🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
17. அழகிய அசுரா
அழகிய அசுரா
📖 அழகிய அசுரா · Chapter 17 of 41

அழகிய அசுரா

  • 2 Jul 2025
  • 379 reads
  • ☆ No ratings yet
  • 8 min read

Episode -16

சூரியனா? சந்திரனா? என்ற  படத்தின் டைரக்டர் முருகபாண்டியன், மற்றும் புரட்யூசர், படத்தின் இசையமைப்பாளர், நடிகர்கள், துணை நடிகர்கள், என கேஸ்ட் அண்ட் க்ரு மொத்தமும் அவ்விடத்தில் குழுமியிருந்தார்கள். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

படத்தின் ஹீரோயின் வினிகா ஒரு பக்கம் தாவணி பாவாடையில் தங்க விக்ரகம் போல கொஞ்சம் கவர்ச்சியை அள்ளிகொட்டி கொண்டு ட்ரெண்ட் ஆவதற்காக வந்திருந்தாள். இன்னொரு பக்கம் ஹீரோ அஸ்வத்தாமன் ஒயிட் சேர்ட் ப்ளூ ஜீன் அதனுடன் கூலர்ஸ் என பக்காவாக தயாராகி வந்திருந்தான். 

அவனது முக்கிய நோக்கமே எப்படியாவது சைத்ராவிடம் தன்னை உயர்த்திக் காட்டிக்கொள்ள வேண்டும். அதோடு இன்னொரு டிங் டாங் என சரியான நேரத்துக்கு உள்ளே நுழைந்தாள் சைத்ரா. 

அங்கிருக்கும் அனைவரும் எப்படி வினிக்காவை அழைத்தார்களோ அதே போலத் தான் சைத்ராவையும் வரவேற்றார்கள்.  எளிமையான எல்லோ சுடிதாரில் அவளின் கூந்தலை இருபக்கமும் முடி எடுத்து பின்னி விட்டிருந்தவள். எந்த ஒரு ஒப்பணையும் இன்றி அனைவரை பார்த்தும் ஒரு சின்ன புன்னகை அதனுடன் கையெடுத்து வணக்கம் வைத்தாள். 

முன்னழகு கொஞ்சம் அதிகமாக தெரிய பின்னழகு கொஞ்சம் சிறுத்து இருந்தது. ஆடி வந்தா அல்வா கடை அசைஞ்சு வந்தா என பாடல் மனதுக்குள் ஓடியது. இத்தனை அழகையும் மொத்தமாக காட்டி தமனை கட்டி இழுப்பவள் சைத்ரா தான். 

நேருக்கு நேர் என்பதை போல..  இதோ எதிருக்கு எதிர். வினிகா, படத்தின் பிரட்யூசர் ஒருபக்கம் நிற்க, டைரக்டரின் மனைவியின் அருகில் வணக்கத்துடன் புன்னகை முகமாக நின்றாள். அஸ்வத்தாமன் கண்ணாடியை கழட்டி பாக்கெட்டில் வைத்தவன் அவளையே பார்த்தான் வைத்த கண் வாங்காமல்.. 

கிளாப் போர்ட் படத்தின் பெயர் மற்றும் பூஜைக்கு என்னென்ன செய்வார்களோ அந்த வேலை அனைத்தும் நடந்து கொண்டிருக்க.. இன்னொரு பக்கம் அங்கு நடக்கும் காட்சிகளை அப்படியே படம் பிடித்தது பத்திரிக்கை மற்றும் நியூஸ் சேனல்ஸ். 

அனைவரும் சாஷ்டாங்கமாக படம் நன்றாக வரவேண்டும் என வேண்டிகொண்டார்கள். டைரக்டர் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். அனைவரை பார்த்தும் சின்ன தலையசைப்பு அதனுடன் ஒரு வணக்கம் அவ்வளவு மட்டுமே சைத்ராவின் செயலாக இருந்தது. 

இது ஹீரோயின் வினிகா என முருக பாண்டியன் அறிமுகம் செய்துவைக்க.. வணக்கம் கூறினாள்.

புரோடியூசர் டைரக்டரிடம் இந்த பொண்ணு பார்க்க ரொம்ப லட்சணமா இருக்கே. இந்த பொண்ணையே ஏன் நம்ம ஹீரோயினா போட கூடாது என்று கூறவும். தமனின் பார்வை அங்கு சென்றது. 

இப்போ மாத்தினா தேவையே இல்லாம பிரச்னை வரும். ஆணும் பாவம் படத்தில் அந்த பொண்ணோட நடிப்பு அபாரம். அதனால் ஹீரோ கேரக்டரை விட வில்லி கேரக்டர் நின்னு உட்கார்ந்து பேசும் சார். என்றார் முருகன். 

அவன் கைகள் மற்றும் கால்கள் பரபரக்க நின்றிருந்தான். தானாக அருகில் சென்றால் அது பெரிய பிரச்சனையை உருவாக்கும் அதனால் முருகன் அறிமுகம் செய்து வைக்கும் வரை காத்திருந்தான். 

“மேடம் இது இந்த படத்தோட ஹீரோ அஸ்வத்தாமன்! அண்ட் தமன் சார் இவங்களை பத்தி சொல்லவே தேவையில்லை. இப்போ ஆன்பாவம் படம் தான் எல்லா இடத்திலும் ட்ரெண்ட்டா போயிட்டு இருக்கு அந்த படத்தோட ஹீரோயின் சைத்ரா. நம்ம படத்தில சந்திரிகா கேரக்டர் பண்ண போறாங்க” என்றார். 

“ஹாய் வெல்கம் மை டீம்” என கைகளை நீட்டினான் அஸ்வத்தாமன். 

மை பிளசர் சார்! என வணக்கம் வைத்தவள் கைகளை குலுக்கும் நேரத்தில் அவளது பாடி கார்ட் போனை எடுத்து வந்தான். 

சாரி சார் எஸ்கியூஸ் மி! என நகர்ந்துகொண்டாள் சைத்ரா அவ்விடத்தை விட்டு.. 

ஹாய் தமன் என வினிகா வந்து கை நீட்ட… கடுப்புடன் கை குலுக்கிவிட்டு நகர்ந்து கொண்டான். 

வினிகா என்னை பார்த்ததும் எப்படி வழிந்து கொண்டு வருகிறாள். ஆனால் இவள்? என்னை பொருட்டாக கூட மதிக்கவில்லையே! என்னோட தீவிர ரசிகைன்னு சொன்னாலே! இப்போ இவளுக்கு என்னாச்சு? என தமனின் முகம் அப்படியே மாறிப்போனது. 

அனைவருடனும் குழுக்களாக போட்டோ எடுத்தார்கள். ஹீரோ ஹீரோயின் படத்தின் வில்லி என மூவரையும் நிற்க வைத்து ஒரு சில கிளிக்.. சைத்ராவின் முகத்தில் மாறாத சிரிப்பு! அவர்களுக்கு வாகாக நின்று போஸ் கொடுத்தாள். 

தமனிடம் பேசினாள். “சார்!” மற்றும் மாறாத சிரிப்பு. இயல்பான பேச்சு. ஆர்ப்பரிக்கும் சந்தோஷம் இல்லை. என்னாச்சு இவளுக்கு? எங்கே போனது அவளின் துடுக்கு தனம்? ஒருவேளை. எல்லாரும் இருக்கிறார்கள் என இப்படி நம் முன் இருக்கிறாளா? என யோசித்து கொண்டிருக்கும் போதே சஞ்சய் வந்தான் அருகில். 

“சார்!”

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“சொல்லு”

நாளைக்கு மிஸ்டர் காதலா மூவி பூஜை நடக்குது. உங்களுக்கு கால் சீட் இஸ்ஸியு இருக்கான்னு டைரக்டர் கேட்க சொன்னார். 

நாளைக்கு வரேன்னு சொல்லிடு என கூறிய அஸ்வத்தாமன் மனதில் இன்னிக்கி மறந்தது போல இருக்கலாம். ஆனால் நாளைக்கு எப்டி இருக்க முடியும்? அவள் கிட்ட நாளைக்கு பேச கூட கண்டன்ட் இருக்கு. பலவீனமாக காட்டிக்ககூடாது கெத்தா மெயின்டெய்ன் பண்ணனும் என தனக்கு தானே சொல்லிக்கொண்டான். 

அடுத்தநாள் நேற்று நடந்ததை போலவே நடந்து கொண்டாள். ஹீரோயின் ஜோதி ஶ்ரீ புடவையில் படுகிளாமர் லுக்கில் வந்தாள். அஸ்வத்தாமனின் அருகில் நின்றுகொண்டாள் ஒட்டி. வழக்கம் போல டைரக்டர் இன்றோ கொடுக்க.. தெரியுமே! இவங்க என் கூட இன்னொரு படம் நடிக்கிறாங்க என கூறினான். 

புன்னகையுடன் நின்றாள் சைத்ரா. அவ்வளவே! அதே புன்னகை! இந்த சிரிப்பு இந்த சிரிப்பு என அதற்கு மேல் அவனை நகர விடவில்லை. அனைவரும் அவரவர் வேலையில் இருந்தார்கள். ஆனால் தமன் மட்டும் கொஞ்சம் குழப்பமாக இருந்தான் இன்னுமா தன்னை அவளுக்கு நியாபகம் வரவில்லை. 

நாளைக்கு ஷூட்டிங்ல பேசிடனும் என மனதில் நினைத்துக்கொண்டான். சந்திரிகா அவளது ஸ்கிரிப்ட் படித்து முடித்துவிட்டு ஒப்பனையுடன் அவளது சாட்டுக்காக காத்திருந்தாள். இந்த படம் முழுக்க முழுக்க கோபிசெட்டிபாளையம் மற்றும் கோயம்பத்தூர் வட்டாரங்களில் தான் முக்கால்வாசி சூட்டிங். ஒரு பாடல் கேரளா பக்கம் இன்னொரு பாடல் பாரின். ஆனால் பாடக்காட்சிகளில் பெரிதாக  சைத்ராவுக்கு வேலை இல்லை. 

இதோ அவளிடம் பேச அஸ்வத்தாமனே வந்தான் மலை இறங்கி. 

மேடம் என நிக்கிதா அழைத்தாள். ஷூட்டிங் ஸ்பாட்டில் நிக்கிதா என்னும் பெண்ணை சைத்ராவுக்கு காரியதரிசியாக நியமித்திருந்தான் வீரா. 

“சொல்லுங்க நிக்கிதா”

“உங்களை பார்க்கணும்னு தமன் சார் வெயிட் பண்றார்.” 

“என்னையவா? எதுக்கு பார்க்கணும்? வெளியே பீம் பாய்ஸ் இருக்காங்களா?”

“இருக்காங்க மேம் ஆனால் சார் கேரவனுக்குள் வருவார்ன்னு தோணுது மேம்” 

அப்படியா! அப்போ நானே வெளியே வரேன். என்றவள் வீராவுக்கு போன் செய்தாள். மிஸ்ட் கால்ஸ்.. செய்துவிட்டு கதவை திறந்து வெளியே வந்தவள். அதே மாறா புன்னகையுடன் வணக்கம் சார் என்றாள். 

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்?” என தமன் நேரடியாக கூற.. 

“சார் நீங்களா? என் கிட்ட பேசணுமா? ஒருவார்த்தை அச்சோ” என மாறாத சிரிப்புடன் பார்த்தவள். ஒரு நிமிசம் சார். நிக்கி நீங்க ஷூட் ரெடியானதும் இன்பார்ம் பண்ணுங்க. சொல்லுங்க சார் என்ன விசயம்? என கேட்டாள் சைத்ரா. 

“கேரவன் உள்ளே போலாம்.” 

“எதுவா இருந்தாலும் இங்கேயே சொல்லுங்க என்றாள் கடுகடுப்புடன்.. தமன் அதிர்ச்சியுடன் பார்க்க..சார்” என சிரித்தவள் “இப்போ ஷூட் ஸ்டார்ட் ஆகிடும். நான் ரெடியா இருக்கேன். நீகளும் என் முன்னாடி இருக்கீங்க. கண்ணு முன்னாடியே பேசலாமே? எதுக்கு நேரம் வேஷ்ட் பண்ணிட்டு..” என்றாள் சைத்ரா. 

“என்னை உனக்கு தெரியுமா?” 

“ம்ம் நல்லாவே தெரியுமே!” 

“அப்புறம் ஏன் என்னை தெரியாத மாதிரி நடன்துக்கிற? பட பூஜையில் அவாய்ட் பண்ணிட்டு போற? நானா உன்கிட்ட வந்து பேசணும்னு எஸ்பக்ட் பண்ற அதான!” 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“பட பூஜையில் மீட் பண்ணோம் சரி தான். அப்போ நான் தெரியாத மாதிரியா நடந்துக்கிட்டேன்? உங்களை தெரியாதவங்க யாராவது இருப்பாங்களா? நீங்க டாப் ஸ்டார்! சூப்பர் ஸ்டார் எவ்ளோ பெருந்தன்மையாக என்கிட்ட பேசுறீங்க? நான் அவாயிட் பண்ணேனா? எங்கே எப்போ? எல்லார் கிட்டயும் ஒரே போலதான் நடந்துப்பென். எனக்கு அப்படி யாரையும் அவாய்ட் பண்ண தெரியாதே! நீங்க என்னை தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க! நீங்க நினைக்கிற மாதிரி நான் இல்ல சார்!” என்றாள் சைத்ரா சிரிப்பு மாறாமல் அதே சமயம் நடுநிலையான பதிலில்.. 

“ஹே சாமுத்ரிகா! என்னை நீ மறக்க சான்சே இல்ல. நான் அஸ்வந்த்”

“சாமுத்ரிகாவா? அது யாரு சார்? உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணா? நீங்க தப்பா வேற யாரோன்னு நினைச்சு என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க.” என கூறினாள் சைத்ரா. 

“அது நான் உனக்கு வச்ச பேரு. மறந்து போயிட்டியா? நான் வேணும்னா நியாபக படுத்தவா? நான் உன்னோட அஸ்வந்த். நீ என்னோட fan கேர்ள்” என்றான் தீவிரமாக.. 

சார் சார்! ஒரு நிமிசம் ஒரு நிமிசம் என்றவள். நிக்கியை பார்த்து கையசைக்க.. 

“சாரி சாரி ஒரே நிமிசம் சார் என நிக்கி சொல்லிவிட்டு மேம் ருத்ரன் டாடி லைன்ல இருக்காங்க” என நீட்டினாள் நிக்கிதா. 

“ஹலோ மேடம் மிஸ்ட் கால் வந்திருக்கு” என வீரா கூற… 

“அது உடனே பேசணும்னு தோணுச்சு ஏன் நான் பண்ண கூடாதா? பையன் கூட பிஸியா இருக்கீங்களா?” என கேட்டாள் சைத்ரா. 

அஸ்வத்தாமன் ஒருவித பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என தெரியவில்லை. 

“எப்டி இருக்கார் தமன் சார்?” என வீரா கேட்க..   சைத்ரா சிரிப்புடன், யாரை பார்த்தாலும் உங்களை பார்க்கிற போல தோணுது. என்னால இயல்பா பேச முடியல. எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் எங்கே பார்த்தாலும் நீங்க தான் தெரியரீங்க” 

ம்ம் நீ நடத்து சக்தி உன்னோட உருட்டுக்கு நீ நல்லா உருட்டி விடு! என்றான் வீரா சிரித்தபடி . 

ம்ம்மா! ம்ம்மா! என ஆருவின் குரல் கேட்க.. கொடுங்களேன் அவன்கிட்ட என சைத்ரா கேட்க, எதிரில் அம்முவுடன் ஆரு வந்தான். 

இப்போ என்னோட நேரம் என வீரா சிரிக்க..  சைத்ரா புன்னகையுடன் டூ ஸ்மார்ட் போனை கொடுங்க பையன் கிட்ட.. என முகத்தை பொய் கோபம் கொள்வது போல முகத்தை வைத்தாள். 

ருத்ரன் குட்டி அம்மா சீக்கிரம் வந்துடுவேன் என சொல்லி இரண்டு முத்தங்களை போனில் வைத்தாள். அது ஸ்பீக்கரில் சென்று விட ம்மா!.. ம்மா என ஆருவின் குரல்.. 

அந்த குரலை கேட்டதும் இங்கு ஒருவனுக்கு ஹார்ட் அட்டாக் தான். சரி பை பை இனி என்னால பேச முடியாது என போனை வைத்தவள் நிக்கிதாவிடம் கொடுத்துவிட்டு சொல்லுங்க சார் எதோ பேசிட்டு இருந்தீங்க? என கேட்டாள் சைத்ரா. 

அஸ்வத்தாமன் ஆவேசமாக அருகில் வந்து படபடக்கும் இதயத்துடன் உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா? போனில் பேசினது யாரு? அந்த குழந்தை உன்னோட குழந்தையா? என தொடர் கேள்வி கனைகளை தொடுத்தான். 

சைத்ரா..? 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 1 comment

Share your thoughts

error: Content is protected !!