உயிரே-1
எல்லாரும் ஒருவித எதிர்பார்ப்போடவும், ஒரு சிலர் சலசலப்போடவும் உட்கார்ந்திருந்தாங்க. அங்கிருந்த சில குழுக்கள், “இந்திரன் கன்ஸ்ட்ரக்ஷன் லிஸ்ட்ல இருக்கா பாருப்பா!”ன்னு முணுமுணுத்தாங்க.
“அதோ, அவர் பையன் வந்திருக்கார்!”ன்னு ஒரு பக்கம் சத்தம் கேட்க, “ஹே! மகேந்திரன் சார் கூட வந்திருக்கார்!”ன்னு இன்னொரு பக்கம் சத்தம். இதைக்கேட்ட மத்த கம்பெனி முதலாளிகள், “அப்போ இது நமக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை!”ன்னு அவங்க இடத்தை விட்டு எழுந்தாங்க.
மகேந்திரனின் தொழில் போட்டியாளர்கள், “ஒரு நிமிஷம் நில்லுங்க! மகேந்திரன் பையனைப் பாருங்க!”ன்னு சொன்னதும், மீண்டும் சலசலப்பு அதிகமாச்சு. ரெண்டு பக்கம் ஆயிரக்கணக்கான வெற்றிகளைக் கண்டு, இத்தனை வருஷத்துல தனக்குன்னு ஒரு நிலையான இடத்தைப் பிடிச்ச மகேந்திரனோட முகத்துல எந்தக் கர்வமும் இல்லை. சாந்தமா, அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு பார்த்துக்கிட்டிருந்தார்.
ஆனா, அதுக்கு நேர் எதிர்ல, கால் மேல கால் போட்டு கம்பீரமா, கூடவே கொஞ்சம் கர்வமும் கலந்து, கைகளை உதறி தன்னோட ரோலக்ஸ் வாட்ச்ல மணியைப் பார்த்தான் அன்புச்செல்வன். அவன் உதடுகள் வழக்கமா சிரிக்காது. ஆனா, அன்னைக்கு முகம் முழுக்க சிரிப்பு. மகேந்திரனோட இளமைக்கால துடிப்பு, வேகம், அழகுன்னு அத்தனையும் அவன்கிட்ட இருந்துச்சு.
மகேந்திரன் அவனை ஒரு பார்வை பார்க்க, அவன் தெனாவட்டா தன் அப்பாவைப் பார்த்தான். மகேந்திரனோ, எந்த உணர்ச்சியையும் காட்டாம மகனைப் பார்த்தார்.
மகேந்திரனோட நண்பர் சண்முகம், “மகி! இங்க என்ன நடக்குது? உன் பையன் உனக்கு எதிர்த்தாப்புல உட்கார்ந்திருக்கான்!”னு கேட்டார்.
மகேந்திரன் எதுவும் பேசாம அமைதியா ஒரு பார்வை பார்த்தார்.
சண்முகம், “உனக்குத் தொழில் எதிரியே உன் பையன்தான்!”னு சொன்னார்.
மகேந்திரன் பெருமூச்சுவிட்டு, “விடு சண்முகம்! எனக்கு வயசாயிருச்சு. அதனால எல்லாப் பொறுப்பையும் மிஸ்டர் அன்புசெல்வன் கிட்ட கொடுக்கணுமாம்!”ன்னு சொன்னார்.
அதுக்குள்ள, கொட்டேஷன் மற்றும் எல்லா மதிப்பும் வாசிச்சு முடிக்கப்பட்டு, டெண்டர் யாருக்குன்னு அறிவிக்கும் நேரம் வந்தது.
அன்பு, தன் அப்பாவைப் பார்த்துப் புன்னகைச்சான். மகேந்திரன் அதைப் பெருசா எடுத்துக்கலை. அங்க டெண்டர் அறிவிக்கப்பட்டது. அங்கிருந்த எல்லாரும் ஆச்சரியத்தோடவும் பிரமிப்போடவும் பார்த்தாங்க.
“இந்த வணிக வளாக மாலுக்கான மொத்த டெண்டர் மதிப்பையும், எங்க விதிகளுக்கு உட்பட்டு, சரியான விகிதத்துல கொட்டேஷன் தயார் செஞ்சு, இந்த டெண்டரை அழகுநாச்சி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிடிச்சிருக்கு!”ன்னு அறிவிச்சாங்க.
எல்லாரும் அமைதியா பார்க்க, அன்பு தன் கூலர்ஸை ஸ்டைலா கழட்டி, ஒரு உதடு ஒட்டிய புன்னகையோட எழுந்து நின்னு தன் அப்பாவைப் பார்த்தான்.
மகேந்திரன் எதுவும் பேசாம திரும்பி நடந்தார். அன்பு, “தேங்க்ஸ் மா! யூ ஆர் மை லக்கி ஸ்டார்!”ன்னு விண்ணுலகத்துல இருக்கிற தன் அம்மா அழகுநாச்சியை நினைச்சு வானத்தைப் பார்த்தான்.
அன்பு நேரா போய் கைகளைக் குலுக்கி, சந்தோஷமான மனசுல உறுதி செஞ்சுட்டு, தன்னோட காருக்குப் போனான்.
“சைனைட் சைனைட் விழியால் மயக்கும் பொயரிக் மொழியால் இனிக்க இனிக்க கொள்ளும் கொலையாளி!”ன்ற பாட்டுக்கு வைப் செஞ்சுக்கிட்டே, தன் முடியை ஒதுக்கி விட்டுட்டு நேரா வீட்டுக்குப் போனான்.
“டாடி! டாடி! ஐ அம் வின்! கிரேட் மகேந்திரன் கன்ஸ்ட்ரக்ஷனை என்னோட ஒரு வருஷ அனுபவத்துல வின் பண்ணிட்டேன்!”ன்னு அன்பு தன் அப்பாவோட முன்னாடி இனிப்புகளை நீட்டினான்.
மகேந்திரன் அதைச் சிரிச்ச முகத்தோட எடுத்துக்கிட்டு, “ம்ம்.. வாழ்த்துகள்! என்னைத் தோற்கடிக்கப் பிறந்திருக்க, எனக்குச் சந்தோஷம் தான். ஆனா…!”ன்னு இழுத்தார்.
அன்பு புருவத்தைச் சுருக்கி, “இப்போ… இப்போ என்ன சொல்ல வரீங்க?”ன்னு கேட்டான்.
“ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. கூடவே நீ அவசரக்காரன். அதனால நீ…”ன்னு மகேந்திரன் ஆரம்பிச்சார்.
“என்னை டீமோட்டிவேட் பண்ணாதீங்க! என்னால முடியும்! நீங்க என் கூட சமாதானமாப் போயிருந்தா, நான் எதுக்குத் தேவையில்லாம மம்மி பேர்ல ஸ்டார்ட் பண்ணப் போறேன்? உங்களுக்கு வயசாயிருச்சு. சொல்றதைக் கேளுங்க!”ன்னு கோபமாப் பேசினான் அன்பு.
மகேந்திரன் நிதானமா, “நிதானம் பிரதானம் மிஸ்டர் அன்புசெல்வன்! உனக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த கன்ஸ்ட்ரக்ஷனை உருவாக்கினது நான் இல்லை, உன் அம்மா. அதனாலதான் அதுக்கு அவ பேர் வச்சிருக்கா. ஏதோ போதாத காலம், என் மனைவியை நான் இழந்து தவிக்கிறேன். இந்த கம்பெனி தான் எனக்கு எல்லாம். இங்க எல்லா இடத்துலயும் என் அழகுநாச்சி என் கூடவே இருக்கிற மாதிரி எனக்குத் தோணும். அதனாலதான் இதை உனக்குக் கொடுக்கத் தயங்கினேன். ஆனா, இப்போ ஒரு முடிவு எடுத்துட்டேன்.”
“என்ன டாட்?”ன்னு கேட்டான் அன்பு.
மகேந்திரன் ஒரு பெருமூச்சு விட்டு, “உன்னோட திறமையைப் பயன்படுத்தி இதை வெற்றிகரமா முடிச்சுட்டு வா. என்னோட மொத்த சாம்ராஜ்யத்தையும் நீயே எடுத்துக்கோ!”ன்னு சொன்னார்.
“எனக்கு இந்திரன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மட்டும் தான் வேணும்!”னு அன்பு சொன்னான்.
“ம்ம்… எடுத்துக்கோ!”
“அப்போ பார்க்கலாம்…”
“மறுபடியும்… ஒரு நிமிஷம்!”ன்னு மகேந்திரன் சொன்னார்.
“சொல்லுங்க டாட்!”
“அதுக்கு முன்னாடி உன் அம்மா எழுதி கொடுத்த உயிலைப் பார்த்துட்டுப் போ!”ன்னு உயிலைக் கொடுத்தார்.
அதைப் பார்த்த அன்பின் முகம் கொஞ்சம் கொஞ்சமா மாறத் தொடங்குச்சு. ஆனாலும் எந்த உணர்ச்சியையும் காட்டிக்காம முகத்தை வச்சிருந்தான்.
மகேந்திரன், “நீ யாருன்னு எனக்குத் தெரியும் டா. நான் உனக்கு அப்பன்.”
“தெரியுதுல்ல? அப்புறம் என்ன?”ன்னு மிடுக்கோட கேட்டான் அன்பு. “இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்!”
மகேந்திரன் சிரிச்சார். “நீ கல்யாணத்துல இருந்து தப்பிக்க, ஒண்ணுமே தெரியாத மாதிரி என்கிட்ட பந்தயம் கட்டி, இந்த இந்திரன் குரூப் ஆஃப் கம்பெனியைப் பிளான் பண்ணி வாங்கத்தானே இந்த ப்ராஜெக்ட் டிராமா?”
அன்பு கடுப்பாகி, “ஆமா! எனக்கு இந்தக் கல்யாணம், பிளா பிளா… இதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லை. எனக்கு நிறைய பிசினஸ்ல சக்சஸ் பண்ணணும். என்னோட தனிப்பட்ட வாழ்க்கையை, இஷ்டம் உள்ள பொண்ணு கிட்ட ஜஸ்ட் ஒன் நைட் ஸ்டாண்ட்ல தீர்த்துக்க வேணும். தட்ஸ் ஆல்!”ன்னு சொன்னான்.
வழக்கமா கோபமே படாத மகேந்திரன் அன்னைக்குக் கோபத்தோட, “நீ என் மகனா டா? என்னடா நினைச்சுக்கிட்டிருக்க ராஸ்கல்?”ன்னு கத்தினார்.
அன்பு, “எனக்கு இந்த ஃபீலிங் எல்லாம் சுத்தமாப் பிடிக்காது. ஐ அம் அன் இந்தியன் சிட்டிசன். தி கிரேட் இந்திரன் குரூப்புக்கு ஒரே வாரிசு நான். இந்தக் கம்பெனியை இந்தியா முழுக்கப் பெரிய லெவல்ல கொண்டு போறதுதான் என் கனவு!”ன்னு சொன்னான்.
மகேந்திரன் எதையும் வெளிக்காட்டாம, ஆளுமையோட எதிரில் உட்கார்ந்தார்.
“எல்லாம் தெரிஞ்சு போச்சுல்ல? அப்புறம் என்ன, அந்த பவர் ஆஃப் அட்டர்னியை மாத்திட்டு என்கிட்ட கொடுங்க. நான் என்னோட ஹெட் ஆஃபீஸ் லொகேஷனை டெல்லியில செட் பண்ண பிளான் பண்ணியிருக்கேன்!”ன்னு அன்பு கேட்டான்.
மகேந்திரன் அவனை உற்றுப் பார்த்து, “உனக்கு வெறும் பத்து சதவீதப் பங்கு மட்டும்தான் என்னால கொடுக்க முடியும். மீதி எண்பது சதவீதப் பங்கு உன்னோட வாரிசுக்கு. அதனால உன்னோட பத்து சதவீதம் இதோ!”ன்னு பத்திரத்தை நீட்டினார்.
அன்பு தன் அப்பாவை வெறுப்போடப் பார்த்து, “டாட்! யூ…!”ன்னு கத்திக்கிட்டே அந்தப் பத்திரத்தை வாங்கிப் பார்த்தான்.
மகேந்திரன் சிரிச்சிட்டு, “என்னோட பத்து சதவீதப் பங்கு கூட உனக்குத்தான். இந்தா! இப்போ உன் கிட்ட இருபது பங்கு இருக்கு!”ன்னு கண்ணாடியை மூக்குக்குத் தள்ளிவிட்டார்.
அன்பு கோபத்தோட அங்கும் இங்கும் நடந்தான்.
மகேந்திரன், “வள்ளி!”ன்னு சத்தமா கூப்பிட்டார்.
“ஐயா!”ன்னு அந்த வீட்டுப் பணிப்பெண் ஓடி வந்தாள்.
“உங்க ஐயாவுக்கு ஒரு லெமன் டீ… ஓ சாரி சாரி, ரொம்ப சூடா இருக்காரு. இப்போ டீ சரி வராது. அதனால லெமன் ஜூஸ் கொடு!”
அன்பு வேகமா அருகில இருந்த பூந்தொட்டிகளை வரிசையா உடைச்சுட்டு, நேரா தன் அறைக்குச் சென்றான்.
அதே நேரம், இங்க, “என்னன்னு பார்த்து தூக்க மாட்டியா?”ன்னு பெரிய சாமி தன் தங்கச்சிப் பையன் அருணை மிரட்டிக்கிட்டிருந்தார்.
“அப்பா, எதுக்கு அருணத் திட்டுறீங்க?”ன்னு சொல்லிக்கிட்டே, வழியிற வியர்வையைத் துடைச்சுட்டு, அந்த உடைஞ்சு கிடந்த பூந்தொட்டி பக்கத்துல வந்து உட்கார்ந்து அதை எடுக்க ஆரம்பிச்சா செவ்வந்தி.
“செவ்வந்தி, விடுமா! இன்னொரு பூந்தொட்டியில நட்டு வைக்கலாம்!”ன்னு பெரிய சாமி சொன்னார்.
“அப்பா இருங்க. கொஞ்சம் வேலை செஞ்சா இது இன்னும் அழகா இருக்கும். உடைஞ்சு போன சுவடு கூடத் தெரியாது!”ன்னு செவ்வந்தி அதைத் தூக்க,
அருண், “செவ்வந்தி, விடுடீ!”ன்னு சொன்னான்.
செவ்வந்தி, “அருண், ஒரு கை கொடு!”ன்னு சொன்னாள்.
“மாமா, இவ அடங்கவே மாட்டா!”ன்னு அருண் சொல்ல, செவ்வந்தி அவனை ஒரு முறை முறைத்தாள்.
“அருண், வாடா!”ன்னு பெரிய சாமி சொல்ல, ரெண்டு பேரும் சேர்ந்து அந்தச் செடியை அழகா நட்டு, அந்த ஜாடியை அழகா தொகுத்து, தண்ணி போக வரப்பு வெட்டி வச்சது மாதிரிப் பதிச்சு வச்சாங்க.
பெரிய சாமி, “கண்ணு, நல்லா இருக்கே!”ன்னு சொன்னார்.
“இது அழகா மாற நான் தான் காரணம்!”னு அருண் சொன்னான்.
செவ்வந்தி அவனை முறைக்க, அருண் புன்னகைச்சுட்டு, “சரி விடு! கை கழுவிட்டு வா, நம்ம போகலாம்!”ன்னு சொன்னான்.
“நான் வரலை!”
அருண், “மாமா, பாருங்க! இன்னிக்கு என் கூட கொடுமுடி வரேன்னு சொன்னா, இப்போ ஏமாத்திக்கிட்டிருக்கா!”ன்னு சொன்னான்.
செவ்வந்தி, “அப்பா, நர்சரியை யாரு பார்த்துப்பா? நிறைய வேலை இருக்கு. இப்போ கஸ்டமர் வரப் போறாங்க. நாலுமணி செடி, கூடவே வெற்றிலை, காட்டுச்சீகை, கமுகு, பாக்கு, துத்தி… எல்லாம் ஆர்டர் கொடுத்துட்டுப் போயிருக்காங்க!”ன்னு சொன்னாள்.
அருண் சலிச்சுக்கிட்டு, “நாலு ஏக்கர்ல நாலு செடி போட்டுக்கிட்டு நீ பண்ற அலப்பறை இருக்கே… தாங்கல!”
செவ்வந்திக்கு கோபம் வந்து, “அப்பா, உன் தங்கச்சிப் பையன் கிட்ட சொல்லி வைங்க! வாய் நீளுது. நான் போக மாட்டேன்!”ன்னு சொன்னாள்.
அருண், “மாமா!”ன்னு முணுமுணுக்க, பெரிய சாமி, “கண்ணு, போடா குட்டி. நான் பார்த்துக்கிறேன்!”ன்னு சொன்னார். அருண் செவ்வந்தியோட கையைப் பிடிச்சு இழுத்துட்டுப் போனான்.
செவ்வந்தி, “அருண்! அருண்! விடு! வரேன்!”ன்னு சொல்லிக்கிட்டே அவனுடன் கொடுமுடி மகுடீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவுக்குப் போனாள்.
யாருங்க இவ? செவ்வந்தி, பாரீன் கேர்ள் இல்லைங்க. ஆனா பாரம்பரியமான பொண்ணு. எப்படி செவ்வந்தி, அன்போட வாழ்க்கைக்குள்ள போறா?
இங்கே அன்பு என்ன செய்றான்?
செவ்வந்தி – அன்பு அறிமுகம் எப்படி இருக்கும்?
பார்ப்போம்!