🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
16. அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 15
அதிகாரனின் அகிம்சா
📖 அதிகாரனின் அகிம்சா · Chapter 16 of 46

அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 15

  • 1 Oct 2026
  • 104 reads
  • ★ 5.0 (2)
  • 6 min read

Epi -15 

ஆரியன் அதிர்ச்சியுடன் அவளையே பார்க்க, அகிம்சாவின் உதடுகளில் ஒரு கசப்பான புன்னகை அரும்பியது. அவளது விழிகளில் இருந்த கண்ணீர் கன்னத்தில் வழிய, குரல் லேசாகத் தழுதழுத்தது.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“எனக்கு எல்லாமே தெரியும் அண்ணா… அந்த முருகவேல் சொல்றது அத்தனையும் பொய்! சூர்ய நாராயணனோட ஆளுதான் அவருன்னு அன்னைக்கே எனக்குப் புரிஞ்சிடுச்சு. அதிகாரமும் பணமும் இருக்குறவங்களுக்கு முன்னாடி நம்ம நியாயம் எம்மாத்திரம்? இதுக்கு மேல என்னால போராட முடியாது அண்ணா… நான் தோத்துட்டேன்,” என்று சோர்வுடன் தலையைக் குனிந்துகொண்டாள்.

என்ன பேசுவதென்று தெரியவில்லை; அவளைப் பார்க்க அத்தனை பாவமாக இருந்தது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தான்.

அகிம்சா பெருமூச்சுடன், “ரொம்ப தேங்க்ஸ் அண்ணா, எனக்காக நீங்க இந்த அளவுக்கு போராடினதுக்கு,” என்று நன்றியுணர்வுடன் பார்த்தாள்.

ஆரியன் அவளது தோள்களைப் பற்றிப் பிடித்து உறுதியான குரலில், “இல்ல அகிம்சா! நீ தோக்கக் கூடாது. இதை நம்ம வேற மாதிரி மூவ் பண்ணலாம்,” என்றான்.

“நம்ம சட்ட ரீதியா முயற்சி செஞ்சும் பார்த்தாச்சு. இதுக்கு மேலே எப்படி மூவ் பண்றது?” எனக் கேட்டாள்.

“அவங்க பண்ணின அநியாயத்தால உன் வேலை போச்சு, உன் தன்மானம் போச்சு, உன்னோட வாழ்க்கையே நாசமா போச்சு! ஆனா, கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம அந்த சூர்ய நாராயணன் நடந்துக்கிறாரு… அவங்க வீட்ல இப்படி பிரச்னை நடந்தா அவங்க சும்மா இருப்பாங்களா? இங்கே பாதிக்கப்பட்டு நிக்கிறது நீ தான். உன்னோட கல்யாணம் நின்னு போச்சு. ஆனால் அவரோட பையன் அதர்வன் கொண்டாட்டமா கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழப் போறான். உன்னை நடுத்தெருவுல நிப்பாட்டுனவங்களுக்கு நீ தண்டனை கொடுத்தே ஆகணும்!”

அகிம்சா கலங்கிய கண்களோடு நிமிர்ந்து, “ஆனா அண்ணா… நாம என்ன பண்ண முடியும்? பெரிய பெரிய போலீஸ் அதிகாரிகளே அவங்களுக்குச் சாதகமா இருக்கும்போது…” என்று தயங்கினாள்.

“நாம லீகலா போக வேண்டாம் அகிம்சா! அவங்க கௌரவத்தையும் கர்வத்தையும் அவங்க மேடையிலேயே வச்சு உடைக்கணும். அதர்வன் – சசிரேகா கல்யாணத்துக்கு அப்புறம் நடக்கப்போற பிரம்மாண்டமான வரவேற்பு விழா (Reception) எங்கே, எப்போ நடக்குதுன்னு நான் உனக்குத் தகவல் சொல்றேன். நமக்கு தேவை நியாயம் மட்டும் தான். யாரையும் நம்ம தொந்தரவு பண்ண போறதில்லை. நீ நேராக அந்த வரவேற்பு விழாவுக்குத்தான் போகணும்,” என்று ஆரியன் கூறியதும் அகிம்சா புருவம் சுருக்கினாள்.

“ஏன் அண்ணா? கல்யாண மண்டபத்துக்குப் போகாம வரவேற்பு விழாவுக்குப் போகச் சொல்றீங்க?” எனப் புரியாமல் கேட்டாள்.

ஆரியன் தன் கூர்மையான பார்வையோடு விளக்கினான்: “கல்யாணத்துல சொந்தக்காரங்க மட்டும்தான் இருப்பாங்க அகிம்சா. நமக்கு தேவை நீதி… அங்கே நீ எதையாவது பேசிப் பிரச்சனை பண்ணா, சூர்ய நாராயணன் தன் பணபலத்தால அதை அந்த மண்டபத்தோடவே மூடி மறைச்சுடுவாரு. ஆனா வரவேற்பு விழா அப்படி இல்லை. அங்கேதான் மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், ஆளுநர், முக்கியமான விஐபிக்கள்னு மொத்த மீடியாவும் வந்து நிக்கும். அந்தப் பிரம்மாண்டமான வரவேற்பு விழாவில நீ நுழைஞ்சு, ஆயிரம் பேர் முன்னாடி, அத்தனை விஐபிக்கள் முன்னாடி ‘Trending Timewood’ உனக்கு எவ்வளவு பெரிய அநியாயத்தை பண்ணியிருக்குன்னு சொன்னா, அதை அவங்களால உடனே சரி செய்யவே முடியாது! சோசியல் மீடியா மூலமா உலகத்துக்கே அவங்க உண்மையான மூஞ்சி தெரியவரும். அவங்களுக்கு நாம அந்த பயத்தைக் காட்டணும்!” என ஆரியனின் குரலில் ஆத்திரம் பெருகியது.

அகிம்சா தீவிரமாக யோசித்தாள். அவளது கூர்மையான மூளை அந்தப் பாதையை ஆராய்ந்தது. “இது சரிவருமா அண்ணா? இதனால வேற எதுவும் பிரச்சனை வருமா?” என்று அவனது முகத்தையே பார்த்தாள்.

“எல்லாமே சரியா வரும் அகிம்சா! உனக்கு இனிமே இழக்கறதுக்கு எதுவுமே இல்லை. ஆனா, அவங்களுக்கு அவங்களோட கௌரவம்தான் எல்லாமே! அங்கே போய் அவங்களை கேள்வி கேட்டாத்தான் அவங்க சாம்ராஜ்யமே ஆடிப்போகும். அப்புறம்… இந்த விஷயத்தைப் பார்த்திபன் கிட்டச் சொல்ல வேண்டாம். அவன் அடுத்த மாசம் அவனோட வொர்க்குக்குக் கிளம்புறான். மனைவியை தனியா விட்டுட்டு போறான்; உன்னோட நினைப்பாவே இருந்தா அவனால பார்டர்ல கான்சென்ட்ரேட் பண்ண முடியாது,” என்று ஆரியன் நிதானமாகக் கூறினான்.

அகிம்சா புன்னகையுடன், “நிச்சயமா எனக்கு புரியுது அண்ணா! அதனாலதான் நானும் அன்னிக்கே பார்த்தி அண்ணாவை கிளம்ப சொல்லிட்டேன்; எதையும் வெளிக்காட்டிக்கல…” என்றாள்.

“நல்ல பொண்ணுமா நீ! உனக்கு எல்லாமே நல்லபடியா நடக்கும்,” என்றவன், கையில் 50,000 ரூபாய் பணத்தை நீட்டினான்.

“அண்ணா எதுக்கு?” என அவள் தயங்கிக்கொண்டு பின்னால் செல்ல, “டேய், நீயும் எனக்கு தங்கச்சி மாதிரிதான். இப்போதான் வேலையை விட்டிருக்க; புது வேலை கிடைக்கிற வரை உனக்குன்னு தேவைகள் இருக்கும் தானே?” என்றான்.

“இல்… இல்ல அண்ணா, எனக்கு வேணாம்,” என்று அவள் விடாப்பிடியாக மறுக்க, “ப்ச்… பிடிமா,” என்று வற்புறுத்தி திணித்தான்.

“நான் இதை திருப்பி கொடுத்திடுவேன்,” என அகிம்சா உறுதியுடன் கூற, ஆரியன் புன்னகையுடன், “சரி, ஓகே,” என்று முடித்துக்கொண்டான்.

“சரி அண்ணா… நீங்க சொல்றபடியே செய்றேன். அந்த வரவேற்பு விழா அன்னிக்கு நான் வர்றேன், பார்த்துக்கலாம்,” என்று தீர்க்கமாக முடிவெடுத்தாள்.

ஆரியன் திருப்தியோடு அவளிடம் விடைபெற்றுப் புறப்பட்டான்.

ஆனால்… அகிம்சா ஆசிரம அறையில் அமர்ந்து மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பார்த்தபோது, அவளது நெஞ்சில் அந்தப் பழிவாங்கும் தீ மேலும் உக்கிரமாகப் பற்றியெரிந்தது.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

‘வரவேற்பு விழா வரைக்கும் எதுக்குக் காத்திருக்கணும்? வரவேற்புல பிரச்சனை பண்ணா, அதை பிசினஸ் போட்டி, அப்படி இப்படின்னு அவதூறுன்னு சொல்லி ஒருவேளை அவங்க மீடியாவை வச்சுச் சமாளிச்சாலும் சமாளிச்சுடுவாங்க. ஆனா, கல்யாண நேரத்துல அப்படி பண்ண முடியாதுல்ல? அதனால நம்ம கல்யாண மண்டபத்துக்கே போவோம். அதுதான் சரியா இருக்கும்,’ என அகிம்சா நினைத்துக்கொண்டிருக்க, ‘தீரன் ஆட்சியிலே’ என்ற பத்திரிகையின் எண்ணைப் பகிர்ந்தான் ஆரியன். வரவேற்பின் போது இந்த பத்திரிகை நிருபர்களை அழைத்து வருமாறு கூறியிருந்தான்.

அகிம்சா ஒரு முடிவுடன் போனை எடுத்தவள், அனைத்து விவரங்களையும் கூறினாள். அவர்கள் அகிம்சாவுக்கு நீதி கிடைக்க அனைத்து விதமான உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்கள்.

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. அதர்வன் – சசிரேகா திருமணத்திற்கு புறப்பட்டாள் அகிம்சா. ஆனால் அவளுக்கு அன்று தெரியவில்லை—அதர்வாவுக்கு அவள் மனைவியாகப் போகிறாள் என்று! சூர்ய நாராயணனிடம் நியாயம் கிடைக்கும் என்று நினைத்து சென்றவள், அவருக்கு மருமகளாகிப் போனாள்.

அகிம்சா வேண்டுமென்றே அதர்வாவின் மேல் அவதூறான குற்றச்சாட்டுகளைப் பரப்பக் காரணம், மற்ற பத்திரிகையாளர்கள் கொடுத்த யோசனைதான். “இந்த மாதிரி அவதூறா குற்றச்சாட்டுகளை பரப்பினால் நிச்சயமாக சூர்ய நாராயணன் அகிம்சாவின் விஷயங்களை அம்பலப்படுத்துவார்” என்று அவளின் மண்டையைக் கழுவினார்கள்.

அவளுக்கு இதில் துளிகூட விருப்பமில்லை; ஏனென்றால் அதர்வனை சுத்தமாக அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அனைவரும் அவளை வற்புறுத்த, வேறு வழியில்லாமல் அதர்வனின் மேல் தவறாகப் பழியைப் போட்டாள். அவளது வாழ்க்கையிலேயே சொன்ன பொய் அது ஒன்று மட்டும்தான். அந்தப் பொய் அவளின் விதியாக மாறி, அதர்வாவின் மனைவியாகிப் போனாள். இதோ, இன்று படுக்கைக்கு எதிரில் அவளின் கணவன் அதர்வன் அமர்ந்திருந்தான்.

அந்தக் கடத்தல் சம்பவத்தில் இரண்டு கைகளிலும் நரம்பு அறுபட்டு, காயத்துடன் மயக்கத்துக்குச் சென்றவள், அடுத்த நாள் காலை வரை மயக்கத்திலேயே இருந்தாள். அவளது வாழ்க்கையில் நடந்த அனைத்து விஷயங்களும் கனவு போல கண் முன்னால் தோன்றின.

கால் மேல் காலை போட்டபடி போனை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தான். அவள் விழித்திருப்பது தெரியவர, சட்டென்று அவளைப் பார்த்தவனது விழிகள் உயர்ந்து, “முழிச்சிட்டயா? ஓகேவா இப்போ நீ?” எனக் கேட்டபடி அவளின் அருகில் வந்தான்.

“அகிம்சா…?”

(தொடரும்)

How did this episode feel?
Rate this episode ★ 5.0 (2)

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!