🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
6. அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 5
அதிகாரனின் அகிம்சா
📖 அதிகாரனின் அகிம்சா · Chapter 6 of 46

அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 5

  • 1 Oct 2026
  • 148 reads
  • ★ 5.0 (3)
  • 7 min read

Epi -5 

அங்கிருந்த சூழலைச் சற்றும் பொருட்படுத்தாமல், அகிம்சா நேராக நாகாவிடம் சென்று, “என்னை இப்போ அப்படியே கூட்டிட்டு போய் அதர்வன் வீட்ல விட்டுடுங்க! எப்படியும் என்னை நீங்க ஃபாலோ தானே பண்ணப் போறீங்க?” என்று அசால்ட்டாகக் கூறினாள்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

மறுமுனையில், நாகாவின் போன் ஸ்பீக்கர் வழியே இதைக் கேட்டுக்கொண்டிருந்த அதர்வனுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது! ‘இத்தனை துணிச்சலாகப் பேசுகிறாளா? இவளது வாய் இந்த அளவுக்கு நீள்கிறதா?’ என அகிம்சாவின் மீது அவனுக்குக் கோபமும் ஆத்திரமும் அனலாய்க் கொதித்தது.

அகிம்சா நாகாவை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல், விடுதியிலிருந்த அவளது உடைமைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு, சாதாரண தொனியில் என்னமோ அவளது சொந்தக் காரில் ஏறுவது போலப் போய் அமர்ந்துகொண்டாள். இதை நாகாவே எதிர்பார்க்கவில்லை! இந்த அளவுக்கு அதர்வாவை ஆட்டிப்படைத்துத் தண்ணி காட்டுகிறாளே என்று அவன் வாயைப் பிளந்தபடி பார்த்துக்கொண்டிருக்க…

“ஹே, ராஸ்கல்! காது கேட்குதா இல்லையா? நான் எவ்ளோ நேரம் கூப்பிடுறேன்?!” என போனில் அதர்வனின் குரல் வெடிக்க, உயிர்பெற்ற நாகா சட்டெனப் போனை எடுத்து, “தல… இப்போ என்ன பண்றது?” எனக் கேட்டான்.

அதர்வன் தனது கைமுஷ்டியைக் கோபமாக மடக்கியபடி, “அவளை அப்படியே கூட்டிட்டு வந்து சேரு!” என ஆத்திரத்துடன் சொல்லிவிட்டுப் போனைக் கட் செய்தான்.

நாகா அதன் பின் வேறு வழியில்லாமல் காரை நோக்கினான். இந்தப்பக்கம் அதர்வன் உணவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். உள்ளுக்குள் உணவு இறங்க மறுத்தது. சசிரேகாவின் நினைவுகள் தான் நெஞ்சில் குருதி வழியும் அளவுக்கு வலையைக் கொடுக்க, உடனே அவன் சசிரேகாவின் எண்ணிற்குத் திரும்பத் திரும்ப அழைத்தான்.

ஆனால், சசிரேகா போனை எடுக்கவே இல்லை! கோபம் இன்னும் இன்னும் அதிகரிக்க, சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டிலேயே கைகளைக் கழுவிவிட்டு ஆவேசமாக எழுந்தான்.

“அச்சோ, அதர்வா! என்ன பண்ற? ஒரு இட்லி கூட முழுசா சாப்பிடல?” என உஷா ராணி ஓடிவந்து அவனைத் தடுத்து, “சாப்பிடு கண்ணா…” என்று கூற… “எனக்கு வேண்டாம்!” என்று கோபமாகக் கத்திவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டான்.

உஷா ராணிக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை; மகனின் இந்த நிலையைக் கண்டு கண்கள் கலங்கிட நின்றிருந்தார்.

அவன் சென்று சில மணி நேரங்களில் அகிம்சா வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

தாத்தா தாமோதரன், பாட்டி பாக்கியலட்சுமி இருவருக்கும் கங்கா உணவு பரிமாறிக்கொண்டிருக்க… அதே நேரம் அகிம்சா வீட்டுக்குள் நுழைந்தாள். “என் பேரன் மேலே இப்படி ஒரு பழி போட்டு அவன் வாழ்க்கையைச் சீரழிச்சிட்டாலே!” என பாக்கியலட்சுமி வேதனையில் முனகியபடி சாப்பிடாமல் எழுந்து செல்ல முயல, “அத்தை…” எனத் தடுத்து சாப்பிட வைத்தார் கங்கா. இன்னொரு பக்கம் தாமோதரன் தனது மனைவியை அமைதிப்படுத்திச் சமாதானம் செய்தார்.

அங்கு நடக்கும் அனைத்து விஷயங்களும் அகிம்சாவின் காதில் விழுந்தாலும், அவளால் அதற்குப் பதில் சொல்ல முடியாத நிலை. அதேபோல மற்றவர்களுக்குத் தன்னைப் பற்றி விளக்கி, தான் குற்றமற்றவள் என நிரூபிக்க அவள் ஒருமுறை முன்னெடுத்த இந்த ஒரு விஷயம், அவளது வாழ்க்கையை மொத்தமாகத் தலைகீழாகத் திருப்பி இருக்கிறது. இனிமேல் பதிலைச் சொல்லி என்ன ஆகப்போகிறது? அகிம்சா அவளது உடைமைகளை எடுத்துக்கொண்டு மாடியேறியவள், ஒரு பெருமூச்சுடன் அதர்வனின் அறையைப் பார்த்தாள்.

அவனுடன் தனக்கு ஏற்பட்ட உறவு கோபத்திற்காகவும் பழிதீர்க்கவும் மட்டுமே. அதேபோல அவன் யாரோ, தான் யாரோ… தாலி கட்டிவிட்டதால் தனது கணவன் அவன் என்று ஆகிவிட முடியாது என்னும் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தாள்.

அந்தப் பக்கமாகச் சென்றுகொண்டிருந்த பணியாட்களில் ஒருவரை அழைத்தாள். என்னமோ ஏதோ எனத் தயங்கி வந்தவர், ஒருவித சங்கடத்துடன் அகிம்சாவை ஏறிட்டுப் பார்த்தார்.

“சரி சொல்லுங்க, இந்த வீட்ல எந்த அறையில ஆள் தங்காம இருக்காங்க? எந்த அறை சும்மா இருக்கு?” எனக் கேட்டாள்.

பணியாள் பதில் சொல்லாமல் தீவிரமாக யோசிக்க…

“ப்ச்! உங்களைத்தான் கேட்கிறேன். இப்போ சொல்லப்போறீங்களா இல்லையா? வேலையை விட்டுத் தூக்கட்டுமா?” எனப் பூச்சாண்டித்தனமாக மிரட்டினாள். அகிம்சா மிகவும் தைரியமானவள்; தனித்துவமானவள்; அவள் உண்டு, அவள் வேலை உண்டு என இருப்பவள். யாரைக் கண்டும் அஞ்சி நடுங்கும் குணம் பெண்ணவளுக்கு இல்லை.

சட்டென்று பணியாளின் கை தானாக ஒரு அறையைக் காட்டியது. அகிம்சா பெருமூச்சுடன் அந்த அறையை நோக்கினாள். அது அதர்வனின் அறைக்கு நேர் எதிரில் இருக்கும் விருந்தினர்கள் தங்கும் அறையாகும் (Guest Room). அவள் எதுவும் பேசாமல் நேராக அறையை நோக்கி நடந்தாள். இந்த பிரம்மாண்ட வீட்டைப் பார்த்து, ரசித்து, ஆராய ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என்று தோன்றியது. அந்த மாளிகை அவ்வளவு பெரியதாக இருந்தது. அறைக்குள் என்ன நடக்கிறது என வெளியில் இருக்கும் யாருக்கும் தெரியாது; ஒரு கொலையே நடந்தாலும் கண்டுபிடிக்க முடியாது! அந்த அளவுக்குப் பெரியதாக இருந்தது அந்த வீடு. இது வீட்டின் ஒரு பகுதி மட்டுமே! கொல்லைப்புறத்தை இன்னும் அகிம்சா பார்க்கவில்லை; அப்படிப் பார்த்திருந்தால் அசந்து போயிருப்பாள். இவையனைத்தும் சூர்ய நாராயணன் குடும்பம் எந்த அளவுக்குப் பணபலமும் வசதியும் படைத்தவர்கள் என்பதை வெளிக்காட்டியது.

இவ்வாறான நினைவுகளில் சுழன்றபடி குளித்து முடித்து, பக்காவாகத் தயாராகி கீழே வந்து சேர்கிறாள்.

“ஒரு நிமிஷம் நில்லு!” என அந்த இடமே அதிரும் அளவுக்குச் சூர்ய நாராயணனின் குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது.

“என்ன?” என்பதைப் போல அகிம்சா அவரை நிமிர்ந்து பார்க்க…

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

சூர்ய நாராயணன் அவளிடம் செக் புக்கை நீட்டி, “இதுல உனக்கு எவ்வளவு வேணாலும் பணத்தை ஃபில் பண்ணிக்கோ! இப்பவே, இந்த நிமிஷமே என் பையனோட வாழ்க்கையை விட்டு நீ போயிடு!” என்று ஆதிக்கத் தோரணையில் கூறினார்.

அகிம்சா உதட்டோரம் ஒரு எள்ளல் புன்னகை தோன்ற, செக் புக்கை வாங்கிப் புரட்டிப் பார்த்தாள். ‘அட! இவ்வளவுதானா? இதற்குத்தானா கூச்சலிட்டு அனைத்து ஆர்ப்பாட்டமும் செய்தாள்? இதை அன்றே தூக்கிப்போட்டிருக்க வேண்டும்’ எனத் தோன்றியது அவருக்கு.

“சார்!” என அகிம்சாவின் குரலில் சுயம் தெளிந்தார்.

அவர் கொடுத்த செக் புக்கை அவரிடமே நீட்டிய அகிம்சா, சாதாரண தொனியில், “நீங்க எனக்கு எவ்வளவு கொடுக்கிறதா நினைச்சீங்களோ, அந்தப் பணத்தை ஃபில் பண்ணி உங்க பையன்கிட்ட கொடுத்து என்னை விடச் சொல்றீங்களா?” எனக் கேட்டாள்.

“என்ன சொல்ற நீ?” என அவர் கண்ணாடியை மூக்குக்குத் தள்ள…

அகிம்சா தீவிரக் குரலில், “எனக்கு இங்கே இருக்க துளிக்கூட விருப்பம் இல்லை,” என்றவள், அதே நொடி கழுத்தில் தொங்கிய தாலியைக் கழற்றி அங்கிருந்த மேஜையின் மீது வைத்தாள். “நடந்தது நடந்துபோச்சு. என்னோட வலிகளை உங்களுக்குக் காட்ட நினைச்சேன். அப்போவாச்சும் நீங்க உண்மையை வெளியே சொல்லுவீங்கன்னு நினைச்சேன். ஆனால், அதுக்குள்ள உங்க பையன் என்னை இப்படி கல்யாணம் பண்ணிட்டார். என்னைக் கேட்டால், இது ஜஸ்ட் அந்த ‘heat of the moment’-ல நடந்த விஷயம். அதனால தயவுசெஞ்சு அவர்கிட்ட சொல்லி என்னை விடச் சொல்லுங்க. நான் தயாராகத்தான் இருக்கேன் இங்கிருந்து போக!” எனச் சொல்லிவிட்டு விறுவிறுவெனக் கிளம்பியிருந்தாள்.

அப்படி என்னதான் நடந்திருக்கும்? எதைப் பற்றி அகிம்சா சொல்லிக்கொண்டிருக்கிறாள்? விரைவில் தெரிந்துகொள்ளலாம்.

அகிம்சா வீட்டில் இருந்து வெளியே வந்ததும் ஆட்டோ பிடித்து அவளது வேலைக்குப் புறப்பட்டாள். பசி வேறு வயிற்றைக் கிள்ளுகிறது. இனி ஆறு மாதத்திற்கு  மூன்று வேளையும் வெளியில் தான் சாப்பிட வேண்டும். அவளின் வாழ்க்கையில் அந்த அசம்பாவிதம் நடக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் கோபி கிருஷ்ணாவுக்கு மனைவியாகியிருப்பாள்.

யார் அந்த கோபிகிருஷ்ணா? அவன் வேறு யாருமில்லை; ஒரு முன்னணி கார்ப்பரேட் நிறுவனத்தில் அகிம்சாவுடன் பணிபுரியும் சக ஊழியன். ஆம், அகிம்சா அங்கேதான் தலைமை அக்கவுண்டன்ட்டாகப் பணி புரிந்தாள். அப்போ இப்பொழுது? (அவர்கள் இருவருக்கும் நடுவில் ஏன் திருமணம் நின்றது? விரைவில் தெரியவரும்!)

‘இந்த அதர்வன் ஏன் இப்படிச் செய்கிறான்?’ – மேஜையில் இருந்த தாலியைப் பார்த்தவர், நெற்றியை நீவியபடி கிருஷ்ணமூர்த்தியிடம் பேசலாம் என்று நினைத்த அதே நேரம், சூர்ய நாராயணனுக்கு ஒரு முக்கியமான கால் வந்தது.

அதர்வனின் திருமணத்திற்குப் பிறகு, அதர்வா மற்றும் சசிரேகா இருவரின் வரவேற்பிற்குத் தமிழ்நாட்டின் மத்திய அமைச்சர்களான தனஞ்செயன் மற்றும் பாலாஜி ஆகிய இருவரையும் அழைத்து, மிகப்பெரிய திருமண வரவேற்பு விழா நடத்தத் திட்டமிட்டிருந்தார் சூர்ய நாராயணன்.

ஆனால், இப்போது மகனின் திருமணம் யாரென்றே தெரியாத ஒருவருடன் திடீரென நடந்து முடிந்திருக்கிறது. இதை அனைவருக்கும் மத்தியில், அகிம்சா தான் தனது மருமகள் என அறிமுகம் செய்து வைக்க அவருக்கு விருப்பமில்லை. சூர்ய நாராயணன் பெரும் அதிர்ச்சியிலும் சங்கடத்திலும் இருக்க… அந்த வரவேற்பு விழாவை நடத்தியே ஆக வேண்டிய அரசியல் மற்றும் தொழில்சார்ந்த கட்டாயத்தில் இருந்தார்.

அதைப் பற்றி உடனடியாகப் பேச அதர்வனை அழைத்தார் சூர்ய நாராயணன்.

ஆனால், அந்த நேரத்தில் அதர்வனோ சசிரேகாவின் ஆபீஸுக்கு எதிரில், தன் காரை நிறுத்திவிட்டு அவளது வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

சசிரேகாவின் கார் அலுவலகத்தின் பார்க்கிங் ஏரியாவில் நுழைந்ததும், அவளின் முன்னால் நின்றான். சசிரேகா வண்டியில் இருந்து இறங்கிய அடுத்த நொடி, அவளைத் தாவி அணைத்துக்கொண்டான்! சசிரேகா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருக்க… அதர்வாவின் கண்களின் ஓரம் சிறு நீர்த்துளி பரவ, அவளின் கன்னத்தில் முத்தமிட்டவன், “சசி…” என அவளின் முகம் நோக்கினான்.

– தொடரும்.

How did this episode feel?
Rate this episode ★ 5.0 (3)

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!