்பமும் அதிர்ந்து பார்க்க… அங்கே கிருஷ்ணமூர்த்தி தனது மகளைப் பார்த்தபடி கோபமாக வந்துகொண்டிருந்தார்.

சசிரேகாவிற்குத் திரும்பத் திரும்ப அழைத்துப்பார்த்தும் அவள் அழைப்பை எடுக்கவில்லை; எப்படியும் அதர்வனைத் தேடித்தான் அவள் போயிருப்பாள் என்று தோன்றியது அவருக்கு. கிருஷ்ணமூர்த்திக்குக் கொஞ்சம் கூட அதர்வன் குடும்பத்தையும் பிடிக்கவில்லை, அதைவிட முக்கியமாக அதர்வனைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. எத்தனை பெரிய விஷயம் நடந்திருக்கிறது, தனது பெண்ணிற்குச் கொஞ்சம் கூடப் புத்தி இல்லையா, அவனைத் தேடிச் செல்கிறாளே என்ற கோபமும் ஆத்திரமும்தான் மேலோங்கியிருந்தது. உடனடியாக இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும், சீக்கிரமே அவளை வேறு ஒரு நல்ல பையனுக்குத் திருமணம் செய்து அனுப்ப வேண்டும் என்று உறுதிகொண்டிருந்தார்.

சூர்ய நாராயணன் அவரிடம் பேச முடியாமல் அவமானத்தால் தலைகுனியும் நிலைக்கு வந்திருந்தார். “டாடி, நான்…” எனச் சசிரேகா ஆரம்பிக்கும் முன், அவளது கையைப் பற்றி வேகமாக இழுத்துச் சென்றுவிட்டார் கிருஷ்ணமூர்த்தி.

“அங்கிள்!” என அதர்வன் பேச வர… “நான் என் பொண்ணைக் கூட்டிட்டுப் போக வந்தேன். இங்கே உறவு கொண்டாட வரல! முதல்ல உனக்கும் என் பொண்ணுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!” என கையைப் பற்றி இழுத்துச் சென்றுவிட்டார்.

“அப்பா, ப்ளீஸ்! நீங்க நினைக்கிற போல இல்லை…” என்று அவள் எவ்வளவோ விளக்க முற்பட்டும், எதுவுமே கிருஷ்ணமூர்த்தியின் காதுகளுக்கு எட்டவில்லை. அங்கிருந்து அவர்கள் சென்றிருந்தார்கள்.

“போதும்மா! இப்போ உனக்கு சந்தோஷமா?!” எனச் சூர்ய நாராயணன் ஆவேசமாக அங்கிருந்த கண்ணாடி டீபாயை உதைத்துத் தள்ளினார்.

அகிம்சா ஒரு நொடி பயந்துபோனாள். அதர்வன் அதற்கெல்லாம் அசரவே இல்லை. அகிம்சாவின் பக்கம் திரும்பினான்.

“நான் பிரியா வீட்டுக்குப் போறேன், ப்ளீஸ்!” என அகிம்சா கூறிட… அது அவனது காதில் விழுந்ததா என்று தெரியவில்லை, அவளை இழுத்துச் சென்றுவிட்டான்.

அவன் தன்னைக் கண்டுகொள்ளாமல் பேசாமல் சென்றது சூர்ய நாராயணனுக்கு மிகப்பெரிய அவமானத்தைக் கொடுக்க, அவர் நிலைகுலைந்து நின்றார்.

“அதர்வன், ஜஸ்ட் லீவ் மீ!” என கோபமாகக் கத்தியிருந்தாள் அகிம்சா.

– தொடரும்.

How did this episode feel?
Rate this episode ★ 4.7 (3)

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!