
அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 36 a
- 1 Oct 2026
- 96 reads
- ★ 4.7 (3)
- 8 min read
Epi -36 a
அகிம்சா அவன் சொல்லி விட்டு சென்ற விடயங்களை யோசித்தபடி அப்படியே அமர்ந்து விட்டாள். கவலையில் தூக்கத்தை தொலைத்து இருந்தவளுக்கு இப்பொழுது குழப்பமும் அதர்வாவின் இந்த புது அவதாரமும் உள்ளுக்குள் இன்னும் தூக்கத்தை காணாமல் போக செய்தது.
நான் எதுவும் பேசினால் தானே அதை வைத்து ஒரு பிரச்சனையை உருவாக்குவான் இனி அவனிடம் வாயே திறக்க கூடாது. ஹான் அரண்யா குட்டிக்கு பிறந்த நாள் வருது அதனால நம்ம இந்த பிரச்சனையில் இருந்து வெளிவரணும்னா சென்னை போறது தான் ஒரே வழி.. அங்கே போய் ஜாலியா அரண்யா குட்டி கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம் என நினைத்தவளுக்கு ரிஷியின் நினைவு வந்தது. உடனே ஆர்த்திக்கு அழைக்க சென்றாள். வாரம் ஒருமுறை ரிஷியிடம் பேசுவாள்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. காலையிலேயே பிரியாவுக்கு அழைத்தாள்.
என்னடி என்னைக்கும் இல்லாத அதிசயமா போன் பண்ணியிருக்க? என பிரியா கேட்க..
ஆரண்யா குட்டிக்கிட்ட சொல்லு அவளோட அத்தை வர போறான்னு என்றாள்.
பிரியா சிரித்தபடி, அவங்க அத்தய பார்க்க அவளே அங்கே வராலாம். என்றாள்
என்ன இங்க வரீங்களா என அகிம்சா அதிர்ச்சியுடன் கேட்டு விட..
ஆரியன் தான் சொன்னாரு. பார்த்திபனுக்கு பர்த்டே செலிபுரேசன் பெருசா பண்ணனும்னு ஆசை இருந்ததாம் அதனால ஆரியன் ஊட்டில ரிசார்ட் புக் பண்ணியிருக்கார். நாங்களே அங்க வரோம் என்று சொல்லி போனை வைத்தாள்.
அகிம்சாவுக்கு அய்யோ என இருந்தது.
பார்த்திபன் உயிரோடு இருந்திருந்தால் தன் ஒற்றை மகளின் பிறந்தநாளை எப்படியெல்லாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியிருப்பானோ, அதே கனவை நிறைவேற்ற நினைத்தான் ஆரியன்.
அதற்காக கோத்தகிரியில் ஒரு ரிசார்ட்டை புக் செய்திருந்தான். பிரியா தனிமையை உணரக்கூடாது என்று எண்ணி ஆரியன் அவனது நண்பர்கள் பட்டாளைத்தை குடும்பத்துடன் அழைத்திருந்தான்.
சமரன் சங்கீதாவோடும், கந்தர்வன் தனது மனைவி ஜான்சி என அழைத்திருந்தான். கூடவே அந்த பிறந்தநாள் விழாவுக்கு ஸ்பெசல் கெஷ்டாக சினிமா ஸ்டார் ஆதிசேஷனை அழைக்க நினைத்தான். பிரியாவுக்கும் அரண்யா குட்டிக்கு இது மறக்க முடியாத பிறந்தநாள் விழாவாக இருக்க வேண்டும் என நினைத்தான். அவனுக்கு மிக நெருக்கம் சிவாங்கி தான். சிவாங்கியின் அக்காவின் கணவன் ஆத்மனின் தம்பி தான் ஆதி.. உடனே போன் செய்து விவரம் கூறினான்.
அதுக்கு நான் என்ன பண்றது? என அதிரூபன் பதில் கொடுக்க..
டேய் போனை சிவாங்கி கிட்ட கொடு.. அவளுக்கு போன் பண்ணா நீ எதுக்கு டா எடுக்குற? ராஸ்கல்..
அதிரூபன் கடுப்புடன், “அவ என் பொண்டாட்டிடா!”
“நான் இப்போ சிவாங்கிகிட்ட பேசணும்,” என ஆரியன் மீண்டும் கூற, “சீனியர் ஆதிசேஷன் அந்த ஃபங்ஷனுக்கு வரணும்னா, நீ எங்களையும் இன்வைட் பண்ணனும்,” என்றான் அதிரூபன்.
ஆரியன் வாய்விட்டுச் சிரிக்க, “ஓ… சிரிக்கிறியாடா?” என்று பற்களைக் கடித்த அதிரூபன், “இப்போ நான் ஒரு வார்த்தை சொன்னா போதும், சீனியர் உடனே வரமாட்டேன்னு சொல்லிடுவார் பாரு… சொல்லவா?” என்று மிரட்டலாகக் கேட்க,
ஒரு நொடி மௌனமானான் ஆரியன்.
அதிரூபன் உற்சாகப் புன்னகையுடன், “நீ என்ன பண்ற… போன் பண்ணி அதர்வனுக்கும் அஜய்க்கும் இன்வைட் பண்ற…” என்றான்.
“என்னால முடியாது!” என்று ஆரியன் அடுத்த நொடியே மறுத்துக் கூற, “நான் கூப்பிட்டாதான் ஆதிசேஷன் வருவார், இல்லைனா வரமாட்டார். இப்போ என்ன பண்ற… சிவங்கி நம்பரில் தானே பேசிட்டு இருக்கோம் இப்போவே போனை கட் பண்ணிட்டு, என்னோட போனுக்கு வந்து என்னை இன்வைட் பண்ணு, சரியா?” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான் அதிரூபன்.
ஆரியனுக்கு அதிரூபனைக் கொல்லும் அளவுக்கு வெறி தோன்றியது. ஆனால், இதெல்லாம் ப்ரியாவுக்காகவும் அரண்யாவுக்காகவும் ஆயிற்றே என்று நினைத்தபோது, வேறு வழியில்லாமல் அதிரூபனுக்கு போன் செய்து, அவனைப் பிறந்தநாள் பார்ட்டிக்கு முறைப்படி அழைத்தான்.
அதிரூபன் காலரைத் தூக்கிவிட்டபடி, “சரி சரி வரேன்… ஆதிசேஷன் சீனியரை வரச்சொல்லணும், அவ்வளவுதானே? நான் பார்த்துக்கிறேன், அவர் வருவார் பாரு!” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
“வெட்கக்கேடு!” என்று ஆரியன் தலையில் அடித்துக்கொண்டு யோசனையுடன் அமர்ந்திருக்க, அதிரூபன் உடனே அதர்வனுக்கு அழைத்தான்.
“சொல்லுடா மச்சான், என்ன விஷயம்?” என அதர்வன் கேட்க, “டேய் மச்சான், அந்த ஆரியன் பர்த்டே பார்ட்டி கொண்டாடுறான்டா,” என்றான்.
“யாருக்கு பர்த்டே பார்ட்டி?”
“அதான்… உன் பொண்டாட்டியோட பிரெண்டோட பொண்ணுக்கு அவன் கொண்டாடுறான்டா,” என்றான்.
“அப்படியா ஆனால் நான் எப்படி அந்த பார்ட்டிக்கு போறது? அந்த ஆரியன் நாய் என்னை போன் பண்ணி கூப்பிடவே மாட்டான்டா,” என்று அதர்வன் கோபமும் வருத்தமுமாகக் கூறினான்.
அதிரூபன் சிரித்தபடி, “அதெல்லாம் இப்போ அவனே உனக்கு போன் பண்ணுவான் பாரு,” என்றான்.
“எப்படிடா?” என்று அதர்வன் வியப்புடன் கேட்க, “அதெல்லாம் நான் பார்த்துக்கிட்டேன்… அதிரூபன்னா கொக்கா!” என்றான் கெத்தாக.
“மச்சான் சூப்பர் மச்சான்! தேங்க்ஸ் மச்சான், தேங்க்ஸ் மச்சான்!” என்று அதர்வன் உற்சாகத்தோடு காத்திருக்க, அதேபோல ஆரியனிடமிருந்து அதர்வனுக்கு அழைப்பு வந்தது. ஆரியன் பிறந்தநாள் பார்ட்டிக்கு வருமாறு கூறினான்.
அதர்வன் வேண்டுமென்றே, “நீ கூப்பிடுறதுக்காக எல்லாம் நான் வரல… என் பொண்டாட்டிக்காக வரேன்,” என்றான்.
அதற்கு ஆரியன், “அய்யோடா! நீ வரவே வேண்டாம்… உன்னை வேற வழி இல்லாமதான் கூப்பிடுறேன். அதேபோல உன்னோட சுத்துற அந்த அஜய் நாயையெல்லாம் என்னால தனியா கூப்பிட முடியாது…
“போடா பச்சை பாவக்கா”
“போடா கொத்தவரங்கா குரங்கு.. உன்னோட ஒத்தையும் வந்து தொலையச் சொல்லு!” என்று எரிச்சலுடன் கூறிவிட்டு போனை கட் செய்தான்.
அதர்வன் உற்சாகத்துடன் இருந்தான். முதன் முறையாக அகிம்சாவுடன் செல்ல போகிறோம் என கனவில் இருந்தவன். அதே வேகத்தில் கடைக்கு சென்றான் அவளுக்காக பார்த்து பார்த்து உடைகளையும் அலங்கார பொருட்களையும் தேர்வு செய்தான். அவளுக்கு இணையாக அவளின் உடையின் வண்ணத்தில் அவனும் ஒரு புதிய உடையை வாங்கி கொண்டு ஆசையுடன் வந்தான்.
அலுவலகம் முடிந்து குடியிருப்புக்கு வந்து கிளம்பத் தயாராகி வந்தவளின் வீட்டு வாசலில், கம்பீரமாக வந்து நின்றது அதர்வனின் புல்லட்!
கையில் ஒரு நேர்த்தியான பரிசுப் பெட்டியோடு உள்ளே நுழைந்தான் அதர்வன்.
அவளது முகத்தைப் பார்த்து ஒற்றைப் புருவத்தை உயர்த்தி, “இன்னும் கிளம்பலையா மேடம்?” என்றான்.
எங்கே கிளம்பனும்? என அகிம்சா அவனை பார்த்து கேட்க..
பர்த் டே பார்டிக்கு? என இரட்டை புருவம் தூக்கினான்.
நான் கிளம்பிட்டேன் இப்போ போக போறேன்.
போக போறேன் இல்ல போக போறோம் என்று திருத்தினான்.
அதை கண்டக்ட் பண்றது ஆரியன் அண்ணா என அகிம்சா வேண்டுமென கூற..
அதே ஆரியன் நொன்ன தான் என்னை கால் பண்ணி குடும்பத்தோட வந்திடுனு invite பண்ணார். என்று பற்களை கடித்தபடி கூறினான்.
அகிம்சா ஒரு பார்வையுடன் சட்டென்று திரும்ப.., நில்லு என அவளின் முன்னால் வந்தான்.
எனக்கு நேரமாகுது என்ன விஷயம்ன்னு சீக்கிரம் சொல்லுங்க என கண்களை பார்க்காமல் பதில் கொடுத்தாள்.
அவளின் கையில் ஒரு ஷாப்பிங் பேக்கை நீட்டினான். பெண்ணவள் புரியாமல் ஏறிட்டாள்.
இதுல இருக்க accessories அ வியர் பண்ணிட்டு வா என்று அவளின் கையில் திணித்தான் அதர்வன்.
என்ன இது? என அகிம்சா திறந்து பார்க்க உள்ளே நிறைய பொருட்கள்..
என்னால புடவையெல்லாம் கட்ட முடியாது. எனக்கு அது கட்டவும் தெரியாது. முதல்ல நீங்க எதுக்கு இதெல்லாம் வாங்கி கொடுக்குறீங்க? உங்க கிட்ட நான் கேட்டேனா? என மூக்கு விடைக்க கேட்டாள்.
அப்புறம் வீட்டுக்கு வந்து உன்னோட கேள்விய லிஸ்ட் போடு பதில் சொல்றேன். இப்போ போய் ரெடியாகி வா!! நீ போய் ரெடியாகலென்னா நான் வருவேன்.
எதுக்கு? என அகிம்சா பற்களை கடித்துக்கொண்டு கேட்க..
உன்னை ரெடி பண்ண என்றான் அவளின் உதட்டை பார்த்து, பையை இறுக்கி பற்றியவள். நான் ஆல்ரெடி ரெடியாகிட்டேன். தேவையில்லாத விசயம் எல்லாம் எனக்கு எதுக்கு பண்றீங்க? என கேட்டாள் அகிம்சா.
“எனக்கு பிடிக்கல”
“உங்களுக்கு எதுக்கு அதர்வன் பிடிக்கணும்” என உதட்டை சுழித்தாள்.
அதர்வன் நகத்தை பதம் பார்த்தபடி, எனக்கும் சசிக்கும் நடக்க இருந்த கல்யாணத்தை என்னன்னு சொல்லி நிறுத்தின?
என்னன்னு சொல்லி நிறுத்தினேன்? என அவனிடமே கேட்டாள்.
அதர்வன் மீசையை வருடி விட்டுகொண்டு, I know உனக்கு எப்படி நியாபகம் இருக்கும்? ஆனால் எனக்கு நியாபகம் இருக்கு. உனக்கு ஞாபகப்படுத்த அதை practical ஆக உனக்கு என அவனது வார்த்தைகள் வாயில் இருக்கும்போதே ஓடி இருந்தாள் வீட்டுக்குள்.
அரை மணி நேரத்துக்குள் நான் வருவேன் நீ ரெடியாகி இருக்கணும் என்று விட்டு கிளம்ப சென்றான் உற்சாகமாக..
பிளாக் பேன்ட் க்ரீம் எல்லோ சட்டையுடன் மிகவும் பார்மலாக அழகாக தயாராகி வந்து அவளின் வீட்டின் முன் நின்றவன் மணியை பார்க்க கதவு திறந்தது. பின்னலிட்ட ஜடையுடன் வந்தாள். அதர்வன் வாங்கி கொடுத்த உடையை மட்டுமே அணிந்திருந்தாள். அவனது அருகில் வந்து போலாமா என கேட்க அவளின் கையை பற்றி உள்ளே இழுத்து சென்றான்.
அதர்வன் என காட்டு கத்தலாக கத்தினாள் பெண்ணவள். சட்டைக்கைய நடித்து விட்டவன் வேகமாக அவளின் அருகில் நெருங்கி ஜடையை பிரித்து விட்டான்.
அதர்வன்!! என்று அழுத்தி அழைத்தாள்.
அம்மா தாயே உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன். கொஞ்சம் வாய close பண்ணிட்டு இரு என்றவன் அவளின் ஜடை பின்னலை பிரித்து விட்டு அதை அழகாக கோதி விட்டான். அகிம்சா கைகளை பிசைந்தபடி நிற்க, ஷாப்பிங் பேக்கில் இருந்து குட்டி கேட்ச் கிளிப் எடுத்து இரண்டு பக்கமும் முடி எடுத்து போட்டு விட்டான். அவன் தீண்டலில் விரசமில்லை ஆனால் அகிம்சாவின் எண்ணங்களில் எக்கச்சக்கமாக விரசமே அவனது தொடுகை அவளுக்கு சிலிர்ப்பு.
கழுத்துக்கு அழகாக சில்வர் செயின் ஒற்றை கல் பதித்து மின்னி கொண்டிருந்தது. அதையும் அவனே போட்டு விட்டான். நெற்றியில் குட்டி பொட்டு மிகவும் குட்டியாக இருந்தது. அதையும் அவனே ஒட்டி விட்டான். பெண்ணவளின் நெருங்கிய புருவத்துக்கு நடுவில் அழகாக மச்சம் போல ஒட்டி இருந்தது அந்த குட்டி கருப்பு பொட்டு.










💬 Be the first to comment