🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
38. அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 35
அதிகாரனின் அகிம்சா
📖 அதிகாரனின் அகிம்சா · Chapter 38 of 46

அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 35

  • 1 Oct 2026
  • 111 reads
  • ★ 5.0 (2)
  • 9 min read

Epi -35 

அதர்வன் ஒரு வித பரவசத்தில் நின்றிருந்தான். இந்த உணர்வுகளை எப்படி வகைப்படுத்துவது, வர்ணிப்பது என்று தெரியவில்லை. இதயம் முழுவதும் அவளின் மூச்சுக் காற்று நுரையீரல் நுண்குழல் முடிச்சுகளில் நிறைந்திருந்தது.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“ஆண்டவரே, அவன் முத்தம் கொடுத்ததுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் ஆண்டவரே! என் தேடல் நீ என் தெய்வமே, நீ இன்றி என் வாழ்வு நிறமாறுதே… உன்னை மனம் தேடுதே, நீயே வழிகாட்டுதே இறைவா, இறைவா வருவாய் இங்கே…” எனப் பாடியவள், “அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்… மாறும் உலகில் மாறாத உறவே நிரந்தரம்… இம்மை வாழ்வில்…” என அவள் பாடிக்கொண்டிருக்க…

“க்கும்…” எனத் தொண்டை செருமும் சத்தம் கேட்டது. அகிம்சா ஓரக்கண்ணில் பார்த்தாள். கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக அவளைப் பார்க்கவில்லை அதர்வன். அதற்குக் காரணம் அவர்களுக்குள் உருவாகியிருக்கும் இந்த புதிய நெருக்கம். அதற்குப் பழகிக்கொள்ளக் கொஞ்ச நேர அவகாசம் வழங்க வேண்டும் என நினைத்திருந்தான். ஏனோ மனதுக்கு அவளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவே காலையிலேயே எல்லோ ரோஸ் ஒன்று, அதைத் தலையில் சூடிக்கொள்ள ஹேர் பின் மற்றும் சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொண்டு வந்தான். வந்து பார்த்தால் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது. அவள் பிரார்த்தனை செய்வது அதிர்ச்சியில்லை; பிரார்த்தனை எதைப் பற்றியது என்பதில் பேரதிர்ச்சியாக இருந்தது.

“கதவைத் திற!” என ஜன்னல் வழியாகக் கையை ஆட்டினான்.

“முடியாது!” என வேறு புறம் திரும்பிக்கொண்டாள் அகிம்சா.

“நீ திற, திறக்காத… அது பிரச்னை இல்ல. அதென்ன ஆண்டவர்கிட்ட ஏதோ மன்னிப்புக் கேட்டுட்டு இருக்க? அது என்ன கன்டென்ட், சொல்லு?” எனக் கோபமாகக் கேட்டான்.

“பாவமன்னிப்புக் கேட்கிறேன்.”

“எதுக்கு பாவமன்னிப்பு?”

“எல்லாம் நீங்க பண்ணதுக்குத்தான்!” என்றாள் அகிம்சா கோபமாக.

“வந்துட்டேன்னு வை, பல்லு கொட்டிடும்!” எனக் கோபமாகப் பார்த்தான். பழைய அதர்வனாக அந்த நொடி மாறியிருந்தான் அதர்வன்.

“நானும் அடிப்பேன்!” என அகிம்சா கோபத்தில் திரும்பினாள்.

அதர்வன் நிதானத்திற்கு வரவே சிறிது நேரம் பிடித்தது. அவளை முறைத்துப் பார்த்தவன், “ஓவராப் பண்றடி! ஒழுங்கா இருந்துக்க… நான் இந்த அளவுக்கு உன்னை இஷ்டத்துக்கு சுத்த விடுறதுதான் மிகப்பெரிய தப்பு,” என்றான்.

அகிம்சா அவனை இடையின் மேல் கை வைத்துப் பார்த்தவள், “உங்களுக்கும் எனக்கும் எதுவும் இல்ல…”

“அகிம்சாஆ!” என ஆத்திரத்தில் கத்திவிட்டான். அதில் அகிம்சா பயந்துதான் போனாள். பற்களைக் கடித்தபடி வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டான். பிடிக்குமாம், ஆனால் பிடிக்கக்கூடாதாம்; அருகில் வரக்கூடாதாம், ஆனால் அவள் கண் முன்னால் இருக்க வேண்டுமாம்; அவளது பார்வையில் இருக்க வேண்டுமாம், ஆனால் பேச மாட்டாளாம்; அவளை விட்டுச் செல்கிறேன் என்று சொன்னால் விடிய விடியத் தூக்கமில்லாமல் அழுவாள், ஆனால் விருப்பம், பிடித்தம், காதல் இது எதையும் ஒத்துக்கொள்ள மாட்டாளாம்! ‘அன்பா சொன்னா இனி ஒத்து வராது. அதிரடியா இறங்கணும்,’ என முடிவு செய்தவன் அன்றிலிருந்து விரைப்புடன் சுற்றினான்.

போஸ்ட் ஆபீஸில் மதிய உணவு நேரம் வர, அகிம்சா டிபன் பாக்ஸைத் திறந்த வேளை அதர்வாவின் புல்லட் பைக் சத்தம் கேட்டது. அங்கிருக்கும் மற்ற பணியாளர்கள் அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்க, அதர்வன் நேராக நுழைவு வாயில் பக்கம் வந்து நின்றவன், கைகளைக் கட்டியபடி அவளை முறைத்துப் பார்த்தான்.

டிபன் பாக்ஸை மூடி வைத்துவிட்டு அகிம்சா அவனை ஏறிட, “வீட்டுக்குப் போகணும், வா,” என்றான்.

“இல்ல, இங்கேயே…”

“உன்னை வரச் சொன்னேன்!” எனக் கோபமாகக் கூறியவன் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

“போங்க மேடம், உங்க புருஷன் ரொம்பக் கோவமா இருக்கார்,” என்றார்கள் அங்கிருப்பவர்கள்.

“புருஷனா?” எனப் பற்களைக் கடித்தபடி திரும்பிப் பார்த்தாள் அகிம்சா. அதர்வன் அங்கு வந்த முதல் நாளே அனைவரிடமும் கூறியிருந்தான். அதனால்தான் அவர்கள் அனைவரும் அகிம்சா மற்றும் அதர்வன் இருவரையும் மிகவும் சாதாரணமாகப் பார்த்திருக்கிறார்கள், கூடவே சுவாரசியமாக…

“என்ன சொல்லி வச்சிருக்கீங்க, அதர்வன்?”

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“என்ன?” எனப் புருவம் சுருக்கியபடி பார்த்தான்.

அகிம்சா தலையைக் குனிந்துகொண்டாள்.

“என்ன சொல்லி வச்சிருக்கேன்னு கேட்டியே? என்ன விஷயம்?” எனக் கோபமாக மீண்டும் கேட்டவன், “வண்டியில ஏறு,” என்று ஸ்டார்ட் செய்தான்.

“எனக்கு இந்த வண்டியில வரச் சத்தம் புடிக்கல… ரொம்பச் சத்தமா இருக்கு,” என்றாள் அகிம்சா.

‘ரசனைகெட்டவளே, இது புல்லட்டுடி!’ என்று அதர்வாவின் மனதில் குரல் கேட்டது. ‘கொஞ்சம் கூட இவளிடம் ரொமான்டிக் இல்லை. கடுகளவு கூட இல்லையே?’ என நொந்துகொண்டான்.

“சரி, வரேன்,” என அவள் ஏறப் போக…

“வேணாம்! அதான் வரப் புடிக்கலன்னு சொல்லிட்டல்ல… நடந்து போலாம். நான் ஈவினிங் வண்டிய எடுத்துக்கிறேன்,” என ஓரங்கட்டி வைத்துவிட்டு அவளுடன் நடந்தான் அதர்வன்.

அகிம்சா அவனுடன் சேர்ந்து நடந்தாள். ஈகோ yellow rose garden-ஐ நெருங்கியதும் நல்ல சமையல் வாசனை மூக்கைத் துளைத்தது. அகிம்சா அவனைத் திரும்பிப் பார்க்க, அங்கே ரோஜா பராமரிப்பாளர்கள் செடிகளுக்கு உரம் மற்றும் களைகளை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

“எல்லாரும் சாப்பிடப் போயிட்டு வந்துடுங்க,” எனக் குரல் கொடுத்தான் அதர்வன். அனைவரும் புன்னகை முகத்துடன் அங்கிருந்து சென்றார்கள். அங்கிருக்கும் அனைத்து வேலைக்காரர்களிடமும் மிகவும் அக்கறையாக நடந்துகொள்வான் அதர்வன்.

கதவைத் திறந்ததும் அகிம்சா கண்கள் விரியப் பார்த்தாள். அனைத்தும் அசைவ உணவுகள்: சிக்கன் 65, தந்தூரி, மட்டன் பிரியாணி, மட்டன் கிரேவி. இது அனைத்தையும் ‘home maker’ மசாலா பொடியில் செய்தான். என்ன home maker? அது வீட்டில் house wife-ஆக இருக்கும் பெண்களுக்குக் கங்கா மற்றும் உஷாராணி இருவரும் சேர்ந்து, அவர்களுடன் நிறைய பெண்களை வைத்து மசாலா ரெசிப்பி தயாரிப்புகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். உஷாராணி, கங்கா இருவரும் அவர்களிடம் இருக்கும் திறமை வெளிவர முக்கியக் காரணமே அகிம்சாதானே! Trending prime time மேகஸீனில் அதர்வாவின் வழிகாட்டுதலில் பெண்கள் இருவரும் அவர்களது திறமையை அடுத்த கட்டத்துக்கு வெற்றிகரமாகக் கொண்டு சென்று, முதல் பக்கத்தில் அட்டைப் படத்திலும் வந்திருக்கிறார்கள்.

அவர்கள் பிராண்டின் பெயர் “home maker மசாலா”. அதில் தான் அதர்வன் அனைத்து உணவுகளையும் தயார் செய்தான்.

“வா, ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு வந்து சாப்பிடு,” என்று அழைத்தவன், அவளுக்காகத் தட்டை எடுத்து வைத்தான்.

அகிம்சா ஆர்வத்துடன் வந்து அமர, அனைத்து உணவுகளையும் போட்டு நீட்டினான். அகிம்சா உணவுத் தட்டை வாங்கி வைத்துவிட்டு, முக்காடு போட்டு ஒரு நொடி பிரார்த்தனை செய்தவள், புன்னகையுடன் உணவை வாசம் பிடித்து உண்ணத் தொடங்கினாள்.

அதர்வன் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, “சூப்பரா இருக்கு! எல்லாமே நல்லாருக்கு… நீங்களா பண்ணீங்க?” எனப் புரை ஏறியபடி கேட்டாள்.

“ச்ச்ச்ச்… மெதுவா! மெதுவாத் தண்ணி குடி,” என அவளின் அருகில் வந்து தலையை வருடி விட்டான்.

அகிம்சாவின் கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள, கஷ்டப்பட்டு மறைத்தபடி உணவைச் சாப்பிட்டாள்.

“எப்படி இருக்கு?” எனக் கேட்டபடி அதர்வன் அவளின் டிபன் பாக்ஸைத் திறந்தான்.

“வேணாம்!” என அகிம்சா தடுக்க வர…

சட்டென்று திறந்தான். அகிம்சா வேறு புறம் திரும்பிக்கொள்ள, அதர்வாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

“என்னடி இது?” எனத் திடுக்கிட்டுப் பார்த்தவன், அவள் முகம் நோக்க…

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“காலையில உப்புமா பண்ணேன்… ரெண்டு வேளைக்கு சேர்த்து…” என்றாள் சாப்பிட்டுக்கொண்டு.

கோதுமை உப்புமா களி போல இருக்க, அதர்வன் கொஞ்சம் எடுத்து வாயில் வைத்துவிட்டு விழி பிதுங்கப் பார்க்க, அகிம்சா கண்டுகொள்ளாமல் வேறு புறம் பார்த்தபடி சாப்பிட்டாள்.

“இதுக்குத்தான் அவ்ளோ பில்டப் கொடுத்தியா?” என அதர்வன் கடுப்புடன் கேட்டபடி, அந்த கோதுமை உப்புமாவை ஸ்பூன் போட்டுச் சாப்பிட்டான்.

“அதுதான் நல்லா இல்லையே, அப்புறம் எதுக்குச் சாப்பிடுறீங்க?”

“உன் கையால பண்ணது. முதல் முறை எனக்காகக் கிடைச்சிருக்கு.”

“அப்போ விஷம் செஞ்சா கூட சாப்பிடுவீங்களா?” எனச் சிரித்தபடி கேட்டாள்.

“மாட்டேன்,” என்றான் சாப்பிட்டுக்கொண்டே.

அகிம்சா முகத்தைச் சுழித்துக்கொண்டு சாப்பிட, “என்னோட காதலி விஷம் கொடுத்தா குடிப்பேன். என் பொண்டாட்டி செய்ற சாப்பாடே விஷம் மாதிரிதானே இருக்கும்! சோ, என அதுவே…” என்று அதர்வன் சொல்லிவிட, பெண்ணவளுக்கு உணவு இறங்க மறுக்க, கண்கள் கலங்க, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கோபமும் ஆத்திரமும் பரவியது.

அதர்வன் சாப்பிட்டபடி எதேச்சையாகத் திரும்ப, அங்கே அகிம்சா வித்தியாசமாகத் தெரிந்தாள். “என்னாச்சு?” என அதர்வன் கேட்க… வேகமாக உணவில் இருந்து எழுந்துகொண்டவள், வலுக்கட்டாயமாக டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு அவனிடம் எதுவுமே பேசாமல் வேகமாக நடந்து சென்றுவிட்டாள்.

இதோ, இரவு பால்கனியின் வழியாகச் சுவர் ஏறிக்குதித்துப் பைப் பிடித்து அவளின் வீட்டுக்குள் வந்திருந்தான்.

கட்டிலில் படுத்திருந்தவளுக்குக் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. ‘எதுக்கு இவன் என் வாழ்க்கைக்குள் வரணும்? நான் கேட்டேனா? நான் கேட்டேனா? போய் அவனோட லவ்வரை கட்டிக்கட்டுமே! யார் வேணாம்னு சொன்னது? மனசுல ஹீரோன்னு நினைப்பு! எனக்கு யாரும் வேணாம்… கர்த்தாவே, எனக்கு நீங்க மட்டும்தான் நிரந்தரம்,’ என முனகிக்கொண்டு கிடந்தாள்.

“என் மேலே கோவமா?”

“ஆமாண்டா, கோவம்!” என்று சொன்னவள், வெடுக்கென எழுந்து திரும்பிப் பார்க்க, அதர்வன் இருந்தான். வேகமாக கதவை எட்டிப் பார்த்தாள்.

“கதவு பூட்டித்தான் இருக்கு. நான் பால்கனி வழியா குதிச்சு வந்தேன்,” என இரட்டைப் புருவம் தூக்கினான்.

அகிம்சா அவனைக் கொல்லும் வெறியில் பார்க்க, அதர்வன் நிதானமாக, “அப்போ உனக்குக் கோவம் வருதுன்னா, நீ என் பொண்டாட்டி… சரிதானே?”

“இல்… இல்ல! எனக்குக் கோவம் வரல, நான் சிரிக்கிறேன். நான் உங்க பொண்டாட்டி இல்ல. நம்ம ரெண்டு பேருக்கும் விவாகரத்து ஆகிடுச்சு. அந்த கல்யாணம் கூட விபத்துதான். நீங்க எனக்காக அஞ்சு வருஷம் வெயிட் பண்ணாலும், உங்களை நான் சாகிற வரைக்கும் ஏத்துக்க மாட்டேன். நீங்க தயவுசெஞ்சு இங்கிருந்து போயிடுங்க, எனக்குப் பரிதாபம் பிடிக்காது!” என்றாள்.

“உன் மேலே பரிதாபம் இல்லன்னு prove பண்ணிட்டா என்ன பண்ணுவ? என் கூட இருப்பியா?” எனக் கேட்டான்.

“என்னைக்கும் உங்க கூட இருக்க மாட்டேன்!” என அவள் சொல்லி முடிப்பதற்குள் உதட்டைக் கவ்விக்கொண்டான். அகிம்சா ஒரு நொடி கண்களை மூடித் திறந்தவள், எதிரில் இருப்பவனை அதிர்ந்து பார்க்க, அதர்வன் அவளின் கூந்தலில் கைகளை நுழைத்து வேகமாக முத்தமிட்டான். அகிம்சா ஒவ்வொரு நொடியும் கண்களைத் திறந்து திறந்து மூடியவள் அவனிடம் இருந்து விலக முடியவில்லை. அவனாக விடும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். அவளின் முக மாற்றத்தில் ஒரு அமைதி வரும் வரை முத்தமிட்டான்; அதன்பின் மெல்ல விலகினான். அவளுக்கு முத்தமிட அத்தனை பிடித்திருந்தது. உள்ளுக்குள் பரவசம்; திரும்பத் திரும்ப முத்தமிட வேண்டும் என்ற உணர்வும் மேலோங்கி இருந்தது.

“சாகுற வரைக்கும் என்னை ஏத்துக்க வேணாம், விட்டுடு,” என்றான். அகிம்சா மூச்சு வாங்கியபடி அவனைப் பார்க்க…

“உன்னோட மனசுல நான் இருக்கேன்னு தெரியும்டி!”

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“இல்ல…”

“இப்படியே நடிச்சு ‘இல்ல’ன்னு சொல்லி என்னத்தைச் சாதிக்கப்போற? என்ன உனக்குக் கிடைக்கப்போகுது? ஒரு பொண்ணை இஷ்டமில்லாத ஆண் தொட்டாலே அது பலவந்தம்தான், அவள் அதுல இருந்து மீட்டுக்கப் போராடுவா!”

“இப்போ நான் போராடி…”

“ச்ச்ச்… முதல் முறை நீ என்னைத் தேடி வந்து நின்னப்பவே எனக்கு எல்லாப் பதிலும் கிடைச்சிடுச்சு, சம்மதமும் கிடைச்சிடுச்சு,” என்றவன் அவளின் கண்களைப் பார்த்து, “என்னால அஞ்சு வருஷம் வேஸ்ட் பண்ண முடியாது. நீ எப்போ வேணாலும் மனசு மாறிக்கோ… மாறல அப்டின்னாலும் எனக்குக் கவலை இல்ல,” என்று வாசலை நோக்கி நடந்தான்.

அகிம்சா அதே இடத்தில் நிற்க, அதர்வன் அவளின் முகத்தைப் பார்த்து, “உன்னை ட்ரிக்கர் பண்ணத்தான் அப்படிப் பேசினேன். Intentionally-ஆகத்தான் பேசினேன். என் முன்னாடி நீ அழுத்தமா இருக்கக் கூடாது. மனசு விட்டு நிறையப் பேசணும். நீ ரிஷி கூட இருந்த போல என்கூட நடந்துக்க வேணும். உன்னோட குழந்தைத்தனம் வேணும். உன்னோட ஒதுக்கம் வேணாம், உன்னோட நெருக்கம் வேணும்… அதுக்குத்தான் அப்படிப் பேசினேன். நீ voice out பண்ணுவேன்னு நினைச்சேன்; ஆனால் நீ…” என்று நிறுத்திவிட்டு நகர்ந்திருந்தான்.

(தொடரும்…)

How did this episode feel?
Rate this episode ★ 5.0 (2)

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!