அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
331 views

Episode-69

அந்த பேப்பரை பார்த்தவளுக்கு நீர் தாரை தாரையாக கொட்டியது. எதற்கும் கலங்காதவள் இன்று கலங்கி விட்டாள். 

பத்தி நிமிடங்களில் காகிதத்தில் எழுதி இருந்த மை காணாமல் போனது. வயிற்றை பிடித்து கொண்டு படுக்கையறை சென்றவள். அங்கே சத்ய தேவ் அவர்களின் இருவரின் உடைகளையும் துவைத்து காயவைத்து நேர்த்தியாக மடித்து வைத்திருந்தான். அதில் அவனது சட்டையை எடுத்து இறுக்கமாக அணைத்து கொண்டாள். கண்களில் நீர் கொட்டியது. பிடிக்கும் டா!! உன்னை புடிக்கும். என் உயிர விட புடிக்கும் மரண படுக்கையில் இருந்தாலும் உன் முகம் மறக்காது டா!! நான் எனக்கு நீ வேணும். ஆனால் நான் உன் பக்கத்துல இருக்க கூடாது. என அப்படியே படுக்கையில் மெல்ல அமர்ந்தாள். 

இப்போ ஆறாவது மாசம் நடந்துட்டு இருக்கு. இன்னும் மூணு மாசம் உன் கூட ஆசை தீர இருந்திட்டு நான் போயிடுறேன். சத்தியமா சாக மாட்டேன். உன்னை பார்த்துகிட்டே இருக்கணும்.  உன்னை அணு அணுவாக ரசிக்கணும். டியுட்டியில் ஜாயின் பண்றேன். என தனக்கு தானே சொல்லி கொண்டாள் ரிதம். 

போனை எடுத்து ஸ்குரோல் செய்தாள். இன்பா, விவேகா, ருத்ரன் என அனைவரின் நினைவும் ஆட்டி படைத்தது. ருத்ரன் பற்றி நினைக்கும் போது இன்னும் வேதனையாக இருந்தது. நடக்கும் எதையும் மாற்ற முடியாது. கடவுள் என ஒருவர் இருந்தால் கண்டிப்பாக மாற்றம் வரும். என் தம்பியோட லவ்வ பிரிச்சது கூட இந்த பாவிகளா தான் இருப்பாணுங்க. என புலம்பியவள் விடிய விடிய விழித்து இருந்தாள். பாத்ரூம்க்கி ஓட்டமும் நடையுமாக இருந்தாள். 

அடுத்த நாள் சத்தமே இல்லாமல் விடிந்தது. கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்க.. வயிற்றை பிடித்து கொண்டு எழுந்தவள் லெட்டர் கவர் மற்றும் லெட்டர் இருக்க அதை கிழித்து வேகமாக டஸ்ட் பின்னில் போட்டு விட்டு வியர்க்க விறுவிறுக்க எழுந்து நின்றாள். 

குட் மார்னிங்!! என்றவன். என்னாச்சு முகம் வியர்த்து இருக்கு? கண்ணு சிவந்து இருக்கு? தூங்கலயா நீ? என சத்ய தேவ் கேட்க.. 

அது என்னமோ தெரியல தூக்கம் வரல!! சரி வா!! என முன்னாள் நடந்தாள். “ரிதம் நில்லு!” என சத்ய தேவ் அழைக்க.. 

“ஹாங் சொல்லு என்னாச்சு?”

முடி பாரு எவ்ளோ சிடுக்கா இருக்கு? இதை கூட வாரி பின்னி பொட மாட்டியா? என சத்ய தேவ் கேட்டபடி மெல்ல அவளை அமர வைத்து கொண்டை போட்டு விட்டான். 

அது சிடுக்கு இருக்காது எனக்கு? இன்னிக்கு என்னன்னு தெரியல!! நான் மறந்துட்டேன் என்றாள். 

சரி மதர்ஸ் ஹார்லிக்ஸ் கலக்கட்டுமா? என சத்ய தேவ் கேட்க.. 

இல்ல எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன். என ரிதம் படுக்கைக்கு செல்ல.. 

இன்னிக்கு ஊருக்கு போகனும்!! 

ம்ம் போலாம் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன் என படுக்கைக்கு சென்றாள். 

சத்ய தேவ் குளித்து முடித்து விட்டு ஹார்லிக்ஸ் கலக்கி கொண்டு படுக்கைக்கு வந்தவன் இதை குடிச்சிட்டு தூங்கு டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் என கூற.. 

அது வாமிட் வரும் எனக்கு வேணாம் பிளீஸ் பால் பிடிக்காது என சிணுங்கினாள். 

அப்புறம் வேற என்ன சாப்பிடுற? சொல்லு மோர் அடிச்சு எடுத்திட்டு வரட்டுமா? 

ம்ம் என படுக்கையில் சுருண்டாள். 

மோர் சிலுப்பி எடுத்து வந்தவன். ம்ம் எழுந்து குடி என நீட்டினான். சோர்வுடன் எழுந்து அமர்ந்தாள். முடியை ஒதுக்கி விட்டு டம்ளரை நீட்டினான். 

வாங்கி மெதுவாக குடிக்க ஆரம்பித்தாள். 

வீட்டுக்கு எதுவும் லெட்டர் வந்ததா? என சத்ய தேவ் கேட்க… 

ரிதமின் மூக்கின் கீழ் வியர்வை முத்துக்கள் பூக்க.. கண்களில் கலவரம். 

என்ன? என அவள் நிமிர்ந்து பார்த்தாள். 

இல்ல கேஸ் சம்பந்தமா ஒரு லெட்டர் வரணும். மார்னிங் டெலிவரி ஆகிடுச்சு ன்னு காட்டுச்து ட்ராக்கிங் பார்க்கும் போது. அதான் கேட்டேன். என்றான்.

இல்லையே எதுவும் வரல!! என மூச்சு வாங்கினாள். 

ஹே என்ன டி ஆச்சு? மூச்சு வாங்குற? என அவளை நிற்க வைத்தான். 

இல்ல அடைச்ச போல இருக்கு பால் கணி போனால் சரி ஆகிடும் எனக்கு தண்ணி வேணும் என ரிதம் சொல்ல..  அவளை பால்கனி பக்கம் அழைத்து சென்றான். 

தண்ணீரை கொண்டு வந்து நீட்டினான். வாங்கி குடித்தவள் அதே இடத்தில் அமர்ந்திருந்தாள். 

என்ன பண்ணுது? சரி உனக்கு தான் அங்கே வர விருப்பம் இல்லல்ல நம்ம போக வே.. 

இல்ல போறோம்! போலாம் எனக்கு போக தோணுது என ரிதம் கூற.. 

அவளின் முன்னால் மண்டி போட்டு அமர்ந்தவன். ஒன்னும் பிரச்னை இல்லையே என வயிற்றில் கை வைத்தான். 

இல்ல எந்த பிரச்னையும் இல்ல போலாம் என மெல்ல புன்னகை செய்தாள். கன்ன குழி கொஞ்சம் ததும்பியது. 

சரி நம்ம வீட்டுக்கு போய் சாப்பிடலாம். அம்மா எல்லாமே பண்ணிட்டேன்னு சொன்னாங்க. உனக்கு ஓகே தான!! 

ம்ம் எனக்கு ஓகே சரி என்ன ட்ரஸ் போடணும்னு எடுத்து வை என மெல்ல உள்ளே சென்றாள். 

“என்ன பண்ற கொஞ்ச நேரம் தூங்கு!”

இல்ல நான் குளிக்க போறேன் என ரிதம் உள்ளே சென்றாள். 

ஒரு சில நொடிகளுக்கு பின் ரிதம் நீ ஓகேவா! நான் வரட்டுமா? டாய்லெட் சீட் மேல் உட்கார்ந்து குளி டி! என அவன் சொல்ல.. 

நீ வா என கதவை திறந்து விட்டாள். காமம் மட்டும் தான் திகட்ட திகட்ட கொடுப்பானா? என கேட்டால் இல்லை. காதலும் நேசமும் நூறு மடங்கு பாசமும் இருக்கும் அவளை அமர வைத்து மிதமான சூட்டில் குளிக்க வைத்தான் கால்களை பிடித்து தேய்த்து ஊற்றி விட்டான். 

முதுகு கொஞ்சம் பிடிச்சு ஊத்தி விடு என ரிதம் திரும்பி கொள்ள. அத்தனை பாங்காக அவளை பார்த்து கொண்டான். வெளியே வந்ததும் இலகுவான லாங் டாப் போட்டு அவளை குழந்தை போல தயார் செய்தான். 

போலாம் என அவள் அவனுடன் கை கோர்த்து கொள்ள.. 

சத்ய தேவ் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான். 

என்னாச்சு அப்படி பார்க்கிற? என ரிதம் கேட்க.. 

எனக்கு ராவடி ரிதம் வேணும். இது சைலஜா பாதி ரிதம் பாதி இருக்கே!! 

போடா மூடிட்டு என ரிதம் புருவம் சுறுக்க.. 

ம்ம் இப்போ தான் நான் ரிதம் வேல்ட்ல இருக்கேன். என அவளை அழைத்து கொண்டு சென்றான். 

போலாமா சக்தி! எல்லாரும் ரெடி!! உன் மாமனார் வீடு, நிலா, அப்புறம் மை விழி சித்தி வீடு எல்லாத்தையும் கூப்பிட்டுட்டென். சிவன்யா வீட்டுக்கு ஆக்கி போடணும். நோம்பிக்கு மாப்பிள்ளைய அழைச்சிருக்கேன். பார்ப்போம் என மகி சொல்லிய படி புறப்பட்டார்கள். 

இன்பா, விவேகா, நிலா,  ரிதம்,  சத்ய தேவ், மிதுன் தேவ், மகி, சூர்ய தேவ், இதழ், மை விழி, கார்த்திக், பவன்யா, வெற்றி என மொத்த குடும்பமும் கிளம்பியது. தேஜிவின் குடும்பம் வரவில்லை. கண்மணி கருவாகி இருக்கிறாள். ஹரிணி குழந்தையுடன் இருக்கிறாள் அதனால் அவர்கள் வரவில்லை. 

மா அவள் சாப்பிடல!! சாப்பிட்டதும் கிளம்பலாம் என சத்ய தேவ் கூற.. வா நீயும் என அவனுடன் ஒட்டி கொண்டு சாப்பிட்டாள். விவேகா ரிதமை பார்த்தார். எதுக்கு டி என் பொண்ணை பார்த்து கண்ணு வைக்கிற? 

விவேகா முறைத்தபடி நீங்க எல்லாம் எந்த ஸ்டேட்ல டா இருக்கீங்க? நீங்க நினைச்சா ஒட்டிப்பீங்க! வேணாம்ன்னா விட்டு போயிடுவீங்க!! 

அது நாங்க இல்ல… அது பொண்ணுங்க மனசு தான்! என்றார் இன்பா. 

இப்படியே ஊரை ஏமாத்து டா நீயும் உன் பொன்னும் சேர்ந்து கிட்டு என சொல்லி கொண்டே மழுப்பி சென்று விட்டார். 

நிலா இன்னும் கொஞ்சம் சாப்பிடு தங்கம் என மகி உணவுகளை வைக்க… 

போதும் சித்தி என வயிற்றை நீவினாள். ரிதம் நிலாவை பார்த்து மாமி கிட்ட ஜுஸ் வாங்கிக்கோ தண்ணி நிறைய குடி!! அப்போ தான் நல்லாருக்கும் என கைகளை பிடித்தாள். 

அனைவரும் அமைதியுடன் அவளை பார்க்க.. ம்ம் அண்ணி என நிலா ஜூசை குடித்தாள். 

விவேகா தன் மகளை வேற்று கிரக வாசி போல பார்த்தார். 

ரிதம் என்ன செய்ய காத்திருக்கிறாள்! 

சத்ய தேவ்க்கு விவரங்கள் தெரிய வருமா? 

பார்ப்போம் 

தொடரும்…

do like and share pradhanyakuzhalinovels 

You may also like

Leave a Comment