உறவே உயிரே

by Pradhanya kuzhali
373 views

உயிரே-12

அன்பு அவனோட பர்ஸ்ல இருந்து நூறு ரூபாய் நோட்டை நீட்டினான்.

அவள் ரெண்டு பேரையும் பார்த்தா. ஜெஸி சிரிச்சுகிட்டே, “நானும் அவனும் ஒண்ணுதான்! வாங்கிக்கோங்க!”ன்னு சொன்னா.

செவ்வந்தி பற்களை கடிச்சுக்கிட்டே, “யாரா இருந்தா எனக்கு என்ன?”ன்னு கோபமா சொல்லி, காசை வாங்கி, அவளோட பர்ஸ்ல இருந்து சில்லறையை எடுத்துக்கிட்டா.

அன்பு அவளை வைத்த கண் வாங்காம பார்த்துக்கிட்டு இருக்க, ஜெஸி சிரிச்சுகிட்டே அவன்கிட்ட போய், “இப்படி சொல்லிட்டா எப்படி? என் அன்புக்கு காதலி, மனைவி வந்தாலும், எனக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பான்”னு சொல்லி, அவனோட கையைப் பிடிச்சுக்கிட்டா.

செவ்வந்தி அவங்களை கண்டுகொள்ளாம, “இந்தாங்க, மீதி பணம்”னு சொல்லி, செடியை எடுத்து வந்து நீட்டினா.

ஜெஸி அவன்கிட்ட, “பேபி, ஓவர் ஆட்டிட்யூட் காட்டுறா? திமிரு பேபி!”ன்னு அவனோட காதுகிட்ட சொன்னா.

அன்பு, “ம்… ஆமா!”ன்னு சொன்னான்.

செவ்வந்தி, “மேடம், இந்தாங்க!”ன்னு சொன்னா.

ஜெஸி அவன்கிட்ட, “இப்போ பாரு என்னோட பெர்ஃபார்மன்ஸ் எப்படி இருக்குன்னு!”ன்னு சொல்லிட்டு, அவள்கிட்ட போனா.

“ஹான் மேடம், இன்னொரு பூச்செடி வேணும்!”

செவ்வந்தி வேகமா நடந்து போய், அங்கே இருந்த இன்னொரு வாசம் இல்லாத பூச்செடியை எடுத்து வந்தா.

ஜெஸி, “ஹலோ, இப்போ வாசம் இருக்க செடி வேணும்!”ன்னு சொன்னா.

செவ்வந்தி கடுமையான முகத்தோட, “செலக்ட் பண்ணுங்க!”ன்னு முகத்தைத் திருப்பிக்கிட்டா.

ஜெஸி, “அன்பு, உனக்கு செவ்வந்தி ஓகேவா?”ன்னு கேட்டா.

இதைக் கேட்டதும் செவ்வந்தி திடுக்கிட்டு, ரெண்டு பேரையும் முறைச்சுப் பார்த்தா.

அன்பு ஆச்சரியமா சிரிச்சுகிட்டே, “எனக்கு ஓகே பேபி!”ன்னு சொன்னான்.

ஜெஸி புன்னகை செஞ்சுகிட்டே, “ஹலோ மேம், என் நண்பனுக்கு செவ்வந்தி வேணும்! இப்போவே வேணும்!”னு கேட்டா.

செவ்வந்தி மனசுக்குள்ள, ‘இவனுக்கு இவனைப் போலவே ஒருத்தி தோழியா! ச்ச!’ன்னு நினைச்சா. ‘இருந்தாலும் என்னை ஏலம் விடுறா!’ன்னு கோபத்தோட சேர்ந்து ஒரு நிம்மதியும் வந்தது.

ஜெஸி, “மேடம் செவ்வந்தி, எங்களுக்கு பூச்செடி கொடுங்க, நாங்க போறோம்!”ன்னு சொன்னா.

செவ்வந்தி இன்னும் முறைச்சுகிட்டே, “இங்கே கிடைக்காது!”ன்னு சொன்னா.

“ஏன் இல்லை?”ன்னு ஜெஸி கேட்டா.

செவ்வந்தி, “நான் தலையில வச்சிருக்க செவ்வந்தி பூ வீட்டுல இருக்கு! இன்னும் பதியம் போடல! கொஞ்சம் கிளம்புங்க! இப்போ முக்கியமான கஸ்டமர் வரும் நேரம்!”ன்னு கைகளைக் கட்டிக்கிட்டே சொன்னா.

அவளோட பேச்சில் ரெண்டு பேருக்கும் கோபம் வர, ஜெஸி ரொம்ப கோபமா ஆனா. அவள் பாய்ஞ்சு செவ்வந்திகிட்ட சண்டைக்குப் போக, அன்பு அவளோட கையைப் பிடிச்சுக்கிட்டான்.

“ஜெஸி விடு! சொன்னால் சொல்லிட்டுப் போறா! வா போலாம்!”

ஜெஸி, “நீ கொடுக்கலைன்னா தூக்கிட்டுப் போவேன்டி! எவ்ளோ தைரியம் உனக்கு?”ன்னு கத்தினா. அவளோட வாயைப் பொத்திக்கிட்டு, தரதரன்னு அன்பு அவளை இழுத்துட்டுப் போனான்.

அன்பு அவளை இழுத்துட்டுப் போறதைப் பார்த்து செவ்வந்திக்கு சிரிப்பு வந்துச்சு. அதை வெளியில காட்டிக்காம, கதவை சாத்த வந்தா.

ஜெஸி கடுப்போட, “லீவ் மீ அன்பு!”ன்னு அவனைத் தள்ளிவிட்டா.

செவ்வந்தி இப்போ வேண்டுமென்றே, “மேடம், உங்க வாசமில்லாத பூ!”ன்னு கூப்பிட்டா.

ஜெஸி திரும்பி முறைச்சுப் பார்க்க, செவ்வந்தி அவங்ககிட்ட வந்தா. “ம்… அப்போ உங்க பணம்”னு நீட்டினா.

அன்பு ரெண்டு பேரையும் பார்த்தான். செவ்வந்தி இப்போ வேண்டுமென்றே, “யார் கிட்ட கொடுத்தா என்ன? நீங்க ரெண்டு பேரும் ஒண்ணுதான்னே! அதான் வாங்கிக்கோங்க!”ன்னு சொன்னா.

செவ்வந்தியோட பேச்சைக் கேட்டதும் அன்பு திகைச்சு நின்னுபோக, ஜெஸி அவனை முறைச்சுப் பார்த்து பேச வர்றதுக்கு முன்னாடி… செவ்வந்தி தன் முகத்தை வேற பக்கம் திருப்பிக்கிட்டே, “இங்கே ஆளுமையையும் அதிகாரத்தையும் காட்டினா எதுவும் கிடைக்காது. எப்போதும் மாறாது! தோஸ் ஆர் இடியட்ஸ் அண்ட் இரிடேட்டிங்!”ன்னு முணுமுணுத்தா. “கொஞ்சம் யோசிக்க நினைச்சேன், பட் இப்போ முடிவே பண்ணிட்டேன்! நீங்க போலாம்!”ன்னு அவளோட கையில பணம் வச்சு அனுப்பி வச்சா.

ஜெஸி அவளை கோபத்தோட பார்த்துக்கிட்டே, “ஹலோ! ஹே!”ன்னு சொடக்கு போட்டா.

அன்பு ஒரு நிமிஷம் ஸ்தம்பிச்சு, “ஜெஸி விடு பேபி, வா போலாம்!”ன்னு சொன்னான்.

ஜெஸி பற்களைக் கடிச்சுக்கிட்டு, “அப்படி எல்லாம் விட முடியாது. அவளை சும்மா விடமாட்டேன்!”ன்னு சொல்ல, செவ்வந்தி திரும்பி கைகளைக் கட்டிக்கிட்டு நின்னா.

ஜெஸி, “ஒழுங்கா உன் எண்ணத்தை மாத்திக்க, இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவ!”ன்னு மிரட்டினா.

“என்ன சொல்றீங்க, புரியல!”ன்னு செவ்வந்தி கேட்டா.

ஜெஸி, “ஹே, ஹே! நடிக்காதடி! எல்லாம் எனக்குத் தெரியும்!”ன்னு சொன்னா.

செவ்வந்தி தன் பார்வையை அன்புகிட்ட சுழல விட்டு, பிடிக்காதது போல பார்த்துட்டு, “முடியாது! என்ன பண்ணுவ?”ன்னு கேட்டா.

ஜெஸி, “உன்னை கெஞ்ச வைப்பேன்! பார்த்துக்கிட்டே இருடி!”ன்னு சொன்னா.

அன்பு, “ஜெஸி, விடு பேபி!”ன்னு சொன்னான்.

ஜெஸி அவனோட கையைத் தட்டிவிட்டு முன்னாடி நடந்தா.

செவ்வந்தி உதட்டைக் கடிச்சு சிரிப்பை அடக்கிக்கிட்டே, “இன்ஜினியர் சார், பாய்! இனிமே திரும்பி வராதீங்க!”ன்னு கையை ஆட்டி சொன்னா.

அன்பு அவளை முறைச்சுட்டு, நேரா ஜெஸி பக்கம் போனான்.

“இன்னும் கோபம் போகலையா? அவளுக்குத்தானே என்னை பிடிக்கல, நீ எதுக்கு அவள்கிட்ட பேசிட்டு இருக்க?”ன்னு சொல்லிக்கிட்டே காரை ஓட்டினான்.

ஜெஸி, “அவளுக்கு உன்னை பிடிச்சு இருக்கு! உன்னை லவ் பண்றா!”ன்னு சொன்னா.

அன்பு கொஞ்சம் சோகமான முகத்தை வச்சுக்கிட்டு, “பொய் சொல்லாத! என்னை சமாதானம் பண்ணச் சொல்ல வேணாம்! விடு, அவள் போனால் போகட்டும்!”ன்னு சொன்னான்.

ஜெஸி, “டேய் லூசு, அவளுக்கு உன்னை நிஜமாவே பிடிச்சு இருக்கு!”ன்னு சொன்னா.

அன்பு திடுக்கிட்டு காரை நிறுத்தினான். “என்ன ஜெஸி!”

ஜெஸி சிரிச்சுகிட்டே, “நான் பேசின எல்லாத்தையும் தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிச்சு பேசுறா. அதைவிட உன்னை பார்த்த பார்வை இருக்கே! உண்மையிலேயே என் அன்புகிட்ட செவ்வந்தி பேபி விழுந்துட்டா!”ன்னு சொன்னா.

அன்பு குழி விழ சிரிச்சான். தலையை கோதி தாடியை நீவினான்.

ஜெஸி, “ஆனால் ஒரு விஷயம்?”ன்னு சொன்னா.

“என்ன?”

“நீ அவள்கிட்ட கெஞ்சணும்! பின்னாடி சுத்த வேணும்! பூ, கிஃப்ட், கவிதை, கல்லு, மண்ணு இதையெல்லாம் செய்ய வேணும்னு நினைக்கிறா! அதைவிட, என்னை மேடம்க்கு சுத்தமா பிடிக்கல!”ன்னு ஜெஸி சொன்னா.

அன்பு, “எனக்கு அதெல்லாம் வராதே! அதைவிட உன்னை பிடிக்கல! அது தப்பு ஜெஸி! உன்னை புரிஞ்சுக்கிட்டால்தான் என் கூட இருக்க முடியும்! விடு ஜெஸி, போலாம்!”ன்னு சொன்னான்.

ஜெஸி, “அப்படி நீ விட்டுடுவியா! அவள் தான் உன்னோட பார்ட்னர்! முதல்ல அவளை கட்டிக்க. அதுக்கு அப்புறம் அவளை நம்ம மாத்திடுவோம்!”ன்னு சொன்னா.

அந்த நாள் செவ்வந்திக்கு ரொம்ப உற்சாகமா இருந்துச்சு. இத்தனை சந்தோஷம் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கு.

அப்போ சசி போன் பண்ணான். உடனே அழைப்பை எடுத்தா.

“அண்ணா, எப்படி இருக்கீங்க? எங்க இருக்கீங்க?”ன்னு கேட்டா.

சசி, “நான் வீட்டுக்கு வந்திட்டேன்! உனக்குத்தான் நானும், அருண் மச்சானும் எல்லாம் காத்துட்டு இருக்கோம்! நாங்க காரணம்பாளையம் போகலாம்னு இருக்கோம், வர்றயா?”ன்னு கேட்டான்.

“அப்படியா, அப்போ நானும் வர்றேன்! இப்போ பஸ் வரும், அதுல வர்றேன் அண்ணா!”ன்னு சொன்னா.

“வேணாம் பொண்ணு, நீ அங்கேயே இரு! நான் வர்றேன்!”ன்னு சொல்லி போனை வச்சான்.

ஜெஸி சைட்டுல ஒரு கேரேஜ்ல அமைதியா உட்கார்ந்திருந்தா.

அன்பு எல்லா வேலைகளையும் பார்த்துட்டு, செக் பண்ணிட்டு, அவள்கிட்ட வந்தான்.

ஜெஸி அமைதியா உட்கார்ந்திருந்தா.

“பேபி, நீ ரெஸ்ட் எடு. கிளம்பு!”

“ம்… இல்ல, உன் கூட இருக்கேன்.”

அன்பு, “சொல்றத கேளு, கிளம்பு பேபி!”

“அப்போ என்னை கொண்டு வந்து விடு. எங்க தங்கியிருக்க?”

அன்பு, “நான் தனியா வீடு எடுத்து தங்கியிருக்கேன். இங்கே இருந்து கொஞ்ச தூரம் போகணும்! ஆனா நீ எப்படி?”ன்னு கேட்டான்.

“வாட் ஆர் யூ டாக்கிங் லைக் திஸ் அன்பு!”ன்னு ஜெஸி கேட்டா.

அன்பு, “நான் அப்படி சொல்லல பேபி! இந்த ஊர் கொஞ்சம் ஒரு மாதிரி. அதான்!”ன்னு சொன்னான்.

ஜெஸி, “என்னமோ பண்ணு! ஆனா உன் பக்கத்துல, ஐ மீன் உன்னை சுத்தி ஒரு இடத்துல எனக்கு ஓகேதான்!”ன்னு சொல்லி, மேஜையில் தலை சாய்த்துக்கிட்டா.

அன்பு, “சரி, வெயிட் பண்ணு! நான் வர்றேன்”னு சொல்லிட்டு, காலையில இருந்து பார்த்த வேலைகள், இனி என்ன செய்யணும், மணல், ஜல்லி, சிமெண்ட் எல்லாம் கொண்டு வர்றது பத்தி விவரம்னு சொல்லி, அடுத்த கட்ட வேலைகளை ஆரம்பிக்கச் சொன்னான்.

“அன்பு, கார்!”ன்னு ஜெஸி கேட்டா.

“ஐம் பிளாங்க் பேபி!”ன்னு முகத்தைத் திருப்பிக்கிட்டா.

அன்பு, “சரி, உன்னோட கார்ல போலாம். என்னோடது சந்தானம்கிட்ட பார்த்துக்கச் சொல்றேன்!”

“என்னமோ பண்ணு”ன்னு சொல்லி, காரில் உட்கார்ந்தா.

அன்பு, “பேபி, இப்போ நம்ம இந்த ஊர் பெரிய கை வீட்டுக்கு போலாம். அவர்தான் எனக்கு வீடு, சமையல்காரர் எல்லாம் ஏற்பாடு பண்ணினார். அவருகிட்ட சொன்னா உடனே ஏற்பாடு பண்ணிடுவார்”னு சொன்னான்.

“ம்… சரி!”ன்னு அவள் சொல்ல, அன்புவும் ஜெஸியும் முத்துசாமி வீட்டுக்குப் போனாங்க.

அன்பு காரை நிறுத்திட்டு, அவருக்கு போன் பண்ணான்.

முத்துசாமி, “நீங்க உள்ளே போங்க கண்ணு. வீட்டுகாரம்மா இருப்பாங்க. நான் இன்னும் பத்து நிமிஷத்துல வீட்டுல இருப்பேன்! கொஞ்சம் அவசர வேலை. நான் வர்றேன், பொறுமையா பேசிக்கொள்வோம்!”ன்னு சொன்னாரு.

“ம்… சரிங்க சார்!”ன்னு வச்ச அன்பு, “ஜெஸி, கம் பேபி”ன்னு உள்ளே கூட்டிட்டுப் போய், “வீட்டுல யாரும் இருக்கீங்களா!”ன்னு கேட்டான்.

சுதா, “உள்ள வாங்க!”ன்னு கூப்பிட்டாரு.

“மேடம், சார்!”ன்னு அன்பு சொன்னான்.

“மேடமா!”ன்னு சுதா ஜெஸியை ஒரு பார்வை பார்த்தாரு.

“சார் இப்போ வர்றேன்னு சொன்னாரு, கொஞ்சம் பேசணும்!”

சுதா, “உள்ள வாங்க கண்ணு!”ன்னு கூப்பிட்டு, உட்கார வச்சாரு.

ஜெஸி அவன்கூட உள்ளே வந்து உட்கார, அருண், “வாங், உட்காருங்க!”ன்னு அன்பு செல்வன்கிட்ட சொன்னான்.

சத்யா டீ போட்டு கொண்டு வந்து நீட்டினா.

ஜெஸி, “நோ தேங்க்ஸ், நாங்க மில்க் டீ குடிக்க மாட்டோம்!”ன்னு சொன்னா.

சத்யா, “சரிங்க”ன்னு திரும்ப, அன்பு, “இட்ஸ் ஓகே, எனக்கு தாங்க மா!”ன்னு சொன்னான்.

ஜெஸி, “டேய், என்ன பண்ற!”ன்னு கோபமா கேட்டா.

அன்பு, “கொஞ்சம் சும்மா இருடி!”

ஜெஸி, “டேய், உனக்கு இது பிடிக்காதே! எதுக்கு கஷ்டப்பட்டு குடிக்கிற அன்பு!”ன்னு பேசிட்டு இருக்க…

அன்பு, “பேபி, கொஞ்சம் அங்கே பாரு!”ன்னு சொன்னான்.

ஜெஸி அவன் சொன்ன இடத்தைப் திரும்பிப் பார்த்தா.

அங்கே கோபமா செவ்வந்தி அவங்க ரெண்டு பேரையும் முறைச்சுகிட்டே நின்னா.

“சரி மாப்ள, கிளம்பலாமா?”ன்னு சொல்லிக்கிட்டே, வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு சசி உள்ளே நுழைஞ்சான்.

ஜெஸி அவனை பார்த்த அடுத்த நொடி, எழுந்து நின்னா.

அன்பு செவ்வந்தியோட பார்வையை தாங்க முடியாம, அந்த டீயை கண்ணை மூடி ஒரே மடக்குல குடிச்சுட்டு, எழுந்து நின்னுட்டான்.

சசி அவளை பார்த்ததும், “நீயா?”ன்னு கேட்டான்.

“நீயா…?”

தொடரும்…

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment