🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
30. அழகிய அசுரா
அழகிய அசுரா
📖 அழகிய அசுரா · Chapter 30 of 41

அழகிய அசுரா

  • 2 Jul 2025
  • 324 reads
  • ☆ No ratings yet
  • 8 min read

Episode -29

முன்பு போல அஸ்வத்தாமன் இல்லை. மனதளவிலும் மிகவும் பாதிக்க பட்டிருந்தான். சைத்ராவை கண்டதும் அவளை அள்ளி அணைத்து கொண்டு தூங்க வேண்டும் நிம்மதியாக.. அது மட்டுமே முன்பு அவனது கனவாக இருந்தது. ஆனால் அவளை பார்த்த மாத்திரத்தில் இருந்து வேதனை கொன்று புதைக்கிறது. நிலையில்லாமல் தவித்தான் தமன்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“என்னாச்சு கண்ணா? கொஞ்ச நாளாக நீ சரி இல்லையே?” என ஆதி சங்கரன் நேராக மகனின் அறைக்கு வந்தார். 

“ஒன்னும் இல்ல டாடி! சும்மா உங்களை பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன்” என மழுப்பினான். 

“நான் ஒரு விசயம் கேள்வி பட்டேன் உன்னை பத்தி ஆனால் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு” என்றார் புன்னகையுடன்.. 

“என்ன சொல்றீங்க? என்ன விசயம்?” என புரியாமல் கேட்டான். 

“இப்பல்லாம் கெஸ்ட் ஹவுஸ்க்கு பொண்ணுங்க வரதில்லன்னு கேள்வி பட்டேன். எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு டா! உனக்காக ஒரு பொண்ணு கண்டிப்பா வருவா டா! சீக்கிரமே நீ வீரா மாதிரி” என ஆதி சங்கரன் ஆரம்பிக்க.. அந்த நேரம் பார்த்து போன் அலறியது. 

“யார் இது? புது நம்பர் மாதிரி இருக்கு?” என யோசனையுடன் காதில் வைத்தார். 

“ஹலோ நான் அதிவீரா பேசுறேன்” என மறுமுனையில் கூற.. ஆதி சங்கரனின் கண்களில் நீர் கோர்த்து கொண்டது. 

“வீ.. வீரா! என் பையன் வீரா!” என நடுக்கத்துடன் அவர் அழைக்க.. 

“நாளைக்கு என் பொண்டாட்டிக்கு சீமந்தம். நீங்க அண்ட் உங்க பையன் ரெண்டு பேரும் வந்துடுங்க.” என பிரித்து பேசினான். 

“வீரா நான் பண்ணது தப்பு தான். என்னை மன்னிச்சிடு அவனை மாதிரி தான் நீயும்” என அவர் எவ்வளவோ எடுத்து கூற.. 

“நீங்க கண்டிப்பா வந்துடுங்க. என் பொண்டாட்டி ஆசைபட்டுட்டா! வேற வழி இல்ல. சாப்பிட்டு தான் நீங்க போகனும். உங்க பையனோட வந்துடுங்க. உங்க பையன் கிட்ட போனை கொடுங்க.” என வீரா சொல்ல.. உதட்டை கடித்து துக்கத்தை அடக்கியவர் போனை அவனிடம் நீட்ட.. 

நான் யார் கிட்டயும் பேச தயாரா இல்ல. வைங்க டாடி என அஸ்வத்தாமன் வேகமாக அவ்விடத்தை விட்டு நகர முயற்சி செய்ய.  ஹலோ தமன் சார் என அம்மு அழைத்தாள். 

ஒரு பெருமூச்சை விட்டவன். சொல்லுங்க எப்டி இருக்கீங்க என இயந்திரதனமாக பேசினான். 

எனக்கு சீமந்தம்! நீங்க கண்டிப்பா வரணும். வீரா என்னை ஏத்துகிட்டார். எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. இப்போ நான் மாசமா இருக்கேன். அதுவும் டிவின்ஸ் நீங்க எனக்கு ஒரு நல்ல பிரென்ட் பிளீஸ் சார் நீங்க கண்டிப்பா வரணும் என கூறிவிட்டு போனை வைத்தாள். 

அம்மு ஆருவுடன் அமர்ந்திருக்க.. வீரா சைத்ராவை பார்த்தான். 

பிளீஸ் வீரா என்னால வர முடியாது. எனக்கு வேலை இருக்கு. என சீமந்தத்த்துக்கு விருப்பம் எல்லா தன்மையை வெளிப்படுத்தினாள். 

“நீ வராமல் இருக்கிறது எனக்கு வருத்தம்! ஆனால் நீ முடிவு பண்ணி டிசிசன் எடுத்ததும் அதை வேணாம்னு என்னோட கட்டளையை உன் மேலே திணிக்க மாட்டேன் எப்போவும். உன்னோட விருப்பத்துக்கு செயல் படு” என்று விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். 

சைத்ரா ஒரு பெருமூச்சை விட்டபடி அவ்விடத்தை விட்டு நகர..  

“ஒரு நிமிசம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”

“சொல்லுங்க அம்மு!” 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“இப்படியே எத்தனை நாளைக்கு உங்க அடையாளத்தை மறைச்சு சுத்திட்டு இருக்க போறீங்க?”

என்ன சொல்றீங்க என சக்தியின் பார்வை அவள் மீது படிந்தது. 

“நாளைக்கு எப்படியும் ஒருநாள் ஆருவ பத்தி தமன் சாருக்கு கண்டிப்பா தெரியும். அதை நீங்களே டைரக்டா சொல்லிட்டு விலகி இருந்துக்களாமே! மறைக்கிறதால என்ன வர போகுது? நீங்க? உங்களுக்கு இன்னும் அவர் மேலே அபிப்ராயம் இருக்கா?” என அம்மு கேட்க.. 

“என்ன பேசிட்டு இருக்கீங்க? எனக்கா? அவன் மேலேயா! அவன் ஒரு ரப்பிஸ் அவன் மேலே எனக்கு எந்த எண்ணமும் இல்ல. அவனுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். அந்த சம்பவம் நடந்துட்டா உறவு கொண்டாடிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழணும்ன்னு சட்டம் இருக்கா என்ன? அவன் ஆருவொட அப்பாவா இருக்கிறதுக்குக்கு எந்த தகுதியும் இல்ல. அந்த வார்த்தையே அபத்தம்” என்றாள் சக்தி காட்டமாக.. 

அம்மு சிரித்தபடி நான் உங்களுக்கு அட்வைஸ் பண்ண அருகதை இல்லாதவள் இருந்தாலும் ஒருவார்த்தை சொல்றேன். 

எதுக்கு அம்மு இப்படியெல்லாம் பேசுறீங்க? என சக்தி அவளை பார்த்தாள். 

“நான் அம்மா அப்பா இல்லாம தனியா சர்வைவ் பண்ண கஷ்ட பட்டென். ரொம்ப… வீரா மட்டும் இல்லன்னா நான்!. சரி அதை விடுங்க நீங்களும் நானும் ஒரே போல தான். எனக்கு சொந்தம்ன்னு சொல்லிக்க எங்க அக்கா ரமா இருக்கா! எனக்கு எங்க அக்கா பாசம் கிடைச்சது. ஆனால் உங்களுக்கு? இப்போ உங்க பையன் ஆருவுக்கு? நாங்க அவனை நல்லா பார்த்துக்குவோம் என்ன தான் இருந்தாலும் ஒருநாள் அவன் நினைக்கலாம் நமக்கு அப்பா இல்லையே அப்டின்னு.. உங்களுக்காக இல்லைன்னாலும் ஆருவுக்காக நீங்க ஒரு நல்ல முடிவா எடுங்க. எல்லா மனுஷங்களும் அவங்க சூழ்நிலைக்கு தப்பு செய்யறவங்க தான்..” என சொல்லிவிட்டு ஆருவுக்கு உணவு ஊட்ட அழைத்து சென்றாள் அம்மு. 

சக்தி அவளது அறைக்கு சென்றவள் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள். எதுக்கு மறைக்கணும்? நான் என்ன தப்பு பண்ணேன்? எல்லா தப்பையும் பண்ணது அவன் தானே! நான் தைரியமா ஃபேஸ் பண்ண போறேன் என தனக்கு தானே சொல்லி கொண்டாள். அந்த நேரம்  அஸ்வதாமனிடமிருந்து போன் வந்தது. 

நேரத்தை பார்த்தாள். மணி 6 என காட்ட.. தீவிரமாக யோசித்தாள். இவன் நம்ம கிட்ட ஒப்பந்தம் போட்டிருக்கான். கண்டிப்பா அதை மீற மாட்டான். உண்மை அதன் போக்குல தெரியட்டும் என முடிவெடுத்தவள். 

“ஹலோ சொல்லுங்க சார்!”

“எங்கே இருக்க? நான் உன்னை பிக் அப் பண்ணிக்க வரேன்”

நான் வீட்ல இருக்கேன். நானே வரேன். என போனை வைத்தவள். தேனி கேசவனை கார் எடுக்க சொல்லி புறப்பட்டாள். 

அஸ்வத்தாமன் கெஸ்ட் ஹவுஸ் வந்து வெகு நேரமாக அவள் இன்னும் வரவில்லை. நேராக ஜேக் டேனியல் சரக்கை ஊற்றி குடிக்க ஆரம்பித்தான். 

வெகு நேரமாக எங்கே இருப்பா? என தெரிந்து கொள்ள போன் எடுத்து அவளுக்கு அழைத்தான். பிஸி.. பிசி..  நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒருவருடன் பேசி கொண்டிருக்கிறார். என திரும்ப திரும்ப வந்து கொண்டிருக்க.. 

“சக்தி பிக் அப் மை கால்! பிக் அப்” என போதை தலைக்கேற கோபமும் வந்து சேர்ந்தது. அஸ்வத்தாமன் மனதில் தன்னை விட வேறு ஒருவருக்கு முக்கியத்துவம் தருகிறாள் என்ற எண்ணம் உள்ளுக்குள் ஆட்டி படைத்தது. தண்ணி கலக்காமல் ராவாக குடித்தான். வேதனையும் வலியும் மட்டுமே வாழ்க்கை முழுவதும் என்ற நிலைக்கு வந்து விட்டான். முன்பு  மன்மதனாக வலம் வந்த தமனுக்கும் இப்பொழுது இருக்கும் அஸ்வத்தாமனுக்கும் எத்தனை வித்தியாசம். 

அவள் போனை பேசி முடித்ததும் பார்க்க 10 முறை அழைத்திருக்கிறான். ச்சீ மிருகம் என வாய்க்குள் முனகி கொண்டவள். எதுக்கு அந்த நாய்க்கு போன் பண்ணனும்? நேர்ல போயி பார்ப்போம். அதுக்குள்ள என்ன நோக்காடு வந்ததுன்னு தெரியல என வாய் மொழியாக கூறியவள் தன் மகன் ஆருவை நினைத்தபடி சென்றாள். 

கேசவன் வெயிட் பண்ணுங்க எட்டு மணிக்கு வந்துடுவேன் என அவள் நகர.. சல்யூட் அடித்து விட்டு அங்கேயே அவளுக்காக காத்திருந்தான். 

கதவை தட்டியபடி உள்ளே நுழைந்தவழுக்கு ஆணும் பாவம் படத்தின் நாயகன் ஆனந்த் ராஜன் போன் செய்திருந்தான். 

சார் என மரியாதையுடன் அவள் அட்டன் செய்த படி திறந்த கதவை மீண்டும் சாத்தி விட்டு வெளியில் நடந்து கொண்டே போன் பேசினாள். 

மேடம் ஆணும் பாவம் மாதிரி கதாப்பாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கிற கதை உங்களுக்கு பொருத்தமா இருக்கும்.ஒரு சின்ன பையனுக்கு அம்மாவா நடிக்கணும் மேடம். உங்களோட பார்ட் அரை மணி நேரம் தான். கால்சீட் பெருசா தேவையில்லை. லோக்கல்ல தான் ஷூட்டிங். கதை  சொல்லவா மேடம்? அப்பாயின்ட் எப்போ மேடம்? என விவரத்தை கூறினார் ஆனந்த ராஜன். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

கமிங் மன்டே ஓகேவா சார்! மார்னிங் நான் ஃப்ரீ தான். அண்ட் இந்த அளவுக்கு நீங்க எக்ஸ்ப்லைன் பண்ண தேவையில்லை. நீங்க சொன்னால் சரியா இருக்கும் என்றாள் புன்னகையுடன்.. 

“ரொம்ப தேங்க்ஸ் மேம்”

“ஓகே சார் புரொடக்ஷன் யாரு?”

“A square prodectionல தான் பேசலாம்ன்னு இருக்கேன் மேடம்”

இதை கேட்டதும் நிம்மதி பெரு மூச்சை விட்டவள். புன்னகையுடன் அப்போ கவலையே இல்ல சார். இந்த படம் நான் நடிக்கிறேன். Prodection ஓகே சொல்லிடுவாங்க என்றாள் சிரித்து கொண்டே..  

அவள் புன்னகையுடன் பேசி கொண்டிருப்பதை கதவை திறந்து பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஆத்திரமும் கோபமும் உண்டானது. யாரிடம் பேசுகிறாள்? என்னை பார்க்க வந்தால் எனக்காக மட்டும் தானே நேரத்தை செலவழிக்க வேணும்? இப்போ யார் கிட்ட பேசுறா? சிரிச்சு… சிரிச்சு என உள்ளுக்குள் புயல் கிளம்பியது. 

ஓகே சார் பார்க்கலாம் நேரில்!.. என்று விட்டு சிரிப்புடன் திரும்பிய சைத்ரா அவனை பார்த்ததும் முக பாவனை மொத்தமாக மாறியது. ச்ச வீரா போல முகம் இவனுக்கு ஏன் வந்தது? வெறுத்து பார்க்க முடியல.. வீரா கூட இப்படி ஒரு ஜென்மம் என உதட்டை சுழித்தவள். சார் என அவனை நோக்கி வந்தாள். 

எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தவன் அங்கும் இங்கும் நடந்தான். இங்கு வந்தால் பச்சை தண்ணீர் கூட குடிக்க மாட்டாள். எதாவது கலந்து விட்டால் என்ன செய்வது? அந்த பயம் தான். அற்ப ஜென்மம் இவன் தான். என்பது சைத்ராவின் கூற்று. 

கொஞ்சம் தலை வலிக்குது தைலம் எடுத்து தேச்சு விடு என கூறி கண்களை மூடிய படி அமர்ந்திருந்தான். 

“தைலம் எங்கே இருக்கு?”

“உள்ளே சைட்ல ஸ்டோர் ரூம் இருக்கு அதுல கப்போர்ட்ல இருக்கும் போய் எடுத்திட்டு வா” என தமன் சொல்ல சைத்ரா அவ்விடத்தை நோக்கி சென்றாள். 

அவளின் போன் மேஜையின் மீது இருக்க, வேகமாக போனை எடுத்து பார்த்தான் நல்ல வேளை போன் லாக் அவனுக்கு தெரியும். ஆக்டர் ஆனந்த் ராஜன் என பதிவு செய்து வைத்திருந்தாள். போனை அதே இடத்தில் வைத்தவன். கூகிள் சர்ச் செய்தான். ஆக்டர் ஆனந்த் என போட.. ஆணும் பாவம் படத்தின் நாயகன் அவளுடன் இருப்பதை போல படங்கள். உள்ளுக்குள் கொழுந்து விட்டு எரிந்தது பொறாமை தீ! நான் பக்கத்திலேயே இருக்கேன். எத்தனை மிஸ்ட் கால்ஸ் ஆனால் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்.. எவனோ ஒருவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள். என உள்ளுக்குள் இனம் புரியா பொறாமை பரவியது. அது முகிரமாக மூச்சடைத்தது. 

சார் எங்கே இருக்கு? என அவளின் சத்தம் ஸ்டோர் ரூமில் கேட்க… எழுந்து வேகமாக சென்றான் தமன். 

விபரீதம் நடக்கப்போகிறது.. பார்ப்போம் 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 2 comments

Share your thoughts

error: Content is protected !!