உறவே உயிரே

by Pradhanya kuzhali
143 views

EPISODE-2

இங்கே அன்பு செல்வன் என்னும் அன்பு  கோபத்துடன் அனைத்து பொருளையும் சத்தத்துடன் உடைத்து கொண்டே  அவனது அறைக்கு சென்றான்.

வள்ளி  பதட்டத்துடன் ஐயா தம்பி!.

மகேந்திரன் சாதரணமாக “ நீ விடு வள்ளி போ! எனக்கு சமைக்க ஏற்பாடு பண்ணி வை மா முடிந்தால் ஸ்வீட் செய்!” என சொல்லி விட்டு அவர் அறைக்கு சென்று டிவியை ஆன் செய்தார்.

வள்ளி வேகமாக அன்புவின் அறைக்கு சென்றாள். தம்பி!…

“யாரும் வராதீங்க போங்க!” என மீண்டும் கத்தினான்.

வள்ளி “இந்த பையன் கல்யாணம் பண்ணிக்க இத்தனை பிடிவாதம் பிடிக்கிதே!” என நினைத்து கொண்டு அவர் சென்று விட்டார்.

அன்பு அப்படியே படுக்கையில் விழுந்தான். தன் தந்தை இப்படி ஒரு வேலையை செய்து இருப்பார் என அவன் கனவிலும் நினைக்க வில்லை!. கல்யாணம் செய்து கொண்டால் தான் மொத்த சொத்தும் தனக்கு வரும் என்ற விதியை மாற்றி தனக்கு பிறக்கும் குழந்தையின் பெயரிலும் தன் மனைவியின் பெயரிலும் மாற்றி எழுதி விட்டார்.

திருமணம் என்றால் கூட நடிக்க ஆயிரம் பேர் வருவார்கள் ஆனால் இந்த குழந்தை எல்லாம் எக்ஸ்ட்ரா தலைவலி என கடுப்புடன் இருந்தான்.

மகேந்திரன் அறைக்கு வந்ததும் அவருடைய நண்பர் சுந்தர மூர்த்தி அழைத்தார்.

டெல் மி சுந்தர்!.

உன் பையன் கல்யாணத்துக்கு ஒத்து கொண்டானா! 

மகேந்திரன் கொஞ்சம் கவலையான மன நிலையில் “இங்கே நடந்ததே வேறு! என்று கூறினார்.

என்ன ஆச்சு என சுந்தரன் கேட்க..

அவர் சொன்ன பொய்யான விஷயத்தை பற்றி கூறினார்.

சுந்தரன் திடுக்கிட்டு” என்ன டா மகி சொல்ற? கல்யாணத்துக்கு சம்மதிக்காதவன் எப்படி குழந்தை பெற்று கொள்வான்!. அழகு நாச்சி உயிலில் அப்படி எதுவும் இல்லையே!.”

மகேந்திரன்  சிரித்து கொண்டே இது உனக்கு புரியாது சுந்தர்!.

என்ன டா சொல்ற?

மகேந்திரன் முகத்தை தீவிரமாக வைத்து கொண்டு என் பையனை பற்றி எனக்கு தெரியும். அவன் இந்த சொத்துக்காக என்ன வேணாலும் செய்வான். இப்போ அழகு நாச்சி உயிலின் பேரில் கல்யாணம் மட்டும் செய்து கொண்டால் சொத்து முழுவதும் அவனுக்கு சொந்தமாகி விடும் என கூறினால் அவன் காசு கொடுத்து கூட ஒரு பெண்ணை அழைத்து வந்து நடிக்க வைப்பான்.

சுந்தர மூர்த்தி, இப்போ என்ன நடக்கும்?

மகேந்திரன், இப்போ நிச்சயமாக அவன் ஒரு பெண்ணை கட்டியே ஆக வேணும் சூழல்  இருக்கு உயிலில் சொன்னது போல் ஒரு குழந்தை பெற்று கொள்வான். இது நிச்சயம் நடக்கும்! 

சுந்தர மூர்த்தி ஆச்சரியமாக நீ அன்பு செல்வன்னை நன்றாக புரிந்து வைத்து இருக்க டா!.

மகேந்திரன், எனக்கு இன்னும் பயமா தான் இருக்கு சுந்தர்!.

சுந்தர மூர்த்தி, அந்த ஜோதிடர் சொன்னதை நினைத்து கொண்டு இருக்கியா டா! 

அவர் அமைதியாக இருக்க.. அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காது மகி!..

மகேந்தர் ஒரு பெரு மூச்சை விட்டு இல்ல சுந்தர் இவனோட கல்யாண வாழ்க்கை பிரிவில் தான் முடியும் என்று அன்னிக்கு அந்த ஜோதிடர் சொன்னது தான் என் மனதில் பயமா இருக்கு!.

சுந்தர மூர்த்தி, நீ கவலை படாதே டா அவனுக்கு வர போகும் பொண்ணு அவனை மொத்தமா மாற்றி அமைக்கும் என சொன்னாரே!. அதை மறந்து விட்டாயா!

மகேந்திரன், அது நல்ல மாற்றமா இருந்தால் சரி அதில் வேற எனக்கு  பயமா இருக்கு! 

“நீ பயப்பட வேணாம் எல்லாம் சரி ஆகும் டா!” என இருவரும் பேசி வைத்தனர்.

இங்கே செவ்வந்தி மற்றும் அருண் இருவரும் கோவிலுக்கு சென்று வந்தனர். அவர்கள் வரும் வழியில் ஆர்கானிக் நர்சரிக்கி அடுத்த பஸ் நிறுத்தத்தில் அனைவரும் கூடி பேசி கொண்டே பேருந்தில் ஏறினர்.

செவ்வந்தி, என்ன டா ஒரே கூட்டமா இருக்கு! 

அருண் தலையை கோதி கொண்டே செவ்வந்தி என்னை டா சொல்லாத நான் உனக்கு மாமா சோ மாமாணு கூப்பிடு! 

செவ்வந்தி அவன் காதை பிடித்து திருகி கொண்டே சாருக்கும் எனக்கும் ஒரு வருசம் வித்தியாசம் சோ நீங்க என்னை அண்ணின்னு கூப்பிடனும்!

அருண், என்னடி  லவ் பண்ணி கட்டி கொண்டாயா!  எவன் அவன்?

செவ்வந்தி, டேய் அறிவுருக்கா என்னை கட்டிக்கிட்டால் என்ற வீட்டுகாரர நீ அண்ணான்னு கூப்பிடோனும் அப்போ நீ என்னை அண்ணின்னு கூப்பிடோனும்.

அடி போடி  யாரு வந்தாலும் உன்னை நான்  ஹே செவ்வந்தி! வாடி போடி ! அவளே! இவளே! கழுதை! எல்லாம் சொல்லுவேன்! என அவளின் காதை திருகினான்.

செவ்வந்தி புருவம் நெருக்கி பார்க்க அருண், நம்ம சானார்பாளையத்து பக்கம் மூணு வருச வித்தியாசத்தில் கட்டி இருக்காங் டி அதான் நான் அப்பாரு கிட்ட சொல்லி உன்னை கட்டிக்க போறேன்!.

செவ்வந்தி அவனை காதை பிடித்து இன்னும் திருகினாள்.

ஹே ஹே விடு புள்ளை வலிக்குது! என சொல்லி இருவரும் மீண்டும் நர்சரிக்கு வந்தனர்.

செவ்வந்தி தோட்டகலை படித்து இருக்கிறாள். கூடவே கல்யாணம் மற்றும் வரவேற்பு விழா என பெரிய பெரிய நிகளுவுகளுக்கி பூக்கள் அனுப்பி வைப்பது இந்த ராஜம்மாள் நர்சரியில் இருந்து தான் அனைத்து இடத்துக்கும் சப்ளை ஆகும்!.

பெரிய சாமி அவர்களுக்காக காத்திருந்து விட்டு அப்படியே உறங்கி இருக்க டீ குடித்து விட்டு அங்கு வேலை செய்யும் இரண்டு ஆட்களுக்கும் சேர்த்து எடுத்து வந்தனர்.

செவ்வந்தி, பா தரிசனம் சூப்பர்!. என சொல்லி கொண்டே அவரின் நெற்றியில் திரு நீற்றை வைத்து விட்டாள்.

அந்த நேரம் அருணுக்கு வீட்டில் இருந்து அழைப்பு வந்தது.  மாமா வீட்ல அம்மா கூப்பிடுது வாங்க போலாம்!.

பெரிய சாமி , அப்புறம் வரேன் பொண்ணு தனியா இருக்கும்!.

இல்ல பா நீங்க போங்க இன்னும் கொஞ்ச நேரம் தானே நான் 15 ல வந்து விடுகிறேன். அத்தை கூப்பிடுறாங்க எது முக்கிய விஷயமா இருக்க போகுது!.

பெரிய சாமி சரி என கிளம்பினார்.

அருண், மாமா நீங்க போங்க நான் இவளை கூட்டி வருகிறேன்! என சொல்லி அனுப்பி வைத்தான்.

செவ்வந்தி, அருணு!.

ம்ம்! 

படித்து முடித்து விட்டு இப்படி சும்மா இருக்கியே டா எதுவும் வேலை செய்யலாம் தானே!.

அருண், ஹான் நான் எதுக்கு வேலை செய்யணும் தண்ணி பாயுது டி கரும்பு, மஞ்சள், நெல் எல்லாம் காட்டில் போட்டு இருக்கு போதாதா!. வருமானம் தானா வரும்! அது கூட ஈரோடு பெருந்துறை பக்கம் ரெண்டு அப்பார்ட்மெண்ட் வாடகைக்கு விட்டு இருக்கார்!.

செவ்வந்தி, நீ என்ன பண்ண போற? இது எல்லாம் மாமா செய்யறது!.

அருண், நான் என்ன பண்றேன் உன் கூட சேர்ந்து இந்த நர்சரிய ரன் பண்றேன்!.

செவ்வந்தி, இது தப்பு அருண்!.

அருண், போடி உன்னால் மாமாவுக்கு தான் சிரமம் அத்தனை வேலை இருந்தும் பொண்ணு தனியா இருக்கு இருக்குன்னு தேடி வந்து விடுகிறார். இந்த நர்சரி மெயின்ல இருக்கு இங்கே இருந்து பஸ் ஸ்டென்ட் ஒரு 8 கிலோ மீட்டர் தான் பிளாட் போட்டு விற்று விட்டால் நல்ல இருக்கும் கூடவே இங்கே ஒரு பெரிய ஸ்கூல், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வர போகுது ஆனால் டெவலப் ஆகாமல் மாமாவுக்கு நஸ்டம் கொடுப்பது போல் இந்த நர்சரிய வச்சிட்டு இருக்க!.

செவ்வந்தி இதை கேட்டதும் கோபமாக இது இந்த இடத்தில் தான் நானும் என் அம்மாவும் கடைசியாக டைம் ஸ்பென்ட் பண்ணோம்!. இந்த இடத்தை எங்க அம்மா ஆசை பட்டு வாங்க நினைத்தார்கள் அதான் நான் இதை அப்பா கிட்ட சொல்லி வாங்கினேன். உனக்கு ஒன்னும் தெரியாது. இடத்தை விற்பது சுலபம் ஆனால் கை விட்டு போய்ட்டால் திரும்ப கிடைக்கவே கிடைக்காது. யாருக்காகவும் இந்த நர்சரியை விட்டு தர மாட்டேன்!. என சொல்லி அவள் கோபத்துடன் உள்ளே பதியம் போட கிளம்பி விட்டாள்.

அருண், ஹே செவ்வந்தி! நான் எதோ சும்மா சொன்னேன் டி நீ பெருசா எடுத்துக்க வேணாம்!. என அவன் கெஞ்சி கொண்டே சென்றான்.

அடுத்த நாள் ஆர வாரத்துடன் விடிந்தது. முதலில் நாம் அன்பு வீட்டை பார்த்து விடுவோம்.

நேற்று நடந்த விஷயத்துக்கு துளி கூட முகத்தில் எதையும் காட்டாமல் தன் தந்தைக்கு நிகராக உணவு மேஜைக்கு வந்து அமர்ந்தான்.

மகேந்திரன் அவனை பார்த்து ஆச்சரியம் கொள்ள வில்லை. அவர் புன்னகையுடன் அமர்ந்தார்.

அந்த காலை உணவு எந்த பிரச்னையும் இல்லாமல் சென்றது.

அவன் கைகளை துடைத்து கொண்டு எழுந்து நின்றவன். தன் தந்தையை பார்த்தான்.

ம்ம் சொல்லுங்க அன்பு செல்வன் 

அவன் முகத்தை கடுமையாக வைத்து கொண்டு உங்க பத்து பங்கு கூடவே என்னோட பத்து பங்கு முதலில் மொத்தமா எனக்கு மாற்றி விட்டு விடுங்கள்!.

மகேந்திரன் எழுந்து நின்று அப்போ மீதி எண்பது!.

அன்பு முகத்தை கோபமாக வைத்து கொண்டு சந்தேகமே வேணாம்!  அதுவும் எனக்கு தான்!.

அப்போ பொண்ணு பார்க்கட்டுமா!.

அன்பு, ஏன் எதுக்கு? உங்களை மாதிரியே ஒருத்தி என்னை அதிகாரம் பண்ண பிளான் பண்றீங்க தானே!.

மகேந்திரன் சிரித்து விட்டு சரி நீயே செலக்ட் பண்ணிக்கோ! நல்ல பொண்ணா இருந்தால் சரி!.  முடிந்தால் கல்யாணம் கட்டி கொண்டு வா!.

அன்பு தன் தந்தையை முறைத்து பார்த்து விட்டு வேகமாக அவன் அறைக்கு சென்றான். 

ஒரு சில மணி நேரத்தில் இரண்டு ட்ராலிகள் தள்ளி கொண்டு வரும் சத்தம் கேட்டது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தாளை புரட்டி கொண்டே அமர்ந்து இருந்தார்.

அன்பு தன் ஷூ காலால் வேண்டும் என்றே தட தட சத்தத்துடன் அவர் முன் வந்து நின்றான்.

மகேந்திரன்  அப்பொழுதும் திரும்பி பார்க்காமல் இருக்க

டாடி! என கத்தினான்

என்ன அன்பு கொஞ்சம் மெதுவா மெதுவா! எதுக்கு கத்துற எதுவும் ஸ்பீக்கர் முழுங்கி விட்டாயா! 

டாடி! என்னை கிண்டல் பண்ற வேலை வேணாம்!.

அவர் சிரிப்பை அடக்கி கொண்டு சரி இப்போ என்ன வேணும்!.

அன்பு, நான் கிளம்பறேன்!.

மகேந்திரன்….? 

இப்போ அன்பு சார் நேரா எங்கே போறாரு? வேற எங்கே? நதிகள் கடலில் சங்கமிக்கும் so அன்பு இப்போ சங்க செவ்வந்தி கிட்ட போக போறான்! 

என்ன நடக்குமோ! 

பார்ப்போம்! 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment