
அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 20 a
- 1 Oct 2026
- 111 reads
- ★ 5.0 (2)
- 4 min read
Epi – 20 a
மருத்துவமனையிலிருந்து வரவழைக்கப்பட்ட செவிலி, அவளுக்கு அனைத்துப் பணிவிடைகளையும் கண்ணும் கருத்துமாகச் செய்தார். குளிக்க வைப்பது, பல் துலக்கி விடுவது, ஜடை வாரி விடுவது எனச் சகலமும் செய்துவிடுவார். அகிம்சா தன்னை ஃப்ரெஷாக்கிக் கொள்ளும்போது மட்டும் அதர்வன் அவளின் அறையில் இருக்க மாட்டான்; மற்றபடி 24 மணி நேரமும் அதர்வன் அதே அறையில்தான்!
“என்னாச்சு, ஒரு மாதிரி இருக்க? எதுவும் கை வலிக்குதா?” என்று அதர்வன் திடுக்கிட்டுக் கேட்க…
“பிரியாவுக்கு மட்டும் கால் பண்ணிக் கொடுங்க, நான் பேசணும்… ப்ளீஸ்!” என்று கெஞ்சுதலாகக் கேட்டாள்.
“இதோ பண்றேன்…” என அவன் போனை எடுத்து ஆன் செய்திட, வரிசையாகக் கோபியிடமிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
அதர்வன் அகிம்சாவை நிமிர்ந்து பார்க்க, “என்னாச்சு? இங்கே போனை காட்டுங்க… முன்னாடியே பேவரிட்ல அவளோட நம்பர் இருக்குமே?” என அவள் எட்டிப் பார்க்க…
“ப்ச்! எல்லாம் எனக்குத் தெரியும். இரு, கால் பண்றேன்,” எனப் பிரியாவுக்கு அழைக்கும் முன்னால் அந்தச் செய்திகள் அனைத்தையும் டெலிட் செய்தவன் உதட்டில், ஒரு சின்னப் புன்னகை எட்டிப் பார்த்தது.
அகிம்சா அவனை விசித்திரமாகப் பார்த்தவள், பிரியாவிடம் பேச ஆரம்பித்தாள். அதர்வன் எதிரில் அமர்ந்து போனை நோண்டிக் கொண்டிருந்தான். பிரியாவிடம் அவள் பேசுவது காதில் கேட்டது; அவனையும் அறியாமல் கவனம் அவளிடம் சென்றது. அகிம்சாவின் மேல் கவனத்தை ஓட விட்டான்.
அப்பழுக்கற்ற அழகான முகம்; ஆங்காங்கே பூனை முடிகள் முந்திக்கொண்டு எழும்பின. நெருக்கமான, ஒட்டிய புருவங்கள். காதோரத்தில் சுழல் கிருதா போல, ஒரு பச்சிளம் குழந்தைக்கு இருப்பதைப் போல இருந்தது. நெருக்கமான இமைகள். அப்படியே அவளின் இரண்டு கைகளிலும் மெல்லிய முடிகள்… அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கவில்லை, அழகாக இருந்தது அவளுக்கு! அவனது கையைப் பார்த்தான். அவளது தலைமுடி சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும், தேவையான அளவுக்கு இருந்தது.
நெற்றியில் குட்டிப் பொட்டு, மிக மிகக் குட்டியாக இருந்தது. ‘இதை வச்சதுக்கு வைக்காமலே இருந்திருக்கலாம்!’ என அதர்வாவின் உள்மனம் கூறிட… புன்னகையுடன் தனது கைமுட்டியை கொண்டு போனை கட் செய்தவள் அவனைப் பார்க்க…
‘ஹே அதர்வன்… யூ ப்ளடி! அவளை எதுக்கு பார்த்திட்டு இருக்க?’ என அசரீரி ஒலிக்க… ‘எஸ், அவள் ரொம்ப அசிங்கமா இருக்கா… பசங்களைப் போல கையெல்லாம் முடி இருக்கு. சசிரேகா பக்கத்துல இவள் நிக்க முடியுமா என்ன?’ எனச் சட்டை காலரைத் தூக்கிவிட்டான்.
“சார், இந்தப் போனை கொஞ்சம் வாங்கி அப்படி வச்சிடுங்களேன்…” என அகிம்சா கூற… அவளைப் புருவம் சுருக்கிப் பார்த்தவன், எதுவும் பேசாமல் போனை வாங்கிக்கொண்டு சோஃபாவுக்குச் சென்றான்.
அதில் சொற்ப எண்கள் மட்டுமே இருந்தன. பிரியா, பார்த்திபன், ஆரியன், கோபி கிருஷ்ணா, அதன் பிறகு ஆசிரம எண் இருக்க… அவளைக் கோபமாகப் பார்த்தான்.
அகிம்சா அவளது அடிபட்ட கையை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருக்க… ‘எவ்ளோ திமிர் இவளுக்கு? என்னோட நம்பர் இவள்கிட்ட இல்ல… அந்த ஆரியன் நம்பர், இந்த கோபி நம்பர் இருக்கு, ஆனால் என்னோட நம்பர் இல்லையா?’ என அவனுக்குக் கோபமும் சேர்ந்துகொள்ள, அகிம்சாவின் போனிலிருந்து ஒரு ‘தான் ரிங்’ கொடுத்துக்கொண்டான் அவனது எண்ணிற்கு!
“எ… என்ன பண்றீங்க என்னோட போன்ல?”
“ஒண்ணுமில்ல…” என்று ஆஃப் செய்து எதிரில் வைத்தான்.
“நீங்க பிரஸ் ஆபீஸுக்குப் போகலையா?” என அகிம்சா கேட்டு வைக்க…
“எதுக்குக் கேட்கிற?” என எதிர் கேள்வி கேட்டான்.
“நேத்து உங்க அப்பா…”
“எனக்குப் போகத் தெரியும்!” என்று எழுந்தவன், அவனது அறைக்குச் சென்றுவிட்டான். இதோ அடுத்த அரை மணி நேரத்தில் அவளின் முன்னால் வந்தவன், “வா, வெளில போலாம்,” என்றான்.
அகிம்சா திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். ‘இன்னைக்கு மருத்துவமனைக்குக் கூட வரத் தேவையில்லையே… எங்கே அழைத்துச் செல்கிறான்?’ என்னும் கேள்வி எழுந்தது. எங்கே போகிறோம் எனக் கேட்கத் தயக்கப்படும் குணம் அவளிடம் இல்லை; முகத்திற்கு நேராகவே கேட்டாள்.
“எங்கே போறோம்?” என்று…
“சொல்றேன், வா!” என முன்னால் நடந்தான்.
“ப்ச்! எங்கேன்னு சொல்லுங்க சார்?” என அவள் மீண்டும் கேட்க… அதர்வன் காதிலேயே விழாதவாறு நடந்துகொண்டான்.
அவர்கள் இருவரும் சென்றது ஒரு சினிமா தியேட்டருக்கு!
அகிம்சா அந்த இடத்தை அதிசயித்துப் பார்த்தாள். அவளுக்கு சினிமா பார்க்கும் பழக்கம் இல்லை; செய்திகளைப் படிக்கும் பழக்கம் மட்டுமே! ஆசிரமத்தில் கர்த்தரின் போதனைகளைப் படித்து வளர்ந்ததால், இதெல்லாம் அவளுக்குத் தவறான விஷயங்கள்.
“காரை விட்டு இறங்கு!” என்று அதட்டினான்.
“ப்ச்! படமெல்லாம் நான் பார்க்க மாட்டேன்… எனக்குப் பிடிக்காது. நீங்க வேணும்னா போய்ப் பார்த்திட்டு வாங்க, நான் இங்கேயே இருக்கேன்,” என அகிம்சா திட்டவட்டமாகக் கூறிவிட…
“டிக்கெட் ஆல்ரெடி புக் பண்ணிட்டேன், நீ வரணும்! என்னை டென்ஷன் பண்ணாத… ஓவரா சீன் போடாத!” எனத் திட்ட ஆரம்பித்தான்.
அவனைக் கோபமாகப் பார்த்தவள், விடாப்பிடியாகக் காரிலேயே அமர்ந்து கொண்டாள். அதர்வாவுக்குக் கோபம் தலைக்கேறியது.
“இங்கேயே இரு, நான் படம் பார்த்திட்டு வர்ற வரைக்கும்!” என காரை லாக் செய்துவிட்டுச் சென்றான். ஜன்னலில் சாய்ந்துகொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள். அவள் அதர்வாவுக்குச் சளைத்தவள் இல்லை!
இடைவேளை நேரம் வந்தது. கார் கதவைத் திறந்துவிட்டவன், “வா, போலாம்…” என்று கடுப்புடன் காரில் ஏறப் போக…
“படம் முடிஞ்சதா?”
“இல்ல, இன்னும் இருக்கு! நீதான் ரொம்ப ஓவரா பண்றல…” எனப் பற்களைக் கடித்தபடி அவன் கூறிட…
“சரி, போலாம் வாங்க…” எனக் கார்க் கதவைத் திறந்துவிடச் சொன்னாள்.
அவளைப் பற்களைக் கடித்துக்கொண்டு பார்த்தவன், எதுவும் பேசாமல் முன்னால் நடந்தான்.










💬 Be the first to comment