Episode -67
மூச்சு வாங்கிய படி அமர்ந்திருந்தாள் கண்மணி.
என்ன மா எதுக்கு வர சொன்னீங்க? என இறுகிய முகத்துடன் நிவாஸ் வந்து சேர்ந்தான்.
அது சந்தோஷமான விசயம். கண்மணி மாசமா இருக்கா!! உனக்காக வெயிட் பண்றா ஓடு ஓடு!! அவளை இனி நீ நல்லா பார்த்துக்கணும். என தேஜு உற்சாகமாக கூறிய படி வாயில் மிட்டாயை போட்டு விட்டாள்.
ஹரிணி உற்சாகத்துடன் இனிமே குட்டி தம்பி சீக்கிரமே அண்ணன் ஆக போறான். ஆல்ரெடி உன்னோட சித்தப்பா சக்திக்கு ஒரு பாப்பா, உன்னோட அத்தைக்கு ஒரு பாப்பா இப்போ உன்னோட நிவாஸ் சித்தப்பாவுக்கும் ஒரு பாப்பா. சோ குட்டி தம்பி இனி அண்ணன் ஆகிட்டானாம் என குழந்தையிடம் கதை அளந்து கொண்டிருந்தாள்.
நிவாஸ் அமைதியாக அதே இடத்தில் நிற்க.. என்ன நிவா இங்கேயே இருக்க போ போய் அவளை பாரு டா!! என ஹரிணி கூற..
இதோ வதினா!! என நேராக அறைக்கு சென்றான். அவன் நடந்து வரும் அரவம் கேட்க..
மெல்ல திரும்பி பார்த்தாள். நிவாசுக்கு எப்படி எதிர் கொள்வது என தெரியவில்லை. அதை விட இப்பொழுதும் அவள் மேல் இருக்கும் எந்த அபிப்ராயமும் இன்னும் மாறவில்லை.
நிவா!! என அவனை அழைத்து கொண்டே திரும்பினாள்.
உனக்கு ஹெல்த் ஓகே தான!! என நிவாஸ் அதே இறுகிய முகத்துடன் கேட்டான்.
கண்மணியின் கண்களில் நீர் கோர்த்து கொள்ள இந்த நேரத்தில் இதை பத்தி பேச கஷ்டமா தான் இருக்கு. எனக்கு என்னோட பாஸ்ட் முக்கியம் இல்ல நிவாஸ். என்னோட பிரசெண்ட் தான் முக்கியம். உங்களை பார்க்கும் போது நான் யாரு? என்னோட பேர் ஊர் எதுவுமே தெரியாம மறு ஜென்மம் எடுத்து வந்தேன். என்றவளின் கண்கள் கலங்கிட அவனை பார்த்தவள். நான் இந்த உலகத்தில் இல்லன்னு தீரா என்னை மறித்து போன உயிரா நினைச்சு பழகி இருப்பார். மூணு வருஷம் கழித்து பார்க்கும் போது எனக்கு தீரா கூட சேர்ந்து வாழ தோணல.
நிவாஸ்சின் முகத்தை பார்த்து உங்களோட மனசுல காதலையும் நேசத்தையும் வளர்த்து விட்டுட்டு அதை அப்படியே விட்டுட்டு போனால் அதை விட கொடுமை எதுவும் இல்ல. உங்களை விட்டு தீரா கூட என்னால வாழ முடியாது. தீராவை பத்தி எனக்கு தெரியும். ஒன்ஸ் தூக்கி போட்டுட்டா அவர் என்னை நினைக்க மாட்டார். எப்படி இருந்தாலும் நான் உங்களை விட்டு தீரா கூட போட்டிருந்தால் அது உங்களுக்கு துரோகம். அதே போல தான் தீராவ விட்டு உங்க கூட..
மேலும் கண்மணி எனக்கு மறுஜென்மம் கிடைச்சது உங்க கையில அப்போ என்னோட வாழ்க்கையும் உங்க கையில தான். அதனால தான் நான் உங்க கூட வாழ முடிவெடுத்தேன். நிலாவை தீரா கூட சேர விடாமல் தடுங்கன்னு சொன்னதுக்கு காரணம். என்னோட வாழ்க்கையில் பிரச்னை வருன்றதுக்காக இல்ல. தீரா வாழ்க்கையில் ஆல்ரெடி என்னால வேதனை பட்டு நொடிஞ்சி போயிட்டார். தீராவோட வாழ்க்கையில் முதல் அத்தியாயமா ஒரு பொண்ணு வேணும்னு நினைச்சேன். ஆனால் நிலா தீராவுக்கு இரண்டாம் அத்தியாயம். வேற யாரோட குழந்தைய தீராவொட இனிஷியல்ல வரது எனக்கு விருப்பம் இல்ல. நான் சுய நலமா திங்க் பண்ணேன்.
வார்த்தைக்கு வார்த்தை அவனை பத்தி பேசுற நீ!! என் கிட்ட முன்னாடியே சொல்லி இருந்தால் நான் அவன் கூடயே உன்னை …
“என்ன சொன்னீங்க? மறுபடியும் சொல்லுங்க” என கண்மணி எழுந்து நின்றாள். அவளின் கண்களில் வேதனை நிறைந்து இருந்தது.
கண்மணியின் உதடுகள் துடிக்க… நான் இல்லன்னா தீரா உயிரோட இருப்பார். ஆனால் நீங்க செத்திடுவீங்க. அவரை நான் உயர்த்தி பேசல. உங்களுக்கு புரியல. ஓகே நீங்க உங்களோட குழந்தைக்காக பேச வேணாம். எனக்காக பேசும் போது கிட்ட வாங்க. இல்லன்னா வர வேணாம். என்னை வீட்டை விட்டு போக சொன்னால் கூட நான் போறேன். குழந்தைக்காக கிட்ட வர வேணாம் பேச வேணாம். அது நான் சாகுற கடைசி நாளாக இருந்தாலும் சரி என்று விட்டு வெளியே சென்றாள் கண்மணி.
தீராவின் முன்னால் காதலியாக தான் இப்பொழுது பேசினாள் கண்மணி. நிலா ருத்ரனுக்கு பொருத்தம் இல்லை. தீராவுக்கு களங்கம் இல்லாத பெண் கிடைக்க வேண்டும் என நினைத்தாள் மீனாட்சி. ஆம் முதல் காதல் முதல் நேசம் மனதை விட்டு எப்பொழுதும் நீங்காது. அதை விட முன்னால் காதலன் தன் முன் வேறு ஒரு பெண்ணை தாங்குவது கண்மணிக்கி பிடிக்க வில்லை. இந்த ஞான உதயம் அனைத்தும் அவள் கருவான பிறகு தோன்ற வில்லை. ஆள் மனதில் அசை போட்டு கொண்டிருந்த வார்த்தைகள். அதற்கு வடிவம் கொடுத்திருக்கிறாள்.
நிவாஸ் ..?
***
என்ன அப்படி பார்க்கிற? என சத்ய தேவ் எதிரில் வந்து அமர்ந்தான்.
நான் எப்போ பார்த்தேன்.
நீ வச்ச கண்ணு வாங்காம பார்த்தது எனக்கு தெரியும். சொல்லு என்ன விசயம்? என சத்ய தேவ் கேட்க..
ஒன்னுமில்லை என ரிதம் முகத்தை திருப்பி கொண்டாள்.
ஒண்ணுமே இல்லையா? என சக்தி அவளின் உதட்டில் முத்தமிட்டான்.
ப்ச்!! என அவள் சினுங்க..
என்னன்னு சொல்லு டி!! என கைகள் அங்கும் இங்கும் சென்றது.
எனக்கு என்னோட டாடி கிட்ட பேசணும் போல இருக்கு.
போன் பண்ணி பேசு!!
அவர் பேச மாட்டார் என முகத்தை திருப்பி கொண்டாள்.
சரி கிளம்பு நம்ம அங்கே போலாம்.
இல்ல வரல!!
லூசி மாதிரி உன்னை நீயே ஏன் டி கஷ்ட படுத்திக்கிற? என சத்ய தேவ் கேட்க..
உன் கிட்ட ஒன்னு கேட்கணும்!
என்ன? என சக்தி பார்த்தான்.
ஒரு வேளை நான் எனக்கு ஐ மின் நான் சதி தேவியா வந்துட்டா என்ன பண்ணுவ நீ?
ம்ம் பிடிக்குமே ரொம்ப!!
அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை.
ஹே என்ன டி எது எதுவோ கேட்கிற? மாற போறியா என்ன? ம்ம் மாறு மாறு!!
ரிதம் எழுந்து பாத் ரூம் சென்றாள். அவள் பின்னாலேயே சென்றான் சத்ய தேவ்.
அவள் வெளியே வந்ததும் அவன் தயாராக இருந்தான்.
உனக்கு எப்போ பாரு இதே வேலை தானா!! என உதடுகள் சொன்னாலும் விருப்பம் தான் அவளுக்கு.. காட்டுக்குள் விழுந்த…
மழை துளி போல…
உனக்குள்ளே தொலைந்துவிட்டேன்… இது அவள் நிலை..
சத்ய தேவ் … பன்னிரண்டு மாதம்…இரவுகள் செய்து…பள்ளியறை சுகம் பெருக… அவன் நிலை. ஆக மொத்தத்தில் காதலில் கரைந்து ஒன்றாக கலக்க வேண்டும். தினமும் ஒரு முறை. அது வேலையாக கூட இருக்கலாம்.
மாலை ஆனது சத்ய தேவ் அவளின் கால்களை பதமாக பிடித்து விட்டு கொண்டிருந்தான். அந்த நேரம் பார்த்து போன் வந்தது.
“ஹலோ மா!!”
கோவில்ல பூ போட்டிருக்காங்க ரிதம ஆத்தா கூட்டிட்டு வர சொல்றாங்க. அதுக்கு தான் போன் பண்ணேன். என்றார் மகி.
சரி மா என போனை வைத்தான்.
என்ன தீவிரமான உரையாடல்? என ரிதம் கேட்க..
கோவில்ல கம்பம் நட்டுருக்காங்க அதனால ஊருக்கு போறோம்!
எந்த ஊருக்கு?
“நம்ம ஊருக்கு!! ஈரோடு!” என சத்ய தேவ் சொன்னதும் அவளுக்கு நடுக்கம் தொற்றி கொண்டது.
என்னாச்சு? என சத்ய தேவ் கேட்க..
அது நான் வ என அவள் ஆரம்பிக்க..
வரலனு சொல்லிடாத! இது காவல் தெய்வம். குல தெய்வம். எனக்கு காவல் தெய்வம் மேலே நம்பிக்கை இருக்கு. போறோம் நம்ம.. என உறுதியாக கூறினான் சத்ய தேவ்.
ரிதமின் மனதில் பயம் தொற்றி கொண்டது.
ரிதம் வியர்க்க விறுவிறக்க அமர்ந்திருந்தாள். நான் அவன் பக்கத்துல இருந்தால் அவனுக்கு கஷ்டம் தான் வரும். நான் அவனை விட்டு போகனும் என நினைத்து கொண்டாள்.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels