அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
338 views

Episode -68

போயே ஆகணுமா? என அவள் முகத்தில் கலவர ரேகை தோன்ற.. 

ம்ம் கண்டிப்பா போயாகனும் என தள்ளி படுத்தான். 

என்ன தள்ளி போற? எப்போவும் fevi kvik மாதிரி ஒட்டிட்டு இருப்ப? இன்னிக்கி தள்ளி போய் படுக்கிற? என ரிதம் கேட்க.. 

கோவில்ல பூ போட்டுட்டாங்க!! அதான் இனி தப்பு பண்ண கூடாது. 

இது தப்புன்னு யாரு சொன்னது? என அவனை பார்த்தாள் ரிதம். 

எங்க ஊர் விசயத்துல நான் கொஞ்சம் கான்சியஸ் என்றான் சத்ய தேவ். 

சரி எப்படியோ இருந்திட்டு போ!! எனக்கு கால் வலிக்குது புடிச்சி விடு!! அண்ட் சாப்பாடு ஊட்டி விடு, அப்புறம் என வேலையை லிஸ்ட் போட்டாள். 

சத்ய தேவின் கண்கள் சிவப்பாக இருந்தது. பத்து மணி வரை தூங்கலாம் என நினைத்தான். ஆனாலும் சலிக்காமல் செய்தான். 

என்ன டி இதை போய் பார்க்கிற? என சத்ய தேவ் கேட்க.. 

The Last of us super ஆ இருக்கு  உனக்கு என்ன தெரியும். என சீசனில் கவனம் செலுத்தினாள். 

வேற பாரேன்!! என சத்ய தேவ் சொல்ல..

அப்போ anora பார்க்கவா?.. 

அதுக்கு இதையே பாரு என உணவு மொத்தமும் ஊட்டி விட்டான். 

வாக்கிங் போகனும் என ரிதம் சொல்ல அவளை கை தாங்களாக அழைத்து சென்றான். 

மேலே கூட்டி வந்தவன் காலுக்கு மிதமான நீரில் ஊற்றி விட்டு அவன் குளிக்க சென்றான். 

அவன் கிளம்பும் வரை முளித்திருந்தாள். 

என்னாச்சு தூக்கம் வரலையா? சரி நீ புறப்படு உங்க வீட்ல கொண்டு போய் விடுறேன். 

வேணாம் அதுக்கு நான் இங்கேயே இருப்பேன். என ரிதம் படுக்கையில் மெதுவாக படுத்து கொண்டாள். 

சத்ய தேவ் காக்கி உடையில் புறபட்டவன். அவளின் அருகில் வந்தான். 

ரிதம்!! 

ம்ம்!! 

“லவ் யூ!” என சத்ய தேவ் கூற.. 

நான் சொல்லுவேன்னு நினைச்சு சொல்லாத!! எப்போவும் சொல்ல மாட்டேன் என்றாள் ரிதம். 

“சொல்ல வேணாம் எனக்கு தேவையும் இல்ல” அவன் அனைத்தையும் எடுத்து கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தான். 

ஏன் அப்படி? என ரிதம் வயிற்றை பிடித்து கொண்டு எழுந்து கொள்ள… 

“வெட்கமா இருக்கும்ல!!”

மயிரு!! என ரிதம் கூற..  

உன்னோட வாயில் இருந்து வரும் வார்த்தைக்கு மதிப்பு அதிகம். அதான் அதனால் நீ சொல்ல வேணாம் விடு. ஒன்னும் பிரச்னை இல்ல என்ற சத்ய தேவ் அவளின் உதட்டில் ஒரு முத்தம். பிறை வயிற்றில் ஒரு முத்தம் நெற்றியில் என கொடுத்து விட்டு புறப்பட்டான். 

ரிதம் கதவை சாத்தி விட்டு நேராக பால் கணி பக்கம் வந்தவள் அவனை பார்க்க நின்றாள் ஆசையுடன். போலீஸ் ஜீப்பில் தனது அப்பார்ட்மென்ட்டை அன்னார்ந்து பார்த்தவன். அதான் பின் புறப்பட்டான். 

ரிதம் ஒரு பெரு மூச்சுடன் படுக்கையறை செல்ல.. கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. 

இப்போ தானே போனான். அதுக்குள்ள கதவ யாரு தட்டுறாங்க? என யோசித்தவள் முகம் குப்பென வியர்க்க ஆரம்பித்தது. காலிங் பெல் ஒரு புறம் விடாமல் அடிக்க.. கதவும் விடாமல் தட்ட பட்டது. வேகமாக சென்றவள் கையில் வாலினி ஸ்ப்ரே எடுத்து கொண்டாள் எதிராளியின் கண்களில் அடிக்க.. 

கதவின் கண்ணாடி வழியாக பார்த்தாள். எதோ ஆர்டர் பார்சல் முகத்தில் பூத்த வியர்வையை துடைத்த படி கதவை திறந்தாள். ஆனால் இரும்பு கதவு பூட்டி தான் இருந்தது. சாவி சத்ய தேவ்விடம் இருக்கிறது. 

பொண்டாட்டி!! என குரல் கேட்க..

ரிதமின் கண்களில் மிரட்சியும் கோபமும் தாண்டவமாடியது. வயிற்றை பிடித்து கொண்டாள். 

நீ இன்னும் அவனை விட்டு போகலயா? ஓ என்னோட குழந்தையா? என எதிரில் இருப்பவன் கேட்க.. 

ச்சீ வாய மூடு யூ சன் ஆஃப் b* என ஸ்ப்ரேவை கையில் எடுத்தாள். 

மன்னிச்சிடு டி!! இது நம்ம பங்காளி  குழந்தையா? 

உனக்கு வெட்கமா இல்லையா டா!! அவன் இல்லாத நேரம் பார்த்து வந்திருக்க? சக்தி இருக்கும் போது இப்படி பேச முடியுமா உன்னால!!.. என ரிதம் கேட்க.. 

உன் கிட்ட தான் டீல் பேசிட்டு போக வந்தேன். அவன் எதுக்கு நம்ம ரெண்டு பேருக்கு நடுவில் என்ன தான் இருந்தாலும் நீயும் எனக்கு பொண்டாட்டி தான சைலு குட்டி!! என்றான் கோரமாக சிரித்து கொண்டே.. 

தேவையில்லாம பேசாத அரிசந்திரா!! என அவள் முகத்தில் வியர்வை வடிந்தது. 

அய்யோ பயப்படாத உன்னை நான் கொல்ல வரல ஜஸ்ட் பேச தான் வந்தேன். நீ உன் புருஷனை டைவர்ஸ் பண்ண ஸ்டெப் எடுத்தியே அது என்னாச்சு? அதை பார்த்ததும் எனக்கு ரொம்ப சந்தோசம். 

நான் என்ன பண்ண உனக்கு என்ன டா புல்ஷிட். 

அய்யோ சைலு மா அப்படி இல்ல டி!! இப்படி சொன்னால் எப்படி? 

இப்போ உனக்கு என்ன டா வேணும்? என ரிதம் கோபமாக கேட்க..

உன் தம்பி உயிர் வேணும்!! கூடவே உன்னோட சீரலியிற வாழ்க்கை வேணும் என்றான் எதிரில் இருக்கும் அரிசந்திரன். 

ரிதம் பதட்டத்துடன் பார்க்க அரிசந்திரா சிரித்து கொண்டே உன் தம்பி உயிரை ஹோம் மினிஸ்டர் எடுத்திடுவான். அது ஒன்னும் பிரச்னை இல்ல. நீ என்ன பண்ற? உன்னோட ஆரிருயிர் காதலன்! அன்பு கணவன் உன் குழந்தையோட அப்பன் போலீஸ் புலிநெருப்பு அவனை விட்டு பிரிஞ்சி போற.. என்றான் அரிசந்திரன். 

ருத்ரணை எதுக்கு நிதின் கொலை பண்ண போரான்? என ரிதம் கேட்க.. 

அரிசந்திரன் சிரித்து கொண்டே உன் CID புருசன் கண்டு பிடிச்சு உன் கிட்ட சொல்லலயா? என்றான். 

என்ன? என்ன சொல்ற? என் தம்பிய நீ சாதாரணமா நினைக்காத!! அவன் என ரிதம் ஆரம்பிக்க.. 

மினிஸ்டர் தங்கச்சிய சின்னா பின்னமாக்கி சிதைச்சதே அவன் தான் டி என கண் சிமட்டினான் அரிசந்திரன். 

ரிதமுக்கு மயக்கம் வராத குறை தான். அரிச்சந்திரன் சிரித்து கொண்டே உன் தம்பி ருத்ரன் காதலிய தான் இப்போ மினிஸ்டர் தம்பி நிவாஸ் கல்யாணம் பண்ணிருக்கான். அவனோட காதல் கை கூடல. ஆனால் உன்னோடது கை கூடி போச்சு. இது இப்படியே இருந்தால் என் தலைவன் தனாவுக்கு புடிக்காது. அதனாலே நீ என்ன பண்ற? குழந்தை பிறந்ததும் உன் புருஷனை விட்டு போற!! என்றான் அரிசந்திரன். 

ஏன் டா இப்படி எங்களை கொடுமை பண்ற? உன்னை கொன்னு புதைப்பேன் ராஸ்கல். 

அப்போ உனக்கு ஒரு ஆப்சன் தரேன். உனக்கு உன்னோட போலீஸ் டாடி வேணுமா? இல்ல CID போலீஸ் சத்ய தேவ் வேணுமா? இல்ல CID போடுற குட்டி வேணுமா? என அரிசந்திரன் கேட்க.. 

ரிதமின் கைகள் வயிற்றை கெட்டியாக பிடித்து கொண்டது. கண்களில் நீர் கொட்டியது. 

அரிசந்திரன் சிரித்து கொண்டே கஷ்டமா இருக்கா? பதில் சொல்ல.. 

ரிதம் தள்ளாடியபடி நின்றாள். 

அரிசந்திரன் சிரித்து கொண்டே முடிவு உன் கையில உன் போலீஸ் புருஷன விட்டு நீ போகனும். ஊர் அறிய நீ டைவர்ஸ் வாங்கணும். இல்ல அஞ்சு பேர் இருக்க மாட்டீங்க. 

ரிதம் வேக மூச்சுடன் பார்க்க.. உன் அம்மாக்காரின்னா உன் அப்பனுக்கு உயிர், நீ இருப்ப! உன் புருசன் இருக்க மாட்டான். அப்புறம் உன்னோட குழந்தை அப்பன் இல்லாம வளரும். கூடவே உன் தம்பி பொண்டாட்டிய போட்டு தள்ளிட்டு போயிடுவேன். 

ஏன்டா இப்படி கொடுமை பண்றீங்க? 

தனா இன்ப ராகவன் பெத்த புள்ளை வேதனை படுறா டா!! பார்க்க நல்லாருக்கு என அரிசந்திரன் கூற.. 

சுற்றிலும் தேடி பார்த்தாள் ரிதம். 

சரி உன் தம்பி விசயத்தை லீக் அவுட் பண்ண!! அந்த நிதின், SPR ரெண்டு பேரும் சேர்ந்து அவனை முடிச்சு கட்டிடுவாங்க அதனாலே நான் சொல்றத நல்லா யோசி. உனக்கு நிறைய டைம் இருக்கு. திரும்ப நான் உன்னை?? ம்ம் உன்னோட டெலிவரிக்கு பார்க்கிறேன். என்று விட்டு கையில் ஒரு லெட்டரை இரும்பு கேட்டின் வழி வீசி விட்டு புறபட்டான். 

ரிதம் கதவை அடைத்து கொண்டு ஸோபாவில் அமர்ந்தவழுக்கு ஒரு பொட்டு தூக்கம் வரவில்லை. ஹே ஹீரோ!! மை பாய்!! நீ உனக்கு ஒன்னும் ஆகாது செல்லம். உன்னை பத்திரமா மகி மாமி கிட்ட கொடுப்பேன். உன்னை மகி மாமி சூப்பரா பார்த்துப்பாங்க. என கண்களில் நீர் கொட்டியது. 

அந்த லெட்டர் கடிதத்தை திறந்து பார்த்தாள். நான் சொன்ன விசயம் எல்லாத்தையும் கேட்டு உன் அம்மாகாரி அப்பன்காரன் கிட்ட பாசத்தை கொட்டனும்னு நீ நினைக்காத!! உன்னை இல்ல மொத்த குடும்பத்தையும் black eagle ஆளுங்க கண்காணிச்சிட்டு தான் இருப்பாங்க. முடிவு உன் கையில் இன்னும் மூணு மாசம் இருக்கு. உன் குழந்தை இந்த பூமிக்கு அடி எடுத்து வைக்கும் போது நீ உன் குடும்பத்தை மொத்தமா பிரியனும். பத்திரமா போயிட்டு வா உங்க ஊர் நோம்பிக்கு இப்படிக்கு அன்புள்ள சைலஜாவின் கணவன் அரிசந்திரன் என்று எழுதி இருந்தது. 

ரிதம்…? 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment