Epi -57
இந்த கல்யாணத்துக்கு தாலி பிரிச்சு கோர்த்தே ஆகணுமா? என விருப்பமில்லாமல் பேசினாள் சவுந்தர்யா.
எதுக்கு எதை செஞ்சாலும் இப்படி ஏதாவது ஒன்னு சொல்லிட்டே இருக்க? என மகிழ் அடக்கமாட்டாமல் கேட்டு விட்டான். அவனும் எவ்வளவு தான் பொறுத்து போவான். அதான் இந்த முறை கேட்டே விட்டான்.
எனக்கு வாழ்க்கை பிச்சை போடுங்கன்னு நான் யார்கிட்டயும் கேட்கலையே?கல்யாணமாகி கொஞ்ச நாளில் புருஷனை இழந்தவ மாதிரியா இருக்கா? வருஷம் ஆகிறதுக்குள்ள இன்னொரு கல்யாணம் ஜோரா பண்ணிகிட்டாலே ஊரு மொத்தமும் என்னை பேசும். இந்த கல்யாணத்துல உங்க அப்பாவுக்கு உடன்பாடே இல்ல. எல்லாரையும் அழைச்சு வளைகாப்பு வைக்கலாம்னு சொல்றீங்க? இந்த பேச்சு எல்லாம் எனக்கு தேவையா? என்னும் ரீதியில் சவுந்தர்யா.
மகிழுக்கு அசதியாக இருந்தது. என்ன பேச முடியும்? அவனால்? அவளது முகத்தை பார்க்க தயங்கியவன், என்னோட விருப்பத்துக்காக உன்னை கல்யாணம் பண்ணது தப்பு தான். உன் கூட சேர்ந்திட மாட்டோமா அப்டின்னு ஏக்கத்தில் தவிச்சேன். என்னோட சுயநலத்துக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். தப்பு தான் என்னை மன்னிச்சிடு. உனக்கு எப்பவும் நான் நல்ல துணை என சொல்ல வந்தவன். அந்த வார்த்தையை விழுங்கி கொண்டு. நான் இனி உனக்கு வாழ்க்கை துணை இல்ல. அந்த கண்ணோட்டத்தில நீ என்னை பார்க்க கூட வேணாம். வீட்டுக்கு வேலைக்காரனா? உனக்கு காவல்காரனா பாரு சவுந்து என்றவன் முன்னால் நடந்தான்.
சவுந்தர்யா ஒரு பெருமூச்சை விட்டபடி அவனுடன் பின்னால் நடந்தாள். மறுக்க முடியுமா என்ன? அவளை நர்சிங் படிக்க வைத்ததே அன்பு செல்வன் தான். தாயில்லாத பிள்ளையாகிய சவுந்தர்யாக்கு இன்று வரை நிறைய உதவிகள் செய்து கொண்டிருக்கிறான். அப்படி இருக்கும் போது அவர்கள் வீட்டில் ஒரு சுப நிகழ்வுக்கு அனைவரும் காத்திருக்க, மகிழை உதாசீனம் செய்தால் மொத்த குடும்பத்தையும் தூக்கி எறிந்தது போல ஆகி விடும்.
அன்பு செல்வன் அரக்க பறக்க வேளைகளில் ஈடுபட்டான். அதற்கு காரணம் சீக்கிரமாகவே முடித்து விட்டு நேராக சிவராமன் வீட்டுக்கு சென்று பூங்கொடியை அழைத்து வந்து புரிய வைக்க வேண்டும். அதற்காக தான் இந்த அவசரம்.
அனைத்தும் நன்றாக முடிந்தது. மீண்டும் அவளின் கழுத்தில் தாலி கொடியை போட்டு விட்டான் மகிழ். சக்கரவர்த்தி, அன்னம் இருவரிடமும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள் இருவரும். குடும்பமே இல்லாத சவுந்தர்யாவுக்கு இத்தனை பெரிய குடும்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி தான். ஆனால் அவளது மனதில் தோன்றும் உணர்வுகளை முழுதாக அனுபவிக்க முடியாத நிலையில் இருக்கிறாள். அவ்வளவே.
அம்மா நான் போய் மேனகாவை கூட்டிட்டு வரேன் என சொல்லி விட்டு வண்டியில் கிளம்பியிருந்தான் அன்பு.
அன்னம் தனக்கொடியை பார்க்க, சித்தி நான் எதுவும் பண்றேன். அவள் இங்கேயே வர மாதிரி என்று விட்டு நகர்ந்தார்.
களுக் களுக் என சிரிப்பு சத்தம் கேட்க, பூங்கொடியின் நட்பு வட்டங்களின் சிரிப்பு தான் அது. அவளை ஊஞ்சலில் அமர வைத்து ஆடி பாடி கொண்டு ரீல்ஸ் செய்து கொண்டிருந்தார்கள்.
அன்பு செல்வன் தயங்கியபடி வாசலில் நிற்க, சிவராமன் திரும்பி பார்த்து விட்டு, அடடே மாப்ளை உள்ளே வாங்க என்று விட்டு கதவை திறந்தார்.
மாமன் வீடு மேனகா, சதீஸ் ரெண்டு பேருக்கும் ஆக்கி போட்டு புது துணி எடுத்து கொடுக்கணும். அதுக்கு கூட்டி போக தான் வந்தேனுங்க. என்றான் அன்பு.
மாமா என சொல்லி கொண்டே உற்சாகமாக வந்தாள் மேனகா.
ஹான் மேனகா நல்லாருக்கியா? என்றவன் சதீஸ் முகத்தை பார்த்து வணக்கம் வைத்தான்.
நான் இருக்கேன் மாமா என அவளின் முகத்தில் இன்னும் கவலை இருக்கத்தான் செய்தது.
சிவராமனை பார்த்த அன்பு, மாமா அமுலி? என கேட்டான் பின்பக்கம் இருக்கா மாப்ளை என அவர் கூறி விட, வேஷ்டியை மடித்து கட்டி கொண்டு பின்னால் சென்றான்.
அன்பு செல்வன் மேனகாவை ஒரு பொருட்டாக கூட பார்க்காமல் சென்றதை பார்த்து, சதீஸ் உதட்டை கடித்து சிரித்தான்.
மேனகா அவனை பார்த்து முறைக்க, எதுக்கு தேவையில்லாத வேலை உனக்கு? அவனுக்கு அவளை தான் பிடிச்சிருக்கு.
அதை தான் நான் உனக்கும் சொல்றேன். உன்னை பூங்கொடி பார்க்க கூட மாட்டாள் என்று விட்டு ஷோபாவில் சென்று அமர்ந்தாள் மேனகா.
அனுசுயா, பூங்கொடி இருவரும் ஊஞ்சலில் அமர்ந்திருக்க, தர்ஷனா, தீபிகா, ரம்யா, மணிமேகலை, தேஜூ என அனைவரும் ரீல்ஸ் செய்து கொண்டிருந்தார்கள்.
கும் என தொண்டையை கனைத்து கொண்டே வந்தான் அன்பு.
சாருக்கு என்ன வேணும்? என தர்ஷனா துடுக்குடன் கேட்க..
பூங்கொடி என்றான் அன்பு.
அடுத்த நொடி அனைவரும் அதிர்ந்து பார்க்க, பூங்கொடியோ கண்களால் அவனை கொளுத்தி எரித்தாள்.
பூங்கொடி வரமாட்டாள். என அனுசுயா தோல் மேல் கைகளை போட்டு கொள்ள..
அனு நீங்களுமா? என அன்பு செல்வன் கேட்க.
அனு பிளீஸ் என பூங்கொடி அவளை தடுத்து நிறுத்தினாள்.
அன்பு செல்வன் மணிமேகலையை பார்க்க, அவளோ தலை குனிந்து கொண்டு நின்றாள்.
ஹே சாப்பிடலாம் ஹேன்ட் வாஷ் பண்ணுங்க டி! நான் பேசிட்டு வரேன் என அனைவரையும் அனுப்பினாள் பூங்கொடி.
அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்று விட, கைகளை கட்டியபடி அவனை பார்த்தவள். என்ன வேணும்? எதுக்கு இங்கே வந்திருக்கீங்க? என கேள்வியாக பார்த்தாள்.
எல்லா பிரச்னையும் பண்ண மேனகாவை மன்னிச்சிட்ட, அந்த சதீஸ மன்னிச்சு அவன்கிட்ட பேசுற? நான் எந்த தப்புமே பண்ணலயே டி! என்னை எதுக்கு ஒதுக்கி வைக்கிற? வா வீட்டுக்கு போலாம் என அன்பு செல்வன் அழைத்தான்.
பூங்கொடி நியாயமாக அன்பு செல்வனை பார்த்தவள். நான் அநியாயக்காரி எனக்கு பொய் சொல்ல தெரியாது. இது வரை சொன்னதும் இல்ல. தப்பெல்லாம் நீங்க பண்ணல நான் தான் பண்ணேன். மிஸ்டர் அன்பு செல்வன். உங்க அம்மாவை எடுத்து எறிஞ்சி பேசி இருக்கேன். புகுந்த வீட்டில் போலோ பண்ற எதையும் நான் பண்ணல. நான் கல்யாண வாழ்க்கைக்கு தகுதி இல்லாதவ! கூடவே உங்களுக்கும் தான் என சொல்லி கொண்டிருந்தவளின் அருகில் நெருங்கியவன் கண் இமைக்கும் நொடியில் அவளின் உதட்டை கவ்வி இருந்தான்.
பூங்கொடி அப்பட்ட அதிர்ச்சியுடன் பார்க்க, அமுலி அம்மு அழகி அப்டின்னு கொஞ்சினா வேலைக்கு ஆகாதுடி ஆக்சன் தான் பேசும். என்றவன் விரல்களோ உடை தாண்டி எல்லை மீறியிருக்க, அன்பு செல்வன் என வேகமாக தட்டி விட்டவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
அன்பு செல்வன் அசராமல் பார்த்தான். பூங்கொடி மூச்சு வாங்கி கொண்டே, பிளீஸ் என்னை விட்டுடு என்று விட்டு வேகமாக சென்றிருந்தாள்.
அன்பு செல்வன் விரக்தியுடன் வெளியே வர அவ்விடத்தில் நின்றிருந்தாள் அனுசுயா.
அவன் எதுவும் பேசாமல் அவ்விடத்தை விட்டு நகர, கொஞ்சம் பேசலாமா? என கேட்டு கொண்டே வெளியே சென்றாள்.
சொல்லுங்க என அன்பு கேட்க..
நீங்க தான் சொல்லணும்? பூங்கொடி மேலே தப்பு இருக்கு. அதுக்காக நீங்களும் ஒன்னும் உத்தமன் இல்ல.
அய்யோ அனு நீங்களாவது புரிஞ்சிக்க மாட்டீங்களா? என அன்பு உருக்கத்துடன் கூறினான்.
ஒரு public transport ல முகம் சுழிக்கிற மாதிரி அந்த திவ்ய பாரதி நடந்திருக்கா. அதை நீங்க எதுவுமே சொல்லாம encourage பண்ற விதமாக சும்மா விட்டிருக்கீங்க.
See அனு நான் அப்படி எதுவுமே பண்ணல.
நிறுத்துங்க மிஸ்டர். அதே பஸ்ல தானே பூங்கொடி வந்தாள். அவள் உங்களை அவ்ளோ புருஷன் அப்டின்னு express பண்ணாளா? சொல்லுங்க அதுக்கு பதில் சொல்லுங்க என அனுசுயா தீவிரமாக கேட்க, அன்பு செல்வன் பேச்சற்று நின்றான்.
“நீங்க ஒரு புருஷனா திங்க் பண்ணுங்க இதே போல நாளைக்கு பூங்கொடி கூட ஒருத்தன் நெருக்கமா இருக்கான். இதே public transport ல அவன் அவள் கூட உட்கார்ந்துட்டு கடலை போட்டுட்டு பேசுறான் வரான் போறான். முக சுழிப்பு அப்டின்ற விசயம் not only பேசுறது. ஒரு பையன் பொண்ணு கிட்ட நெருக்கமா பேசுறது தப்பே இல்ல. ஆனால் அதுக்கு இடம் ஒன்னு இருக்குல்ல.”
“ஒரு இடத்தில ஒரு பொண்ணு எல்லாரோட கவனத்தையும் ஈர்க்க பண்றதுக்கு வித்தியாசம் இருக்கு. அது ஒருத்தருக்கு தோணுச்சுனா தப்பு அவங்க மேலே. அதே போல பத்து பேருக்கு தோணுச்சுன்னா? தப்பு யாரு மேலே.. இது தப்பு இல்ல.. இது ஒரு விதமான பைத்தியக்கார தனம். பூங்கொடியாக இருக்க போய் உங்களை அப்படியே விட்டுட்டு வந்திருக்கா. உங்க இடத்துல ஜெகன் இருந்திருந்தால் நான் அதே இடத்தில் அவனை அடிச்சிருப்பேன்.”
அன்பு செல்வன் அவளை குற்ற உணர்வுடன் பார்த்தான்.
நீங்க கொடுத்த இடம் தான் இப்படி create பண்ணியிருக்கு. இது தப்பு அன்பு செல்வன்.
அனு நான் ஒத்துக்கிறேன். நான் பண்ணது தப்பு தான். நான் சரி செய்ய பார்க்கிறேன்.
நீங்க பண்ணது தப்பு இல்ல. அலட்சியம். அவ்ளோ தான். யாருக்கு எந்த இடம் எங்கே கொடுக்கணும். எப்டி நடந்துக்கணும் அப்டின்னு ஒரு வரையறை இருக்கு. என்று முடித்தாள் அனுசுயா.
அன்பு செல்வன் உயிர்ப்பே இல்லாமல் அவ்விடத்தை விட்டு நகர, ஒரு நிமிசம் என கையை காட்டி தடுத்தாள்.
சொல்லுங்க! என நிமிர்ந்தான்.
அவள் உங்க மேலே அவ்ளோ லவ்ல இருக்கா. பிளீஸ் அவள் கிட்ட கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி போங்க. உங்க மேலே இருக்க அலாதி அன்பு தான் அவளை இப்படி aggrasive ஆக மாத்தி இருக்கு.
புரியுது.
அவளை எப்படி சமாதானம் பண்ண போறீங்க?
தெரியல என விரக்தியுடன் பதில் கொடுத்தான் அன்பு.
அனுசுயா ஒரு பெரு மூச்சுடன், நெக்ஸ்ட் வீக் மேரேஜ் வந்துடுங்க. ஒன் வீக் எப்படியும் லீவ் போடுங்க. பூங்கொடி கல்யாணத்துக்கு வருவா. அங்கே வந்து அவளை சமாதானம் பண்ணுங்க என்று விட்டு கிளம்பினாள்.
அனு தேங்க்ஸ் மா!! என அன்பு நன்றி உணர்வுடன் கூற.. எனக்கு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கணும். அது தான் வேணும். All the best என்று சிரித்து கொண்டே சென்றாள்.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels