🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
22. அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 20 b
அதிகாரனின் அகிம்சா
📖 அதிகாரனின் அகிம்சா · Chapter 22 of 46

அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 20 b

  • 1 Oct 2026
  • 107 reads
  • ★ 4.7 (3)
  • 9 min read

Epi – 20 b

‘டும் டும் டும்’ திரைப்படம் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டிருந்தது. காலத்தால் அழியாத ஓர் அழகான படைப்பு. அகிம்சா தன் வாழ்நாளில் ஒரு திரையரங்கிற்குள் காலடி எடுத்து வைப்பது இதுவே முதல்முறை. அவளுக்குத் திரைப்படங்களை விடவும் அனிமேஷன் கார்ட்டூன்கள்தான் மிகவும் பிடிக்கும். ஆசிரமத்தில் வளர்ந்த நாட்களில், வார இறுதி நாட்களில் பிரியாவுடன் சேர்ந்து கார்ட்டூன் பார்ப்பாள். வாரத்தின் அத்தனை வேலைகளையும் மறந்து, ‘எப்பொழுதடா அந்த நாள் வரும்?’ என ஏங்கித் தவித்த காலங்களும் உண்டு.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அகிம்சா திரையரங்கின் பிரம்மாண்டத்தை அதிசயித்து வேடிக்கை பார்த்தபடி உள்ளே நுழைந்த தோரணையிலிருந்தே அதர்வாவுக்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது—இவள் இதுவரை தியேட்டரின் வாசற்படியைக் கூட மிதித்ததில்லை என்று!

பங்களாவின் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடப்பது ஏதோ போலிருக்கிறது என நேற்று பிரியாவிடம் போனில் அவள் புலம்பிக் கொண்டிருந்ததை எதேச்சையாகக் கேட்டதனாலேயே, அதர்வன் தன் அதிகார தோரணையோடு அவளை இந்தத் திரைப்படத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்திருந்தான்.

“தியேட்டருக்கே வந்தது இல்லையா?” என அதர்வன் ஆச்சரியமாகக் கேட்ட கேள்விக்கு, “படமே பார்த்ததில்லை… இதுதான் ஃபர்ஸ்ட் டைம்! எனக்கு இதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல, வேஸ்ட் ஆஃப் டைம்,” என்று எவ்வித பாவனையும் இன்றிப் பட்டெனக் கூறியிருந்தாள் அகிம்சா.

அவளது பதிலைக் கேட்டு அதர்வாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! ‘இவளை எதுக்குடா இங்க கூட்டிட்டு வந்தோம்?’ எனத் தனக்குள் நொந்துகொண்டான்.

திரையரங்கின் உள்ளே இருள் சூழ்ந்திருக்க, வெள்ளித்திரையில், ‘உன் பேரை சொன்னாலே உள்நாக்கு தித்திக்குதே…’ என்ற காதல் பாடல் மெல்லிசையாய் ஒலித்துக் கொண்டிருந்தது. அகிம்சாவின் முழு கவனமும் திரையிலேயே பதிந்திருந்தது. ஆனால், அவள் அதை ஒரு சராசரி ரசிகையைப் போல மெய்மறந்து ரசிக்கவில்லை; மாறாக, தன் கூர்மையான விழிகளைச் சுருக்கி, புருவங்கள் முடிச்சிட, ஏதோ ஒரு ஆய்வுக் கட்டுரையைப் படிப்பது போலத் தீவிரமாக உள்வாங்கிக் கொண்டிருந்தாள். புதிய விஷயங்களை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து கிரகிக்கும் அவளது அபாரமான மூளை இங்கும் தன் வேலையைக் காட்டியது.

பக்கத்தில் அமர்ந்திருந்த அதர்வன் எதேச்சையாக அவளைத் திரும்பிப் பார்த்தான். அவனுக்குத் திகைப்பாக இருந்தது.

‘யாரு இவள்? ஒரு காமெடி சீனை இப்படி உத்துப் பாக்குறா! அப்போ ரொமான்டிக் சீனை எப்படிப் பார்ப்பா? இவளெல்லாம் அந்த கோபிகிருஷ்ணன் கிட்ட என்னத்த பேசி லவ் பண்ணியிருப்பா? அதுவும் லவ் கம் அரேஞ்ச் மேரேஜாம்! இவளுக்கு லவ்னா என்னன்னே தெரியுமா?’ என அவளது செய்கையை விசித்திரமாகப் பார்த்தபடி நினைத்துக் கொண்டான்.

அதன்பின் அதர்வனின் கவனம் திரையில் நிலைக்கவில்லை. தன் கம்பீரமான ஆளுமைக்கே உரிய அலட்சியத்துடன் செல்போனை நோண்டினான்; அலுவலக மெசேஜ்களைப் படித்தான். நிறைய செய்திகள் குவிந்திருந்தன; எதிலும் நாட்டம் வரவில்லை. அவ்வப்போது சசிரேகாவிற்கு இரண்டு மெசேஜ்களைத் தட்டிவிட்டான். ஒருவழியாகப் படம் முடிந்து திரையரங்கை விட்டு வெளியே வரும்போது, முகப்பில் வைக்கப்பட்டிருந்த போர்டைப் பார்த்து ‘டும் டும் டும்’ என்ற படத்தின் பெயரை மனதில் குறித்துக் கொண்டாள் அகிம்சா. ‘பரவாயில்லை, நல்ல கதை!’ என்று அவளது உள்ளுணர்வு சொல்லியது.

தியேட்டரிலிருந்து வெளியே வந்ததும், அதர்வன் அவளை நேராக ஒரு பிரம்மாண்டமான வணிக வளாகத்திற்கு (Mall) அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தான்.

“வீட்டுக்குத் தானே போறோம்?” என அகிம்சா காரில் தயக்கத்துடன் கேட்க…

“இல்ல… கடைக்குப் போறோம்,” என்றான் அவன் ஒற்றை வரியில்.

“எதுக்கு? சாப்பிடவா? எனக்கெல்லாம் ஒன்னும் வேண்டாம்…”

“சாப்பிட இல்ல… கொஞ்சம் அமைதியா வா! கேள்வி கேட்காம வாயை மூடிட்டு வா,” எனத் தன் இயல்பான அதிகாரத் திமிர் தோரணையில் அவளை அடக்கியவன், மாலுக்கு அழைத்துச் சென்றான்.

அங்கே ஏற்கனவே சசிரேகா ஸ்டைலாகக் காத்திருந்தாள். அதர்வனைக் கண்டதும் புன்னகையுடன் ஓடிவந்து அவனைக் கட்டிக்கொள்ள, அவனும் தன் இறுக்கமான முகத்தில் மெல்லிய புன்னகையோடு அவளை அணைத்துக் கொண்டான்.

சசிரேகா அகிம்சாவைப் பார்த்துக் கையசைத்து, “போலாமா?” எனக் கேட்க… அகிம்சாவோ சங்கடத்துடன், “நீங்க போயிட்டு வாங்க மேடம், நான் கார்லயே வெயிட் பண்றேன்,” என்றாள்.

“ஹேய்! உனக்குத்தான் டிரஸ் எடுக்கப் போறோம். அதர்வன் இப்பதான் மெசேஜ் பண்ணான், அதான் நானும் கிளம்பி வந்தேன்,” எனச் சசிரேகா உற்சாகமாகக் கூறினாள்.

“எனக்கா?! எனக்கு எதுக்கு?” என அகிம்சா குரலை உயர்த்த… அதர்வன் பற்களை நறநறவெனக் கடித்தபடி அவளை ஒரு பார்வை பார்த்தான்.

சசிரேகா அவளது கைகளைப் பற்றி, “எதுக்கு இத்தனை கோபம் அகிம்சா? உனக்கு டிரஸ் வேணும்ல, வா…” என இழுத்தாள்.

“இல்ல மேடம், ஏற்கனவே உங்க குடும்பம் என் ஹாஸ்பிட்டல் செலவு, தங்குற இடம்னு நிறைய செலவு பண்ணிட்டீங்க. எனக்கு இதுக்கு மேல எதுவும் வேண்டாம். என்கிட்ட இருக்குற டிரஸே போதும்,” எனத் தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் அகிம்சா மறுத்தாள்.

அதர்வன் பொறுமையிழந்து, “சசி, இருடி!” என அவளை விலக்கிவிட்டு, அகிம்சாவின் முன்னே தன் கம்பீரமான உருவத்துடன் வந்து நின்றான்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“இங்க பாரு! நீ என் வீட்ல இருக்கிற வரைக்கும் நான் சொல்றதைத்தான் கேட்கணும். ஹாஸ்பிட்டல் போனாலும் சரி, வெளிய போனாலும் சரி, எனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு. இந்த ஆறு மாசமும் நீ அதை ஃபாலோ பண்ணித்தான் ஆகணும். கணக்கு பார்க்கிறல்ல? எல்லாத்தையும் சேர்த்து வச்சு அப்புறமா மொத்தமா எனக்குச் செட்டில் பண்ணு… எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல, நான் வேணாம்னு சொல்லவே மாட்டேன்! இப்போ உள்ள வா!” என அதிகாரக் குரலில் சீறினான். அவனது உறுதியான பார்வையை எதிர்கொள்ள முடியாமல், வேறு வழியின்றி அவர்களுடன் சென்றாள் அகிம்சா.

“இதுக்குத்தான் இத்தனை கோபமா நடத்துறியா?” எனச் சசிரேகா எரிந்து விழ… “ச்ச்! ஓவரா பேசுறா… சொல்றதைக் கேட்கணும். இவள் என்ன பச்சைக் குழந்தையா?” எனத் தோளைக் குலுக்கிக்கொண்டு முன்னால் சென்றான்.

அந்த ஆடம்பரமான பொட்டிக்கின் உள்ளே நுழைந்ததும், அகிம்சாவுக்குப் பொருத்தமாகச் சசிரேகா மாடர்ன் உடைகளைத் தேர்வு செய்யத் தொடங்கினாள். அதர்வனும் சசிரேகாவிற்குப் பொருத்தமான சில டிரெண்டி ஆடைகளைத் தேர்ந்தெடுத்து, “சசி… இத ட்ரை பண்ணுடி, உனக்கு செமையா இருக்கும்,” என ரசனையுடன் கொடுத்தான்.

“டேய்! நம்ம அப்புறம் எடுத்துக்கலாம்… முதல்ல அவளுக்கு செலக்ட் பண்ணு,” எனச் சசிரேகா சொல்ல…

அதர்வன் நெற்றியைத் தேய்த்தபடி, “அவளுக்கா? இந்த வெஸ்டர்ன் டிரஸ் எல்லாம் இவளுக்கு ஒத்து வராது சசி. உன்னை மாதிரி இவ மாடர்ன் இல்ல… இவளுக்கு வேற செக்ஷன்லதான் டிரஸ் எடுக்கணும்,” என அவன் சொல்லி முடிப்பதற்குள், அகிம்சா திருதிருவெனச் சுற்றிலும் பார்த்தபடி, “மேடம், இதெல்லாம் எனக்கு செட் ஆகாது. எனக்கு சிம்பிளா காட்டன்ல இருந்தா போதும்,” என்றாள்.

சசிரேகா ஆச்சரியத்துடன் இருவரையும் பார்த்து, “என்னடா இது… ரெண்டு பேரும் பேசி வச்ச மாதிரி ஒரே மாதிரி சொல்றீங்க? டேய் அதர்வா!” என்று அவள் அதட்ட…

அதர்வன் சட்டெனத் தன் முகபாவத்தை மறைத்து, “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல… நீ மாடர்ன், அவ உன்னோட டேஸ்ட்ல இல்ல, அவ்வளவுதான்! வா போலாம்,” எனச் சசிரேகாவின் கரத்தைப் பற்றி அடுத்த தளத்திற்கு அழைத்துச் சென்றான். அகிம்சா அவ்விடத்தை வேடிக்கை பார்த்தபடி மெல்ல நடந்து சென்றாள்.

அவன் அழைத்து வந்தது ஒரு பாரம்பரிய சிந்தடிக் மற்றும் காட்டன் ஆடைகள் நிறைந்த பிரம்மாண்ட ஷோரூம். அங்கு நுழைந்ததும் அகிம்சாவின் கண்கள் தானாகவே விரிந்தன. ‘டும் டும் டும்’ படத்தில் ஜோதிகா அணிந்து வந்த நேர்த்தியான, மிடுக்கான உடைகள் மற்றும் லாங் சுடிதார்கள் வரிசையாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. அவள் ஒரு குறிப்பிட்ட உடையைப் பார்த்து வியக்கும் முன்னரே, அதர்வன் சரியாக அந்த இடத்திற்கு வந்து, “இது அவளுக்கு கரெக்ட்டா இருக்கும்,” என ஒரு வெளிர் வண்ணச் சுடிதாரை எடுத்தான். அவனது கூரிய கவனிப்பைக் கண்டு அகிம்சாவுக்கு ஒரு நொடி திகைப்பாக இருந்தது.

“அப்போ ஓகே, ட்ரையல் பார்த்திட்டு வரோம்,” எனச் சசிரேகா அகிம்சாவை ட்ரையல் ரூமுக்கு அழைத்துச் சென்றாள். அதர்வன் அந்தக் கடையைச் சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

சசி உடையைப் போட உதவி செய்தபடி, “உன் சைஸ் என்ன அகிம்சா?” எனக் கேட்டாள்.

“எனக்கு ‘L’ சைஸ் மேடம்…”

“அது என்ன சும்மா சும்மா மேடம்னு? சசின்னு கூப்பிடு,” எனச் சசிரேகா அதட்ட…

“அது வந்து மேடம்…”

“இன்னொரு தடவை மேம்னு சொன்னா அடி வாங்குவ!” என உரிமையோடு சசிரேகா மிரட்ட, அகிம்சா மெலிதாகப் புன்னகைத்தாள்.

அந்த வெளிர் நீல நிற லாங் சுடிதாரை அணிந்து கொண்டு வெளியே வந்தவள், அங்கிருக்கும் நிலைக் கண்ணாடியில் தன்னையே பார்த்துக் கொண்டிருக்க…

“டேய் அதர்வா, இங்க வாயேன்!” எனச் சசிரேகாவின் குரல் கேட்டது.

“என்னாச்சு? எல்லாம் ஓகே தானே?” எனக் கேட்டுக்கொண்டே திரும்பிய அதர்வன், அப்படியே சிலையாக உறைந்து நின்றான்!

“நிஜமாவே அவளுக்கு இந்த டிரஸ் எலிகண்ட் லுக் கொடுக்குது,” என்று சசிரேகா சொல்லிக்கொண்டிருக்க, அதர்வாவின் பார்வை அகிம்சாவை மொய்த்தது.

பெண்ணவள் விரசமற்ற, மாசற்ற ஒரு பேரழகியாக மிளிர்ந்தாள்! அந்த வெளிர் வண்ண ஆடை அவளது மாநிற மேனிக்கும், ஒடிசலான உடலமைப்பிற்கும் அத்தனை கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லை; காதோரக் குழல்கள் மெல்லிய காற்றில் அசைந்தாட, இரு கைகளிலும் சுற்றப்பட்டிருந்த வெள்ளைக் கட்டுகளோடு ஒரு காயம்பட்ட தேவதையைப் போலக் காட்சியளித்தாள். அவளது அமைதியான ஆளுமையும், அஞ்சாத விழிகளும் அந்த ஆடைக்கு மேலும் ஒரு கம்பீரத்தைக் கொடுத்தன. அதர்வனுக்குள் இனம் புரியாத ஒரு பிரமிப்பு பரவியது. அவளது அழகில் கவர்ச்சியிருக்கவில்லை; மாறாக, ஒரு இதமான தென்றல் காற்றைப் போல இருந்தாள்.

“டிரஸ் எப்படி இருக்கு?” எனச் சசிரேகா கேட்க…

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ரொம்ப நல்லாருக்கு…” என அவனையறியாமல் கூறிய உள்மனம் ஒரு நொடி நிதானித்து, தன்னருகில் நின்றிருக்கும் சசியைப் பார்த்தான்.

“என்ன, என்னை அப்படிப் பார்க்கற? என்னோட செலக்சன் எப்படி இருக்கு?” எனச் சசி மீண்டும் கேட்க…

“பெட்டர்,” என்றான்.

சசி முகத்தை அஷ்டகோணலாக மாற்றி, “போடா!” எனப் பலித்துவிட்டு, அகிம்சாவுக்கு உதவி செய்யச் சென்றாள்.

அதர்வன் அங்கிருந்த கலெக்ஷன்கள் அனைத்தையும் நோட்டம் விட்டு, லைட் பிங்க், லைட் ப்ளூ, கிரே, சாண்டல் என அவளது முகத்திற்குப் பொலிவு தரும் மென்மையான வண்ணங்களில் கிட்டத்தட்ட பத்து செட் ஆடைகளைத் தன் அதிகார ஆளுமையோடு அவளுக்காக எடுத்துத் தள்ளினான்.

பில்லிங் முடிந்ததும், அகிம்சாவை ஒரு காஃபி ஷாப்பில் அமர வைத்துவிட்டு, அதர்வன் சசிரேகாவுடன் மற்ற கடைகளுக்குச் சென்றான். அடுத்த இரண்டு மணி நேரம் இருவரும் கைகோர்த்து ஷாப்பிங் செய்வதை, அமர்ந்த இடத்திலிருந்தே வேடிக்கை பார்த்தாள் அகிம்சா. அவளது மனதுக்குள் எந்தப் பொறாமையோ, சஞ்சலமோ துளியும் எழவில்லை; ஏனென்றால் அவளுக்கு அதர்வன் என்பவன் ஒரு வழிப்போக்கன் போல!

“இந்த போன் எதுக்கு? ஆல்ரெடி என்கிட்ட போன் இருக்கே…” என்று சசிரேகா மொபைலைப் பார்க்க…

“உன்கிட்ட பேசணும்னா என்ன பண்ணுவேன்? உங்க அப்பா வாங்கிப் போட்ட போன்ல நீ ஒன்னும் என்கிட்ட பேச வேண்டாம். அதுக்குத்தான் புது போன்,” எனப் புதிய சிம் கார்டைக் கூட வாங்கி அவளுக்குப் போட்டுக் கொடுத்தான்.

“அன்னைக்கு என்கிட்ட கோபமா பேசின… இன்னைக்கு என்ன அக்கறை?” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ச்ச்! மாப்பிள்ளை பார்க்க வராங்கன்னு சொன்னா நான் என்ன பண்ணட்டும்? கோபம்தான் வருது… உன் டாடி ஓவரா பண்றாரு. மேரேஜ் ஆகட்டும், அப்புறம் இருக்கு அவருக்கு!” எனக் கோபமான குரலில் கைமுஷ்டியை மடக்கினான்.

“அப்படி என்ன பண்ணுவ?” எனச் சசிரேகா அவனது முகம் பற்றித் திருப்பினாள்.

“உன்னை அவரோட கண்ணுல காட்டவே மாட்டேன்… என் கூடவே வச்சிப்பேன்! உன்னைப் பார்க்க அப்பாயிண்ட்மென்ட் வாங்க வைப்பேன்,” எனத் தீவிரமாகக் கூறினான்.

அவனது நேசத்தை நினைத்துச் சிலாகித்துப் போன சசிரேகா, “அதர்வா…” என்று அவனது கையை அழுத்தப் பற்றினாள்.

அவன் உறுதியான குரலில், “சீக்கிரமே எல்லாப் பிரச்சனையும் சரி செஞ்சிடலாம், நீ ஃபீல் பண்ணாத பேபி…” எனக் கைகளைப் பற்றி முத்தமிட்டான்.

– தொடரும்.

How did this episode feel?
Rate this episode ★ 4.7 (3)

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!