Episode -17
சைத்ரா அதே முகம் மாறாத சிரிப்புடன் அது என்னோட பையன் தான் சார். குட்டி பையன் ருத்ரன். And சாரி சார் ஒன் வீக் நீங்க பாவம். சாரி ஆணும் பாவம் படத்துக்கு கங்கிராட்ஸ் பண்ண நினைச்சீங்கன்னு டைரக்டர் சொன்னார். அப்போ நானும் என்னோட பையனும் வெக்கேசனுகாக ரிசார்ட் போயிருந்தோம் அதான் பேச முடியல என்றாள் கூலாக..
அஸ்வத்தாமனுக்கு உலகமே ஒருநொடி அவனுக்கு எதிராக திரும்பியது போல ‘ஒரு உணர்வு. என்ன சொல்கிறாள்? இது உண்மையா? அப்போ அதுக்கு அதுக்கு அர்த்தம் என்ன? நான்? என்னை? எப்படி இவளால் மறக்க முடியும்?’
அவனது குரல் கமரியது. உடலில் வலு குறைந்தது. சிவந்த கண்களுடன் “என்னை மீட் பண்ணது உனக்கு நியாபகம் இருக்கா?”
“எப்ப? ஹான் ரெண்டு வருசம் இல்லல்ல அது கொஞ்சம் தான் நியாபகம் இருக்கு.” என தவிர்த்தாள்.
“சீரியஸ்லி என்னை நீ மறந்துட்டயா? நீ என்னை லவ் பண்றேன்னு சொன்னியே? அது கூட மறந்து போச்சா?” என உருக்கமாக கேட்டான்.
சைத்ரா மாறாத சிரிப்புடன் “சார் பழசை பத்தி பேச என்ன இருக்கு? சொல்லுங்க? அதை விட முக்கியமான விசயம். அந்த மாதிரி படுக்கையில் இருக்கும் போது சொல்ற வார்த்தை அது அந்த மொமண்ட இன்னும் கொஞ்சம் ஃபயர் பண்ண மட்டும் தான். உங்களுக்கும் சந்தோஷம் எனக்கும் சந்தோஷம். சொல்ல போனால் அது அற்ப சுகம்.. அதோடு முடிஞ்சு போச்சு. படுக்கையில் சொன்னதையெல்லாம் நினைப்பு வச்சிட்டா உங்க கிட்ட எத்தனை பொண்ணுங்க லவ்ன்னு பின்னாடி நிப்பாங்க. நீங்க எத்தனை பொண்ணுங்க கிட்ட சொல்லிருப்பீங்க?” என குத்தி கிழித்தாள்.
அவளது பேச்சில் மொத்தமாக அஸ்வத்தாமன் நிலை குலைந்து போனான். அவன் செய்த அத்தனையும் எதிரெதிராக வந்து நின்றது. சாட் ரெடி என முருக பாண்டியன் அழைக்க.. சார் எஸ்கியூஸ்மி என அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் சைத்ரா அவளின் முகத்தில் வெற்றி களிப்பு தாண்டவம் ஆடியது.
அப்பாவி சக்தியாக.. அவனது தீவிர ரசிகையாக அவள் தோற்று போயிருக்கலாம் ஆனால் சைத்ரவாக… அதிவீரா உருவாக்கிய இந்த சைத்ரா எப்பொழுதும் தோர்க்கமாட்டாள். அஸ்வத்தாமன் செய்த பெரிய தவறு அவளின் கற்பை சூறையாடியது. அது பெறுங்குற்றம் ஒரு புறம் இருந்தாலும். அவன் செய்த மாதவறு அவளுடன் உறவாடியது. அந்த உறவு உயிர்நீர் பின்னால் அந்த பெண்ணின் வாழ்க்கையையே தலை கீழாக புரட்டிபோடும் என நினைக்கவில்லை அவன்.
ஒருத்தரையே குற்றம் சொல்ல முடியாதே! சக்தியின் மீதும் தவறு இருக்கிறது. ஒரு ஆடவன் எந்த நோக்கத்தில் தன்னிடம் பேசுகிறான் என தெரியாமல் இருந்தது தவறு. அவன் அவளுக்கு பிடித்தவனாகவே இருக்கும் பட்சத்தில் கூட சுயத்தை இழந்தது தவறு. படுக்கையில் அவனுடன் இருக்கும் பொழுது இஸ்டபட்டு இருந்தாள். தமன் அவளை வற்புறுத்தவில்லை. ஆனால் எந்த நம்பிக்கையில் இருந்தாள்? இது தான் சக்தியின் தவறு. ஒருவேளை வீரா வராமல் போயிருந்தால் அனாதை பெண் கடலில் விழுந்தாள். அந்த அபலையின் வயிற்றில் குழந்தை என செய்தி தாலின் எதோ ஒருபக்கத்தில் வந்திருப்பாள்.
நம்பிக்கை இல்லாத உறவு என்பது கடலில் பயணம் செய்யும் கப்பல்போல மழையும் சரி புயலும் சரி வரத்தான் செய்யும். அதை கடந்து தாங்கிக் கொண்டு துடுப்பு போட்டு செல்ல வேண்டும். மிக முக்கியம் கவனத்துடன் துடுப்பு போட்டால் மட்டுமே கடலை கடக்கவும் முடியும் கரையை அடையவும் முடியும். இங்கு பெண் என்பவளின் உணர்வுகள் அந்த கப்பல் போல அதை கவிழ்க்க அஸ்வத்தாமன் போல புயல் மழை என கவிழ்க்க வந்தாலும், பெண்கள் கவனத்தை கையாண்டு கரையை அடைய வேண்டும்.
சைத்ரா சிறப்பாக அவளின் அனைத்து காட்சிகளையும் நடித்து முடிந்திருந்தாள். உணவை சாப்பிட்டபடி அடுத்த ஸ்கிரிப்ட் மற்றும் காட்சிகளில் கவனம் செலுத்தினாள். ஆனால் தமன்? அவன் மொத்தமாக குழம்பி போயி மனதில் ஒருவித அழுத்தத்துடன் இருந்தான். என்றும் டேக் வாங்காதவன். இன்று தொடர் டேக் வாங்கி கொண்டிருந்தான்.
அதற்கு மேல் முருக பாண்டியன் தமனை திட்ட முடியாமல் தத்தளித்தவர். இன்னிக்கி ஷூட்டிங்க இத்தோடு முடிப்போம். மீதியை நாளைக்கு பார்த்துபோம் பேக் அப் என்றார். எல்லாம் அஸ்வத்தாமனால் வந்த வினை.
அதற்கு அடுத்த வந்த நாட்களில் இரண்டு டேக் வாங்கினான் ஆனால் காட்சிகளை கச்சிதமாக நடித்து முடித்திருந்தான். சைத்ராவை பார்க்க பார்க்க உள்ளுக்குள் ரணமாக இருந்தது. அது எப்படி என்றால் அவனுக்கு பிடித்த விசயம் அவன் அனுபவித்த விசயம் ஆனால் இப்பொழுது அவன் கையில் இல்லை. வேறு ஒருவனுக்கு சொந்தமாகி விட்டாள்.
இந்த முறை ஷாட் தயாரானது. முதல் காட்சி அஸ்வத்தாமன் மற்றும் சைத்ரா இருவரும் இந்த காட்சியில் நடிக்க போகிறார்கள். முதன் முதலாக.. எப்டின்னா படையப்பா மாதிரி. ஆனால் இங்கே நீலாம்பரி நல்லவள் படையப்பா கெட்டவன் அது போல..
சூரியனா? சந்திரனா? கிளாப் நம்பர்- 8, ஆக்சன் என கிளாப் போர்ட் அடிக்க காட்சி ஆரம்பித்தது. சந்திரிகாவின் கண்களில் வன்மமும் வெறுப்பும் மின்னியது. இத்தனை கோபத்தை இதுவரை அவனும் பார்க்கவில்லை. அந்த யூனிட்டில் இருக்கும் அனைவரும் வாயை பிளந்து பார்த்தார்கள்.
டைரக்டர் முருக பாண்டியன் அந்த இருக்கையின் நுனியில் அமர்ந்திருந்தார். சந்திரிகா அவளின் மொத்த வன்மத்தையும் கதாபாத்திரத்தில் கொட்டி கொண்டிருந்தாள். கேமரா அவளின் ஒவ்வொரு உணர்வுகளையும் கவர் செய்து கொண்டிருந்தது. ஒரு பாதி முடித்திருக்க.. இப்பொழுது ஷாட் கேமரா அஸ்வத்தாமனின் முகத்தில் இருக்க கட் கட் என உச்சி கொட்டியபடி எழுந்தார் முருக பாண்டியன்.
கட் என சொன்னதும் சைத்ராவின் முகம் புன்னகையுடன் திரும்ப.. மேடம் அடுத்த நடிகையர் திலகம். இல்லன்னா அடுத்த நீலாம்பரின்னு சொல்லலாம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடச்சது இவங்களா? என்ன? என நம்ப இயலா பார்வையுடன் அனைவரும் பேசினார்கள்.
என்ன தமன் பண்ணிட்டு இருக்கீங்க. இப்போ நீங்க பார்க்கிற பார்வையில் அனலும் தைரியமும் இருக்கணும். நீங்க என்னடான்னா பாவமா பார்க்கறீங்க? இவங்கள ஹீரோயின்ன்னு நினைச்சு ரொமான்டிக் லுக் விடுறீங்க என்னாச்சு உங்களுக்கு? டைம் வேஸ்ட் ஆகுது தமன். இப்படியே போனால் புரட்யூசிங் காஸ்ட் இங்கிரீஸ் ஆகும். மொத்த யூனிட்டும் இங்கே காத்துட்டு இருக்கு. சந்திரிகாவ நீங்க கர்வமா பார்த்து பேசணும் அவளை மூக்கு உடைக்கணும். பிளீஸ் கொஞ்சம் டிரை பண்ணுங்க உங்களுக்கு டைம் வேணும்னா சொல்லுங்க. நானும் இந்த வீக் முழுக்க பார்த்துட்டேன். ஹீரோயின் கூட நடிக்கும் காட்சி எல்லாமே சொதப்பல், கூடவே சந்திரிகா சீன் வரும் போது இன்னும் சுத்தமா உங்களுக்கு ஃபீலிங்ஸ் வரவே இல்ல. என கண்ட மேனிக்கு திட்டினார் என்றே சொல்லலாம்.
ஆனால் அஸ்வத்தாமன் மண்ணு போல நின்றிருந்தான். அவன் காதுகளில் எதுவும் விழவில்லை. தமன் உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் என முருகபாண்டியன் அதட்ட ஹாங் என மீண்டும் அந்த சீனுக்கு ரெடியாக முதலில் இருந்து எடுத்தார்கள். சைத்ரா வழக்கம் போல மொத்த வன்மத்தையும் கொட்டி நன்றாகவே நடித்தாள். அதன் பின் இரண்டு டேக்கில் அந்த காட்சி எடுக்கப்பட்டது.
முருக பாண்டியன் அடுத்த சீன்ல ஸ்கிரிப்ட் எழுத அமர்ந்தார் கொஞ்சம் சரி செய்து ஹீரோயின் சகுந்தலா மற்றும் ஹீரோ சூரியவன்ஷி இருவருக்கான காட்சிகளை கொடுத்தார்.
வழக்கம் போல மூன்று சீன் எடுக்க கிட்டதட்ட மதியம் ஆரம்பித்து இரவு வந்தது. சைத்ரா ஒருபக்கமாக அமர்ந்து இந்த வேடிக்கை காட்சிகளை சிரிக்க முடியாமல் ஸ்கிரிப்ட் பேப்பர் கொண்டு மறைத்து சிரித்தாள். அத்தனை காமெடி அஸ்வத்தாமன் அவமானபட்டும் ஒவ்வொரு இடத்திலும் சைத்ராவுக்கு புது ரத்தம் பாய்ந்தது.
சைத்ராவின் மனதில் எனக்கு தான் சொல்ல ஆள் இல்லை இப்படி என் வாழ்க்கை கெட்டு விட்டது. ஆனால் எந்த மாதிரியான மிருகம் இவன்? பணம் இருக்கிறது. தந்தை இருக்கிறார். குடும்பம் சிதறி கிடக்கிறது என்றாலும் கூட எல்லாம் இருந்தும் அதீத செழிப்பின் உச்சத்தில் எண்ணில் அடங்காத பெண்களை அவனது விருப்பத்துக்கும் மன ஓட்டத்துக்கும் பயன்படுத்தி இருக்கிறான். இவனிடம் எங்கே மனிதத்தனம் இருக்கிறது என அவளுக்கு தோன்றியது.
அடுத்த ஒருவாரத்தில் பித்து பிடித்த அரை கிறுக்கன் போல மாறி இருந்தான். ஷூட்டிங்கு தாமதமாக வந்தான். ஷூட்டிங் முடிந்து சென்றால் மொடா குடி. சஞ்சய் அவனது நிலையை பார்த்து “என்னாச்சு தமன்? ஏன் டா இப்படி இருக்க?” என கேட்க..
“எனக்கு யாருமே இல்ல! என்னை அவள் விட்டு போயிட்டா! எப்டி அவள்… இன்னோருத்தனை இன்னொருத்தன் எப்டி! என்னால ஏத்துக்க முடியல” என புலம்பியவன் குடித்து சரிந்தான்.
“யாரை பத்தி பேசிட்டு இருக்கான்? என்னாச்சு உனக்கு தமன்?” எவ்வளவோ எழுப்ப.. அவன் கனவுலகில் உலாவினான் சாமுத்ரிகாவை தேடி. அவளை பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என துடித்தது மனம். ஆனால் இன்று பார்த்ததும் வேறு நிலையில் துடிக்கிறது. கட்டில் மொத்தமும் அவள் வாசம் அந்த புடவை மொத்தமும் அவள் வாசத்தை வேக்கம் க்லினர் போல அவனது நாசியை கொண்டு மொத்தமாக முகர்ந்து உள்ளே இழுத்தான். இப்பொழுது அஸ்வத்தாமனுக்கு அவள் தேவைபடுகிறாள்.
“இப்போ என்னாச்சு உனக்கு ஏன் இப்படி இருக்க? என சஞ்சய் கேட்க.. ஒண்ணுமில்ல” என எழுந்தான்.
“சொல்லு! அந்த சைத்ரா தானே இதுக்கு காரணம்?”
சட்டென தன் நண்பனை பார்த்தான். சஞ்சய் ஒரு பெரு மூச்சை விட்டபடி. “அவள் எப்போ உனக்கு ரெஸ்பான்ஸ் பண்ணாலயோ அப்போவே நீ தெரிஞ்சிக்க வேணாமா? அவளுக்கு உன்னை சுத்தமா பிடிக்கல..”
“நான் என்ன பண்ணேன்?”
“இந்த கேள்வியை நீ கேட்கலாமா? சொல்லு! அவள் உன்னை எல்லா இடத்திலும் அவாய்ட் பண்றா! அப்டின்னா அதுக்கு ஸ்ட்ராங்கா ரீசன் இருக்கணும். நீ என்ன பண்ண? சொல்லு?” என சஞ்சய் இடை நிறுத்தினான்.
“நான் எதுவும் பண்ணல?” என அஸ்வத்தாமன் நடக்க..
“இந்த கெஸ்ட் ஹவுஸ்ல வேலை செய்யுற தோட்டக்காரான்ல இருந்து எலக்ட்ரிசியன் வரைக்கும் எல்லாருக்குமே தெரியும். நீ ஒரு பொண்ணு கூற மூணு நாள் இருந்திருக்க.. அந்த பொண்ணு யாருன்னு அவங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் அந்த பொண்ணு நீ கொடுத்த காசுக்கு மேலே 1 ரூபாய் காசை வச்சு கொடுத்திருக்கா? அதுக்கு காரணம் என்ன? நீ என்ன பண்ண? கண்டிப்பா நீ எதோ பண்ணிறுக்க. நீ எதுவுமே பண்ணாம அந்த பொண்ணு எதுக்கு அப்படி வச்சு கொடுத்திருப்பார்? சொல்லு! என்ன நடந்தது? சொல்லு?” என நின்றான் சஞ்சய்.
அஸ்வத்தாமன்…?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels











💬 Be the first to comment