Episode -11
நீ வாழ தகுதியில்லாத ஜென்மம்! என்ற அவளின் மனகுமுறல் வார்த்தைகள் ஒருபக்கம் ரீங்காரமாக கேட்க, இன்னொரு பக்கம் அஸ்வத்தாமனின் நினைவுகளும் அவன் அவளை மொத்தமாக கீழே சரித்தவைகள் அவளை முன்னேற செய்ய.. மொத்தமாக சுயநினைவை இழந்து நடக்கலானாள்.
ஒரு பக்கம் கார் வந்துகொண்டிருக்க.. உயிரையே மாய்த்துக் கொள்ளும் பொருட்டு சக்தி காரில் விழ தயாரானாள். தன் மேல் கார் மோத வேண்டும் என கண்ணை மூடி நிற்க.. இரண்டடிக்கு முன்னாலேயே கார் நிறுத்தப்பட்டது.
டக் என காரை திறந்து கொண்டு வெளியே வந்தவன். படாரென கதவை சாத்திவிட்டு அவளை முறைத்து பார்த்தான். “இடியட் அறிவில்லை உனக்கு? கார் வருதுன்னு தெரியுதுஎல்ல இன்னும் கொஞ்சம் விட்டால் அடிச்சு தூக்கியிருப்பேன் நியூசன்ஸ்” என கண்டபடி திட்டினான்.
மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவழுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறைதான். “ஏன் டா நீயா? உன் காரில் தான் நான் வந்து விழனுமா? என்னை சாக கூட விட மாட்டியா? உன்னை ஒவ்வொரு நொடியும் நினைச்சு நினைச்சு கொண்டாடினேன் பாரு டா! என்னை என்னை!..” என தலை தலையாக அடித்துக் கொண்டவள்.
“என்னோட வாழ்க்கையவே அழிச்சிட்டல்ல! நீ புணர்ந்த எல்லா பொண்ணுங்க மாதிரின்னு என்னை நினைச்சு பணத்தை தூக்கி போடுற ராஸ்கல்! உன்னால நான் ஆண்பிள்ளை வர்கத்தையே வெறுக்கிறேன் டா! நான் என் என் என்னையே வெறுக்கிறேன். காசு கொடுக்கிற? என்னோட பெண்மையை என்னோட… என் கற்பை” என தேம்பி அழுத சக்தி. உன்னை பத்தி இப்போ தான் தெரிஞ்சுக்கிட்டென் அஸ்வத்தாமன் என அழுத படி நடந்தாள்.
என்ன சொல்கிறாள்? என ஒன்றும் புரியாமல் விழித்தவன் வேகமாக ஹே நான்!. என அழைக்க..
அஸ்வத்தாமன்! சாரி தமன்! என் கண்ணு முன்னாடி நிக்காத ராஸ்கல். நீயெல்லாம்.. ச்சீ உன்னை இந்த உலகம் தூக்கி வச்சு கொண்டாடுதே! என்னை மாதிரி இன்னும் எத்தனை பேரை ஏமாற்றி இருப்ப நீ! என தட்டு தடுமாறி வேகமாக நடக்க முயற்சி செய்தாள் சக்தி.
ஹலோ நான் அஸ்வத்தாமன் இல்ல. என் பேர் அதிவீரா. உதவும் கரங்கள் டிரஸ்ட்ட நடத்திட்டி வரேன். நான் ஒருவனுக்கு ஒருத்தி பாலிசி என வீரா சொல்லிக் கொண்டிருக்க.. மயங்கி சரிந்தாள் சக்தி.
ஆம் இவனது பெயர் அஸ்வத்தாமன் இல்லை. அதிவீரா பெரிய MNC கம்பனியின் CEO ஆதிசங்கரன் மற்றும் பத்மினியின் இரட்டைகளில் ஒருவன் அதிவீரா தலைமகன். பத்மினியின் குடும்பத்தால் வளர்க்கபட்டவன். (வீராவின் கதையை படிக்க விரும்பினால் அதிரடிக்காரன் மச்சான் டி படித்து பாருங்கள்)
வீரா பதட்டத்துடன் அவளின் அருகில் வந்தவன். கன்னத்தை தட்டி பார்த்தான் எழவில்லை. “அய்யோ என்னாச்சு இந்த பொண்ணுக்கு? பார்க்கவே ரொம்ப பலவீனமா இருக்கா! நான் இங்கேயே விட்டுட்டு போய் எதுவும் தப்பான முடிவெடுத்துட்டா என்ன பண்றது?” என அவளை தூக்கிக்கொண்டு சென்றான்.
இன்று காலையிலிருந்தே பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் பைத்தியக்காரி போல சுற்றி திரிந்தாள் சக்தி. இது பசி மயக்கமா இல்லை மசக்கை மயக்கமா தெரியவில்லை. வீரா நேராக ஹாஸ்பிடல் தூக்கி சென்றவன் தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டான்.
“டாக்டர் இந்த பொண்ணு மயங்கிட்டா என்னன்னு தெரியல செக் பண்ணுங்க” என கட்டளையிட்டு நின்று கொண்டான்.
நீங்க அவங்களோட ஹஸ்பன்டா? என கேட்டபடி செக் செய்தவர். இந்த பொண்ணு பிரக்னண்டா இருக்கா என்று அவளை மூடிய கண்களை விரல் கொண்டு விரித்துப் பார்த்தார்.
வீரா அதிர்ச்சியாக நின்றிருந்தான்.
டாக்டர் பல்ஸ் செக் செய்தபடி “சார் உங்ககிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன். இந்த பொண்ணு மாசமா இருக்காங்க” என்றார்.
வீராவுக்கு இப்பொழுது தான் புரிந்தது. ஹான் ஓகே டாக்டர் என அவனது பார்வை சக்தியின் மீது படிந்தது. இந்த பெண் ஏன் இப்படி கத்தி பிதற்றிக் கொண்டு ரோட்டில் அலைந்தாள் என்று.
‘அப்போ அவ மோசமா இருக்கறதுக்கு அந்த ராஸ்கல் அஸ்வத்தாமன் தான் காரணமா?’ என்று கோபம் சீற.. அவனை கடித்து குதறுவது போல ஆத்திரமாக வந்தது.
‘இப்படி ஒரு பெண்ணை ஏமாற்றி இருக்கிறான்? மோசக்காரன்! வெளியில் நல்லவன் போல நடித்துக்கொண்டு அப்பாவி பெண்ணை ஏமாற்றி இருக்கிறான்.’ என்று அதே இடத்தில் யோசித்தபடி நின்று இருந்தான்.
“பிளட் டெஸ்ட் கொடுத்துருக்கேன் சார். இந்த பொண்ணு ரொம்ப வீக்கா இருக்காங்க. ஒரு டிரிப்ஸ் போட்டுட்டு போங்க. அண்ட் நல்லா சாப்பிடணும். நீங்க நல்லா பாத்துக்கணும். பல்ஸ் ரொம்ப குறைஞ்சிருக்கு. உடம்புல பிளட் கம்மியா இருக்கு. இப்போ அவங்க கன்சிவ். சோ நல்லா பாத்துக்கணும்” என்று கூறியபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் டாக்டர்.
அதற்குள் அவள் அட்மிட் செய்யப்பட்டு அனைத்து பரிசோதனைகள் மற்றும் செக்கப் என ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.
வீரா தீவிரமாக யோசித்தபடி அதே இடத்தில் அமர்ந்திருந்தான்.. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் கழித்து சக்திக்கு மயக்கம் தெளிந்தது. போனை நோண்டிக்கொண்டிருந்தவன் படுக்கையில் இருந்தவளை பார்த்தான்.
சக்தி பெருமூச்சுடன் எழ முயற்சி செய்ய, என்ன பண்ற? அமைதியா படுத்துரு! என்று வீரா பதட்டமடைந்தான்.
“ஹே நீ அஸ்வத்தாமன் தான! என்னை ஏமாத்தாத! உன் கிட்ட நான் மறுபடியும் ஏமாற தயாரா இல்ல. என்று அவள் கோபமாக அவனை தள்ளிவிட பாய்ந்தாள்.
ஹலோ நான் அஸ்வத்தாமன் இல்ல. என் பேரு அதிவீரா. உனக்கு நான் எப்படி சொல்லி புரிய வைப்பேன்?
“நீ ஒன்னும் புரிய வைக்க வேண்டாம்! நீ யாருன்னு எனக்கு தெரியும் டா! நீ நடிகன் தானே! இப்போ என்கிட்ட என்னத்த எதிர்பாத்துடா வந்திருக்க? என்கிட்ட ஒன்னும் இல்ல! உயிர் மட்டும்தான் இருக்கு. கண்டிப்பா உன்ன நான் எதிலையும் மாட்டி விடமாட்டேன். ஏன்னா தப்பு பண்ணது நான். நீ என்னோட பலவீனத்தை பயன்படுத்திகிட்டு என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்க” என்று சக்தி கண்களில் நீருடன் கோபமாக கத்திக் கொண்டிருந்தாள்.
“ஜஸ்ட் ச்சில் கொஞ்சம் அமைதியா இரு! டென்ஷனாகாத நீ இப்போ சிங்கிள் கிடையாது. நீ இப்போ மாம்! உன்னோட வயித்துல குழந்தை இருக்கு தெரியுமா? இல்லையா? குழந்தை இருக்குன்னு தெரிஞ்சுதான் தற்கொலை பண்ணிக்கறதுக்கு முயற்சி பண்ணியா நீ? கோழை மாதிரி இருக்க!” என்று வீரா அவளை முறைத்துப் பார்த்தான்.
யாருடா நான் கோவில்லையா? என்று சக்தி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பேசவர….
சட்டென அவளின் முன் போனை நீட்டினான் வீரா. “பாத்துக்கோ நான்தான் அதிவீரா அப்படிங்குறதுக்கான ப்ரூப் இதுதான். இது என்னோட டிரைவிங் லைசன்ஸ், தென் என்னோட பான் கார்டு, அண்ட் வேற என்ன வேணும் உனக்கு? என்னை நம்புவதற்கு? என்று இரண்டு புருவங்களையும் தூக்கினான்.
ஒரு சில நொடிகள் அமைதி நிலவியது.
சக்தி எதுவும் பேசாமல் எதிரில் இருப்பவனை உற்றுப் பார்த்தாள். ‘என்ன சொல்ல முடியும்? இவனும் தம்பியை போலவே இருந்தால்? அப்படியே இருந்தாலும் இப்பொழுது என்னை என்ன செய்து விட முடியும்? நானே வயிற்றில்…’ என்று நினைத்த அவளுக்கு உள்ளம் குமரி துடித்தது.
ப்ளீஸ் எந்த தப்பான முடிவையும் எடுத்துற வேண்டாம். அஸ்வத்தாமன் தான உன்னோட வயித்துல இருக்குற குழந்தைக்கு… அது அப்பா என்று அதிவீரா கேட்க…
சக்தி மௌனமாக இருந்தாள்.
“கேட்டதுக்கு பதில் கேர்ள்!.. சொல்லுமா! நான் உனக்கான நியாயத்தை வாங்கி கொடுக்கிறேன்” என்று வீரா கேட்க..
“வேண்டாம் என்னை விட்டுடுங்க! எனக்கு எந்த நியாயமும் வேண்டாம். தப்பு என் பெயரில் தான் இருக்கு. என்னோட பலவீனமான மனசுதான் இப்படி நான் இருக்க காரணம். அதை விட…. அந்த அஸ்வத்தாமன் மேல நான் பைத்தியமா சுத்திட்டு இருந்ததற்கான விளைவுதான். என்னை இந்த இடத்துல கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. இதுக்கு நான் யாரையுமே பிளேம் பண்ண மாட்டேன்” என்று பெருமூச்சுடன் கூறினாள்.
“சரி உன்னோட அம்மா அப்பா பேமிலி டீடைல்ஸ் குடு! நான் கொண்டு போய் உன்னை விடுறேன்”
எனக்கு சொந்தம்ன்னு சொல்லிக்க என வயிற்றை வருடியவள். இப்போதைக்கு இந்த குழந்தை மட்டும் தான்… ஏன்னா!.. நான் ஒரு அனாதை! ஆஃபனேஜ்ல வளர்ந்த பொண்ணு. விடுங்க சார். ஏதோ விதி என்னை சாக விடல போல… என் குழந்தை என்னை வாழ சொல்றான் போல அதனால நான் என்று உறுதியுடன் பார்த்தாள்.
வீரா அவளைப் பார்த்து சரி கிளம்பு நம்ம போலாம் என்று கூற நான் எங்கேயும் வரமாட்டேன் அதேபோல உங்கள பாக்க எனக்கு சுத்தமா பிடிக்கல..
“ஐயோ நான் அஸ்வத்தாமன் கிடையாது!”
நீங்க அஸ்வத்தாமன் இல்லன்னு தெரியும். ஆனா உங்களோட முகத்தை பார்க்க, எனக்கு அவன் தான் ஞாபகத்துக்கு வரான்! அவன் எனக்கு பண்ண…. என்று மருகியவள் “இந்த நிலை தான் எனக்கு… ப்ளீஸ் சார் என்னை விட்டுடுங்க! நான் இப்படியே இருந்துடுறன்” என்றாள் சக்தி உருக்கமாக சக்தி…
அதிவீரா ஒரு பெருமூச்சு விட்டபடி நீ முதல்ல கிளம்பி வா! இப்போ எடுக்குற முடிவுகள் பின்னாடி உனக்கு பிரச்சனையை கொடுக்கலாம்.
“இல்ல அது வந்து”
இல்ல மா! கண்டிப்பா நான் உன்னை வற்புறுத்த மாட்டேன். என்னை நீ தப்பா நினைக்க வேண்டாம். நான் கல்யாணம் ஆனவன்! அதேபோல அவனோட அது அஸ்வத்தாமன் கேரக்டரையும் என்னோட கேரக்டரையும் தயவு செஞ்சு ஒப்பிட்டு பார்க்காத! எனக்கு பிடிக்காத ஒரே ஜென்மம்.. அவன் தான்.. சொல்லப்போனா! எனக்கு எதிரியே அவன்தான்! அந்த அஸ்வத்தாமன்” என்றான் வீரா.
ஒரு சில நிமிடங்கள் கழித்து சக்தி வீராவுடன் வர சம்மதித்தாள். வீரா காரை ஓட்டிக்கொண்டே உனக்கு ஏதாவது சாப்பிட வேண்டுமா? என்று மாஸ்கை கழட்டியபடி கேட்க..
ப்ளீஸ் சார் தயவு செஞ்சு அந்த மாஸ்க்க கலட்டாதிங்க என்று சொன்னவள் “இப்போதைக்கு எனக்கு எதுவும் வேண்டாம் நாம இப்போ எங்க போறோம்?”
பெங்களூர் போறோம் என்று வீரா கூற, சட்டென சக்தி கோபத்துடன் “என்னை கொண்டு போய் அந்த அஸ்வத்தாமன் கிட்ட விட போறீங்களா? இல்ல… நீங்க!.. நீங்க தான் நிஜமாகவே ஹஸ்வத்தாம…
ஓ காட் என்ன கேர்ள் நீ? டென்ஷன் பண்ணாத கேர்ள்! என்னோட வீடு அங்க தான் இருக்கு. நான் உன்னை அஸ்வத்தாமன் கண்ணுல காட்டவே மாட்டேன். அவனே வந்து உன்ன வான்னு கூப்பிட்டாலும், உன்னை விடமாட்டேன் போதுமா? மத்தபடி, எனக்கு எந்த இன்டென்ஷனும் கிடையாது என்று வீரா கூறினான்.
அதன் பின் அமைதியாக கண்களை மூடினாள்.
இங்கே அஸ்வத்தாமன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?
நாளை பார்க்கலாம்..
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels











💬 1 comment
Aduthu enna nadaka pogutho