🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
45. அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 40 a
அதிகாரனின் அகிம்சா
📖 அதிகாரனின் அகிம்சா · Chapter 45 of 46

அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 40 a

  • 1 Oct 2026
  • 159 reads
  • ★ 5.0 (2)
  • 3 min read

Episode 40 (Part 1)

“எப்போ பாரு சண்டை போடுற மூட்ல சுத்திட்டு இருப்ப நீ? இந்த விசயம் எல்லாம் எப்போடா நடந்தது?” என அஜய் காரை ஓட்டியபடி கேட்க… “அதான் உனக்கு இன்னும் கல்யாணமும் ஆகல, காதலும் இல்ல!” என்றான் அதர்வன் தலையைக் கோதியபடி… “அய்யோ, வேணாம்டா சாமி!! எனக்கு arrange marriage போதும்; இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் நமக்கு செட் ஆகாது!” என அஜய் வேகமாகப் பதில் சொன்னான். “வயசாகுது அஜய்!! சீக்கிரம் கல்யாணம் பண்ணுடா! அம்மா கிட்ட வேணும்னா நான் வந்து பேசவா?” அஜய் பெருமூச்சுடன், “அம்மாவை பத்தி உனக்குத்தான் தெரியுமே!! என்ன பண்றதுன்னு தெரியல… மாமா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம்; எனக்கு அழுத்தமா இருக்கு,” என்றான். “இன்னும் மறக்கலையா?” என அதர்வன் கேட்க… அஜய் விரக்தியுடன், “ஒருத்தங்க காணாமல் போனால் பரவாயில்ல… காணாமல் போனது ரெண்டு பொண்ணுங்க. அதே நாளில் சண்முக மாமாவோட மனைவி அம்பிகா அத்தையும் இறந்து கரை ஒதுங்கிருக்காங்க… இப்போ வரை அந்த அதிர்ச்சியில் இருந்து வீட்ல யாருமே மீளல,” என்றான். “உங்க மாமாவோட பொண்ணு பேரு என்ன?” என்று அதர்வன் கேட்க… “தேவதர்ஷினி,” என்றான் அஜய். “உன் தங்கச்சி பேரு?” என்று அதர்வன் கேட்க… “கார்தியாயணி,” என்றவன் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. அதர்வனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “மச்சான், விடுடா… எல்லாம் சரியா போயிடும். அவங்க ரெண்டு பேரும் கண்டிப்பா எங்கேயாவது வாழ்ந்துட்டுதான் இருப்பாங்க, எதுவும் ஆகாது. எனக்கு நம்பிக்கை இருக்கு மச்சான்,” என்றான். “அந்த நம்பிக்கையில்தான் எங்க அம்மா, எப்படியாவது கார்த்திகாவைப் பார்த்திடணும்னு உயிரைக் கையில பிடிச்சிட்டு இருக்காங்க,” எனக் கூறினான். அதன் பின் பயணத்தில் கவனம் செலுத்தினார்கள். “டேய், இப்படியே தாடியோட வருவியா? அசிங்கமா இருக்கடா நீ!” என அஜய் கூற… “அதுக்கென்ன, பொண்ணா பார்க்கப் போறேன் நான்?” என அசால்ட்டாகப் பதில் கொடுத்தான் அதர்வன். “அகிம்சாவைப் பார்க்கப் போகலையா?” எனக் கேட்டான். “போறதில்லை,” என அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டான் அதர்வன். “எப்பா சாமி! ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டைப்பா இருக்கீங்கடா!” என அதற்கும் மேல் அஜய் பேசவே இல்லை… ‘தனது குழந்தையைச் சுமக்கிறாள், ஆனால் தன்னிடம் சொல்ல மாட்டாள்… இதைக் கேட்க எப்படி இருக்கிறது?’ என உள்ளுக்குள் கோபமும் ஆத்திரமும் வந்தது. ‘அவளிடம் என்றுமே வளைந்து கொடுக்கும் தன்மை இருந்ததே இல்லை!’ என்று கோபமும் தோன்றியது. அந்தப் பனிமூட்டத்தில் கொண்டை ஊசி வளைவை வெறித்துப் பார்த்தபடி வந்து சேர்ந்தான் அதர்வன். இதோ, குவார்ட்டர்ஸ் முன்னால் வந்து சேர்ந்தார்கள். “இங்கே எதுக்கு நிறுத்தியிருக்க?” என அதர்வன் கோபத்துடன் கேட்க… “போய் பாரேன்டா!!” என்றான் அஜய் சமாதானம் செய்யும் நோக்கில்… “இதுல தலையிடாத அஜய்! நேரா வண்டியைத் தோட்டத்துக்கு விடு,” என்றான் முகத்தினைத் திருப்பிக்கொண்டு. வேறு என்ன செய்ய முடியும்? வேறு வழியில்லாமல் வண்டியைத் தோட்டத்தை நோக்கி விட்டான். அங்கே இறங்கியதும் அஜய் சுற்றிப் பார்த்தபடி இருக்க, “அஜய், வீட்டைச் சுத்தம் செய்ய ஜான் அண்ணாவை வரச் சொல்லுடா!! இப்படி டர்ன் பண்ணா முதல் வீடு,” என்றான். “இதோ போறேன்,” என அஜய் கைகளை முறுக்கிக்கொண்டு வெளியே சென்றான். அதர்வன் வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைய… தலையைப் பிடித்தபடி சோர்வுடன் வந்து சேர்ந்தாள் அகிம்சா. அவளைப் பார்த்த அடுத்த கணம் அதர்வன் அதே இடத்தில் நின்றுவிட, அகிம்சா எதிரில் இருக்கும் உருவத்தைப் பார்த்ததும் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. அதர்வன் முகத்தில் கடுமையைத் தத்தெடுத்தபடி, “இங்கே என்ன பண்ற? இது என் வீடு!!” என்றான் முறுக்கிக்கொண்டு. அகிம்சா அவனை முறைத்துப் பார்த்தவள், அவனருகில் நெருங்கி, “இது என் அதர்வனோட வீடு! என் புருஷன் வீடு! அதர்வன் எங்கேயோ அங்கேதான் அகிம்சா!” என்றாள் கண்களில் நீர் கோர்க்க…

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →
How did this episode feel?
Rate this episode ★ 5.0 (2)

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!