EPISODE-130
ருத்ரன் என சத்ய தேவ் பேச வர, மாமா இது என்னோட வாழ்க்கை. நான் பார்த்துக்கிறேன் என கூறி விட்டான்.
விவேகாவுக்கு இதை கேட்டதும் உள்ளுக்குள் இதம் பரவிட, அமைதியாக வேடிக்கை பார்த்தார்.
ருத்ரன் நேராக நிலாவின் முன் வந்தவன். குழந்தைய பெத்து கொடுத்திட்டு கிளம்புகிட்டே இரு. உனக்கு தேவை விவாகரத்து தானே!! நீ தானே அப்ளை பண்ண!!
இல்ல தீரா ஒரு நிமிசம் நான் சொல்றத கேளு என நிவாஸ் வந்தவன். நாங்க விவாகரத்து பண்ணல. எங்களை விவாகரத்து பண்ண சொன்னாங்க. ப்ளாக் ஈகில் அப்டின்னு ஒருத்தன். பட் அதை சீரியஸா நாங்க பாலோ பண்ணல அவன் மிரட்டினதுக்காக அப்படி பண்ணோம். என்றான்.
அப்போ என்னை அழைச்சி வந்து உங்க வீட்டுக்கு மாட்டுக்கார வேலன் மாதிரி வேலை வாங்க சொன்னது கூட அவன் தான், அண்ட் என்னை என் மேலே ஒரு பொன்னை ஒரு பொண்ணுகிட்ட அசிங்கமா நடந்த போல பழி போட்டதும் அதுவும் ஸ்கிரிப்ட் தான் அதை தான சொல்ல வர்றீங்க? என ருத்ரன் அதிகாரமாக கேட்க…
நிவாஸ் பதில் எதுவும் கூற முடியாமல் திணறினான். ருத்ரன் சிரித்து கொண்டே, போதும் முட்டு கொடுத்தது. எனக்கு என்னோட குழந்தை வேணும். அவ்ளோ தான். இங்கேயே இருந்து பெத்து கொடுத்திட்டு போக சொல்லுங்க. என்றவன் இதழை பார்த்து தண்ணி கொண்டு வா என்றான்.
இதழ் வேகமாக ஓடி சென்று அவனுக்கு தண்ணீரை நீட்டினாள். இதற்கு அர்த்தம் என்னவெனில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவது உண்மை என அனைவரின் முன்னும் காட்டி கொள்கிறார்களாம்.
தீரா நான் சொல்றத கேலன் என மகி கூற, இதழ் உன் அம்மாவுக்கு என்னை பிடிக்கல போல நான் என இழுத்தான்.
விவேகா நடுவில் வந்து, அக்கா என் பையன் தான் தெளிவா சொல்லிட்டானே. நீங்க கவலை படாதீங்க. என கையை பற்றி கொண்டார்.
இதற்கு மேல் அங்கு நின்று பேச எதுவுமே இல்லை. நிலா வெளியே செல்ல,
உன்னை இருக்க சொன்னேன். என் குழந்தை முக்கியம் என கத்தி இருந்தான் ருத்ரன்.
நிவாஸ் தன் தங்கையை பார்த்து, நீ பெத்து கொடுத்திட்டு வா மாப்ளை ரெடியா இருக்கார். பெங்களூர்லயே பெரிய இடம். நடிகர் ரவிச்சந்திரன் குடும்பம். என்றதும் இதழின் பார்வை இன்னும் சுருங்கியது.
அப்புறம் என்ன? பெத்து கொடுத்திட்டு போய் டூயட் பாடு!! அந்த குடும்பம் சரியான பொருத்தம். உங்க குடும்பத்துக்கு என்றான் ருத்ரன்.
அந்த குடும்பமா? இருக்கிறதலயே மோசமான குடும்பம் அது தான். நான் சொல்றத கேளுங்க என மிதுன் பேச வர, சூர்யா அவனை முறைத்து பார்த்தார்.
ஹரிணி கோபத்துடன் நிலாவிடம் இவ்வளவு explain பண்ணியும் அவன் விடாப்பிடியா இருக்கும் போது நீயும் எதுக்கு சும்மா இருக்கணும். குழந்தைய பெத்து கொடுத்திட்டு கல்யாணம் பண்ணிக்கோ. சில விசயங்களை எவ்ளோ ஒட்டி சேர்த்து புடிச்சாலும் அது பிரிய தான் யோசிக்கும் என அக்மார்க் SPR வீட்டு மருமகளாக பேசினாள்.
டாடி நீங்க எதுவும் பேசவே இல்ல என ரிதம் தன் தந்தையை பார்க்க, அங்க நடக்குற அத்தனையும் உருட்டு. அங்கே போய் எனர்ஜி வேஸ்ட் பண்ண சொல்றயா டிம்பிள்? என துகிலை விளையாட்டு காட்டி கொண்டே கேட்டார்.
என்ன சொல்றீங்க? என ரிதம் சிரித்து கொண்டே கேட்க..
செவ்வாழை மாதிரி பேசுற உன் தம்பிய உன் அம்மா எப்டி பார்க்கிறா பாரேன்.
ரிதம் திரும்பி பார்க்க, பெருமையின் உச்சத்தில் இருந்தார் விவேகா.
ரிதம் கண்ணக்குழி தெரிய சிரித்தாள். பப் பப் என வாயில் எச்சில் விட்டு கொண்டிருந்தான் துகில். ரிதமின் பாப் கட்டிங் மிகவும் அழகாக இருந்தது.
எனக்கு அந்த நிலாவை பிடிக்கல!! அவள் கொஞ்சம் கூட தீராவுக்கு பொருத்தம் இல்ல. அம்மான்ஜி மாதிரி இருந்துகிட்டு எப்படி வேலை காட்டுறா பாத்தீங்களா? என ரிதம் கூறினாள் முறைத்து கொண்டே..
சரி சரி வா உள்ளே போலாம் என இன்பா அழைக்க, no டாடி இங்கே எனக்கு செட் ஆகல நம்ம வீட்டுக்கு போலாம். அங்கே இருக்கணும் ரிலாக்ஸா என வயிற்றை பிடித்து கொண்டு சொன்னாள்.
போலாம் எனக்கும் நம்ம வீட்டுக்கு போகணும். என்றவர் அவ்விடத்துக்குள் நுழைந்தார்.
நிலா எதுவும் பேசாமல் உள்ளே செல்ல, SPR குடும்பம் புறப்பட்டது. ஹரிணியின் கையில் குழந்தை இருந்தாள். ரிதம் மற்றும் ஹரிணியின் பார்வை மோதி கொண்டது. இருவருக்கும் நடுவில் கொஞ்ச தூரத்தில் சத்ய தேவ் நின்றிருந்தான்.
நிதின் அடக்கப்பட்ட சிரிப்புடன் சத்ய தேவை பார்க்க, பற்களை கடித்து கொண்டு பார்த்தான் சத்ய தேவ். ஒன்றுமே செய்ய முடியாது. அவனால்.. சத்ய தேவ் கண் காட்ட, நிதின் தொண்டையை சிறும்பி கொண்டு ஹரிணி நேரமாகுது போலாம் என சொல்லவும் தான் இருவரும் முறைத்து கொண்டு அவரவர் பாதையில் சென்று விட்டார்கள்.
தங்கம் வந்து உட்காரு!! படபடான்னு பேசிட்ட ஆனாலும் எல்லாத்தையும் சரியா பேசிட்ட டா என் தங்கம் டா என விவேகா கூறியபடி கொஞ்சினார் ருத்ரனை..
அப்போ இதழுக்கும் ருத்ரனுக்கும் கல்யாணம் அப்படி தான என கேட்டு கொண்டே வந்தாள் விவேகா.
ஆமா என இதழ் முந்தி கொண்டு கூறிட..
ரித்து குட்டி வந்து சாப்பிடு நேரமாகுது. என கூறியபடி மகி அழைக்க, மாமி நான் அப்பா கூட எங்க வீட்டுக்கு போறேன். என சொல்லி விட்டாள் ரிதம்.
சத்ய தேவ் நெற்றியை தேய்த்தபடி பார்க்க
ஏன் என்னாச்சு? என விவேகா பதறி கொண்டே கேட்டார்.
என்ன மா? என்னாச்சுன்னு கேட்கிற? என்னோட டாடி கெஸ்ட் மாதிரி இங்கே இருக்கிறது எனக்கு பிடிக்கல. இப்போவே போகணும்
நீ கெஸ்ட்டா இன்பா? என சூர்யா கேட்க..
என் பொண்ணு என்ன நினைக்கிறாளோ அதை தான் நான் பண்ணுவேன். எனக்கு எல்லார் விட அவளோட கம்பார்ட் முக்கியம் சூர்யா என முடித்து கொண்டார் இன்பா.
என்ன பேச்சு பேசுறீங்க? என கோபத்துடன் விவேகா முன்னாள் வர,
என்ன எகிறிட்டு வர? எல்லா வேலையும் மகி செஞ்சு போடுறா. நீ துகில தூக்கி வச்சிட்டு அப்படியே அந்த சாக்குல op அடிக்கிற. இவங்க எல்லாரும் நம்ம வீட்டுக்கு வந்து இருக்கட்டுமே? வேணும்னா சத்ய தேவ் நம்ம வீட்டுக்கு வரட்டுமே!! என்றார் இன்பா.
மகி ரிதமின் அருகில் வந்து, உன்னோட பாயிண்ட் சரி தான் தங்கம். ஆனால் உன்னோட வயித்துல ரெண்டு குழந்தை இருக்கு. அதை பாங்கு பாக்கிறது கொஞ்சம் கஷ்டமான வேலை. டெலிவரி சீக்கிரம் ஆகுற போல தோணுது எனக்கு. இப்போ எட்டு மாசம் தொடங்கிடுச்சு அதுக்கு தான் சொல்றேன் என்றார்.
ஆமா அத்தை சொல்றதும் சரி தான். கல்யாணம் நடக்குற வரைக்கும் இங்கே இருக்கலாம் அப்புறம் நம்ம வீட்டுக்கு போயிடலாம் என்றான் ருத்ரன்.
இல்ல நான் இப்போவே போகணும். என ரிதம் கூற..
மாமா நான் ரிதம வெளியே கூட்டிட்டு போக நினைக்கிறேன்.
இல்ல என்னால வர முடியாது என ரிதம் மறுத்து விட, மாமா சொல்லுங்க பிளீஸ் என சத்ய தேவ் கேட்க..
இன்பா தன் மகளை பார்த்து, போயிட்டு வா ரிதம் என அனுப்பி வைத்தார் இன்பா.
ரிதம் கோபத்துடன் சத்ய தேவை பார்த்தவள். வேகமாக முன்னால் நடந்தாள்.
சத்ய தேவ் பெரு மூச்சுடன் அவளின் பின்னால் சென்றான்.
காரில் ஏறியதும் அவளின் கையில் துப்பாக்கியை கொடுத்தான்.
நீ என்ன மயிறு புடுங்கினாலும் நான் உன்னை…!! என முகத்தை திருப்பி கொண்டாள்.
ஒரு பெரு மூச்சுடன் சத்ய தேவ் வண்டியை எடுத்தான். இருவரும் நேராக ஜெயிலுக்கு சென்றார்கள்.
இங்கே எதுக்கு வந்திருக்கோம் எனும் ரீதியில் அவள் பார்க்க, சரிகாவ பார்க்க வந்திருந்தார்கள் என தெரிந்தது.
இருவரும் நேராக அவ்விடத்துக்கு சென்றார்கள். தேவ் என புன்னகை முகமாக அழைத்த சரிகாவின் முகம் அப்படியே மாறி போனது. ரிதமின் வயிற்றை பார்த்து.
சத்ய தேவ் துப்பாக்கியை அவளிடம் நீட்டினான். ரிதமின் கையில் துப்பாக்கி.
தொடரும்..