Episode -6
இன்னிக்கே எதுக்கு போற? எப்போவும் வெள்ளிக்கிழமை ஃப்ரீன்னா டாடிய தான பார்க்க போவ? என்னாச்சு தமன் உனக்கு என கேட்ட வாரே காரை ஓட்டினான் சஞ்சய்.
“ஒன்னும் இல்ல சும்மா தான்” என ஜன்னலில் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தான் அஸ்வத்தாமன்.
உங்க தாத்தா!.. என சஞ்சய் ஆரம்பிக்க, நெற்றியை தேய்த்தான் தமன்.
“வீரா கூட எதுவும்?…”
“ரொம்ப சந்தோசமா இருக்கான். என்னை விட… பிஸ்னஸ்ல நெக்ஸ்ட் லெவல் அண்ட் life-லயும் அடுத்த கட்டத்துக்கு போக போறானாம்”
சஞ்சய் புன்னகையுடன் “நல்ல விசயம் தானே! உன் அண்ணன் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்கிறது நல்லது தான! இதுல உனக்கென்ன பிரச்னை?”
பிளீஸ் சட் அப்! நீ எனக்கு வேலைக்காரனா? இல்ல அவனுக்கா? அவனை பத்தி பேசாத! இன்னும் நான் ரொம்ப தூரம் போகனும். அவனை விட பெரிய இடத்துக்கு போகனும் நீ காரை நிறுத்து என கோபமாக கத்தினான்.
“சாரி தமன் என சஞ்சய் சமாதானம் செய்ய வர, நிறுத்துன்னு சொன்னேன். நிறுத்து நான் நடந்து போறேன்! ரெண்டு நாள் என்னை டிஸ்டர்ப் பண்ணாத! சண்டே ஈவ்னிங் ஷூட் இருக்கு பிக் அப் பண்ண வா!” என சொல்லி விட்டு விடாப்பிடியாக நடந்தான்.
தூரத்தில் அவனை பின் தொடர்ந்தார்கள்.”பீம் பாய்ஸ்!”
மெல்ல நடந்துகொண்டே அவனது கெஸ்ட் ஹவுசை நோக்கினான். கோபம், ஆத்திரம், அதனுடன் தனிமை வாட்டி வதைத்தது. ஆதிசங்கரன் அஸ்வத்தாமனுக்கு பெண் பார்த்து கொண்டிருக்கிறார். “அவனுக்கு முன்னால நீ கல்யாணம் பண்ணிடனும். உன் அம்மாவை நான் ஜெயித்து காட்டணும்” என தினசரி ஒரே பின்பாட்டு போனில்… “கல்யாணமா? அது உங்களோட வாழ்க்கையிலேயே எழுதி கிறுக்கபட்டு கிழித்து எரிந்த அத்தியாயம். அதை என்னோட வாழ்க்கையில் கொண்டு வர நினைக்காதீங்க” என ஆவேசமாக கத்திவிட்டு வந்தான்.
இதெல்லாம் தினமும் நடக்கும் கூத்து ஆனால் கடைசி வார்த்தை ஆதிசங்கரனிடம். “அந்த பொம்பளைய ( பத்மினி) லவ் பண்ணி கல்யாணம் பண்ணீங்களே? இப்போ என்னாச்சு? உங்களை விட்டுட்டு போயிட்டா! இங்கே காதலும் மாயை கல்யாணம் வேஸ்ட் ஆஃப் டைம். உங்களோட காதல் கண்றாவி உண்மையா தானே அந்த லேடிய விரும்பினீங்க? உங்களை வேணாம்னு தூக்கி எரிஞ்சிட்டு போய்ட்டா! அப்டின்னா உங்களோட காதல் எப்படிப்பட்டது?” என தமன் அலட்சியமாக பேசிவிட்டு வந்தான்.
ஆதிசங்கரன் நொடிந்து போனார். அதிவீரனிடம் சவுந்தரபாண்டியன் ஒரு நாள் கூட உன் அப்பா கெட்டவர் உன் அம்மாவை விட்டு சென்று விட்டார் என ஒரு நாள் கூட சொல்லி வளர்த்ததில்லை. ஆனால் ஆதி அதற்கு எதிர்பதமாக ஒவ்வொரு நாளும் உன்னோட அம்மா என்னை விட்டு போயிட்டா! உன் தாத்தா அப்படி இப்படி என சொல்லி வளர்த்தது தான் அவனுக்கு உறவுகளின் மீது பிடிப்பு இல்லாமல் இப்போ கண் முன் இருக்கும் பெண்களை போதை வஸ்துவாக பார்க்கிறான்.
நானும் ஒர் பெண்ணென பிறந்த பழனை இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின் ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்
எந்த நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடி கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கே நீயும் ஓடி கொண்டே இருக்கிறாய்
அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா என மன்மதன் படத்தின் பாடல் இனிமையான தேன் குரலில் இருந்து கேட்க, தமனின் நடை சட்டென தடைபட்டது.
மெல்ல நின்றவன் கால்கள் மெதுவாக நுழைவு வாயிலை பார்த்தது.
ஹே சக்தி சக்தி! சக்தி என கூச்சலாக சத்தங்கள் கேட்க.. மேடையிலிருந்து அன்ன நடையுடன், கண் பார்வையால் அவனை அஸ்வத்தாமனை கவர்ந்து அவள் வயப்படுத்திக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்திற்கு முன் கேட்ட பாடல் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது தமனுக்கு. கொஞ்சும் குரல்… குரலா அது ஒரு புறமிருக்கட்டும். அந்த கொடியிடையும், மென்மையான தேகமும். மெல்ல குலுங்கும் முன்னழகை அவள் கைகள் மடிப்பை சரி செய்தபடி இறங்கும் அழகு அய்யோ!… உஃப் சந்திர முகம், செவ்விதழ்களும், செந்தாமரை மலர்க்கண்களும்…. அந்த கழுத்துக்கு கீழ் இப்பொழுது அவள் சரி செய்த மடிப்பு மீண்டும் களைகிறதே!.. அப்போ ஜாக்கெட் கொஞ்சம் இருக்கமா இருக்கும். Blast blast…ஒன்றோடு ஒன்றிணைந்த மார்பகங்களும், முகம்… இது தான் கண்ணு.. இப்படி தான் இருக்கணும் மூக்கு.. இந்த லிப்.. Oh f**..
வேணும் சந்திர தரிசனம் பண்ணனுமே! இவள்!.. இவள் எனக்கு இப்போவே வேணுமே! Oh yaar இவ்ளோ நேரம் எனக்கிருந்த டென்ஷன பிராக்சன் செகண்ட்ல காணம போயிடுச்சே! தமன் எதுவும் செய் டா!.. Do it!.. என காளையின் வேகத்தில் இருந்தான் அஸ்வத்தாமன்.
சாமுத்ரிக லட்சணம் இருக்கான்னு மொத்தமா அவள் கிட்ட ஆராய்ச்சி பண்ணனும். தைஹை எப்படி இருக்கும்? உஃப்!.. என பெரு மூச்சை விட்டவன். தீவிரமாக யோசித்தான்.
அடுத்த ஒரு சில நிமிடங்கள்…
உன்னை முழுதாக நானும் மென்று முழங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் மறக்கவோ
எந்தன் படுக்கரைக்கு உந்தன் பெயர் வைக்கவோ
அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்றுக் கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்து கொள்ள
அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்றுக் கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்து கொள்ள என அவள் பாடிக் கொண்டிருக்கும் போது அவசரமாக HOG வெளியே ஓடினார். அவரின் பின்னால் இன்னும் சில ஆபிஸ் பேக்கல்டீஸ் சென்றார்கள்.
HOG சுரேஷ்குமார் புன்னகையுடன் பூங்கொத்தை நீட்டினார்.
ஹே தமன் என அங்கிருக்கும் அனைவரும் கத்த ஆரம்பித்தார்கள். அஸ்வந்த்தா? என இரண்டு கண்கள் அழகாக பிரமிப்பில் விரிய பீம் பாய்சுடன் உள்ளே நுழைந்தான் அஸ்வத்தாமன்.
ஹே புராஜக்ட் சக்சஸ் பார்ட்டிக்கு அஸ்வத்தாமன சீப் கெஸ்ட்டா வந்திருக்காங்க என பெண்கள் அனைவரும் துள்ளலுடன் பார்த்தார்கள்.
ஹை அஸ்வந்த்! என உற்சாகமாக அவனருகில் நோக்கி சென்றாள் சக்தி.
அனைவருடனும் க்ரூப் போட்டோ எடுத்தவன். அங்கிருக்கும் அனைவரையும் பார்த்து கொண்டிருந்தான். என்று சொல்வதை விட பார்வை மொத்தமும் சக்தியை தழுவி கொண்டிருந்தது.
எப்படி இது நடந்தது? தீடிரென எப்படி இந்த பார்ட்டிக்கு அஸ்வத்தாமன் வந்து சேர்ந்தான். சாமுத்ரிக லட்சணத்தை பார்த்ததும் அடுத்த ஒருசில நொடியில் உள்ளே செல்ல திட்டமிட்டு இப்போது வந்துவிட்டான்.
ஒவ்வொரு நொடியும் மோகம் வெடித்துக் கொண்டிருந்தது. “அஸ்வந்த்” என அவன் முன்னால் ஆர்வத்துடன் நின்றிருந்தாள் சக்தி.
தமன் அவ்விடத்தை விட்டு ஒரு சில நொடியில் கிளம்பினான்.
“சார் உடனே போறீங்க?” என சுரேஷ்குமார் வந்து நிற்க.. நீங்க பார்ட்டிய என்ஜாய் பண்ணுங்க. என சாஷ்டாங்க புன்னகையுடன் நடந்து சென்றான் தமன்.
அவன் நடக்க நடக்க பெண்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு போட்டோ எடுத்தார்கள். அவர்களுள் சக்தியும் இருந்தாள். அனைவருடனும் படங்களை எடுத்தவன் அவளை மட்டும் வேண்டுமென்றே தவிர்த்தான்.
ஹே சூப்பர் தேங்க்ஸ் தமன் என அனைத்து பெண்களும் கூறிக் கொண்டே விலகி செல்ல.. அஸ்வந்த் சார்! அஸ்வந்த் சார்! அஸ்வந்த் சார்! என அழைத்த படி அவன் பின் மான்குட்டி போல ஓடினாள் சக்தி. அதற்குள் அவர்கள் நுழைவுவாயிலை தாண்டியிருந்தார்கள்.
அஸ்வந்த் சார் என அவள் அழைக்க, அதற்குள் அவனது கெஸ்ட் ஹவுஸ் நுழைவு வாயில் பக்கம் வந்திருந்தான்.
என்ன நடந்து அங்கே போறார்? அது தான் அவரோட கெஸ்ட் ஹவுஸ்சா! உள்ளே போறதுக்குள் ஒரு போட்டோ பிடிக்கணும் என வேகமாக நடந்து சென்றாள். அஸ்வந்த் அஸ்வந்த் சார்! என ஆசையுடன் அழைத்தபடி அருகில் நெருங்கினாள்.
பீம் பாய்ஸ் இதுக்கு மேலே no entry என அவளை தடுக்க.., பிளீஸ் ஒரே ஒரு ஃபோட்டோ பிளீஸ் என அவர்களிடம் சக்தி கேட்ட படி எட்டி பார்த்தாள்.
என்ன சத்தம்? என்னாச்சு? என கேட்ட படி திரும்பினான் அஸ்வத்தாமன்.
ஒரு ஃபோட்டோ பிளீஸ் சார்! நான் உங்க die heart fan என கண்களும் உதடுகளும் அழகாக விரிந்தது.
Oh sure! கண்டிப்பா என வாங்க எடுக்கலாம். என நடந்து கொண்டே கூறினான்.
சக்தி அந்த பீம் பாய்ஸ் அனைவரையும் கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றவள் மூச்சு வாங்க அவன் முன் நின்றாள்.
ஹே ஜஸ்ட் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் நான் எங்கேயும் போகல ஃபோட்டோ தானே கண்டிப்பா எடுப்போம் என அவளை பார்வையில் பருகி கொண்டிருந்தான் தமன்.
ஹை அஸ்வத்தாமன்! என நின்ற இடத்திலேயே ஒரு நொடி குதித்தாள் சக்தி.
அவளுடன் சேர்ந்து Wow என தமனின் நாடி ஒரு நொடி குதித்தது. அஸ்வந்த் நான் இது நம்மளோட ரெண்டாவது மீட் நான் எவ்ளோ ஹாப்பியா இருக்கேன் தெரியுமா? என சக்தி கூறிக்கொண்டிருக்க..
என்ன சொல்றீங்க? என தீவிரமாக யோசித்தான். ஆமா இங்கே பாருங்க என போன் wallpapar -ஐ அவனிடம் காட்டினாள் சக்தி.
Oh அன்னிக்கே மிஸ் பண்ணிட்டேன். இன்னிக்கி மிஸ் பண்ண மாட்டேன் என்றான் தமன்.
வாங்க இப்போ போட்டோ பிக் எடுப்போம் என அழைத்தவன் அவளிடம் போனை கேட்க.. நானே எடுக்கிறேன் என கண்கள் மின்ன போனை நோண்டினான். அஸ்வத்தாமனின் எண்ணங்கள் இப்போதே தறிகெட்டு ஓடியது.
ம்ம் இப்போ ஓகே என அருகில் நெருங்கி அவள் போட்டோ எடுக்க அவனும் சேர்ந்து கொண்டான். அவளின் வாசனை ஆளை மயக்கியது.
இத்தனை அழகு இத்தனை நாள் என் கண்ணில் படாமல் இருந்திருக்கே! நான் மிஸ் பண்ணிட்டேனே? என இதயம் ஒரு நிமிடம் வருந்தினாலும் இன்று அவள் தனக்கு படுக்கையில் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.
இந்த கண்களும் உதடுகளும் படுக்கையில் கிறக்கத்தையும், மோக முனகல் சத்தத்தை கொடுத்தால் எப்படி இருக்கும்? என இப்போதே குதிரை வேகம் எடுத்தது உடல்கள்..
சாரி நீங்க கிளம்புங்.. என சொல்ல வந்தவன் இரும்ப ஆரம்பித்தான். தண்ணி.. த.. தண்ணி இரு.. என மோசமாக இரும்ப ஆரம்பித்தான் தமன்.
என்னாச்சு உங்களுக்கு? அஸ்வந்த்! என கேட்டபடி அவள் பதட்டத்துடன் அருகில் நெருங்க தெரியல என வாயை மறைத்து இரும்பிக் கொண்டே கெஸ்ட் ஹவுஸ் என சொல்லிய படி வேகமாக வயிற்றை பிடித்தபடி நடந்தான்.
சக்தி பதட்டத்துடன் அவனது பின்னால் சென்றாள். அஸ்வந் உங்களுக்கு ஒன்னுமில்லையே! ஆர் யூ ஓகே அஸ்வந்த் என கேட்டபடி பின்னால் ஓடினாள். அவன் வரும் போது வேலையாட்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் இருக்க கூடாது என்பது எழுதப்படாத விதி அவன் வருகிறான் என தெரிந்ததும் தேவையான உணவுகள் அனைத்தையும் சமைத்து விட்டு சென்றிருந்தார்கள்.
அஸ்வந்த் ஒன்னும் இல்ல என அவனது பின்னால் ஓடியவள். கிச்சன் எங்க இருக்கு என தண்ணீரை எடுக்க ஓடினாள் சக்தி.
அஸ்வத்தாமன்…?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels











💬 1 comment
Ayyo ennada ipdi paninga