🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
41. அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 37
அதிகாரனின் அகிம்சா
📖 அதிகாரனின் அகிம்சா · Chapter 41 of 46

அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 37

  • 1 Oct 2026
  • 118 reads
  • ★ 5.0 (2)
  • 8 min read

Epi -37 

பேய் மழை போல வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. குளிர்காற்றின் காரணமாக ஜன்னல்கள் அதிர்ந்து ஆடிட, மெல்ல இரண்டாவது அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த அகிம்சா, பெருமூச்சுடன் கதவை உள்பக்கமாகத் தாளிட்டாள்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அறையைப் பார்த்தாள்; நல்ல விசாலமான அறையாக இருந்தது. அறையின் விளக்குகள் மேலும் அழகு சேர்த்தன. சுற்றிலும் பார்வையைச் செலுத்தியவள், குளிருக்கு இரண்டு கைகளையும் தேய்த்தபடி இடது பக்கம் திரும்பினாள். கப்போர்டு நிலைக் கண்ணாடியில் தலை முதல் கால் வரை அவளைப் பிரதிபலித்துக்கொண்டிருந்தது.

அகிம்சாவின் கைகள் சட்டென்று தலையில் சூடியிருந்த பூவுக்குத் தானாகச் சென்றது. அதர்வன் வைத்துவிட்ட ரோஜாவை மென்மையாகத் தொட்டுப் பார்த்தாள். இன்று அவன் அணிந்திருந்த உடை அத்தனை அழகாக இருந்தது; அத்தனை பொருத்தமாக இருந்தது. அவனுக்கு அருகில் நின்றால்தான் அகிம்சா அழகாகத் தெரிவாள். அவனது அழகின் உபயம் மட்டுமே அவளை அழகாகக் காட்டும். ஆம், அதர்வன் அத்தனை அழகு, அத்தனை கம்பீரம்… அதுவும் இன்று அவனது கண்களில் அத்தனை ஈர்ப்பு! அவனைப் பார்த்ததும் சொக்கிவிட்டாள் பெண்ணவள். அவனுக்குக் கொஞ்சம் கூட அகிம்சா தகுதியில்லை; அது அவளுக்கும் தெரியும். அவனது சின்னத் தொடுதல் கூட ரோஜா போலப் பூக்கச் செய்தது பெண்ணவளை.

சுடிதாரின் துப்பட்டாவை அவிழ்த்து மேஜை மீது வைத்தவள், பால்கனிக் கதவின் வழியே கொட்டிக்கொண்டிருந்த மழையை வெறித்துப் பார்த்தபடி நின்றாள்.

“அகிம்சா எங்கேடா?” என ஆரியனிடம் போனில் அழைத்துக் கேட்டான்.

“அவள் கிளம்பிட்டாளே!”

“செருப்பு பிஞ்சிடும்.”

“தச்சுப் போட்டுக்கங்க அதர்வன்.”

“என்னோட செருப்பு இல்ல, பிரியாவோட செருப்பு,” என்றான் அதர்வன்.

ஆரியன் சட்டென்று அமைதியாகிட, அதர்வன் நிதானக் குரலில், “எனக்குத் தெரியும், உன்னோட மனசுல பிரியா இருக்கா, சரிதானே?”

“இல்… இல்லை…”

“பொய் சொல்லாத!”

“ச்ச்… உனக்கு என்ன வேணும்?” என ஆரியன் கடுகடுக்கக் கேட்க, மறுமுனையில் அதர்வன் நிதானக் குரலில், “எனக்குச் சந்தோஷம்தான் ஆரியன். அந்தப் பொண்ணுக்கு நீ துணையா இருக்கணும்; அவளை நீ நல்லாப் பார்த்துக்கணும்,” என்றான்.

“நிஜமா?” என ஆரியன் ஆச்சரியத்துடன் கேட்க, “நீ நல்லா இருக்கக் கூடாதுன்னு நான் எதுக்கு நினைக்கப்போறேன்?” என அதர்வன் சொன்னான்.

“இந்த விஷயம் சமர், கந்தர்வனுக்குக் கூட தெரியாது; உனக்குத்தான் தெரியும். எனக்குச் சந்தோஷம்,” என்றவன், “அவள் ரூம் நம்பர் 8-ல இருக்கா… போய் பாரு,” என்று போனை கட் செய்தான்.

“உன் பேரைச் சொன்னாலே உள்நாக்கு தித்திக்குதே, நீ எங்கே நீ எங்கே அகிம்சா… உன்னோட சேர்ந்தாலே வழியெல்லாம் ரோஜாப்பூ பூக்குதே, நீ எங்கே அகிம்சா…” எனப் பாட்டுப் பாடி வைப் செய்துகொண்டே சென்றான்.

அப்போது… “டக்… டக்… டக்!” என அறையின் கதவு தட்டப்பட, அகிம்சா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். மீண்டும் கதவு தட்டப்பட, ‘பிரியா வந்துட்டாளா?’ என வேகமாக கதவைத் திறந்தாள். எதிரில் அதர்வன் புருவம் தூக்கியபடி நின்றிருக்க, “என்னாச்சு?” என அதே இடத்தில் நின்றாள்.

“தூங்க வந்தேன்.”

“என்ன?” என அகிம்சா அதிர்ச்சியுடன் பார்க்க, அவளைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

“அதர்வன்! என்ன பைத்தியக்காரத்தனம் இது? எதுக்கு இங்க வந்தீங்க?” என அவள் பதற்றத்தில் கத்த…

அதர்வன் அவளது கையைப் பற்றி ஒரே இழுப்பாக அறைக்குள் இழுத்து, கதவைப் படாரெனச் சாத்தினான்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“அதர்வன், ஒழுங்கா போங்க!” என்று அவள் கத்த,

“ஹே!” என வாயைப் பொத்தியவன், “கத்தாதடி…” என்று அவளுடன் அப்படியே கட்டிலில் அமர்ந்தான்.

“ஒழுங்கா வெளியே போங்க, இப்ப பிரியா வருவா!”

“அவள் வர மாட்டாள்,” என்று அகிம்சாவின் கையை வருடிவிட்டான்.

“ஏன்?”

“அவள் பக்கத்து ரூமில் பாப்பாவோட தூங்குறா!” என்றவன் அவளின் முகத்தைப் பார்த்தான்.

அவனிடமிருந்து கையை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்தவள், “வெளியே போங்க அதர்வன்,” என நகர்ந்து நின்றாள்.

அதர்வன் அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தான். அவனது சூடான மூச்சுக்காற்று அகிம்சாவின் முகத்தில் பட்டது. அதர்வாவின் கண்களில் இருந்த அந்த கள்ளப்பார்வை பெண்ணவளைத் தடுமாறச் செய்ய, அதர்வன் அவளை அணைத்து, “உனக்கு பாப்பா பிடிக்குமா?”

“யாரு?”

“அரண்யா பிடிக்குமா? குழந்தைகளைப் பிடிக்குமா?” எனக் கேட்டான்.

“ம்ம்… பிடிக்கும்! அரண்யாவைப் பிடிக்கும், ரிஷியைப் பிடிக்கும்…” என அவள் சொல்லிக்கொண்டிருக்க,

“நமக்கும் பாப்பா வேணும்,” என்று உதட்டில் முத்தமிட்டான்.

அகிம்சா திடுக்கிட்டு அவனைத் தள்ளிவிட,

“எல்லாரும் பொண்டாட்டியும் குழந்தையுமா இருக்காங்க. நான் மட்டும் எதுக்குத் தனியா இருக்கணும்? நமக்கும் பாப்பா வேணும்!”

“அதுக்கு…” என அவள் பின்னால் நகர, அவளைக் கட்டிலில் தள்ளினான்.

“அதர்வன்…” என அகிம்சா அதிர்ச்சியில் மூச்சுவாங்க, அவளின் உதட்டைக் கவ்வி முத்தமிட்டான்.

“அதர்வன், சொல்றதக் கேளு! எனக்கு டைம் வேணும்னு சொல்லியிருக்கேன்,” என்று அவள் பரவச உணர்வில் திண்டாடியபடி விலகிப் போக முயற்சி செய்ய,

“ஹக்… ஹா…” என்று சிரித்தவன், “அது என்னைக் கல்யாணம் பண்ணிக்கத்தான் அஞ்சு வருஷத்துக்கு ஒத்துக்கிட்டேன். நம்ம பாப்பாவை எப்போ வேணாலும் ரிலீஸ் பண்ணிக்கலாம்,” எனச் சிரித்தபடி அவளைப் பார்த்தவன், “இம்சைக் குட்டி!” என நெற்றியில் முத்தமிட்டான்.

“இது… இதெல்லாம் தப்பு! இது பாவம்…” என அவள் ஆரம்பிக்க,

“உன்னை இனி பேச விட்டா பாருடி!” என சபதம் எடுத்துக்கொண்டவன், அவளின் உதட்டில் எழுந்து முத்தமிட்டான்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அவள் நிறைய முறை அவனை விலக்க முயற்சி செய்ய, இரண்டு கைகளையும் பற்றியவன், “உனக்கு நான் வேணாமா? நான் தொடுவது பிடிக்கலையா? ரொம்பக் கட்டாயப்படுத்தி உன்கிட்ட சாதிக்க நினைக்கல நான்… வேணாம்னா சொல்லு, நான்…” என்று கண்கள் சிவக்க அவன் எழுந்து செல்லப்போக, கைகளைப் பற்றிக்கொண்டாள்.

“விடுடி!” எனக் கோபமாகக் கூறினான்.

“எனக்கு இதெல்லாம் புதுசு; எனக்குப் பயமா இருக்கு. மென்டலி நான் யார் கூடவும் அவ்வளவு சீக்கிரம் கனெக்ட் ஆக மாட்டேன். ஆனால்…” என நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தவள், சட்டென்று வேறுபுறம் திரும்பிக்கொண்டாள்.

அதர்வன் அதே இடத்தில் நிற்க, மெல்லமாகத் திரும்பிப் பார்த்தாள்.

“என்ன?”

“போறேன்! வேற என்ன பண்றது?” என வேண்டுமென்றே அவளின் வாயைப் பிடுங்கினான்.

“எனக்குச் சொல்லத் தெரியல, கூச்சமா இருக்கு.”

“அப்போ கூச்சப்படு!” எனச் சொல்லிவிட்டுச் சட்டையை எடுத்தான்.

“அதர்வன்…” என அவனது கையைப் பற்றினாள்.

“ச்ச்… விடு!”

“அதர்வன்!” என அதட்டலுடன் அவள் அழைக்க…

“வாயத் திறந்து சொல்ல மாட்டியா, ‘நான் வேணும்’னு?” என்று அதர்வன் கூற, அகிம்சா சட்டென்று எழுந்து, “நீங்க போங்க அதர்வன்,” என்று முடியைச் சரி செய்தாள்.

“இல்ல, மாட்டேன். இப்போ எனக்கு நீ வேணும்!” என வேகமாக வந்தவன், கழுத்துக் குழியில் முத்தமிட்டான். அகிம்சா மூச்சுவாங்கிக்கொண்டே வேறுபுறம் திரும்பிட, “ச்ச்ச்… என்னைப் பாரு,” என முகத்தைத் திருப்பி, முகமெல்லாம் முத்தமிட்டான் அதர்வன்.

ஆணின் தொடுதல் பெண்ணவளுக்குப் புதுப் புது உணர்வுகளைக் கொடுக்க, சிணுங்கிக்கொண்டே விலகினாள். கழுத்துக் குழியில் முகம் புதைத்து அவளை மெல்ல மெல்லக் கிறங்கடித்தவன், நெஞ்சில் முத்தமிட்டான். அவளது கூந்தலுக்குள் தன் விரல்களைப் புதைத்து, அவளது தலையைத் தன் வசப்படுத்தி, அவளது மூச்சைத் தன்னுள் உறிஞ்சுவது போல வெறியோடு முத்தமிட்டான். அவனது உதடுகளின் கொதிப்பும், தாடியின் அழுத்தமும் அவளது மென்மையான மேனியில் மின்னலெனப் பாய்ந்தது. அவனது கைகளும் விரல்களும் பல்வேறு வேலைகளைத் தனித்தனியாகப் பிரித்து எடுத்துக்கொண்டன. பொக்கிஷங்களை வைத்திருப்பவளை இன்னும் பொக்கிஷமாகப் பார்த்தான்.

“அதர்வன், என்னடா பண்ற?” எனப் பெண்ணவள் சிணுங்கிக்கொண்டே கதறிட,

“கம்முன்னு இரு!” எனக் கைகள் இரண்டையும் இரும்புக் கரத்துக்குள் அடக்கிக்கொண்டான்.

அகிம்சா கண்களைத் திறக்க அத்தனை கஷ்டப்பட்டாள். இடைச் சுழியில் மொத்தமாக விழுந்தவன் அத்தனை முத்தமிட்டான். உடலுடன் அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான்; அவனது எச்சில் படாத இடங்களே இல்லை, அவளது வதனம் மொத்தமும் வடிவடைந்தது.

நெஞ்சுக் கூடு வான் நோக்கிப் பறப்பது போல உணர்வில் தத்தளித்தாள் பெண்ணவள்.

“அகி!”

“ம்ம்…”

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“அகி, இங்கே பாரு!” என முகத்தை நிமிர்த்தினான் அதர்வன்.

“சொல்லுங்க…”

“வாவ், கம் அகைன்!”

அமைதி.

“ச்ச்… சொல்லுடி!”

“என்ன?” எனக் கோபமாகப் பார்த்தாள்.

அதர்வன் பெருமூச்சுடன், “இந்த முகத்துல எப்போ நான் ரொமான்ஸைப் பார்க்க? அதுக்குள்ள நான் கிழவன் ஆகிடுவேன் போல,” என்றான் சோகமாக.

அகிம்சா கோபத்துடன் அவனைப் பார்க்க, “அழகி!” என்றவன் அவளின் காதில் முத்தமிட்டான்.

“அதர்வன்… அங்கே…” என வாயைப் பொத்திக்கொண்டு அவனைத் தடுக்கப் பார்த்தாள். அவ்வளவுதான்; மாறன் அம்பு எய்தி பெண்ணவளின் பெண்மையை அதர்வண அம்பு இரவில் அகிம்சாவுடன் மண்டியிட்டு, பெண்ணவளை மாலையாக்கிக்கொண்டான்.

அவள் வேகவேகமாக உடையை எடுத்துக்கொண்டு பாத்ரூம் செல்ல, கையைத் தலைக்குக் கொடுத்தபடி, “எங்கே போற?” எனக் கேட்டான்.

“சொல்ல முடியாது,” என அவள் செல்ல, “நானும் வருவேன்,” என அவளின் பின்னால் சென்றான்.

“அதர்வன், நான் குளிக்கணும்; தயவுசெஞ்சு வெளியே போ!”

“முடியாது,” என அவளைப் பின்னாலிருந்து அணைத்துக்கொண்டான்.

நெஞ்சுக் கூடு ஏறி இறங்க, அவள் அப்படியே நின்றாள். அதிர்ச்சியும் பதற்றமும் தோன்றியது. ‘இவனுக்கு ஏன் நான் இப்படி ஒத்துழைச்சு நிக்கிறேன்?’ எனக் கைகளைப் பிசைந்தபடி நின்றாள்.

“Are you satisfied?”

“ஹாங்?” என அவனைக் கோபமாகத் திரும்பிப் பார்த்தாள். அது ஒரு நொடி…

“என்னாச்சு?”

“ஒன்… ஒண்ணுமில்ல, வெளியே போ அதர்வா!” என வேகமாகத் திரும்பிக்கொண்டாள். அவனும் அவளும் இருவருமே தோள் சட்டையில் நின்றிருந்தார்கள்.

அவளின் பின் கழுத்தில் முத்தமிட்டு, மீண்டும் அகிம்சாவை அள்ளி அணைத்து இஷ்டம் போலக் கொஞ்சிவிட்டு, பூந் துண்டுடன் அவளைத் தூக்கி வந்தான். அவள் சோர்வில் கிடக்க, அவளுக்கு உடை போட்டுவிட்டு, அவன் வெற்றுடலுடன் கட்டிக்கொண்டு உறங்கினான். அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிய, அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டு அருகில் இருந்தான் அதர்வன்.

அறை முழுவதும் குளிர் பரவ, அகிம்சா போர்வையை இறுக்கிப் பற்றிக்கொண்டு திரும்ப, அதர்வன் அவளை இழுத்துக்கொண்டான். அவளும் அவனது நெஞ்சில் முகம் புதைத்து உறங்கியவள், அடுத்த சில நொடியில் வேகமாக எழுந்தாள்.

அதர்வன் அருகில் அவளின் ஸ்பரிசம் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு மெல்லக் கட்டிலில் தேடினான். அகிம்சா அமர்ந்திருப்பது தெரிய, “என்னாச்சு?” எனக் கையைப் பற்றினான்.

“ஒண்ணுமில்ல,” எனப் போர்வையை இழுத்துவிட்டபடி அவள் நகர, கைகளில் முத்தமிட்டான் மீண்டும்.

(தொடரும்…)

How did this episode feel?
Rate this episode ★ 5.0 (2)

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!