Episode -31
டிஸ்கஸ்டிங் என்று சொல்லிக்கொண்டு சக்தி திரும்ப அவளுக்கு முன்னால் அஸ்வத்தாமன் நின்றிருந்தான் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நொடி பார்த்தவள் ஆருவை அவ்விடத்திலிருந்து அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
அங்கிருக்கும் அனைவரும் அஸ்வத்தாமனை பார்த்துவிட்டு புன்னகையுடன் அப்போ அந்த குழந்தை வீராவோடது இல்ல. இவரோடது தான். என அஸ்வத்தாமனை பார்த்து கூறியவர்கள்.
அதனால தான் அந்த பொண்ணு இவங்க வீட்ல இருக்கா! எல்லாரும் ஒற்றுமையா தான் இருக்காங்க. நம்ம தான் தப்பா புரிஞ்சுகிட்டோமோ! என்னமோ… தப்புதான்.. இவங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜ் போல படத்துல நடிக்கும் போதே லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்காங்க போல.. என்ன சார்? இப்படி சீக்ரெட்டா கல்யாணம் பண்ணிட்டீங்க! உங்க அண்ணன் கல்யாணத்துக்கு கூப்பிடல நேராக வளைகாப்புக்கு கூப்ட்பிருக்கார். நீங்க அதுக்கும் மேலே கல்யாணம் முடிஞ்சு குழந்தையே வளர்ந்துட்டா! சீக்ரெட் ரொமான்ஸ் போல என சிரித்தவர்கள். எப்போ அஃபீஸியலா அனோன்ஸ் பண்ண போறீங்க? என்று அங்கிருக்கும் அனைவரும் ஆர்வமாக அஸ்வத்தாமனை கேட்டார்கள்.
அஸ்வத்தாமனுக்கு தலை ஒரு நொடி சுற்றியது. எவ்ளோ பெரிய உண்மை! நான் இதை எப்டி யோசிக்காம போனேன். நேற்று கூட c* போடு c* போடுன்னு சொல்லிட்டே இருந்தாலே என வேக மூச்சுடன் கைகால்கள் பரபரக்க.. அப்போ அப்போ அவள் கூட அன்னிக்கு ராத்திரி அன்னிக்கு ராத்திரி நான் அவள் கூட.. என தமன் கண்களில் நீர் கோர்த்து கொண்டது. அப்போ ஆரு என்னோட பையனா? என இன்னும் தீவிரமாக யோசித்தவன் வேகமாக ஆதி சங்கரனிடம் சென்றான் அம்முவிடம் சென்றான்.
அப்பா ஆருவோட முழு பேர் என்ன? அம்மு ஆருவோட முழு பேர் என்ன? என கேட்டான் துடிக்கும் உணர்வுகளை கட்டு படுத்துக் கொண்டு..
“ஆருத்ரன்” என்றார்கள் இருவரும்.
அப்போ ஆருன்னு வீரா,அம்மு அப்பா எல்லாரும் கூப்பிடுறாங்க. ருத்ரன்னு சக்தி கூப்பிடுறா! என யோசித்தவன் ஓரிடத்தில் இருக்கையில் அப்படியே அமர்ந்தான். வீராவோட மனசுல அம்மு மட்டும் தான் இருக்காங்க. வீரா அவங்களை தவிர வேற யாரையும் நினைக்க மாட்டான். அப்போ அது வீரா குழந்தை இல்ல. என் என் என்னோட குழந்தை! அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னாளே! என கைகளை மடக்கிய படி எழுந்தவன் நேராக சக்தியை பார்க்க புறப்பட்டான்.
இதுக்கு ஒரேவழி தான் இருக்கு கண்டிப்பா வீரா நம்ம கிட்ட எதுவும் சொல்ல மாட்டான். சக்தி கிட்டயே கேட்கலாம் என அவளை அனைத்து இடங்களிலும் தேடி சென்றான்.
சக்தி ஒருவித பதட்டத்துடன் காணப்பட்டாள். அவனுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்குமோ! எது எப்படி இருந்தால் என்ன? அவனுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நான் யாரையும் ஏமாத்தள! அவன் ஒரு கெட்டவன் என தீவிர சிந்தனையில் இருக்க.. கையில் இருக்கும் ஆரு நெண்டினான்.
ப்ச் ஆரு! என்ன பண்ற நீ? என சக்தி அதட்ட.. அம்மு அம்மு போலா! அம்மு போலா! என ஒரே ஆர்பாட்டம்.
போலாம் அமைதியாக இரு ஆரு நீ ரொம்ப சேட்டை பண்ற! என சொல்லிய படி அவனை அழைத்து கொண்டு வெளியே வந்தாள். அவனது பார்வையே சொன்னது இவன் வீரா இல்லை என.. ஆனால் அது குழந்தைக்கு தெரியாதே! ப்பா அம்மு அம்மு! என அவன் கைகளை நீட்ட..
ஆரு அது உன்னோட அப்பா இல்ல அதிரா அம்முவோட இருக்கார் வா நம்ம அப்பா கிட்ட போலாம் தங்கம் என குழந்தையை அழைத்து கொண்டு முன்னால் எட்டு வைத்தாள்.
“என்னோட பையனுக்கு என் அண்ணனை அப்பான்னு சொல்ல எப்டி உனக்கு மனசு வந்தது? ஏன் சக்தி இப்படி பண்ற?” என அஸ்வத்தாமனின் குரல் கோபம், இயலாமை, ஏக்கம் என அனைத்தையும் பிரதிபலித்து எழுந்தது.
எகத்தாள சிரிப்புடன் அவனை பார்த்தவள். ஒரு நிமிசம் வெயிட் பண்ணுங்க ஆருவை அவங்க அப்பா கிட்ட விட்டுட்டு வரேன். என சென்றாள்.
ஹே ஸ்டாப் இட் சக்தி! உன்னை வார்ன் பண்றேன் என குரலை உயர்த்தினான்.
அவள் கண்டு கொண்டாள் இல்லை. ஆருவை ஆசையுடன் பார்த்தான். அன்று வீரா வீட்டுக்கு வரும்போது ஆருவுடன் அவன் செலவிட்ட தருணத்தை நினைத்தால் இப்பொழுது கூட மனம் ஆருவின் பால் ஈர்க்கும். அவ்வளவு மழலை தனம் மாறாத ஆரு.
அடுத்த பத்து நிமிடத்தில் அஸ்வத்தாமனின் முன் சக்தி நின்றிருந்தாள்.
“சக்தி!”
“சட் அப் இன்னொரு தடவை என்னை சக்தின்னு சொல்லி கூப்பிட வேணாம். நான் சைத்ரா தான்”
“இல்ல நீ என்னோட சக்தி!”
“ஹ ஹ ஹாஹா! என சிரித்தவள். உன்னோட சக்தியா? நானா? என்னை சக்தியில் இருந்து சைத்ராவா மாத்தினதே நீ தான் டா! எனக்கு சைத்ராவாக இருக்கணும்.”
அஸ்வத்தாமன் அவளை புரியாமல் பார்க்க.. உனக்கு புரியாது! எப்படி புரியும்? தூங்குறவங்கள எழுப்பலாம் ஆனால் தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்பவே முடியாது.
“அதான் மூச்சுக்கு முன்னூறு தடவை என்னோட சக்தி என்னோட சக்தி ன்னு சொல்றயே! இதையும் சொல்லு உண்மைய சொல்ற! அன்னிக்கு ராத்திரி நீ வேணும்னு தானே பிரிக்காசன் இல்லாம என்கூட இருந்த!”
அஸ்வத்தாமனின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிகள்..
பதில் சொல்லு! என கர்ஜனையுடன் கேட்டாள்.
இல்ல நான் என்ன சொல்ல ..
இந்த மண்ணாங்கட்டி விளக்க மயிரு எனக்கு வேணாம். கேட்டதுக்கு பதில் சே யெஸ் ஆர் நோ!
“நான் பண்ணேன்! ஆனால் இண்டன்ஷனா பண்ணல! உனக்கு குழந்தை பிறக்கும்ன்னு எனக்கு தெரியாது”
“ச்சீ இதை இந்த வார்த்தை எவ்ளோ அபத்தம்ன்னு உனக்கும் தெரியும். எனக்கும் தெரியும். என் கற்பு போச்சு அதுக்கு நீ தான் காரணம் அதை கூட நான் அக்சப்ட் பண்ணிக்கிறேன். ஆனால் நீ பிரிக்காசன் போட்டு செஞ்சிருந்தீனா கூட எதோ ஒகே! ரெண்டு பேரும் இஷ்டபட்டு.. என நிறுத்தியவள் தொண்டையை சரிசெய்து “சரிடா நான் இஷ்டபட்டு தான் உன்கூட படுத்தேன். பச்சையா சொல்லபோனால் அதான் உண்மை. ஆனால் நீ ஒரு தடவை என்னை யூஸ் பண்ணிட்டு தூக்கி போடுறதுக்கு, எதுக்கு டா பிரிகாசன் இல்லாம பண்ண? “
“இல்ல சக்தி நான் உன்னை லவ்”
“ச்சீ! இதை கண்டிப்பா நான் நம்ப மாட்டேன். அப்படி நீ என்னை விரும்பி இருந்தீன்னா!” என தொண்டை அடைக்க பேசியவள் “என்னோட புனிதத்தை என்னோட உடல் மொத்தத்தையும் உனக்கு கொடுத்ததுக்கு நீ 80 லட்சத்தை எனக்கு கொடுத்திருக்க மாட்ட!”
உண்மை தான் அஸ்வத்தாமன் அதே இடத்தில் நிலை இல்லாமல் தவித்தான். “தப்புதான் நான் பண்ணது தப்புதான் பிளீஸ் அதுக்காக நீ ஏன் கல்யாணம் ஆகிடுச்சுஎன்னு பொய் சொல்லி டிராமா பிளே பண்ண! ஆரு என்னோட பையன்! எதுக்கு அவனை என் கிட்ட இருந்து மறைச்ச?” என அவன் பேச வர..
“ஏன்னா ஆரு என்னோட பையன்”
“நான் இல்லாம அவன் உனக்கு எப்டி வந்தான்?” என ஆண்மை தலை தூக்கியது அவனுக்கு.
“சரிதான் ஆனால் ஆரு மட்டும்தான் உனக்கு ஒரே பையன்னு எப்டி உறுதியாக சொல்ல முடியும்? சாருக்கு கிளைகள் நிறைய இருக்கு. 100 பொண்ணுங்க கூட நீ படுக்கையில் இருந்திருக்க. எத்தனை பேருக்கு உன்னோட பாரி வள்ளல் குணம் போல, எத்தனை பொண்ணுக்கு பிள்ளை வரம் கொடுத்திருக்கன்னு நான் DNA test எடுத்து பார்க்க முடியுமா என்ன?” என்றாள் தெளிவுடன்.
“ஹே மைன்ட் யுவர் டங்க்! நான் எல்லார் கூடயும் பிரிகாசன்.. அண்ட் நீ என்னை ரொம்ப மட்டமா பேசுற சக்தி. இஷ்ட பட்ட பொண்ணுங்க கூட தான் நான் இருந்திருக்கேன்.”
“அதையேதான் சார் நானும் சொல்றேன். நீங்க இஷ்டப்பட்டு நிறைய பேருக்கு குழந்தை கொடுத்திருந்தா! பத்தோடு பதினொன்னா என்னோட குழந்தை வரக்கூடாது. அதேபோல உன்னோட குழந்தைனு சொல்லி அடையாளப்படுத்திக்க எனக்கு விருப்பமில்லை. நானே அவனுக்கு எல்லாமாக இருக்க முடிவு பண்ணிருக்கேன் ப்ளீஸ் இதுல தலையிடாதே”
“நான்தான் சொல்லிட்டு இருக்கேன்ல உன்கூட மட்டும் தான்டி பிரகாஷ்ன் இல்லாம பண்ணேன்! எனக்கு ஆரு மட்டும் தான் பையன். உன் கூட மட்டும் தான் நான் நானாக விருப்ப பட்டு.. “என்று கத்திவிட்டான் தமன்.
சக்தி அவனை அதிர்ச்சி மாறாமல் பார்த்தாள்.
அஸ்வத்தாமன் அவள்பக்கம் அருகில் வந்து ஆமாண்டி பிளான் பண்ணித்தான் உன்கூட இருந்தேன். எனக்கு உன்ன புடிச்சிருந்தது. அதை சொல்ல வார்த்தையே இல்லை. அந்த அளவுக்கு உன்னை புடிச்சி இருந்தது. எனக்கு நீ வேணும்னு தோணுச்சு. உன்னை எடுத்துக்கணும்னு தோணுச்சு. ஆனா கட்டாயப்படுத்த கூடாதுன்னு நினைச்சேன். காரணம் நீ எல்லா பொண்ணுங்க மாதிரியும் என்னை பார்க்கல. நீ தனித்துவமான பொண்ணு. நீ இதுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்னு தோணுச்சு. வற்புறுத்தக் கூடாதுன்ன நெனச்சேன். ஆமா நான்தான் பிளான் பண்ணி அந்த அடியாள் செட் பண்ணி சிம்பதி கிரியேட் பண்ணி உன்கூட இருக்கணும்னு நினைச்சேன். நீயா உன்ன எனக்கு கொடுக்கணும்னு நெனச்சேன். அதே மாதிரி பண்ண நீயும் என்கூட இருந்த! ஆனா உன் கூட இருக்கும்போது நான் என்னையே புதுசா உணர்ந்தேன்.”
ச்சீ என அவள் முகம் சுளிக்க..
“நீ இல்லாம என்னால ஏன் இருக்க முடியலன்னு தோணுச்சு. ஒரு மணி நேரத்துக்கு மேல் எந்த பொண்ணு கூடயும் நான் இருந்ததில்லை. ஆனால் உன் கூட மூணு நாள். எனக்கு நானே கேட்டுக்கிட்டேன்! நீ இல்லாம உனக்கு நான் அடிக்ட் ஆகிட்டேன். அவமானமா இருந்தது. நீயே எனக்கு பலகீனமா ஆகிட கூடாதுன்னு தான் உனக்கு 80 லட்சம் பணத்தை கொடுத்தேன். ஆமா பிளான் பண்ணிதான் உன் கூட பிரகாஷன் இல்லாம இருந்தேன். அது குழந்தையாக உருவாகும்ன்னு நான் எதிர்பார்க்கல. நீ என்னை விட்டு போனதும் தான் இது செக்ஸ் மட்டும் இல்ல அதுக்கும் மேல ஒரு பாதுகாப்பு, ஒரு எப்டி சொல்றது அலைகடல் மாதிரி என்னோட உணர்வுகள் உன்கிட்ட மொத்தமா கட்டுபட்டது. உன்னை சும்மா சும்மா என் மனசு தேடுச்சு.அது காதல்ன்னு இப்போ தான் தெரியுது. பிளீஸ் சக்தி எனக்கு நீ வேணும். உனக்கு உன்கிட்ட தான் நான் இந்த உணர்வ ஃபீல் பண்ணேன். இப்போ என் பையன்! ஆரு! அவன் என் பையன்” என்று கூறி முடித்தான் அஸ்வத்தாமன்.
சக்தி பொறுமையாக “உன்னோட நடிப்பு வேஷம் கலைஞ்சு போச்சு நீ பிளான் பண்ணி பண்ணிட்ட! ம்ம் ஓகே அதோட முடிஞ்சு போச்சு. உன் வேலையை நீ பாரு. என் வேலையை நான் பார்க்கிறேன்.” என்று அவள் திரும்ப..
அவளை கையைப் பிடித்து இழுத்தவன். சக்தி எனக்கு ஆரு வேணும் என்று கூறினான் தமன்.
அவன் என் பையன் உனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என கையை உதறிவிட்டாள் சக்தி.
“அவன் நம்ம பையன்டி ப்ளீஸ்! எனக்கு அவன் வேணும். எனக்கு நீ வேணும். நான் பண்ணது தப்புதான் என்னை மன்னிச்சிடு” என்று அஸ்வத்தாமன் கேட்க..
மன்னிக்கணுமா? சரி நான் வேற ஒருத்தன் கூட படுத்துட்டு உன்கூட வரட்டுமா அதுக்கப்புறம் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம் என்று சக்தியின் வார்த்தை வாயில் இருக்கும் போதே அஸ்வத்தாமன் அவளின் கழுத்தை இறுக்கி பிடித்தான்.
“நான் பண்ணா? நீயும் பண்ணுவியா? இது போட்டி மாதிரி இருக்கு. நீ பண்ண கூடாது.”
“நான் ஏன் பண்ண கூடாது? அது என்னடா பொண்ணுங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு? கெட்டவார்த்தை! எல்லா கெட்டவார்த்தையிலயும் பொண்ணுங்க தான்! பொண்ணுங்க மட்டும் தப்பான வழியில போனா இத்தனை கெட்ட வார்த்தை வச்சிருக்கீங்க.. அவங்க அம்மாவ திட்றது, அந்த பொண்ண திட்டுறது, எல்லா கெட்ட வார்த்தையும் பொண்ணுங்களுக்கு மட்டும் தான் படைச்சிருக்காங்களா? ஆம்பிளை உத்தமனாடா! நீ அப்படிபட்டவனா? என்னை பண்ண கூடாதுன்னு சொல்றதுக்கும் உனக்கு என்னடா அறுகதை இருக்கு? முதல்ல நகரு நீ! I hate you”
ப்ளீஸ் நான்தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்ல்ல.
உன்ன நான் மன்னிக்கவே மாட்டேன்.
ப்ளீஸ் சக்தி எனக்கு ஆரு வேணும். நீ வேணும். நான் திருத்திக்கிறேன். நான் திருந்திட்டேன். ஆக்சுவலா இப்போ என்னோட மொத்த எண்ணமும் உன்னை சுத்தி தான் இருக்கு. என்னை நம்பு என்று அஸ்வத்தாமன் அவனது சூழ்நிலை அனைத்தையும் எடுத்துரைக்க…
நீ திருந்திட்டாலும் திருந்தலனாலும் எனக்கு கவலை இல்லை. ஏன்னா ஆருவோட அப்பா நீன்னு எனக்கு இன்றோ கொடுக்க விருப்பமில்லை. அந்த இடத்தில் உன்ன வச்சு என்னால பாக்க முடியல. ஏன்னா நீ என் வாழ்க்கையை மொத்தமா அழிச்சிருக்க. நீ பிளான் பண்ணி எனக்கு ஆருவ கொடுத்திருக்க! அது உனக்கு புரியுதா? என்று அவனை தள்ளிவிட்டாள்.
அவளின் பின்னால் நாய் போல கெஞ்சினான். காலை கட்டி கொண்டு அழுதான். என்ன என்னவோ செய்து பார்த்தான் தமன். மீண்டும் மீண்டும். “நான் தான் மன்னிப்பு கேட்கிறேனே” என்று அஸ்வத்தாமன் மீண்டும் ஆரம்பிக்க..
“சரிடா நான் உன்னை மன்னிக்கிறேன்னு வச்சுக்கோ! அதுக்கு முன்னாடி சில விசயத்தை எனக்கு clarify பண்ணிடு அப்புறம் நான் உன் கூட சேரும் விசயத்தை பத்தி யோசிக்கிறேன். நீ பதில் சொல்லு நான் உன் கூட வரேன் நீ என்ன சொல்றியோ அதை நான் கேட்கிறேன்”
என்ன சொல்ல போகிறாளோ என்று பதட்டத்துடன் பார்த்தான் தமன்.
நான் ஒருவேளை நடிகையா வராம போயிருந்தா? வேற எங்கேயோ வாழ்ந்துட்டு இருந்தா? உனக்கு என்னை பத்தி தெரிஞ்சுருக்குமா? அண்ட் என் கூட படுத்ததுக்கப்புறம் நீ எந்த பொண்ணு கூடையுமே இல்லையா? அண்ட் இது எல்லாத்தையுமே விடு நீ திருந்திட்டேன்னு சொல்றல்ல திருந்தினவன் எதுக்குடா என்னை மறுபடியும் படுக்க கூப்பிட்ட? அதுக்கு பதில் சொல்லு? என்னை உனக்கு பிடிச்சதால இப்போ நாய் மாதிரி செஞ்சிட்டு இருக்க. இதுவே உனக்கு பிடிக்காத நீ இந்த அளவுக்கு expect பண்ணாத ஒரு பொண்ணு உன் குழந்தைய வயிற்றில் சுமந்திருந்தால் ஆக்சிடன்ட்டலா நடந்திருந்தால்? அந்த பொண்ணை அக்சப்ட பண்ணிருப்பயா?
அஸ்வத்தாமன்…?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels











💬 1 comment
Episode romba super ha iruku