Epi -124
இதழ் சிரித்து கொண்டே துகிலுக்கு முத்தமிட்டு பார்க்க, துகில் ருத்ரனை பார்த்ததும் கையை நீட்டினான் தூக்கி கொள் என்று.
டேய் தூக்கு டா!! என விவேகா கூற..
வாங்க ஹீரோ!! என சொல்லி கொண்டே தூக்கினான்.
ஓகே அப்போ நான் புறப்படுறேன். அத்தை நீங்க ரௌத்திரன ரெடி பண்ண சொல்லுங்க. நான் தீரா, துகில், குட்டி தீரா எல்லாரும் கோயிலுக்கு போயிட்டு வரோம் என்று விட்டு அவள் மேலே ஏறி விட..
ருத்ரன் பற்களை கடித்து கொண்டு அவளை பார்த்தான்.
என்ன? அப்படி பார்க்கிற? அத்தைஅஅஅஅ!! என இதழ் கத்த..
ஹே என்னடா? என விவேகா அதட்ட..
ஒண்ணுமில்ல மா!! என ருத்ரன் அவ்விடத்தை விட்டு நகர..
டேய் போய் அவகிட்ட இருந்து உன் பையன வாங்கிட்டு வா!! இதழ் கோவிலுக்கு போறேன்னு சொன்னா தானே என்றார்.
ம்ம் என ருத்ரன் நகர, துகில கொடுத்திட்டு போடா!! என விவேகா கேட்க..
ஒரு பெரு மூச்சுடன் மருமகனை தன் அன்னையின் கையில் கொடுத்து விட்டு நகர்ந்தான்.
நிலா தன் மகனை நெஞ்சில் போட்டு அணைத்து கொண்டு விட்டத்தை பார்த்து கொண்டிருந்தாள். அழுகை வந்தது. அடக்கி கொண்டாள். அனைவரும் இருந்தும் அனாதை போல அவள் சூழல். பேசாமல் செத்து விடலாமா என்று கூட தோன்றியது.
க்கும் என தொண்டையை கணைத்தான்.
சட்டென அவனை பார்த்தவள் உடையை சரி செய்து கொண்டு எழுந்தாள்.
குழந்தைய அம்மா கேட்டாங்க!! என ருத்ரன் அவளை பார்க்காமல் முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டு கூற..
ம்ம் என நீட்டினாள்.
அவனை வாங்கி கொண்டான் ருத்ரன். இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்து கொள்கிறார்கள். ருத்ரன் கண்களில் எதையும் காட்டி கொள்ளவில்லை. உதட்டை கடித்து கொண்டு
நிலா அவனையே பார்த்தாள். அணைத்து கொள்ள தோன்றியது. முத்தமிட தோன்றியது. தன்னுடைய இடத்தில் யாரும் வராமல் இருந்த நேரம் அவளுக்கு பெரிதாக தெரியவில்லை. இப்பொழுது அவளது இடத்துக்கு இன்னொருத்தி வர போகிறாள். வந்து விட்டாள். அதுவும் தன் அக்காள். உள்ளம் கூறு போடுவது போல ஒரு உணர்வு.
மகனின் உதட்டில் பால் வாசனை எச்சிலுடன் கலந்திருந்தது.
Good டிசிசன்!! என்றாள் நிலா.
எதுக்கு? என குழந்தையின் கடை இதழில் முத்தமிட்டான்.
கல்யாணம் பண்ணிக்க போறீங்கல்ல!! அதுக்கு என்றாள்.
ம்ம் பண்ணிக்க போறேன் மேம். என்றான் அவளை பார்த்து கொண்டே..
ஒ ஓகே என அவள் தடுமாறி கொண்டே கூறினாள்.
அன்னிக்கி எவ்ளோ தூரம் சொன்னேன். வேணாம்னு. இன்னிக்கி பாரு ப்ரெக்னன்ட் ஆகிட்ட!!
நிலாவின் இதயம் சட்டென கனத்து போக, உங்களுக்கு கஷ்டம் கொடுக்க மாட்டேன். என் பையனும் என் என வயிற்ற வருடியவள் உங்களுக்கு கஷ்டம் கொடுக்க மாட்டோம். என்றாள் உதட்டை கடித்து கொண்டு.
எனக்கு வக்கு இருக்கு. 10 குழந்தைகளை கூட பெத்துக்க முடியும் பார்த்துக்க முடியும். வளக்கவும் முடியும். என்றான் கோபத்துடன்.
நீங்க எத்தனை வேணாலும் பெத்துக்கோங்க. கையில வச்சிருக்கவனை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன். அவன் என் பையன்.
ஓ நான் இல்லாம எங்கிருந்து வந்தான்.
நீங்க இல்லாம தான் பெத்துகிட்டேன். என்னால இவனை யார் கிட்டயும் விட்டு கொடுக்க முடியாது. என்றாள் நிலா.
அப்போ வயித்துல இருக்க பேபி? என அவன் கேட்க..
அது நான்!! என அவள் மழுப்ப..
மேடம் மினிஸ்டர் தங்கச்சி!! அதுவும் ஆளும் கட்சி மினிஸ்டர் தங்கச்சி! அப்புறம் நான் யோக்கியன் இல்ல. ஒரு பொன்னை அவளோட சுய நினைவே இல்லாம அத்து மீறிட்டேன். என்றவன் அவளை பார்க்க..
நிலாவின் முகம் தவிப்புடன் மாற..
மகனை மார்பின் மேல் போட்டு கொண்டவன். மீனாட்சிய நான் லவ் பண்ணி ஏமாத்திட்டேன். குடிப்பேன், ஸ்மோக் பண்ணுவேன். அப்புறம் கடைசியா பொண்ணுங்க கிட்ட… ம்ம் என யோசித்தவன். ஹான் பார்வதி கிட்ட தப்பா நடந்துகிட்டேன். இப்படி தேர்ட் கிரேட் அயோக்கியன் குழந்தைய நீ பார்த்துக்க வேணாம். அண்ட் மேடம் ஹைதராபாத் கோட்டையே உங்களோடது. சோ அப்படி பட்டவரோட பொண்ணுக்கு நாளைக்கு ராஜகுமாரன் இந்திர வர்மன், இளவரசர்கள், மகாராஜக்கள் வருவாங்க அப்படி இருக்கும் போது இப்படிபட்ட அயோக்கியன் கூட நீ சேர்ந்து பெத்த குழந்தைகள் இடைஞ்சலா இருக்க கூடாது இல்லையா? அதுக்கு சொன்னேன்.
நிலாவின் கண்களில் நீர் கோர்த்து கொள்ள, அதை வெளிக்காட்டி கொள்ளாமல் நின்றவள். என் குழந்தைகளை யாருக்கும் கொடுக்க மாட்டேன். என அவள் உறுதியுடன் கூற..
ருத்ரன் சத்தமாக, அம்மா இங்கே வாங்களேன்!! என அழைத்தான்.
என்னடா? போய் இத்தனை நேரமா என்ன பண்ற? என கேட்டு கொண்டே அறைக்கு வெளியே நின்றார்.
மா இவள் தர மாட்டேன்னு சொல்றா!! என்ன பண்றது? என போட்டு விட்டான்.
நிலா அதிர்ச்சியுடன் பார்க்க, விவேகா முறைத்தபடி நிலாவை பார்த்தார்.
மாமி அது வந்து என அவள் தயங்க..
என்னை மாமின்னு கூப்பிடும் வேலைய இன்னையோட நிறுத்திக்க!
எங்க அம்மாவ பார்த்தால் உனக்கு சோம்பி மாமி மம்மி மாதிரி இருக்கா? என ருத்ரன் கேட்க..
டேய்!! என விவேகா காதை திருகினார்.
மா இவள் இவனை தர மாட்டாளாம் என்கிட்ட வீம்பு பண்றா!! அப்புறம் அவளோட வயித்துல இருக்க குழந்தையும் அவளுக்கு தான் சொந்தமாம்! யாருக்கும் பயப்பட மாட்டாளாம். அப்புறம் அவள் என ருத்ரன் எக்க செக்க பிட்டுகளை சேர்த்து போட்டு விட்டான்.
விவேகா முறைத்து கொண்டு பார்க்க, நிலாவின் கண்களில் நீர் கொட்டியது.
மா நம்பாத!! நீ சொல்ற போல அவள் நாடககாரி! என்றான் ருத்ரன்.
குழந்தைய என்கிட்ட கொடு என ருத்ரனிடம் இருந்து குட்டி ரவுத்திரவனை வாங்கி கொண்டு சென்றார் விவேகா.
ருத்ரன் அவளை பார்த்து விசில் அடித்தபடி சென்றான் உற்சாகமாக..
நிலா..?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels