Episode -32
Gud morning பூங்கொடி என சொல்லி கொண்டே ஹார்லிக்ஸ் டம்ளருடன் உள்ளே வந்தான் அன்பு.
ம்ம் என சோம்பல் முறித்து கொண்டே எழுந்தவள் அப்பொழுது தான் தனது உடலில் உடை இல்லை என்பதையே கவனித்தவள்.
What the hell? என சொல்லி கொண்டே போர்வையை போர்த்தி கொண்டு எதிரில் இருப்பவனை முறைத்து பார்த்தாள்.
வாட்டு? ஹெல்லா? என்னடி what the hell சொல்ற? சும்மா போன என்னை இழுத்து வச்சு எல்லாத்தையும் பண்ணது நீ தாண்டி! மாமா மாமான்னு என்னை கூப்பிட்டு மொத்தமா மடக்கி எல்லாமே முடிச்சிட்டு இப்போ what the hell லா? என அதிர்ச்சியுடன் பார்த்தான் அன்பு.
என்னடா சொல்ற? அப்போ அப்போ? என பூங்கொடி முகத்தை மூடி கொண்டாள்.
ஹே பயமா இருக்கு? என்னடி பண்ற? பூங்கொடி!! என அன்பு அருகில் அமர்ந்தான்.
என்னடா நடந்துச்சு? நைட்டு? என அவள் கோபத்தில் மூக்கு சிவக்க பார்க்க,
பூங்கொடி சத்தியமா உனக்கு எதுவுமே தெரியலையா? ஹே விளையாடாத பாப்பா!! என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பார்த்தான்.
விலகி சென்றவனை வழிய சென்று இழுத்து வந்து ஒட்டி உரசி அமர்ந்தவள் அது மட்டுமா அவனது உணர்வுகள் அனைத்தையும் உசுப்பி விட்டவள். இப்பொழுது மூக்கு விடைக்க பார்க்கும் போது கோபம் வர தானே செய்யும்.
எச்சில் கூட்டி விழுங்கி கொண்டே அன்பு செல்வன் பார்க்க, அவன் மேல் முத்து முத்தாக வியர்வை பொட்டுகள் மின்னியது.
அவன் கையில் இருக்கும் ஹார்லிக்ஸ் கிளாஸை கோபத்துடன் பார்த்தவள் வேகமாக பிடுங்கி குடித்தாள். அதே நேரத்தில் அவள் மூடி இருந்த போர்வை சரிந்து அங்க வனப்புகள் துருத்தி கொண்டு நிற்க,
டேய் என்ன பார்க்கிற? என வாயை துடைத்து கொண்டு முறைத்தாள்.
சட்டென வேறு புறம் திரும்பி கொண்டான்.
பூங்கொடி சிரித்தபடி, மாமா!! பயந்துட்டியா? என அவனது முகத்தை திருப்பினாள்.
அடி பாவி!! அப்போ இதெல்லாம் நடிப்பா? என அவளின் கழுத்தை பிடித்தான்.
ம்ம் ஆமா என அழகாக கண்ணை சிமட்டினாள்.
அமுலி!! என அவன் சிரிப்பு மூட்ட..
விருப்பமில்லாம தான் பக்கத்தில் வந்தனா? இதெல்லாம் சொல்லி புரிஞ்சுக்க கூடாது டா தானாக புரிஞ்சுக்கணும் டா என அவனை கட்டி கொண்டாள்.
ஹே என வேகமாக எழுந்து நின்றவன். பாப்பா இன்னிக்கி நேரமாச்சு கிளம்பு! காலேஜ் போகணும்? டெய்லி பஸ்ச விட்டுட்டு போற!! என அவன் கேட்டு கொண்டே ஹீட்டர் போட..
அதுக்கு அவசியம் இல்ல என்றாள் படுத்து கொண்டே..
என்னாச்சு? என அன்பு திரும்ப..
கிட்ட வா என கையில் சைகை செய்தவள். இன்னிக்கு காலேஜ் போக தோணல இரண்டு கையையும் விரித்தாள்.
அப்டியா? அப்போ உன்னை கொண்டு போய் ஜெயாக்கா வீட்ல விடட்டுமா? என கேட்டான்.
அய்யோ வேண்டாம். என அவள் முகம் அஷ்ட கோணலாக மாற..
அதுக்கு தானே லீவ் போட்ட? என கேட்டான் அன்பு.
யாரு சொன்னது? என அவனை பார்த்தாள்.
வேற என்ன? என வியர்வை துண்டில் துடைத்து கொண்டே வந்து அமர்ந்தான் அன்பு.
குளிச்சிட்டியா? சிந்தாள் சோப்பு தான என முகர்ந்து பார்த்து கொண்டே அவள் முகத்தை அவனது முகத்துடன் தேய்த்தாள்.
மூச்சு வாங்க அவளை பார்த்தவன். பாப்பா நீ குளிச்சு ட்ரெஸ் போட்டுக்கோ என அவன் எழுந்து செல்ல..
அப்போ நான் போகவா? இனி பக்கத்தில வர மாட்ட தானே!!
வீ வீட்லையா இருக்க போற!! என அன்பு செல்வன் தயக்கத்துடன் கேட்டான்.
ம்ம் தனியா இருக்க போறேன். இன்னிக்கு முழுக்க நான் மட்டும் தனியா.. என்றாள் பூங்கொடி ஒரு மார்க்கமாக..
பாப்பா!!
டேய் பாப்பா சொல்லாத என கோபத்தில் முகம் சிவந்தாள்.
சரி பூங்கொடி! அழகி…அமுலி… தங்க பொண்ணு இதுல.. என அன்பு ஆரம்பிக்க..
என்னை உனக்கு விருப்பமா கூப்பிடு ஆனா வீட்ல இருக்க எல்லாரும் கூப்பிடுற போல நீ அதே நேம் கூட்டாத என்றவள். குளிச்சா நான் திரும்ப குளிக்க மாட்டேன் என சத்தமாக சொல்லி கொண்டே அவள் கப்போர்டின் பக்கம் சென்றாள்.
தங்க பொண்ணு!!
டேய் நான் நாலு வயசு குழந்தை இல்ல. உன்ட்ர பொண்டாட்டி டா!! என்னை முதல்ல அக்கா பொண்ணு ஆயா பொண்ணு இப்படி பாக்காத டா அன்பு என கோபத்துடன் கூறி விட்டு அவள் திரும்பி உடையை எடுத்தாள்.
உன்னோட இடுப்பு எனக்கு பிடிக்கும் டி!! கொடி இடையாள்னு கூப்பிடவா? என கேட்டு கொண்டே அவளின் பின்னால் சென்றான்.
உதட்டுக்குள் சிரிப்பு தோன்ற அதை மறைத்து கொண்டவள். ம்ம் எப்படியோ கூப்பிடு என சொல்லி கொண்டே அவள் பாத்ரூம் செல்ல அவனும் கூடவே வந்தான்.
ஹே என்னடா பண்ற? என அவள் திரும்பி பார்க்க..
நானும் ஜாயின் பண்ணிக்கவா? என கேட்டான் அன்பு.
அதான் சாரு காலையிலேயே குளிச்சிட்டீங்களே!! என அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தாள்.
இல்ல அம்மணிக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ண நினைச்சேன் என்றான் அன்பு வெட்கத்தை அடக்கி கொண்டு.. ஆண்களும் வெட்க படுவார்கள் உரியவர்களிடத்தில் அதை வெளிக்காட்டி கொள்ள மாட்டார்கள்.
அன்பு செல்வன் ஹெல்ப் எனக்கு வேணாம் என அவள் கதவை திறக்க, கழுத்தில் முத்தமிட்டவன். இன்னொரு முறை கூடவே குளிக்க நான் வருவேன் என அவனது விருப்பத்தை மறைமுகமாக கூறினான்.
என்னால முடியாது! குளிக்க என அவள் அவனது புறம் திரும்பி அணைத்து கொண்டாள்.
நான் இருக்கேன்ல!! குளிக்க வைக்க என கூறியவன் வேகமாக அவளை தூக்கி கொண்டு உள்ளே சென்றான். எண்ணிலடங்கா முத்தத்துடன் ஒட்டி கொண்டார்கள் இருவரும். இது காதலுக்கு முன் தாம்பத்யம் அவளுக்கு. அவனுக்கோ காதலில் சேர்த்து தாம்பத்யம். ஆனால் சராசரி மனிதராக வெளியில் இருந்து பார்த்தால் இருவரும் நிச்சயிக்கப்பட்டு பிடிக்காமல் இணைந்தவர்கள். காதலுக்கு பின் தாம்பத்யம் கூட ஒரு வகையில் நல்ல உறவை கொடுக்கும்..ஆனால் தாம்பியத்தின் பின் வரும் காதல் என்பது மடியில் கட்டிய கல்லை போல மிகவும் கனமாக இருக்கும்.
அந்த கனம் மொத்தமும் ஒருவன் தலையில் வந்து விடியும். அவன் தான் அன்பு செல்வன். அவன் பிடியில் இப்படி உருகி குழைந்து இளைந்து இணங்கி கிடக்கும் பூங்கொடி மனதில் அவன் தனக்கு மட்டுமே என்னும் உணர்வு மட்டுமே நிறைந்திருக்கிறது. அதை தூண்டி விடும் விதமாக இந்த சதீஸ் மற்றும் மேனகா இருவரின் வேலையும் இருக்க போகிறது. அது இவர்களின் வாழ்க்கையில் பெரிய விரிசலை உருவாக்கும். அதை எப்படி சரி செய்ய போகிறான் அன்பு செல்வன்.
மாமா பசிக்குது என அவனது மார்பில் சாய்ந்து கொண்டே கூறினாள் பூங்கொடி.
ஒரு அஞ்சு நிமிஷம் பூங்கொடி இப்போவே உனக்கு சமைச்சு தரேன் என வேகமாக பெரிய வீட்டுக்கு சென்றான். அவனுடன் அவளும் உள்ளே சென்றாள். நீண்ட நாட்கள் கழித்து வருகிறாள் பூங்கொடி.
பிரிட்ஜில் இருந்து தக்காளி தொக்கை எடுத்து வைத்தவன் சுட சுட தோசை வார்த்து கொடுத்தான். மிக்சியில் ஒரு திருப்பு திருப்பி தேங்காய் சட்டினி செய்தவன் குட்டியாக தாளிப்பு கொடுத்து அவளுக்கு போட்டு நீட்டினான்.
கன்னத்தில் முத்தமிட்டு வாங்கி கொண்டவள். அவனுக்கும் ஊட்டி விட்டாள்.
அட இது சூப்பரா இருக்கே!! முத்தமும் கொடுத்து அப்படியே தோசையும் ஊட்டி விட்டா நான் காலம் முழுக்க சுட்டு போடுவேனே என ஆசையாக கூறினான். அவனை அணைத்து கொண்டாள் பின்னால் இருந்து.
“அழகிய கொடி இடையாளே!!”
“சொல்லுங்க அன்பு”
ஹை நல்லாருக்கே!! என கண்ணக்குழி தெரிய சிரித்தவன் அவளிடமிருந்து தட்டை வாங்கி ஒரு முட்டை தோசை ஊற்றி கொடுத்தான்.
ம்ம் நீ ஊட்டி விடு என சிணுங்கினாள்.
ம்ம் ஆ காட்டு!! என தோசையை பிய்த்து வாயில் போட்டு விட்டவன். பாப்பா நான் இனி சக்தி பஸ்ல ஓட போறது இல்ல என்றான்.
ஹாங் என்னாச்சு? என பூங்கொடி திடுக்கிட்டு பார்த்தாள்.
அது என இழுத்தான்.
நானும் அதை தான் நினைச்சேன். நீ அப்பா கிட்ட வந்து என பூங்கொடி சொல்ல.. அவனது முகம் சட்டென மாறியது.
பூங்கொடி பாதியிலேயே நிறுத்தினாள். அன்பு செல்வன் பொறுமையாக இன்னொரு வாய் பிய்த்து ஊட்டி விட்டவன். நான் கவர்மென்ட் பஸ் ஓட போறேன். எனக்கு வேலை கிடைச்சிடுச்சு என்றான்.
ஹே!! சந்தோசமாக பார்த்தவள் அடுத்த நொடி முகம் மாறி போனது.
உனக்கு சந்தோசம் இல்லையா? இதை உன்கிட்ட மட்டும் தான் சொன்னேன். யாருக்கும் தெரியாது. இனி நீ தானே எனக்கு எல்லாமே! அதனால தோணுச்சு என்றான்.
அது ஓகே தான். ஆனால் மாமா நீ கண்டக்டரா போறது பிடிக்கல என்றாள் பூங்கொடி.
என்னாச்சு? என அவன் கேட்க..
அதெல்லாம் சொல்ல முடியாது என கையை கழுவி கொண்டவள் அவன் பக்கம் திரும்பி, எனக்கு பிடிக்கல தான். ஆனால் உனக்கு பிடிச்ச வேலைய நீ செய் மாமா!! என்றவள் வெளியே வந்தாள்.
அவளுக்கு மனதில் ஓடி கொண்டிருக்கும் ஒரே விசயம் ஏற்கனவே அவன் அழகில் இங்கு அனைவரும் அன்பு செல்வன் மீது கண்ணில் இருக்கிறார்கள். அன்பு செல்வனை மற்றவர்கள் என்ன அவனை பெற்றவள் பார்த்து பேசினாலே இவளுக்கு பொறாமை பொங்குகிறது. இருவரும் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு சென்ற பின் இது அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டது. ஆம் பூங்கொடிக்கு அன்பு செல்வன் ஒரு பொருள் போல.. அவனை யாரும் நெருங்க கூடாது, தொட கூடாது பேச கூடாது ரசிக்க கூடாது என்பதில் முனைப்புடன் இருக்கிறாள்.
பூங்கொடி என அழைத்தான் அன்பு.
ம்ம் என திரும்பினாள்.
அன்பு சொன்ன விஷயத்தை கேட்டு பூங்கொடி..
தொடரும்..