உயிரே-2
இங்கே அன்புசெல்வன் என்னும் அன்பு கோபத்துடன் அறையில் இருந்த பொருள்களைச் சத்தத்துடன் உடைத்துக்கொண்டே அவனது அறைக்குச் சென்றான். அவன் சத்தம் கேட்டதும் பதட்டத்துடன் ஓடிவந்த வள்ளி, “ஐயா… தம்பி!” எனக் கத்தினாள்.
ஆனால் மகேந்திரன் அமைதியாக, “நீ விடு வள்ளி, போ! எனக்குச் சமைக்க ஏற்பாடு பண்ணு. முடிஞ்சா கொஞ்சம் ஸ்வீட் செய்!” எனச் சொல்லிவிட்டுத் தனது அறைக்குச் சென்று டி.வி.யைப் போட்டார்.
வள்ளி வேகவேகமாக அன்புவின் அறைக்குச் சென்றாள். “தம்பி!…”
“யாரும் வராதீங்க! போங்க!” என மீண்டும் கத்தினான் அன்பு.
வள்ளி பெருமூச்சுவிட்டபடி, “இந்தப் பையன் கல்யாணம் பண்ணிக்க இத்தனை பிடிவாதம் பிடிக்கிறானே!” என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.
அன்பு படுக்கையில் அப்படியே விழுந்தான். தன் தந்தை இப்படி ஒரு வேலையைச் செய்திருப்பார் என அவன் கனவிலும் நினைக்கவில்லை. கல்யாணம் செய்துகொண்டால்தான் மொத்த சொத்தும் தனக்கு வரும் என்ற விதியை மாற்றி, தனக்குப் பிறக்கும் குழந்தையின் பெயரிலும் தன் மனைவியின் பெயரிலும் மாற்றி எழுதிவிட்டார். கல்யாணம் என்றால் கூடப் பணம் கொடுத்து ஆயிரம் பேரை நடிக்க வைக்கலாம். ஆனால் இந்தக் குழந்தை எல்லாம் எக்ஸ்ட்ரா தலைவலி என்று கடுப்புடன் இருந்தான்.
மகேந்திரன் அறைக்கு வந்ததும், அவருடைய நண்பர் சுந்தரமூர்த்தி அழைத்தார்.
“டெல் மீ சுந்தர்!”
“உன் பையன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டானா?”
மகேந்திரன் கவலையான மனநிலையில், “இங்கே நடந்தது வேறு சுந்தர்!” என்றார்.
“என்ன ஆச்சு?” என சுந்தரன் கேட்க, மகேந்திரன் தான் சொன்ன பொய்யான விஷயத்தைப் பற்றி விளக்கினார்.
சுந்தரன் திடுக்கிட்டு, “என்னடா மகி சொல்ற? கல்யாணத்துக்குச் சம்மதிக்காதவன் எப்படி குழந்தை பெற்றுக்கொள்வான்? அழகு நாச்சி உயிலில் அப்படி எதுவும் இல்லையே?”
மகேந்திரன் சிரித்துக்கொண்டே, “இது உனக்குப் புரியாது சுந்தர்!” என்றார்.
“என்னடா சொல்ற?”
மகேந்திரன் முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு, “என் பையனைப் பற்றி எனக்குத் தெரியும். அவன் இந்தச் சொத்துக்காக என்ன வேணும்னாலும் செய்வான். இப்போ அழகு நாச்சி உயிலின்படி கல்யாணம் மட்டும் செய்து கொண்டால் சொத்து முழுவதும் அவனுக்குச் சொந்தமாகிவிடும் எனக் கூறினால், அவன் காசு கொடுத்துக்கூட ஒரு பெண்ணை அழைத்து வந்து நடிக்க வைப்பான்.”
சுந்தரமூர்த்தி, “இப்போ என்ன நடக்கும்?” என்று கேட்டார்.
மகேந்திரன், “இப்போ நிச்சயமாக அவன் ஒரு பொண்ணைக் கட்டியே ஆகவேண்டிய சூழ்நிலை இருக்கு. உயிலில் சொன்னதுபோல் ஒரு குழந்தை பெற்றுக்கொள்வான். இது நிச்சயம் நடக்கும்!” என்று உறுதியாகக் கூறினார்.
சுந்தரமூர்த்தி ஆச்சரியமாக, “நீ அன்புசெல்வனை நல்லா புரிஞ்சு வச்சிருக்கடா!” என்றார்.
மகேந்திரன், “எனக்கு இன்னும் பயமாதான் இருக்கு சுந்தர்!”
சுந்தரமூர்த்தி, “அந்த ஜோதிடர் சொன்னதை நினைச்சுக்கிட்டிருக்கியாடா?”
மகேந்திரன் அமைதியாக இருக்க, சுந்தரன், “அப்படி எல்லாம் ஒண்ணும் நடக்காது மகி!” என்று ஆறுதல் கூறினார்.
மகேந்திரன் ஒரு பெருமூச்சுவிட்டு, “இல்லை சுந்தர், இவனோட கல்யாண வாழ்க்கை பிரிவில் தான் முடியும்னு அன்னிக்கு அந்த ஜோதிடர் சொன்னதுதான் என் மனசுல பயமா இருக்கு!”
சுந்தரமூர்த்தி, “நீ கவலைப்படாதேடா. அவனுக்கு வரப்போற பொண்ணு அவனை மொத்தமா மாத்தி அமைக்கும்னு சொன்னாரே! அதை மறந்துட்டியா?”
மகேந்திரன், “அது நல்ல மாற்றமா இருந்தால் சரி. அதில் வேற எனக்குப் பயமா இருக்கு!”
“நீ பயப்பட வேண்டாம், எல்லாம் சரியாகும்டா!” என இருவரும் பேசிக்கொண்டனர்.
இங்கே செவ்வந்தி மற்றும் அருண் இருவரும் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தனர். அவர்கள் வரும் வழியில் இருந்த ஆர்கானிக் நர்சரிக்கு அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ஒரே கூட்டமாக இருந்தது.
செவ்வந்தி, “என்னடா ஒரே கூட்டமா இருக்கு!” என்று கேட்டாள்.
அருண் தலையைக் கோதிக்கொண்டே, “செவ்வந்தி, என்னை ‘டா’ன்னு சொல்லாத. நான் உனக்கு மாமா. சோ, ‘மாமா’ன்னு கூப்பிடு!”
செவ்வந்தி அவன் காதைப் பிடித்துத் திருகிக்கொண்டே, “சாருக்கும் எனக்கும் ஒரு வருஷம் வித்தியாசம். சோ, நீங்க என்னை ‘அண்ணி’ன்னு கூப்பிடணும்!” என்றாள்.
அருண், “என்னடி, லவ் பண்ணி கட்டிக்கொண்டாயா? எவன் அவன்?”
செவ்வந்தி, “டேய் அறிவு இருக்கா? என்னைக் கட்டிக்கொண்டால் என்ற வீட்டுக்காரரை நீ ‘அண்ணா’ன்னு கூப்பிடணும். அப்போ நீ என்னை ‘அண்ணி’ன்னு கூப்பிடணும்.”
“அடி போடி! யாரு வந்தாலும் உன்னை நான், ‘ஹே செவ்வந்தி! வாடி போடி! அவளே! இவளே! கழுதை!’ எல்லாம் சொல்லுவேன்!” என அவளின் காதைத் திருகினான்.
செவ்வந்தி புருவத்தைச் சுருக்கிப் பார்க்க, அருண், “நம்ம சானார்பாளையத்து பக்கம் மூணு வருஷ வித்தியாசத்தில் கட்டி இருக்காங்கடி. அதான் நான் அப்பாகிட்டச் சொல்லி உன்னைக் கட்டிக்கப்போறேன்!”
செவ்வந்தி அவன் காதைப் பிடித்து இன்னும் திருகினாள்.
“ஹே ஹே விடு புள்ளை, வலிக்குது!” எனச் சொல்லி இருவரும் மீண்டும் நர்சரிக்கு வந்தனர்.
செவ்வந்தி தோட்டக்கலை படித்திருக்கிறாள். கல்யாணம் மற்றும் வரவேற்பு விழா போன்ற பெரிய நிகழ்ச்சிகளுக்குப் பூக்கள் அனுப்புவது இந்த ராஜம்மாள் நர்சரியில் இருந்துதான்.
பெரிய சாமி அவர்களுக்காகக் காத்திருந்து உறங்கிவிட்டார். டீ குடித்துவிட்டு, அங்கு வேலை செய்யும் இரண்டு ஆட்களுக்கும் சேர்த்து எடுத்து வந்தனர்.
செவ்வந்தி, “பா, தரிசனம் சூப்பர்!” எனச் சொல்லிக்கொண்டே அவரின் நெற்றியில் திருநீற்றை வைத்துவிட்டாள்.
அந்த நேரம் அருணுக்கு வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. “மாமா, வீட்டில் அம்மா கூப்பிடுது. வாங்க போலாம்!”
பெரிய சாமி, “அப்புறம் வரேன். பொண்ணு தனியா இருக்கும்.”
“இல்லை பா, நீங்க போங்க. இன்னும் கொஞ்ச நேரம் தானே. நான் 15 நிமிடத்தில் வந்துவிடுகிறேன். அத்தை கூப்பிடுறாங்க, ஏதோ முக்கிய விஷயமா இருக்கப் போகுது!”
பெரிய சாமி சரி என்று கிளம்பினார்.
அருண், “மாமா, நீங்க போங்க. நான் இவளைக் கூட்டி வருகிறேன்!” எனச் சொல்லி அனுப்பி வைத்தான்.
செவ்வந்தி, “அருணு!…”
“ம்ம்!”
“படித்து முடித்துவிட்டு இப்படிச் சும்மா இருக்கியேடா. எதுவும் வேலை செய்யலாம்ல!”
அருண், “ஹான், நான் எதுக்கு வேலை செய்யணும்? தண்ணி பாயுதுடி. கரும்பு, மஞ்சள், நெல் எல்லாம் காட்டில் போட்டு இருக்கு. போதாதா? வருமானம் தானா வரும். அதுகூட ஈரோடு பெருந்துறை பக்கம் ரெண்டு அபார்ட்மெண்ட் வாடகைக்கு விட்டு இருக்கார்!”
செவ்வந்தி, “நீ என்ன பண்ணப்போற? இது எல்லாம் மாமா செய்யறது!”
அருண், “நான் என்ன பண்றேன்? உன் கூட சேர்ந்து இந்த நர்சரியை ரன் பண்றேன்!”
செவ்வந்தி, “இது தப்பு அருண்!”
அருண், “போடி. உன்னால் மாமாவுக்குத்தான் சிரமம். அத்தனை வேலை இருந்தும் பொண்ணு தனியா இருக்குன்னு தேடி வந்துவிடுகிறார். இந்த நர்சரி மெயினில் இருக்கு. இங்கே இருந்து பஸ் ஸ்டாண்ட் ஒரு 8 கிலோமீட்டர் தான். பிளாட் போட்டு விற்றுவிட்டால் நல்லா இருக்கும். கூடவே இங்கே ஒரு பெரிய ஸ்கூல், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரப்போகுது. ஆனால் டெவலப் ஆகாமல் மாமாவுக்கு நஷ்டம் கொடுப்பதுபோல் இந்த நர்சரியை வச்சிட்டு இருக்க!”
செவ்வந்தி இதைக் கேட்டதும் கோபமாக, “இது இந்த இடத்தில்தான் நானும் என் அம்மாவும் கடைசியாக டைம் ஸ்பெண்ட் பண்ணோம்! இந்த இடத்தை எங்க அம்மா ஆசைப்பட்டு வாங்க நினைச்சாங்க. அதான் நான் இதை அப்பாகிட்டச் சொல்லி வாங்கினேன். உனக்கு ஒண்ணும் தெரியாது. இடத்தை விற்பது சுலபம், ஆனால் கைவிட்டுப் போய்ட்டால் திரும்பக் கிடைக்கவே கிடைக்காது. யாருக்காகவும் இந்த நர்சரியை விட்டுத் தர மாட்டேன்!” எனச் சொல்லி அவள் கோபத்துடன் உள்ளே பதியம் போடக் கிளம்பிவிட்டாள்.
அருண், “ஹே செவ்வந்தி! நான் ஏதோ சும்மா சொன்னேண்டி. நீ பெருசா எடுத்துக்க வேண்டாம்!” என அவன் கெஞ்சிக்கொண்டே சென்றான்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. முதலில் நாம் அன்புவின் வீட்டைப் பார்த்துவிடுவோம்.
நேற்று நடந்த விஷயத்துக்குத் துளிகூட முகத்தில் எதையும் காட்டாமல் தன் தந்தைக்கு நிகராக உணவு மேஜைக்கு வந்து அமர்ந்தான்.
மகேந்திரன் அவனைப் பார்த்து ஆச்சரியம் கொள்ளவில்லை. அவர் புன்னகையுடன் அமர்ந்தார்.
அந்தக் காலை உணவு எந்தப் பிரச்னையும் இல்லாமல் சென்றது.
அவன் கைகளைத் துடைத்துக்கொண்டு எழுந்து நின்றவன், தன் தந்தையைப் பார்த்தான்.
“ம்ம்… சொல்லுங்க அன்புசெல்வன்.”
அவன் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு, “உங்க பத்து பங்கு கூடவே என்னோட பத்து பங்கு முதலில் மொத்தமா எனக்கு மாற்றி விட்டு விடுங்கள்!”
மகேந்திரன் எழுந்து நின்று, “அப்போ மீதி எண்பது?”
அன்பு முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு, “சந்தேகமே வேண்டாம்! அதுவும் எனக்குத்தான்!”
“அப்போ பொண்ணு பார்க்கட்டுமா?”
அன்பு, “ஏன்? எதுக்கு? உங்களைப் போலவே ஒருத்தி என்னை அதிகாரம் பண்ண பிளான் பண்றீங்க தானே?”
மகேந்திரன் சிரித்துவிட்டு, “சரி, நீயே செலக்ட் பண்ணிக்கோ! நல்ல பொண்ணா இருந்தால் சரி. முடிஞ்சா கல்யாணம் கட்டிக்கொண்டு வா!”
அன்பு தன் தந்தையை முறைத்துப்பார்த்துவிட்டு வேகமாக அவன் அறைக்குச் சென்றான்.
ஒரு சில மணி நேரத்தில் இரண்டு ட்ராலிகள் தள்ளிக்கொண்டு வரும் சத்தம் கேட்டது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளைப் புரட்டிக்கொண்டே அமர்ந்திருந்தார் மகேந்திரன்.
அன்பு தன் ஷூ காலால் வேண்டும் என்றே தடதட சத்தத்துடன் அவர் முன் வந்து நின்றான்.
மகேந்திரன் அப்பொழுதும் திரும்பிப் பார்க்காமல் இருக்க, “டாடி!” எனக் கத்தினான்.
“என்ன அன்பு? கொஞ்சம் மெதுவா! எதுக்குக் கத்துற? எதுவும் ஸ்பீக்கரை விழுங்கிவிட்டாயா?”
“டாடி! என்னை கிண்டல் பண்ற வேலை வேண்டாம்!”
அவர் சிரிப்பை அடக்கிக்கொண்டு, “சரி, இப்போ என்ன வேணும்?”
அன்பு, “நான் கிளம்பறேன்!”
“மகேந்திரன்….?”
இப்போது அன்பு சார் நேராக எங்கே போறாரு? வேறு எங்கே? நதிகள் கடலில் சங்கமிக்கும். சோ, அன்பு இப்போது செவ்வந்திகிட்ட போகப்போறான்!
என்ன நடக்குமோ?
பார்ப்போம்!
do like and share pradhanyakuzhalinovels