Episode -13
“என்னாச்சு உனக்கு?” என வீரா சக்தியின் எதிரில் முதுகுகாட்டி நின்றான்.
“இப்போ உங்களுக்கு என்ன பிரச்னை? ஏன் என் முன்னாடி வர மாட்டிக்கிறீங்க? நான் உங்களுக்கு பாரமா இருக்கேனா?”
“இல்ல மா அப்படிஇல்ல என்னோட முகம் அவன் மாதிரி இருக்கு. என்னை பார்த்தால் உனக்கு அவனோட நியாபகம் வரும்ன்னு நினைச்சேன் அதான்!” என்றான் வீரா.
சக்தி சட்டென சிரித்தவள். “நீங்க கோபுரம் அதிரா! உங்களை பார்க்கும்போது எனக்கு எப்படி குப்பை நியாபகத்துக்கு வரும். என்னை பாருங்க” என்றாள்.
வீரா தயக்கத்தை விடுத்து திரும்பினான். சக்தி பெரு மூச்சுடன் இரண்டு கையெடுத்தவள். நீங்க மட்டும் இல்லன்னா நான் நிச்சயமா!.. நினைக்கவே..
என்ன பேச்சு இது? அவன் முன்னாடி நீ வாழ்ந்து காட்டனும் என்றான் வீரா.
“ஹீரோ சாரு ஆயிரம் பொண்ணுங்களை கடந்து வந்திருக்கார். அதுல நான் பத்தோட பதினொண்ணு அதிரா! அதனாலே என்னை நினைப்பு இருக்காது” என்றாள் விரக்தியாக..
“கண்டிப்பா இல்ல! நீ அவனுக்கு தனித்துவம்” என வீராவின் குரலில் உறுதி தெரிந்தது.
சக்தி சட்டென நம்ப இயலா பார்வையுடன் நோக்கினாள்.
வீராவை அதிர்ச்சியுடன் பார்த்தாள். “என்ன அதிரா இப்படி பேசுறீங்க? நீங்களா இப்படி? நான் என்னால இதையெல்லாம்.. பிளீஸ்! அவனை பத்தி பேசாதீங்க அதிரா”
“அப்போ நீ அவனை பழி வாங்க போறதில்லையா?” என்றான் தீர்க்கபார்வையில்..
“அவனுக்கு தான் நான் யாருன்னு தெரியலயே நான் எதுக்கு அவன் கிட்ட என்னை நிரூபிக்க வேணும்?”
வீரா சிரித்தபடி “நான் ஒத்துக்குறேன் சக்தி. ஆனால் யோசிச்சு பாரு! அவன் சினிஇன்டஸ்ட்ரில நடிக்க ஆரம்பிச்சதுல இருந்து ஒவ்வொரு சனிக்கிழமை யும் அந்த கெஸ்ட் ஹவுஸ்ல அதுதான் நடக்குது. அப்படி பார்த்தால் அவனோட குழந்தை எத்தனை பொண்ணுங்க வயித்துல வளரனும்?”
“அய்யோ அதிரா! டென்ஷன் பண்ணாதீங்க?” என தலையை பிடித்தபடி அமர்ந்தாள்.
“இத்தனை பொண்ணுங்க கூட இருந்திருக்கானே அது எங்கயாவது வெளியே வந்திருக்கா? எந்த பொண்ணாவது கம்ப்ளைன்ட் சொல்லி பிரஸ்ல வந்திருக்கா? வெளியே லீக் ஆகி இருக்கா? இல்ல எந்த பொண்ணு கூடவாவது லவ் அஃபெர்ல இருக்கானா?”
சக்தி நகத்தை கடித்தபடி அமர்ந்திருந்தாள்.
No சக்தி நகத்தை கடிக்காத! நல்லா யோசி அதுக்கு என்ன காரணம்னு எனக்கு தெரியும்.
சக்தி வயிற்றை வருடியபடி “அது எனக்கு தெரிஞ்சா என்ன தெரியாட்டி என்ன? வேணாம் அதிரா!”
“நீ தெரிஞ்சுக்கணும் சக்தி! அவன் இப்படி சுதந்திரமா சுத்த காரணம். அவனை தேடி வர பொண்ணுங்கள்ள பாதி பேர் நடிகைகளாக அவன் கூட இருந்து அடுத்த கட்டத்துக்கு போகனும்னு நினைப்பாங்க. ஆனால் அவன் இதை வச்சு சான்ஸ் தரவே மாட்டான். சும்மா அந்த உடல் தேவைக்காக.. அண்ட் சில பேர் பணத்துக்காக வருவாங்க. சில பேர் உடல் தேவைக்காக மட்டுமே வருவாங்க. அதனாலே தான் வெளியே எதுவும் வரல.”
“இது பாரின்ல சாதாரணம் கிரிக்கெட்டர்ஸ், பாக்சர்ஸ் ஃபுட்பால் பிளேயர்ஸ், ராக் ஸ்டார்ஸ் ஆக்டர்ஸ் இப்படி எல்லாருக்கும்ன்னு சொல்ல வரல சில பேருக்கு இந்த பக்கம் இருக்கும். எக்சாம்பிலா ஒரு ஓல்ட் நியூஸ் ஐ திங்க் ஒலிம்பிக் வில்லேஜ்ல பிளேயர்ஸ் ஸ்டே பண்ணிருந்த இடத்தில்.. ஹோட்டல் காட்டேஜ் பிளேசில் இருந்து நம்பர் ஆஃப் யூஸ் பண்ண காண்டன்ஸ் கிடைச்சிருக்கு இது நியூஸ்ல வந்து பரபரபாச்சு!”
“அதுக்கு நான் தான் கிடைச்சனா அதிரா! எனக்கு அவர் மேலே அப்படி ஒரு தாட் இருந்ததே இல்லை. நான் விரும்பி அவரோட படத்தை பார்ப்பேன் அவ்ளோ தான். ஆனால் இப்படி..” என சக்தி கோபமாக வைத்திருந்தாள்.
“இல்ல சக்தி! அவன் செஞ்சத நான் நியாயபடுத்தள”
அவனோட எந்த பேச்சையும் நான் கேட்க விரும்பல அதிரா பிளீஸ் என்றாள் ஆவேசமாக.
“அவன் எல்லார் கிட்டயும் சேப்டியா பிளே பண்ணிருக்கான் சக்தி ஆனால் உன்கிட்ட அப்படி நடந்துக்கல. எனி வே எனக்கு அங்கே என்ன நடந்ததின்னு தெரியல. பட் அவன் வேணும்னு பண்ணிருக்கான் இது தப்பு! அதோட பின்விளைவுகள் என்ன வரும்ன்னு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அப்போ அது தப்பு தானே! உன்னை பிளான் பண்ணி ஏமாத்தி இருக்கான். உன்னை ஏன் இப்படி பண்ணினோம் அப்டின்னு வறுத்தபடனும். எல்லா பொண்ணுங்க.. ஐ மின் உன்னை மாதிரி பொண்ணுங்க ஃபீலிங்ஸ் அண்ட் நீங்க ஆண்கள் மேலே வச்சிருக்க நம்பிக்கையை இப்படிபட்ட ஆள் தானே தரமட்டம் ஆக்குறான். அதை தான் நான் சொல்ல வந்தேன்.. இனி உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். உன்னோட விருப்பம் சக்தி” என அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் வீரா.
ஒரு வாரம் வீரா சொன்னதை யோசித்தாள். அந்த நேரத்தில் லேபர் பெயின் வர.. ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டாள். அவளின் கையை ஆதரவாக பிடித்துக்கொண்டான் வீரா.
வீரா எனக்கு எதுவும் ஒன்னுன்னா.. என சக்தி கண்களில் நீர் வழிய பார்க்க.. “அடிவாங்க போற நீ! உனக்கு ஒன்னும் ஆகாது. உனக்காக நான் வெயிட் பண்ணுவேன் வர! அதிரான்னு நீ எப்போ கூப்பிடுவேன்னு நான் காத்துட்டு இருக்கேன்.”
அதி.. அதிரா என கத்தினாள் சக்தி. அதன் பின் இன்னும் கொஞ்சம் சத்தத்துடன் கத்தினான் ஒருவன். ஆம் ஆண்குழந்தை பிறந்தது.
சார் உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு என கொண்டு வந்து நர்ஸ் கொடுக்க.. வீரா அந்த குட்டி குழந்தையை ஆசையுடன் பார்த்தான். எத்தனை அழகு! சக்தியின் கண்கள். ஜாடை மொத்தமும் தமன் போல..
சக்திக்கு மயக்கம் தெளிந்ததும் பார்க்க சென்றான். குழந்தையை கண்ணீருடன் பார்த்தவள் வீராவின் கைகளை பிடித்துக்கொண்டு “நீங்க மட்டும் இல்லன்னா இவனும் இல்ல நானும் இல்ல அதிரா! உங்க தம்பி என்னோட வாழ்க்கையை அழிச்சிருக்கலாம் ஆனால் நீங்க எனக்கு புது வாழ்க்கைய உருவாக்கி கொடுத்திருக்கீங்க. உங்களுக்கு என்ன கைமாறு செய்ய போறேன்னு தெரியல”
என்ன பேச்சு பேசிட்டு இருக்க மா! இது ஹேப்பி மொமன்ஸ்! ஜஸ்ட் என்ஜாய் பண்ணு! பாரு இவன் உன்னை மாதிரி இருக்கான் என வீரா காட்ட..
நான் அசல்ன்னு நம்பி போலிய காதலிச்சுட்டேன். அவனை பார்க்கிறதுக்கு முன்னாடி நான் உங்களை பார்த்திருக்கனும் அதிரா என்றாள் சக்தி உருக்கமாக..
ஆல்ரெடி ஐம் மேரிட்.. இப்படி எல்லாம் சொல்ல கூடாது. என்றான் சிரித்து சமாளித்துக் கொண்டு..
சும்மா சொன்னேன். உங்க மேல எனக்கு எந்த தவறான எண்ணமும் இல்ல. என்றாள் சக்தி.
சரி வீட்டுக்கு போவோம் என ஒருத்தியாக சென்றவள். இப்பொழுது குட்டி மனிதனுடன் வந்து சேர்ந்தாள்.
வீரா குழந்தையின் கைகளை ஆசையுடன் வருடி பார்த்தவன். எனக்கும் அஸ்வத்தாமனுக்கும் அம்மா பாசமே கிடைச்சத்தில்லை சக்தி. ஆனால் நீ இவனை எந்த குறையும் இல்லாம உன்னோட பாசத்தை கொட்டி வளர்க்கணும் என கூறி கொண்டிருக்க.. .
“அதிரா நான் ரெடி!”
“என்ன?” என வீரா திரும்பி பார்த்தான்.
“இல்ல அதிரா நீங்க சொன்னீங்களே அதுக்கு நான் முழு மனசா சம்மதிக்கிறேன்.”
“எதுக்கு மா?”
“எனக்கு அஸ்வத்தாமன பழி வாங்கணும். அவனோட நிம்மதி போகனும். அதுக்கு என்ன பண்ணனும் அதிரா!” என அவன் முன் வந்து நின்றாள் சக்தி.
“நிஜமாத்தான் சொல்றயா?”
“முன்னாடி தான் எனக்குன்னு யாருமே இல்ல. இப்போ என்னோட பையன் இருக்கான். நீங்க இருக்கீங்க. இனி அவனுக்காக நான் உழைக்கணும் என் பையன நான் உங்களை மாதிரி ஒரு நல்ல மனுசனா இந்த உலகத்துக்கு உருவாக்கனும். என்னோட சொந்தகாலில் நிக்கணும்” என்றாள் உறுதியுடன்..
இந்த sprit தான் நான் உன்கிட்ட எதிர்பார்த்தேன். தாராளமா பண்ணு. உனக்கு பிடிச்ச எது வேணும்னாலும் பண்ணு. நான் உனக்கு அரண் போல இருப்பேன் என்றான் வீரா.
“கண்டிப்பா” என சக்தி சிங்க பெண்ணை போல நின்றாள்.
பிஸ்னஸ் லீட் பண்றயா? என வீரா ஆரம்பிக்க.. இல்ல வீரா நான் ஆக்ட் பண்ண போறேன்! என்றாள் சக்தி.
என்ன சொல்ற? என வீரா கொஞ்சம் அதிர்ச்சியுடன் கேட்க..
“சாமுத்ரிக லட்சணம் என் முகத்தில் இருக்காம் டாப் ஸ்டார் சூப்பர் ஸ்டார் அஸ்வத்தாமன் சொன்னாரு. அதனாலே நான் நடிக்க போறேன். முக்கியமான கண்டிசன் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். கதை மட்டுமே! ஒரு குழந்தைக்கு அம்மா கேரக்டர்ல கூட ஓகே. நேசனல் அவார்ட் வாங்கணும். சபலமான உடை போடவே மாட்டேன். எனக்கு ஏற்றவகையில் நடிக்க போறேன்.” என்றாள் தீர்க்கமாக..
அப்போ முதலில் உன்னோட அடையாளத்தை மாத்தணும்.
சக்தி அவனை பார்க்க..
இனி நீ சக்தி இல்ல.. சைத்ரா இனி உன்னோட பேர் சைத்ரா! .. இந்த பேருக்கு அர்த்தம் new bright light.. உன்னோட வாழ்க்கையில் புதிய உறவு உன்னோட பையன். நீ இனி சைத்ராவாக நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கணும். எல்லா இடத்திலும் உன்னோட வெற்றி! நீ வெற்றியோட வளம் வரணும். அஸ்வத்தாமன் உன்னை நினைச்சு நினைச்சு ஒவ்வொரு நொடியும் வேதனை படனும் என கூறினான்.
“இனி நான் சைத்ரா” என உற்சாகத்துடன் கூறினாள் சக்தி.
இல்லங்க இனி சைத்ரா.
ஒன்றரை வருடங்களுக்கு பிறகு ( சைத்ரா நடிப்பு பள்ளிக்கு சென்றது அவளின் குழந்தை ஆருத்ரனின் மழலை நினைவுகளை அதிரடிக்காரன் part -2 ல எழுதி இருக்கிறேன் படித்துக் கொள்ளுங்கள்.)
A square என்னும் வீராவின் புதிய prodection கம்பனியில் இருந்து வந்த முதல் படம் ஆண் பாவம் ( ஆணும் பாவம்) என்னும் பெயர் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தது. சைத்ரா எதார்த்தமான நடிப்பில் அனைவரையும் கொள்ளை கொண்டாள். அவளின் ஆத்மார்த்த நடிப்பு பாலிவுட், டோலிவுட் என அனைத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.
இதோ அவனும் திரும்பி பார்த்தான்.
எவன்? அஸ்வத்தாமன்..?
அஸ்வத்தாமன் – சைத்ரா சந்திப்பு
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels











💬 1 comment
Super super super super super super super super super super super super super