🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
34. அழகிய அசுரா
அழகிய அசுரா
📖 அழகிய அசுரா · Chapter 34 of 41

அழகிய அசுரா

  • 2 Jul 2025
  • 359 reads
  • ★ 5.0 (1)
  • 7 min read

Episode -33

“யாரும் பார்த்திட போறாங்க? உன்னை யார் இங்கே வர சொன்னது? முதல்ல வெளியே போ! ஆரு பார்த்தால் பிரச்னை ஆகிடும். உனக்கு என்ன வேணுமோ! நான் உன்னோட வீட்டுக்கு வரேன் அங்கே வந்து பேசிக்கலாம் அதிரா பார்த்திட்டா என்னால explain பண்ண முடியாது” என சக்தி பதட்டத்துடன் இருந்தாள். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அஸ்வத்தாமன் ஒரு பெரு மூச்சை விட்டபடி, “இனி என்னை தேடி நீ கெஸ்ட் ஹவுஸ் வர வேணாம்.”

அவள் புறியாமல் பார்த்து கொண்டே என்ன திருந்திதடிகளா? சார்! என புருவம் தூக்கினாள். எள்ளல் சிரிப்புடன்.. 

நான் என்ன சொன்னாலும் நீ நம்ப மாட்ட! இட்ஸ் ஓகே! ஆனால் என் மனசுல நீ தான் இருக்க! உனக்காக நான் என்னோட உயிர் போற வரைக்கும் காத்திருப்பேன் என்றான் தமன். 

“ம்ம் உருட்டு செக்கில் ஆட்டுன சுத்தமான உருட்டு! நல்லாருக்கு நீங்க கிளம்புங்க” என அவள் ஆயாசமாக அமர..

“இன்னும் நான் பேசி முடிக்கல.”

“சரி பேசுங்க என அவள் போனை நோண்ட..  எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கனும். அண்ட் ஆருவோட அப்பா நான் தான்னு எல்லாருக்கும் சொல்லணும்” என தீர்க்கமாக கூறினான். 

What the hell? என கோபமாக எழுந்தாள். 

“நீ என் கூட வாழ வேணாம். ஆனால் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும். ஆருவோட அப்பா நான் தான்னு இந்த உலகத்துக்கு சொல்லணும்.”

முடியாது டா! என ஆவேசமாக அவள் பேச வர.. 

“நான் சொல்றத முழுசா கேளு! நீ என் கூட வாழ வேணாம். உனக்கு என்னை பிடிக்காதுன்னு தெரியும். நீ எவ்ளோ என்னை வெருக்கிற அப்டின்னு கூட எனக்கு தெரியும். அது நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் இருக்க விசயம். ஆனால் ஆருவோட வாழ்க்கையில் என்னால எந்த தாக்கமும் இருக்க கூடாது”

“இதுக்கு நான் எப்படி சம்மதிப்பேன்னு நீ நினைக்கிற? நீ படத்தில் வேணும்னா ஹீரோவா இருக்கலாம்! நிஜத்தில் நீ வில்லன் டா! என் பையன் முன்னாடி ஹீரோ அப்பா ஆக பிளான் பண்றயா? நடக்காது இதுக்கு நான் ஒரு காலும் ஒத்துக்க மாட்டேன். உன்னை நான் கல்யாணம் ச்சீ!” என சைத்ரா கொந்தளித்தாள். 

“அம்மா இல்லாம நான் சின்ன வயசில இருந்து கஷ்ட பட்டு வளர்ந்திருக்கென். இந்த பணத்தை வச்சு என்னால எங்க அம்மாவை வாங்க முடியல. நீ அம்மா அப்பா இல்லாம கஷ்ட பட்டிருக்க. அந்த உறவுகளோட அருமை எனக்கு தெரியலன்னு நீ சொன்னால் கூட அம்மா அப்பாவோட தேவை முக்கியத்துவம் என்னன்னு என்னை விட உனக்கு நல்லாவே தெரியும். நான் எனக்காக உன்னை என் கூட வாழ கூப்பிடல. அதுக்கு தகுதியும் எனக்கு இல்ல. நீ என்கூட வந்து வாழ நான் என் வாழ் நாள் முழுக்க காத்திருப்பேன்.”

“ஆனால் ஆரு அந்த கொடுமைய ஏன் அனுபவிக்கனும். என்னோட வாழ்க்கையில் உன்னை தொட்டத தவிர பெருசா நான் எந்த தப்பும் பண்ணதில்லை. நான் செஞ்சது எல்லாமே தப்பு தான். உன்கிட்ட கெஞ்சி திருந்த ஒரு வாய்ப்பு கேட்டேன். நீ தரல இட்ஸ் ஓகே ஆனால் அம்முவும் வீராவும் சேர்ந்து அவங்க பசங்க கூட இருக்கும் போது ஆருவுக்கும் அந்த ஏக்கம் வரும். என்னை விட்டு போகணும்னு தானே உனக்கு ஆசை! நீ எங்கே வேணாலும் போ ஆனால் போறதுக்கு முன்னாடி இதை ஒன்னை மட்டும் செஞ்சிட்டு போ! உன்னை கையெடுத்து கும்பிடுறேன்” என உருக்கமாக கெஞ்சினான். 

அவள் அமைதியாக இருக்க, எவ்ளோ நேரம் எத்தனை நாள் வேணும்னாலும் டைம் எடுத்துக்கோ! என்னோட காரியத்தை சாதிக்க நான் என்ன வேணாலும் பண்ணுவேன். நீ ஒத்து வரலைன்னா உன்னை ஒத்துக்க வைப்பேன். யோசிச்சு சொல்லு. உன்னோட பதில் ஆருவுக்கு சாதகமாக இருக்கணும். இல்ல பிடிவாதம் பிடிப்பேன் அப்டின்னு நீ நின்னா அஸ்வத்தாமனுக்கு பல முகம் இருக்கு. அதையும் உனக்கு காட்டுவேன். இது வரைக்கும் நான் எட்ட நிக்க ஒரே காரணம். உன்னை நான்..  நீ சரி நான் தப்புன்ற விசயத்தால மட்டும் தான் யோசிச்சு சொல்லு என அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். 

“எனக்கு டைம் வேணும்”

அஸ்வத்தாமன் புன்னகையுடன் திரும்ப..  எனக்கு ரெண்டு வருசம் டைம் வேணும். என்றாள். 

அவன் புருவம் சுருக்கி பார்க்க, உன் கூட வாழ வரேன்னு மட்டும் நினைக்காத! அது என்னைக்கும் நடக்காது. என சக்தி சொல்ல.. 

ஆரு ஸ்கூல் போற வரைக்கும் தான் உனக்கு டைம். அவன் ஸ்கூல் ஜாயின் பண்ணும் போது அப்பான்னு வர இடத்தில் அஸ்வத்தாமன்னு என்னோட பேர் இருக்கணும். தட்ஸ் இட் என அவ்விடத்தை விட்டு சென்றான். 

சக்தி தலையை பிடித்த படி அவ்விடத்தில் அமர்ந்தாள். “பெண் பாவம்! அவனது அகம்பாவம்” என்பது ஆனந்தராஜின் புது படம்.. ஏற்கனவே சக்தி மற்றும் அஸ்வத்தாமன் இருவரும் சேர்ந்து மூன்றாவது படத்தில் நடித்து கொண்டிருக்க.. நடுத்தர வயது மனிதனாக எதார்த்த கதாபாத்திரத்தில் ரிஸ்க் எடுத்து அகம்பாவம் படத்தில் அதே பாத்திரமான ஜோடி வில்லியாக நடித்து, தங்கையாக நடித்து, மூன்றாவது படத்தில் ஹீரோயின் இப்பொழுது நான்காவது படத்தில் அவனுக்கு ஹீரோயின் வேடம். ஆம் அஸ்வத்தாமன் தான் அகம்பாவம் படத்தில் ஹீரோவாக நடிக்க போகிறான். ஹீரோயின் வேறு யார் சாட்சாத் சைத்ரா தான். 

கோபத்துடன் அவனுக்கு கால் செய்தாள் சைத்ரா. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

கல்யாணம் பண்ணிட்டு உன்னை நெருங்க நினைக்கல! இப்போது கூட படத்துக்காக அப்டின்னு பொய் சொல்ல மாட்டேன். என்னை பத்தி உனக்கு புரிய வைக்கவும், உன் கூட இருக்கவும் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கிறேன் சக்தி. பிளீஸ் நடிக்க மட்டும் தான் டி! மாத்த படி நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன் தூரத்தில் இருந்து பார்த்திட்டு போறேன் பிளீஸ் டி! என உருக்கமாக பேசினான். தமன். 

அவள் வெடுக்கென போன் கட் செய்தாள். வீரா சிரித்த படி எதிரில் இருப்பவனை பார்த்தான். 

ஆமா A square productions வீராவுடயது என தேடி வந்து விட்டான் தமன். 

அவள் கிட்ட நீ என்ன டிரை பண்ற? என வீரா கேட்க.. 

என்னை பார்த்தால் உனக்கு எப்டி தெரியுது? நான் கஷ்ட படுறத நினைச்சு சந்தோச படுறயா நீ! அந்த கிழவன் வளர்ப்பு அப்படி தான் இருக்கும் போடா ** என கெட்ட வார்த்தையில் திட்டினான் அஸ்வத்தாமன். 

வீரா அப்பொழுதும் சிரித்தான். தமன் முறைத்தபடி என்னை இதுல பார்ட்னரா சேர்த்துக்க டாக்கமெண்ட்ஸ் ரெடி பண்ணிட்டு கூப்பிடு. என அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். 

“பாஸ் சக்தி மேடம் கிட்ட தமன் சார் பத்தி சொல்லலாமே! அவங்களை சேர்த்து வைக்க..” என கௌதம் கூற.. 

இது அவங்க வாழ்க்கை கௌதம். அவங்க தான் போராடனும் அணில் வேலையும் அனுமான் வேலையும் நம்ம பார்க்கவே கூடாது. ட்ரு ஃபீலிங்ஸ் இருந்தால். அந்த நாய் உண்மையாகவே சக்திய விரும்பினால் கண்டிப்பா ரெண்டு பேரும் சேருவாங்க. ஒன்லி நம்ம ஆடியன்சா நடக்கிறத வேடிக்கை பார்க்கலாம் என்றான் வீரா. 

அய்யோ என தலையை பிடித்தபடி கத்தினாள் சக்தி. முன்பு எந்த வார்த்தையையும் அசால்ட்டாக சொல்லி அவனை வேதனை படுத்த அவளால் முடிந்தது. ஆனால் இப்பொழுது? இப்போது முடியவில்லை. எதோ செய்கிறது. இல்ல நம்ப கூடாது. இப்படி நான் நம்பி தானே என்னை மொத்தமா அனுபவிச்சு சக்கை மாதிரி தூக்கி போட்டுட்டான். இப்போ இப்போ!.. என பைத்தியம் பிடித்தவள் போல நிம்மதி இல்லாமல் தவித்தாள். 

அடுத்த நாள் அகம்பாவம் ஷூட்டிங் ஆரம்பித்தது. தமன், ஆனந்தராஜ், சைத்ரா, அன்ஷிதா என நால்வர் தான் முக்கிய பாத்திரம். இதில் தமனின் ராஜின் முதல் மனைவி சைத்ரா. கதையின் படி அஸ்வத்தாமன் சைத்ராவை விட்டு செல்வான் அன்ஷிதாவை மணந்து கொண்டு அவளுடன் முன்னேறி விடுவான். கை குழந்தையுடன் இருக்கும் சைத்ராவின் வாழ்க்கையில் ஆனந்த் ராஜ் வந்து அவளை பாதுகாத்து கடைசியாக அவர்களின் இடையில் காமம் இல்லாமல் தோழமையுடன் கதை முடியும். துணை மட்டும் போதும் ஊருக்காக வாழ்க்கை துணை தேவையில்லை என்பது கதையின் கரு. அஸ்வத்தாமனின் அகம்பாவம் கடைசி வரையில் மாறாது. கதையின் இறுதியில் ஒரு ஆக்சிடன்டிள் அஸ்வத்தாமன் சிக்கி கொள்ள நிறைய இரத்தம் இழந்து உயிருக்கு போராடுவான். அன்ஷிதா சைத்ராவிடம் போய் கெஞ்சி அழைப்பாள். சைத்ரா வருவாள் ஆனால் அஸ்வத்தாமன் அவளது தானம் தனக்கு வேணாம் என இறந்தே விடுவான். 

இந்த கதையில் சைத்ரா மிடில் கிளாஸ் பெண்ணாக வருவாள். அன்ஷிதா கணவனால் கை விடபட்ட பெண். ஆனந்த ராஜ்  விவாகரத்தான ஆண்மகன். தனது எட்டு வயது மகளை பார்க்க தனது மகளின் முகத்தை பார்க்க ஏங்கும் உருக்கமான கதாபாத்திரம். 

இதில் அன்ஷிதாவுக்கும் அஸ்வத்தாமனுக்கும் வரும் காதல் காட்சிகள் மிகவும் ஆலமானதாக இருக்கும். 

கதையை முழுதாக படித்து முடித்தாள் சைத்ரா. இதோ இரண்டு நாட்களில் ஷூட் ஆரம்பித்தது. “மோகம் முத்தாடுது” படம் இறுதி கட்டத்தை எட்டி இருந்தது.  அதாவது அஸ்வத்தாமன் அவளை ஒப்பந்தம் செய்து கட்டாயபடுத்தி நடிக்க வைத்த படம். சர்வேஷ்வரன் கமிட் ஆகி கட் ஆன படம். 

ஒரு மாதம் கடந்த நிலையில் அஸ்வத்தாமன் முன்பை விட இன்னும் முதிர்ச்சியாக காணபட்டான் பெரிதாக எதிலும் அலட்டி கொள்ளவில்லை. இதோ சுதந்திர தினத்துக்கு சூரியனோ சந்திரனோ ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டு கொண்டிருந்தது. அஸ்வத்தாமனா இல்ல சைத்ராவா! என ஆக்ரோஷமாக ரசிகர்கள் கொண்டாடினார்கள். 

தீபாவளி விருந்தாக ஹலோ மிஸ்டர் காதலா படத்தில் தங்கையாக வந்து கொள்ளை கொண்ட சைத்ராவை இன்னும் கொண்டாடினார்கள். அந்த பாடத்தில் உதட்டை சுழிக்கும் அவள் முகத்தை ரீல் செய்து ட்ரெண்ட் ஆக்கினார்கள். 

அவ்வப்பொழுது தூரத்தில் இருந்து அவளை ரசிப்பான் தமன். அவன் ரசிக்கிறான் என தெரிந்தும் திரும்பி பார்க்க மாட்டாள் சக்தி. கதையை தவிர எதை பற்றியும் பேசுவது இல்லை. ஆனால் அந்த கண்கள்! அந்த கண்கள் ஆயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் கொஞ்சம் தடுமாறி போகிறாள். ஆனாலும் சறுக்கல் இல்லாமல் சென்றது வாழ்க்கை. 

எத்தனை நாளைக்கு..? 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode ★ 5.0 (1)

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!