
அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் EPISODE 39b
- 1 Oct 2026
- 136 reads
- ★ 4.7 (3)
- 5 min read
EPISODE 39b
அதர்வன் மெல்ல நடந்து சென்று, தன் சித்தப்பா வெங்கடராமனின் தோள்களைப் பற்றினான். “அப்பா… இந்த இடத்துல உட்கார என்னை விட எல்லாத் தகுதியும் உழைப்பும் சித்தப்பாவுக்குத்தான் இருக்கு! தாத்தாவுக்கு அடுத்து நீங்க இருந்தீங்க… உங்களுக்கு அடுத்து நான் வரணும்னு எந்தக் கட்டாயமும் இல்ல. நீங்க சாம்ராஜ்யத்தை உருவாக்கினப்போ, உங்க நிழலா இருந்து பின்னால உழைச்சது சித்தப்பாதான். இத்தனை வருஷமா அவருக்கு என்ன அங்கீகாரம் கிடைச்சது? குடும்பத்துல அண்ணன் தம்பியா இருந்தா மட்டும் போதாதுப்பா… சம உரிமையும் மரியாதையும் இருக்கணும். இந்த ‘டிரெண்டிங் டைம்அவுட்’ சேர்மன் பதவி சித்தப்பாவுக்குத்தான் சேரணும்! அவருக்கு அப்புறம் தம்பி ஸ்ரீதர் இந்த இடத்துக்கு வரட்டும்!” என்றான்.
வீடே நிசப்தமானது. வெங்கடராமன் நெகிழ்ந்துபோய், தன் அண்ணன் மகனின் கைகளைப் பிடித்துக்கொண்டு கதறி அழுதுவிட்டார்.
“இல்ல சித்தப்பா… இது உங்களுக்கான உரிமை,” என அவன் புன்னகைத்தான்.
கங்காவின் கண்களில் கண்ணீர் வழிய, வியப்போடு அவனைப் பார்த்தார். உஷாராணியின் முகம் தன் மகனின் பெருந்தன்மையைக் கண்டு பூரிப்பில் மிதந்தது. சூர்யநாராயணனோ செய்வதறியாது பேச்சற்று அமர்ந்திருந்தார். தன் மகன் தன்னை விட எத்தனையோ மடங்கு உயர்ந்த மனிதனாக வளர்ந்து நிற்கிறான் என்பதை அந்த நொடியில் அவர் பூரணமாக உணர்ந்தார்.
அனைவரையும் பார்த்த அதர்வன், “எல்லாரும் ஹாப்பிதானே?” எனக் கேட்டான்.
“நீ எப்போ அகிம்சாவை இங்க கூட்டிட்டு வரப்போற? அவளுக்குப் போன் பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டுப் போயிட்ட… போயும் பார்க்க வேண்டாம்னு தடுத்துட்ட. என்ன பண்றதுன்னு எங்களுக்குத் தெரியல,” என்று ஆர்த்தி கேட்க, “நான் பார்த்துக்கிறேன். என்னோட விஷயத்துலயும் அவளோட விஷயத்துலயும் நீங்க யாரும் தலையிடாதீங்க… நான் இப்போ கிளம்பணும்,” என்று கூறிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென வெளியேறினான்.
வழக்கமாகச் செல்லும் கேம் ஜோனுக்குச் சென்று, நடப்பவற்றை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான் அதர்வன். எங்கே செல்வது, என்ன செய்வது என்று புரியவில்லை. அதே நேரம் அஜய் அழைத்தான்.
“சொல்லுடா!”
“எங்கடா இருக்க? வீட்டுக்குப் போனேன், நீ கிளம்பிட்டேன்னு சொன்னாங்க… இப்போ எங்க இருக்க?”
“திருவண்ணாமலை கிரிவலம் போலாம்னு இருக்கேன்.”
“மச்சான்! போறதுக்கு முன்னாடி என்னைப் பார்த்திட்டுப் போடா! மலையேறணும்னா மச்சான் துணை வேணும் மச்சி…” என அஜய் சொல்லி முடிக்கவில்லை.
“வாயைக் கிழிச்சிடுவேன்!” என்றான் அதர்வன் கோபமாக.
“சரி சரி… இப்போ எங்க இருக்க? நான் நேர்ல வரேன்,” என அஜய் விடாப்பிடியாகக் கேட்டான்.
“கேம் ஜோன்ல உட்கார்ந்திருக்கேன்,” எனச் சலிப்பான குரலில் பதில் வந்தது. “அங்கேயே இரு, வரேன்,” என்று அவன் போனை வைக்க, சிறிது நேரத்திலேயே அதிரூபனும் சமரனும் அங்கே வந்து சேர்ந்தார்கள்.
“இவனோடதான் சுத்திட்டு இருக்கியா?” என அதர்வன் கோபத்துடன் சமரனைப் பார்க்க, “மச்சான் இருடா…” என அதிரூபன் தடுத்தான்.
சமரன் நிதானமாக, “இதனாலதான் இந்த மொன்னை நாய்க்கு இன்னும் அகிம்சா அந்த விஷயத்தைச் சொல்லல போல…” என்றான் சாதாரணமாக.
“டேய், என்னடா?” எனப் பாய்ந்து வந்தான் அதர்வன்.
சமரன் குறும்புப் புன்னகையோடு, “உனக்கு ஒரு குட்டி வரப்போறான்டா!” என்றான்.
“என்ன?” என அதர்வன் புரியாமல் விழிக்க, அதிரூபன் தலையில் அடித்துக்கொண்டான்.
சமரன் நண்பனின் தோளைத் தொட்டு, “மச்சான், ஆரியன்கிட்ட இருந்து போன் வந்ததுடா. நாங்க ரெண்டு பேரும் உங்க வீட்டுக்குத்தான் போனோம், நீ அங்க இல்ல. அங்க வச்சு இதைப் பேசினா சரியா இருக்காதுன்னு அஜய்க்குப் போட்டேன். அவன்தான் நீ இங்க இருக்கிறதா சொன்னான்.”
“என்னடா விஷயம்? இவன் ஏதோ குட்டி கீட்டின்னு உளறிட்டு இருக்கான்… என்ன விஷயம்? அகிம்சாவை வேற யாரும்…?” என்று பதற்றத்துடன் அதர்வன் கேட்டு வைக்க, சமரன் அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தான்.
அதிரூபன் குரலைத் தாழ்த்தி, “மானத்தை வாங்காதடா மச்சான்! நீ அப்பாவாகப் போறடா… அவ மாசமா இருக்கா!” என்றான்.
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அதர்வன் நின்ற இடத்திலேயே சிலையாக உறைந்துபோனான்!
சமரன் தலையைக் கோதியபடியே, “அகிம்சா இதைப் பிரியாகிட்ட சொல்லியிருக்கா… பிரியா ஆரியன்கிட்ட சொல்ல, அவன் எனக்குப் போட்டான். சரி, பிழைத்துப் போகட்டும், பாவம் இவங்களைச் சேர்த்து வைக்கலாம்னுதான் ஓடி வந்தேன்,” என்றான்.
அதர்வன் சட்டெனத் திரும்பி, “எந்த ஆணியும் யாரும் புடுங்க வேண்டாம்… அவங்கவங்க வேலையைப் பார்த்துட்டுப் போங்கடா!” என்று சீற, சமரன் விழுந்து விழுந்து சிரித்தான். “இது உனக்குத் தேவையாடா அதிரூபா? உன் ஃபிரெண்டைப் பார்த்தியா? நான் கிளம்புறேன்டா சாமி… வெட்கக்கேடு, வெட்கக்கேடு!” என்று கிண்டலடித்துவிட்டு அவன் நகரத் தொடங்கினான்.
அதிரூபன் முறைக்க, அதர்வன் தன் நண்பனின் கைகளைப் பற்றிக்கொண்டு, “மச்சான், நான் உன்னைச் சொல்லலடா… அந்த நாயைத்தான் சொன்னேன். அவன் கிடக்கிறான், நீ இருடா…” எனத் தடுத்தான்.
“நீ உன் ஃபிரெண்டோட டைம் ஸ்பெண்ட் பண்ணு… கார்த்திக் மாறன் வந்துட்டே இருக்கான்,” என்று அதிரூபன் சொல்லி முடிப்பதற்குள் அங்கே கார்த்திக்கும் வந்துவிட்டான். உடனே அதிரூபனின் காரில் சமரனும் கார்த்திக்கும் ஏறிப் புறப்பட்டனர். “டேய் இருங்கடா நாய்களா!” என அதிரூபன் கத்துவதற்குள் கார் பறந்துவிட்டது.
அப்போது அஜய் அங்கே ஓடிவந்தான். “மச்சான் விஷயம் தெரியுமா?”
அதிரூபன் அஜயைத் தழுவி, “வாழ்த்துகள் மச்சி! எப்படியோ இவன் அப்பாவாகிட்டான். ஆனா அங்க ஒரு நாய் சுத்துது பாரு… நம்ம கேங்லயே அதுதான் தண்டமா இருக்கு. அதுக்குச் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க வழியைப் பாரு,” என்று கூறிவிட்டு, அஜயின் கையிலிருந்த கார் சாவியைப் பிடுங்கிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
அதர்வன் ஒருவிதப் பரவசச் சிரிப்புடன் உறைந்து நின்றிருக்க, அஜய் அவனிடம், “உனக்கு ஒரு சீக்ரெட் விஷயம் சொல்லட்டுமா? நீயே ஆச்சரியப்படுவ!” என்றான் உற்சாகமாக.
“என்ன விஷயம்?” என அதர்வன் முறைக்க, “நான் மாமாவாகப் போறேன்… நீ அப்பாவாகப் போற!” என்றான் அஜய்.
“தெரியும்டா வெண்ணெய்!” என்றான் அதர்வன்.
“எப்படிடா? இப்பதானே ஆரியன் எனக்குப் போன் பண்ணி சர்ப்ரைஸ் பண்ணச் சொன்னான்… நீ ரொம்ப டல்லா இருக்கியே, கொஞ்சம் எனர்ஜியா இருப்பியேன்னு ஓடிவந்தா உனக்கு எப்படிடா தெரியும்?” என அவனது சட்டையைப் பிடித்தான் அஜய்.
அதர்வன் கண்களில் கண்ணீர் வழியத் தன் நண்பனைப் பார்த்து, “அஜய்… நான் கோத்தகிரி போகணும்டா. இப்போ நான் இருக்கிற நிலமையில என்னால வண்டி ஓட்ட முடியுமான்னு தெரியல… என்னை அங்க கூட்டிட்டுப் போடா, ப்ளீஸ்!” எனக் கெஞ்சினான்.
அஜய் தன் நண்பனை இறுக்கமாக அணைத்து, “வா மச்சான்… நான் டிரைவ் பண்றேன்,” எனத் தோள் கொடுத்தான்.
இருவரும் புயலெனக் கோத்தகிரியை நோக்கிக் கிளம்பினார்கள்.
(தொடரும்…)










💬 Be the first to comment