Episode-111
இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? என் புருஷன் என்னை மட்டும் நினைக்கணும்னு அப்படின்ற மெண்டாலிட்டில இருக்க டிப்பிக்கல் பொண்டாட்டி தான் நானு. என்றாள் நிலா.
அதுக்குன்னு ஒரு அளவு இல்லையா நிலா!! நீ ஓவரா போறன்னு உனக்கே தெரியலையா? நம்ம ரெண்டு பேரும் என்ன நிலையில் இருக்கோம் அந்த நேரத்தில் இப்படி அவளை பத்தி பேசுற? என ருத்ரன் கேட்டான்.
எந்த நிலையில் இருந்தால் என்ன? உங்களோட முதல் காதல் முதல் முத்தம் என்னைக்கும் நான் ஆகிட முடியாது. அதை மட்டும் இல்லன்னு சொல்லுங்க. இனி ஒரு வார்த்தை கூட நான் கேட்க மாட்டேன். என அவள் விலகிட..
அவளின் கையை பிடித்து இழுத்தவன் உதட்டில் முத்தமிட்டு மெல்ல அவளின் கண்களை பார்த்தான்.
முகத்தை திருப்பி கொண்டாள் நிலா.
ஒரே ஒரு விசயம் கேட்கிறேன் அதுக்கு மட்டும் பதில் சொல்லு!!
என்ன? என நிலா கேட்க..
முதல் முத்தம்? Or முதல் காதல் இது ரெண்டுல ஏதாவது ஒன்னை choose பண்ணு. எது உனக்கு பிரச்னையா இருக்குன்னு சொல்லு!!
எனக்கு ரெண்டுமே பிரச்னை தான்!!
இல்ல ஒண்ணு சொல்லு!! பிளீஸ் என கெஞ்சினான்.
பெருசா என்ன மாறிட போகுது? அவளை முத்தம் கொடுக்கலன்னு சொல்லாதீங்க!!
கொடுத்தேன். என்றான் ருத்ரன்.
அவள் வேகமாக திரும்பி கொள்ள, ருத்ரன் அவளின் கையை பிடித்து இழுத்தவன் அவளை முத்தம் கொடுத்தேன் ஒத்துக்கிறேன். ஆனால் அதுக்கும் மேல எல்லை மீறியது இல்ல ஆனால் என எழுந்தான்.
நிலா அவனை கோபத்துடன் பார்த்தாள். ருத்ரன் சிரித்து கொண்டே, உன்கிட்ட ஒரு விசயத்தை மறச்சுட்டேன். என்றான் சிரித்து கொண்டே..
என்ன? என ஆக்ரோசமாக எழுந்தாள் நிலா..
அவன் கண்கள் மில்க் பூத்துக்கு செல்ல.. வேகமாக பெட் சீட்டை எடுத்து கட்டி கொண்டவள் நெஞ்சுடன் மறைதவள். என்ன மறைச்சீங்க என மீண்டும் மீண்டும் கேட்டாள்.
சரி சொல்றேன். அது நான் வந்து மீனாட்சிக்கு முன்னாடி ஒரு பொன்னை லவ் பண்ணேன். என்றான் ருத்ரன்.
அவளின் முகம் இன்னும் சிவந்து போக..
ப்பா!! எப்பவும் நிலாவை நான் அழு மூஞ்சியா சோகாச்சியா பார்த்திருக்கேன். அண்ட் என் கூட அந்த மாதிரி டைம்ல இருக்கும் போது சொக்கி பார்த்திருக்கேன். அண்ட் சிரிச்சும் பார்த்திருக்கேன். ஆனால் இப்போ இணையில் இருந்து பொஸசிவ் பொண்ணா பார்க்குறேன்.
No கற்பனை பண்ணிக்காதீங்க!! நான் பொண்டாட்டியா பார்க்குறேன் that’s it என்றாள் நிலா.
ஓகே நான் கிளம்புறேன் என ருத்ரன் புறப்பட..
யார் அந்த பொண்ணு? என நிலா கைகளை சொடுக்கு எடுத்தபடி கேட்டாள்.
ருத்ரன் அவளை திரும்பி பார்த்து சிரித்து கொண்டே அதை சொன்னா உனக்கு bipolar வர கூட வாய்ப்பு இருக்கு. அந்த அளவுக்கு அழகான பொண்ணு. எனக்கு மீனாட்சிய விட அவள் மேலே 70 கண்ணு!! இல்ல இல்ல 72 கண்ணு என அழுத்தி கூறினான்.
அப்புறம் எதுக்கு இங்கே வந்து கடக்குறீங்க? போக வேண்டியது தானே!! என நிலாவின் முகத்தில் அனல் பறக்க..
அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. டெய்லி அவளோட ஹஸ்பன்ட் அவள் மேலே பாஞ்சுகிட்டே இருக்கான்னு கேள்வி பட்டேன். எனக்கே மனசு கஷ்டமாகி போச்சு. என்ன பண்ண முடியும்?
அவளையே கட்டியிருக்க வேண்டியது தானே? என நிலா கோபத்துடன் கேட்க…
எனக்கு எப்படி உங்க ஃபேமிலில யாரையும் பிடிக்காம இருந்தது. அதே போல என்னோட ஸ்விட்ஸ் பேங்க் அக்கவுண்ட்க்கு சாரி சாரி அக்கவுண்ட் ஓனர் அதாவது அவளோட அப்பாவுக்கு என்னை பிடிக்கல. அதான் நான் ஐயங்கார் பேக்கரி பக்கம் போனேன்.
ஓ கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் போயிருப்பயா?
யா definately!!
நிலா பற்களை கடித்து கொண்டு நிற்க.. ருத்ரன் பெரு மூச்சுடன்.. இப்போ போக முடியாது அவளுக்கு குழந்தையும் பிறந்திடுச்சு. கண்டிப்பா அவளோட புருஷன் எனக்கு விட்டு கொடுக்க மாட்டான். அவள் தங்க சிலை. உதடு இருக்கே!! அந்த பார்வை!! ப்பா!! போதையா இருக்கும். என ருத்ரன் சொல்லி கொண்டே செல்ல..
வெளியே போ!! என உச்ச ஸ்தானியில் கத்தியிருந்தாள் நிலா.
இனி வர தேவையில்ல தான!! என ருத்ரன் கேட்க..
எனக்கு எப்போ தோணுதோ அப்போ நாய் மாதிரி நீ வரணும்.
வேலைக்காரனாகவா? இல்ல வீட்டுக்காரனாகவா? என ருத்ரன் புன்னகையுடன் கேட்க..
எனக்கு வேலைக்காரனா தான்!!
அப்போ கண்டிப்பா வர மாட்டேன். என சொல்லி விட்டு ருத்ரன் உடை மாற்றினான்.
நிலாவுக்கு சப்பென ஆனது. அவனை வதைக்க அழைத்தாள். ஆனால் இப்பொழுது வதை பட்டு நிற்பது அவள் தானே..
மேடம்!! நான் போயிட்டு வரேன் என அவன் கூறி விட்டு கிளம்பினான்.
ஹே நில்லு!!
சொல்லுங்க மேடம்..
யார் அந்த அவள்?
கண்டிப்பா சொல்ல மாட்டேன். என்னால அவளுக்கு எதுவும் பிரச்னை வந்துட்டா தாங்க முடியாது. அதுவும் என்… அதாவது அவளோட குழந்தைக்கு எதுவும்.. என ருத்ரன் அடக்கப்பட்ட சிரிப்புடன் சோகமாக முகத்தை வைத்து கொண்டான்.
குழந்தை கொடுத்துட்டியா? என நிலாவுக்கு அழுகை மட்டும் தான் வரவில்லை மொத்தமாக உடைந்திருந்தாள்.
அய்யோ அவ்ளோ சீப்பா நினைக்காதீங்க!! என்னோட நியாபகமா அவளோட குழந்தைக்கு என்னோட நேம் வச்சிருக்கா அப்டின்னா பார்த்துக்கோங்க. என்னோட ட்ரூ லவ் மீனாட்சி இல்ல. அவள் தான் என்னோட என்றவன். சிரித்து கொண்டே சென்று விட்டான்.
நிலாவுக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான். இப்படி சொல்லி சென்று விட்டானே! என திண்டாடினாள். அழுகை பொங்கி கொண்டு வந்தது. அழுதாள் ராத்திரி முழுவதும்.
ருத்ரன் சுற்றிலும் பார்த்து விட்டு, அக்கா என ஹரிணியை அழைத்தான்.
என்னடா சொல்லு!!
அக்கா எப்டி இருக்கா என் பொண்டாட்டி! அவளை பார்த்திட்டு எனக்கு சொல்லுங்க.
என்னடா ஆச்சு? என ஹரிணி கேட்க..
கா பார்த்து சொல்லுங்க என ருத்ரன் கூற..
இதோ போறேன் என சென்றவள் சிறிது நேரத்தில் அரண்டு போய் வந்தாள்.
என்னாச்சு கா? எப்டி இருக்கா?
என்னடா அவளை அடிச்சிட்டயா? முகமெல்லாம் வீங்கி இருக்கு. என்னடா பண்ண? என ஹரிணி கோபத்துடன் கேட்டாள்.
அவள் என்னை அடிக்காம இருந்தால் சரி! நீங்க வேற.. என்றான் ருத்ரன்.
என்ன நடந்துச்சு? என ஹரிணி கேட்க..
அது கணவன் மனைவிக்குள் என்ன நடக்கும்? அது தான் நடந்தது.
பாரேன்!! சண்டைக்கு நடுவில் இதுவுமா? என ஹரிணி கேட்க..
அக்கா நீங்க சென்சாரா யோசிக்காதீங்க! குழந்தைய பார்த்துக்க வர சொன்னாள். வழக்கம் போல வாக்கு வாதம் நடந்தது. ஆனால் அவள் அழுவான்னு நான் நினைச்சு பார்க்கல என்றான் ருத்ரன்.
சரி இனி பார்த்து நடந்துக்க என ஹரிணி சொல்லி விட்டு நகர்ந்தாள்.
அடுத்தநாள் ஆரவாரத்துடன் விடிய.. நிலா புது அவதாரம் எடுத்திருந்தாள்.
ரோல் நம்பர் 21 என அழைத்தாள் சத்தமாக..
ருத்ரன் அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தான்.
வண்டி எடு முக்கியமான இடத்துக்கு போகணும்.
ருத்ரன் அவளை புரியாமல் பார்த்தான். அவளின் கையில் மகன் இல்லை.
என்ன பார்த்திட்டு இருக்க? வண்டி எடு!! என உறுமினாள்.
இதோ மேடம் என வண்டியை எடுத்தான்.
ஏர்போர்ட் போங்க என்றவள் வெளியே வேடிக்கை பார்த்தாள்.
அங்கே சென்றதும் ருத்ரன் வெளியே காத்திருக்க, நிலாவின் தோள் மேல் கைகளை போட்டபடி வந்தான் சிவதாசன். அவனின் பின்னால் நான்கு காவலர்கள்.
ம்ம் வண்டி எடுங்க!! என நிலாவின் குரல் கேட்க திரும்பி பார்த்த ருத்ரனின் முகம் மாறியது. ருத்ரன் அவர்கள் இருவரையும் ஒரு நொடி பார்க்க..
வண்டி எடுன்னு சொன்னேன்!! என்றாள் நிலா.
ருத்ரன்..?
சிவா..?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels