🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
20. அழகிய அசுரா
அழகிய அசுரா
📖 அழகிய அசுரா · Chapter 20 of 41

அழகிய அசுரா

  • 2 Jul 2025
  • 365 reads
  • ☆ No ratings yet
  • 7 min read

Episode -19

சக்தியா!” என சஞ்சய் அவனது இடத்தில் இருந்து எழுந்தான். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“என் பேர் சக்தி!” என கிரங்கிய விழிகளில் அவள் கூறியது. “இல்ல நீ எனக்கு சாமுத்ரிகா” என இந்த வார்த்தைகள் அனைத்தும்  தமனது காதுகளில் இப்பொழுது ரீங்காரமாக ஒலித்தது. 

“என்ன பேர் சொன்ன? இப்போ என்ன பேர் சொன்ன?” என வேகமாக எழுந்தான் அஸ்வத்தாமன். 

“நான் பார்க்கிறங்க ரொம்ப தேங்க்ஸ்” என  பொறுமையாக போனை வைத்தவன். “அது உன்னை மசாலா கம்பனிக்கு ஆட் பண்ண கூப்பிட்டாங்க! அதான் கேட்டுட்டு சொல்லலாம்னு பார்த்தேன். என்ன பன்றயா?” 

“என்ன மசாலா கம்பனி?”

“அதுவா? அம்சம் மசாலா! சமையலுக்குன்னு கேட்டு வாங்குங்க” என சஞ்சய் கூற.. 

“இல்ல சக்தின்னு சொன்ன?” 

என்ன சக்தி? அப்படி சொன்னேனா? என சஞ்சய் யோசனையுடன் பாவனை செய்தான். 

“இல்ல நீ சொன்ன? எனக்கு அப் அப்படி தான் கேட்டது.” என தமன் எழுந்து அருகில் வந்தான். 

“இல்லன்னு சொல்றேன் தான”

சரி அதை விடு! நான் அவ..அவ பேரை கண்டு புடிச்சுட்டேன். என தவிப்புடன் கைகளை பிடித்தான். 

“அது தான் எல்லாருக்கும் தெரியுமே? அவள் பேர் சைத்ரா”

“இல்ல அவள் பேர் சைத்ரா இல்ல. அவள் பேர் சக்தி. எனக்கு தெரியும்” என அஸ்வத்தாமன் உறுதியாக கூற.. சித்ரா, சத்யா, சங்கீதா, சஞ்சனா இப்டின்னி இன்னும் நிறைய உனக்கு தோணும். என சஞ்சய் எகத்தாளமாக கூறினான். 

“இல்ல டா நிஜமாவே அவள் பேரு சக்தி தான் நம்பு சஞ்சய்!” என தடுமாறி விழுந்தான். 

சஞ்சய் அவனை பிடித்து அமரவைத்தவன். “இப்படி குடிச்சிட்டு இருந்தால் இன்னும் நிறைய பேர் தோணும் தமன். ஆனால் நீ தெளிவா இருந்து சொன்னா ஏத்துக்கலாம். நீ போதையில் இருக்கியே” என அவனை படுக்கையில் படுக்க வைத்தவன். அவ்விடத்தில் இருக்கும் உடைகளை பார்த்து ஸ்தம்பித்து போனான். 

சிவப்பு புடவை மற்றும்  அதற்கு பக்கத்தில் இருக்கும் ஜாக்கெட் போட்ட தலையணை என தலை சுற்றியது. 

இல்ல சக்தி தான்! இல்ல அவள் பேரு சக்தி தான்! அவள் சக்தி எனக்கு தெரியும்! I know.. என பிதற்றிய படி அவனது சட்டையை ஆவேசமாக பிடித்தான். 

சரி சரி விடு ரெஸ்ட் எடு! என கைகளை மெதுவாக எடுத்து விட்டான் சஞ்சய். இப்படி அவனை பார்க்க கஷ்டமாக இருந்தது. அறையில் இருந்து வெளியே வந்தவன். அஸ்வத்தாமன் அவனோட பக்கத்த சொல்லிட்டான்.  சக்தி எப்டி சைத்ராவாக மாறினாள் அப்டின்னு தெரியணும். கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்! என கிளம்பினான் சஞ்சய். அடுத்தடுத்த அவனது அனைத்து வேலையும் சக்தியை பற்றிய தேடலாக இருந்தது. 

அடுத்தநாள் நிறைய அழைப்புகள் தமனுக்கு வந்தது. சார் என்னாச்சு? உங்களுக்காக தான் மொத்த யூனிட்டும் வெயிட் பண்ணுது பிளீஸ் வாங்க என போன் கால்கள். 

அஸ்வந்த் உடனே கிளம்பினான். சைத்ராவை பார்ப்பதற்காகவே!.. 

சாரி சார் கொஞ்சம் ஹெல்த் இஸ்யூ அதான் வர முடியல நம்ம ஷூட்டிங் போலாம் என அடுத்தடுத்து காட்சிகள் படமாக்கப்பட்டது. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

தமனின் கண்கள் மொத்தமும் சைத்ராவின் மீது தான் இருந்தது. எவ்வளவோ அவனது உணர்வுகளை கட்டுபடுத்தினான் ஆனால் முடியவில்லை. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கிறது. அவள் எனக்கு வேணும் எதாவது பண்ணனும். என தனக்கு தானே சொல்லிக்கொண்டவன் அதை முதல் நாளிலேயே impliment செய்தான். 

ஷூட்டிங் முடித்து விட்டு டயர்டாக சைத்ரா வீட்டுக்கு கிளம்பினாள். வழக்கமாக காரிலேயே அவளுக்கு ஒரு பாதுகாவலன் வந்து விடுவான். அது மட்டுமில்லாமல் மறைமுகமாக பின் தொடர்வார்கள் அவளின் கார்ட்ஸ்.. 

சைத்ரா மிகவும் டயர்டாக இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினாள். அந்த நேரம் பார்த்து கார் மெதுவாக.. வீடு அதுக்குள்ள வந்துடுச்சா என விழித்தாள். 

ஓட்டுநர் அவளை தயக்கத்துடன் பார்த்தான். “என்னாச்சு அண்ணா? ஏன் நின்னுட்டீங்க?” என அவள் புரியாமல் கேட்க..  

“மேடம் நம்ம காரை செகண்ட் பாசோட காரு ஃபாலோ பண்ணுது. அதான் என்ன பண்றதுன்னு… உங்க கிட்ட கேட்க தான் மெதுவா போறேன்.”

“யாரது செகண்ட் பாஸ்? யாரை சொல்றீங்க? அதிராவோட P.A கெளதம் சாரா? இல்ல ஆருவா? ஆரு இப்போ அம்மு கூட இருப்பானே! அவன் எப்டி இங்கே?”

மேடம் அது அது வந்து சின்ன பாஸ்! அவரு அஸ்வத்தாமன் சார் மேம். என்றார் ஓட்டுநர். 

அஸ்வத்தாமன் பெயரை கேட்டதும் உள்ளுக்குள் கோபம் வெடித்தது. கைகளை இறுக்கி மடக்கியவள் வேகமாக திரும்பி பார்த்தாள். 

அஸ்வத்தாமனின் கார் ஃபாலோ செய்தது. “என்ன பண்ண? என்ன பண்ண? இவனுக்கு நம்மள பத்தின ரகசியம் தெரிய கூடாது. அதுவும் ஆருவ பத்தி தெரிஞ்சாலும் பெருசா எதுவும் நடக்க போறதில்லை. இப்போ போயி கேட்கலாமா? கேட்டால் வேற வழியில் போறேன்னு கதை கட்டுவான். என்ன பண்றது?”  என யோசித்தவள். அண்ணா காரை நேராக பிரின்ஸ் ஹொட்டேல் விடுங்க..  என்றாள். 

ஓகே மேடம் என ஹோட்டலுக்கு காரை விட்டான் ஓட்டுநர். ஒரு மாதமாகிறது ஆருவை பார்த்து அவன் சக்தியை மறந்து விட்டான் போலும். அம்மு அம்மு என எப்பொழுது வீராவுக்கு போன் செய்தாலும் மகன் சொல்லும் ஒரே பெயர் அது மட்டும் தான். இன்றாவது தன் மகனுடன் நேரம் செலவழிக்க நினைத்தாள். அது தான் சைத்தான் சைக்கிள்ல வருது என்பது போல அசுரன் காரில் வருகிறான். 

எதுக்கு இவள் ஹொட்டேல் போறா! அதுவும்  வீரா ஹொட்டேல்? என அஸ்வத்தாமன் யோசித்தபடி மாஸ்கை அணிந்து கொண்டான். இது வரை சக்தி பற்றி அங்கிருக்கும் யாருக்கும் தெரியாது. அதனால் தான் தைரியமாக சென்றாள். 

வாங்க மேம் என அவளை வரவேற்றார்கள். அஸ்வத்தாமனுக்கு இப்பொழுது என்ன செய்வதென தெரிய வில்லை. உள்ளே போலாமா வேணாமா? போலாம் அந்த கிழவன் எனக்கும் தாத்தா தான். இந்த சொத்துல எனக்கும் பங்கு இருக்கு. என நினைத்தவன் வேகமாக கேஷுவலாக இறங்கினான். 

அங்கிருக்கும் அனைவருக்கும் தமனை தெரியும். குடும்பத்தில் பிரச்சனை ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். வாங்க சின்ன பாஸ் என அழைத்தார்கள். 

மாஸ்க்குக்கு உண்டான மரியாதை போய்டுச்சே என வேகமாக கழட்டினான். என்ன செய்ய..  இந்த வீரா கூட இருக்க எல்லா நாயிங்களும் இத்தனை அறிவா இருக்குங்க.. என்றவன் கண்கள் சைத்ராவை தேடியது. 

நேராக ரிசப்ஷன் பக்கம் வந்தவன். இங்கே ஆக்டர் சைத்ரா வந்தாங்களே பார்த்தீங்களா? அவங்க எங்கே போயிருக்காங்க? ரூம் புக் பண்ணிருக்காங்களா? என தமன் கேட்க.. 

ரிசப்சனிஸ்ட் திரு திருவென முளித்தாள். ஹே கேட்டது காலில் விழலையா ஆட்டோ கிராப் போட்டு தரேன் சொல்லு என தமன் கேட்க.. 

இல்ல சார் அவங்க VIP சோ அவங்க விவரங்களை கொடுக்க கூடாது. 

“நான் யாருன்னு தெரியும் தானே? என அஸ்வத்தாமன் உரும!”

யாரு நீ? என கேட்டபடி வீரா வந்தான். “என்ன நடக்குது? என்ன வேணும் உனக்கு? என்ன மேம் ஆச்சு?”

ஓ காட் இவன் இப்போவா வந்து தொலைய வேணும். ச்ச என நெளிந்து நின்றவன். அது ஒண்ணுமில்ல.. எனக்கு இங்கே ரூம் வேணும். அதான் கேட்டேன். சொல்லு அப்படி தான என அஸ்வத்தாமன் மிரட்ட..  ஆ ஆமா சார் சின்ன பாஸ் ரூம் தான் கேட்டாரு. அப்டின்னு பொய் சொல்ல மாட்டேன். அவர் ஆக்டர் சைத்ராவோட ரூம் நம்பர் கேட்டார் என மொத்தமாக மாட்டி விட்டாள். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அய்யோ இவன் கிட்ட என்னை மாட்டி விட்டுட்டாலே என தமன் ஒரு வித பதட்டத்துடன் நின்றான். 

“கொடுங்க! கொடுத்து விடுங்க” என வீரா அவ்விடத்தில் அமர்ந்து கொண்டான். 

ஹே இல்ல நான் சும்மா கேட்டேன். அந்த பொன்னும் நானும் படத்தில் நடிக்கிறோம் அதான் என தமன் கூற..  “இந்த மாதிரி விடயத்துக்கு தான் சனிக்கிழமை கெஸ்ட் ஹவுஸ் வச்சிருக்கியே அங்கே கூப்பிட வேண்டியது தானே; இது என்னோட ஹொட்டேல்.” என எழுந்தான் வீரா. 

“ஹே மைன்ட் யுவர் டங்க் இது உனக்கு மட்டும் சொந்தமில்லை. இது அந்த கிழவன் சொத்து. எனக்கும் தான் பங்கு இருக்கு.” என தமன் குரலை உயர்த்தினான். 

அப்படியா? போய் கேட்டு வாங்கிக்கோ. இந்த ஹோட்டலை எக்சப்ட் பிக்காஸ் இது என்னோடது என வீரா கூறினான். 

பாஸ் ஒரு நிமிசம் மேம் டெசர்ட் சாப்பிட வந்தாங்க. ரூம்ல ஸ்டே பண்ணல என்றாள் ரிசப்சனிஸ்ட்.

தமன் எதையும் கண்டு கொள்ளாமல் நேராக ரெஸ்ட்டாரண்ட் பக்கம் சென்றான். 

எங்க ஆக்டர் சைத்ரா? என தமன் கேட்க.. 

பாஸ் அவங்க எப்போவோ சாப்பிட்டு கிளம்பிட்டாங்க என பணியாள் கூற.. வாட் என தமன் அதிர்ச்சியாக நின்றான். 

என்ன சாப்ட்டாங்க மேடம்? என வீரா கேட்க.. 

அல்வா பாஸ் என்றான் பணியாள். 

அல்வா தான்! அல்வா தான் என வீரா சிரித்தபடி தன் இரட்டையை பார்த்தான். 

அஸ்வத்தாமன்…? 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 1 comment

  1. Super super super super super super super super super super super super super super ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

Share your thoughts

error: Content is protected !!