உறவே உயிரே

by Pradhanya kuzhali
142 views

Episode-1

அனைவரும் ஒரு வித எதிர் பார்ப்புடனும் ஒரு சிலர் சலசலப்புடனும்  அமர்ந்து இருக்க அங்கு இருக்கும் சில குழுக்கள் இந்திரன் கன்ஸ்ட்ரக்சன் லிஸ்ட்ல இருக்குதா பா!..

இதோ அவர் பையன் வந்திருக்கிறார்! என ஒரு பக்கம் சொல்ல ஹே மகேந்திரன் சார் கூட வந்திருக்கார். மற்ற கம்பனி முதலாளிகள் அப்போ இது நமக்கு கிடைக்க வாய்ப்பு இல்ல!. என அவர்கள் எழுந்தனர். 

மகேந்திரன் தொழில் போட்டியாளர்கள் . ஒரு நிமிடம் வெயிட் பண்ணுங்க மகேந்திரன் பையனை பாருங்க! என சொல்லவும் மீண்டும் சலசலப்பு ஏற்பட இரு பக்கம் ஆயிரம் வெற்றி கண்டு இத்தனை ஆண்டுகள் தொழில் சாம்ராஜ்யத்தில் தனக்கு ஒரு நிலையான இடத்தை பெற்ற மகேந்திரன் முகத்தில் எந்த கர்வமும் இல்லாமல் சாந்த முகத்துடன் அடுத்து என்ன நடக்க போகிறது என பார்த்து கொண்டு இருந்தார்.

ஆனால் அப்படியே அதற்கு மற்றொரு பக்கத்தில் கால் மேல் கால் போட்டு கம்பீர கூடவே கர்வம் கொஞ்சம் சேர்ந்து கொண்டு அவன் கைகளை ஒரு உதறி தனது ரோலக்ஸ் வாட்சில் மணி பார்த்தான். அவனுடைய கண்ணகுளி எப்பொழுதும் புன்னகையை உதிர்க்காது. ஆனால் இன்று முகம் எல்லாம் புன்னகையை வைத்து கொண்டு இருந்தான். மகேந்திரன் இளவட்டத்தில் இருந்த அதே துடிப்பு வேகம் அழகு என அத்தனையும் கூடவே

மகேந்திரன் அவனை ஒரு பார்வை பார்க்க அவனோ தெனா வெட்டாக தன் தந்தையை பார்த்தான். அவரோ எந்த வெளிப்பாடும் தன் மகனை பார்த்தார்.

மகேந்திரன் தொழில் நண்பர் சண்முகம், மகி!.இங்கே என்ன நடக்குது! உன் பையன் உனக்கு எதிரில் அமர்ந்து இருக்கான்!..

மகேந்திரன் எதுவும் பேசாமல் அமைதியாக ஒரு பார்வையை பார்த்தார். சண்முகம், உனக்கு தொழில் எதிரி உன் பையனா!.

விடு சண்முகம்! நான் முதுநறை அதனால் மொத்த பொறுப்பையும் மிஸ்டர் அன்பு செல்வன் கிட்ட கொடுக்க வேணுமாம்!.

அதற்குள் கொட்டேசன்  மற்றும் அனைத்து கோடிங் மதிப்பு என அந்த மொத்த வாசிப்பு முடிந்து டெண்டர் யாருக்கு என அறிவிக்கும் நேரம் வந்தது.

அன்பு தன் தந்தையை பார்த்து புன்னகைத்தான். மகேந்திரன் அதை பொருட் படுத்த வில்லை. அங்கே டெண்டர் அறிவிக்கப்பட்டது. அங்கு உள்ள அனைவரும் ஆச்சரியத்துடன் மற்றும் பிரமிப்புடன் பார்த்தனர்.

அங்கே முன்னால் இந்த வணிக வளாக மால் மொத்த டெண்டர் மதிப்பை எங்கள் அனைத்து விதிகளுக்குள் உட்பட்டு சரியான விகிதத்தில் கொட்டெசன் தயார் செய்து இந்த டெண்டரை அழகு நாச்சி கன்ஸ்ட்ரக்சன் பிடித்துள்ளது.

அனைவரும் அமைதியாக பார்க்க அன்பு தன் கூலர்ஸை ஸ்டைலாக கலட்டி கண்ணகுளி புன்னகையை உதிர்த்து விட்டு எழுந்து நின்று தன் தந்தையை பார்த்தான்.

மகேந்திரன் எதுவும் பேசாமல் திரும்பி நடந்தார். அன்பு தேக்ஸ் மாம் யூ ஆர் மை லக்கி ஸ்டார் என விண்ணுலகத்தில் இருக்கும் தன் தாய் அழகு நாச்சியை நினைத்து வானத்தை பார்த்தான்.

அன்பு நேராக சென்று கையை குலுக்கி சந்தோச மனநிலையில் உறுதி செய்து விட்டு அதன் பின் அவனுடைய காருக்கு சென்றான். 

“சைனைட் சைனைட் விழியால்  மயக்கும் பொயரிக் மொழியால் இனிக்க இனிக்க கொள்ளும் கொலையாளி!” என்ற பாடலுக்கு வைப் செய்து கொண்டே அவன் சிகையை கோதி கொண்டு நேராக வீட்டுக்கு சென்றான்.

டாடி! டாடி! ஐம் வின்! தி கிரேட் மகேந்திரன் கன்ஸ்ட்ரக்சன என்னோட ஒரு வருட எக்ஸ்பீரியன்ஸ்ல வின் பண்ணிட்டேன். என அன்பு தன் தந்தையின் முன் இனிப்புகளை நீட்டினான்.

மகேந்திரன் அதை புன்னகையுடன் எடுத்து கொண்டு ம்ம் வாழ்த்துக்கள்! என்னை தோற்கடிக்க பிறந்து இருக்க எனக்கு சந்தோசம் தான்! ஆனால்!.

அன்பு , புருவம் நெருக்கி இப்போ இப்போ என்ன சொல்ல வரீங்க!.

ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு கூடவே நீ அவசரக்காரன் அதனால் நீ!.

என்னை டீமோடிவெட் பண்ணாதீங்க அண்ட் என்னால் முடியும்! நீங்க  என் கூட சமாதானமாக போயிருந்தால் நான் எதுக்கு தேவையில்லாமல் மம்மி பேரில் ஸ்டார்ட் பண்ண போறேன்! உங்களுக்கு வயசு ஆகி விட்டது. சொல்றத கேளுங்க!.

மகேந்திரன் அவனிடம் நிதானம் பிரதானம்! , மிஸ்டர் அன்பு செல்வன் உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்ல  “இந்த கன்ஸ்ட்றக்சன உருவாக்கியது நான் இல்ல உன் அம்மா! அதனால் தான் அதுக்கு என் பேர் வச்சு இருக்கா! எதோ போதாத காலம் என் மனைவியை நான் இழந்து தவிக்கிறேன். இந்த கம்பனி தான் எனக்கு எல்லாம் அங்கே  எல்லா இடத்திலும் என் அழகு நாச்சி என் கூடவே இருப்பது போல் எனக்கு தோன்றும் அதனால் தான் இதை உனக்கு கொடுக்க தயங்கினேன். ஆனால் இப்போ ஒரு முடிவு எடுத்து இருக்கேன்.

என்ன டாட்?

மகேந்திரன் ஒரு பெரு மூச்சை விட்டு உன்னோட திறமையை பயன் படுத்தி இதை வெற்றி கரமாக முடித்து வா!என்னோட மொத்த சாம்ராஜ்யத்தை நீயே எடுத்துக்க..

அன்பு, எனக்கு இந்திரன் கன்ஸ்ட்ரக்சன் மட்டும் தான் வேணும்!

ம்ம் எடுத்துக்க!..

அப்போ பார்க்கலாம்…

மகேந்திரன், ஒரு நிமிடம்!.

அன்பு, சொல்லுங்க டாட்!.

அதுக்கு முன்னாடி உன் அம்மா எழுதி கொடுத்த உயில் பார்த்து விட்டு போ என நீட்டினார்.

அதை பார்த்த அன்புவின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது. ஆனாலும் எந்த வெளிப்பாடும் இல்லாமல் முகத்தை வைத்து இருந்தான்.

மகேந்திரன், நீ யார் என எனக்கு தெரியும் டா நான் உனக்கு அப்பன்.

தெரியுது தானே! அப்புறம் என்ன?

அன்பு மிடுக்குடன் இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்.

அவர் புன்னகையுடன் நீ கல்யாணத்தில் இருந்து தப்பிக்க ஒன்றுமே தெரியாதது போல் என்னிடம் பந்தயம் கட்டி இந்த இந்திரன் குரூப் ஆஃப் கம்பெனியை பிளான் பண்ணி வாங்க தானே இந்த புராஜக்ட் டிராமா!.,

அன்பு கடுப்புடன் ஆமா! எனக்கு இந்த கல்யாணம் பிளா பிளா எதிலும் இன்டரஸ்ட் இல்ல எனக்கு நிறைய பிஸ்னஸ்ல சக்சஸ் பண்ணனும். என்னோட தனிப்பட்ட லைஃப இஷ்டம் உள்ள பொண்ணு கிட்ட ஜஸ்ட் ஒன் நைட் ஸ்டேண்ட்ல தீர்த்துக்க வேணும் தட்ஸ் ஆல்!.

எப்பொழுதும் கோபமே படாத மகேந்திரன் இன்று கோபத்துடன் நீ என் மகனா டா! என்ன நினைத்து கொண்டு இருக்க ராஸ்கல்!.

அன்பு, எனக்கு இந்த ஃபீலிங் எல்லாம் சுத்தமா பிடிக்காது. ஐம் அ இந்தியன் சிட்டிசன்.. தி கிரேட் இந்திரன் அண் குரூப்க்கு ஒரே வாரிசு இந்த கம்பெனியை இந்தியா முழுவதும் பெரிய லெவல்ல கொண்டு போவது தான் என் ட்ரீம்!.

மகேந்திரன் எதையும் வெளிப்படுத்தாமல் ஆளுமையுடன் எதிரில் அமர்ந்தார்.

அன்பு, எல்லாம் தெரிந்து விட்டது தானே அப்புறம் என்ன அந்த பவர் ஆஃப் அட்டர்னியை சேன்ஜ் பண்ணி விட்டு என் கிட்ட கொடுங்க!. நான் என்னோட ஹெட் ஆபீஸ் லொக்கேஷன் டெல்லில செட் பண்ண பிளான் பண்ணி இருக்கேன்.

மகேந்திரன் அவனை உறுத்து பார்த்து உனக்கு வெறும் பத்து சதவீத பங்கு மட்டும் தான் என்னால் கொடுக்க முடியும். மீதி என்பது சதவீத பங்கு உன்னோட வாரிசுக்கு.. அதனால் உன்னோட பத்து சதவீதம் இதோ என் பத்திரம் நீட்டினார்.

அன்பு தன் தந்தையை வெறுப்புடன் பார்த்து டாட்! யூ என கத்தி கொண்டே அந்த பாத்திரத்தை வாங்கி பார்க்க

மகேந்திரன்  சிரித்து விட்டு என்னோட பத்து சதவீத பங்கு கூட உனக்கு தான் இந்தா, இப்போ உன் கிட்ட 20 பங்குகள் இருக்கு என கண் கண்ணாடியை மூக்குக்கு தள்ளினார்.

அன்பு கோபத்துடன் அங்கும் இங்கும் நடந்தான்.

மகேந்திரன், வள்ளி என உரக்க அழைக்க!.

ஐயா! என அந்த வீட்டின் பணிப்பெண் ஓடி வந்தாள்.

உங்க ஐயாவுக்கு  ஒரு லெமன் டீ ஓ சாரி ஸாரி  ரொம்ப சூடா இருக்காரு  இப்போ டீ சரி வராது அதனால் லெமன் ஜுஸ் கொடு!.

அன்பு வேகமாக அருகில் உள்ள பூச்சாடியை வரிசையாக உடைத்து விட்டு நேராக அவன் அறைக்கு சென்றான்.


அதே நேரம் இங்கே என்ன அருனு பார்த்து தூக்க மாட்டியா என பெரிய சாமி தன் தங்கை மகனை மிரட்டி கொண்டு இருக்க..

அப்பா எதுக்கு அருணை  திட்டுறீங்க என சொல்லி கொண்டே வழியும் வியர்வையை துடைத்து கொண்டே அந்த உடைந்து விழுந்த பூச்சாடி அருகில் வந்து அமர்ந்து அதை எடுக்க..

செவ்வந்தி விடு மா இன்னொரு பூ தொட்டியில் நட்டு வைக்கலாம்!. என பெரிய சாமி கூறிட…

ப்பா இருங்க கொஞ்சம் வேலை செய்தால் இது இன்னும் அழகா இருக்கும் உடைந்து போன சுவடு கூட தெரியாது என தூக்க..

அருண், செவ்வந்தி விடு டி!.

செவ்வந்தி, அருணு ஒரு கை பிடி என சொல்ல..

மாமா இவள் அடங்க மாட்டாள், கையில்!.

அருண் வாடா என இருவரும் அதை அழகாக செடியை நட்டு விட்டு அந்த ஜாடியை அழகாக தொகுத்து தண்ணி போக வரப்பு வெட்டி விட்டது போல் பதித்து வைத்தாள்.

பெரிய சாமி, கண்ணு நல்லா இருக்கே!.

அருண், இது அழகா மாற நான் தான் காரணம்!.

செவ்வந்தி அவனை முறைக்க அருண் புன்னகைத்து கொண்டு “சரி விடு கை கழுவி வா நம்ம போலாம்.

நான் வரல!.

அருண், மாமா பாருங்க இன்னிக்கு என் கூட கொடுமுடி வரேன்னு சொன்னா இப்போ ஏமாற்றி கொண்டு இருக்கா!.

செவ்வந்தி, அப்பா நர்சரியை யாரு பார்த்துப்பா? நிறைய வேலை இருக்கு! இப்போ கஸ்டமர் வர போறாங்க நாலு மணி பிளான்ட் கூடவே வெற்றிலை, காட்டு சிகை, கமுகு, பாக்கு, துத்தி, எல்லாம் ஆடர் கொடுத்திட்டு போயிருக்காங்க!.

அருண் சலித்து கொண்டு நாலு ஏக்கர்ல நாலு செடி போட்டு கிட்டு நீ பண்ற அலப்பறை இருக்கே தாங்கல

செவ்வந்தி கோபம் கொண்டு ப்பா உன் தங்கை மகன் கிட்ட சொல்லி வைங் வாய் நீலூது நான் போக மாட்டேன்!.

அருண், மாமா!.

பெரிய சாமி, கண்ணு போடா குட்டி நான் பார்த்து கொள்கிறேன் என சொல்லி விட.. அருண் செவ்வந்தியின் கையை பிடித்து கொண்டு இழுத்து சென்றான்.

செவ்வந்தி, அருண் அருணு விடு வரேன் என சொல்லி கொண்டே அவனுடன் கொடுமுடி மகுடீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கு அழைத்து சென்றான். 

யாருங்க இவள்? சங்க செவ்வந்தி பாரின் கேர்ள் இல்லங்க.. ஆனால் பாரம்பரியமான பொண்ணு! எப்டி செவ்வந்தி அன்பு வாழ்க்கைக்குள் போறா? 

இங்கே அன்பு என்ன செய்கிறான்…?

செவ்வந்தி –  அன்பு அறிமுகம் எப்படி இருக்கும்?

பார்ப்போம்!. 

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment