Episode -28
காரில் ஏறிய அடுத்த நொடி அவளின் இடையை வளைத்து பிடித்து முத்தமிட்டான் தமன்.
என்ன பண்றீங்க? என சைத்ரா விலக முயற்சி செய்ய.. அவளின் பின் கழுத்தை அவன் பக்கம் இழுத்து ஆவேசமாக முத்தமிட்டான் தமன்.
அப்பொழுது தான் சைத்ரா ஒன்றை கவனித்தாள். அவசரவசரமாக ஓட்டுநர் காரில் இருந்து இறங்குவதை அவள் பார்த்ததும் உள்ளுக்குள் கோபம் பொங்க அவனை வேகமாக விலக்கி கன்னத்தை பார்த்து பளார் என ஒரு அரை விட்டாள்.
அஸ்வத்தாமன் அவளை ஒருவித மயக்கத்துடனும் அடித்த சுவடு தெரியாமலும் பார்த்தான். இப்பொழுது தான் அவள் ஒன்றை உணர்ந்தாள். ஆம் அஸ்வத்தாமன் மூச்சு முட்ட குடித்திருக்கிறான் என நன்றாக தெரிந்தது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் அவனது காரின் கதவை திறந்து பேசியதால் அவன் குடித்திருக்கும் விசயத்தை அறிய முடியவில்லை. ஆனால் இப்பொழுது தான் தெரிகிறது. மூக்கு முட்ட குடித்திருக்கிரான். ச்சீ! ஏற்கனவே இவன் அருகில் வந்தால் எரிச்சலாக இருக்கும். இப்பொழுது குடித்திருக்கிறான். என இன்னும் கோபமும் வந்து சேர்ந்தது.
ஏன் அடிக்கிற? என்னை அடிக்கிறது உனக்கு பிடிச்சிருக்கா! தென் ஓகே எவ்ளோ வேணாலும் அடிச்சிக்கோ! ஆனால் தள்ளி மட்டும் போகாதே! நீ இல்லாம நான் இல்ல. என அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
கர்சீப் கொண்டு மூக்கை பொத்தி கொண்டவள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இன்று ஒருநாள் இந்த கெட்டவனிடமிருந்து தப்பிக்கலாம் என நினைக்க.. ட்ரைவர் கார் எடுங்க என அவளின் மார்பில் முகம் புதைத்தான்.
இதுல மட்டும் இளவெடுத்தவன் கண்ணாக இருக்கான் என நொந்து கொண்டாள். அடுத்த அரை மணி நேரத்தில் கார் கெஸ்ட் ஹவுஸ் நுழைந்தது.
காரில் இருந்து தள்ளாடியபடி இறங்கினான். அவனை பிடிக்க அவள் வரவில்லை அழகுக்காக வைக்கப்பட்ட பூசாடியில் இடித்து கொண்டான். சைத்ரா எதையும் கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றவள் வேகமாக முகத்தை கழுவினாள்.
தள்ளாடிய படி வீட்டுக்குள் வந்தவன். சாரி சாரி! சக்தி சாரி டி! சக்தி சாரி!.. என புலம்பினான்.
சைத்ரா எதையும் கண்டு கொள்ளாமல் சோர்வாக அமர்ந்தாள்.
இல்ல நான் ஏன் சாரி கேட்கணும்? நீ என்னோட சக்தி. நீயும் நானும் ஒன்னு. நீ இல்லாம நான் இல்ல. நீ எனக்கு வேணும் சக்தி என புலம்பிய படி அவளருகில் சென்று அமர்ந்தவன். “ஐ நீட் யூ பேட் லி! உனக்கு என்னை பத்தி என்ன தெரியும்? என்னை பத்தி குட்டி விசயம் தான் தெரியும். ஆனால் நான்!.. நானும் கிட்ட தட்ட உன்னை போல தான். உனக்கு யாருமே இல்லாம நீ அனாதை.. இல்லல்ல இனி நீ அனாதை இல்ல உனக்கு நான் இருக்கேன்.”
அவனை வெடுக்கென உதறி விட்டவள். எனக்கு ஆல்ரெடி குடும்பம் இருக்கு. உன்னோட கேவலமான எண்ணத்தால தான் வேற வழியே இல்லாம உன் முன்னாடி உனக்கு இப்படி படுக்கையில் படுக்க ஒரு வருசம்… சொல்ல போனால் காண்ட்ராக்ட் மாதிரி வரேன் மற்ற படிக்கு நீ என்னை விட்டாலே எனக்கு நிம்மதியோ நிம்மதி. எனக்கு பிரச்னை நீ மட்டும் தான் என்றாள்.
உன்னை விட மாட்டேன் விடவும் முடியாது. நான் உன்கிட்ட உன்னை நான்.. உன்னை எனக்கு பிடிக்கும் உன்னை லவ் பண்றேன் சக்தி. எனக்கு எப்போவும் நீ படுக்கையில் வேணும். பிளீஸ்..
சாரி நான் உன்னோட பொண்டாட்டியும் இல்ல. பணத்தை வாங்கிட்டு படுக்க புரோஸ்டிட்யூட்டும் இல்ல. வேற யாரையும் பாரு உனக்கு ஏத்த மாதிரி என கூறினாள் சைத்ரா.
நா! என்னோட வளர்ப்பு சரி தான் சக்தி. ஆனால் நான் தப்பா வளர்ந்துட்டென். நான் ஒத்துக்கிறேன். நான் தான் தப்பு. ஆனால் அம் ஸ்வேர் எனக்கு எல்லாத்தையும் விட நீ வேணும் அதை விட உன்னை போல என்னை போல எனக்கு பாப்பா வேணும். எனக்கு உன் கூட வாழணும் சக்தி என புலம்பிய படி அப்படியே அவளை கட்டிக் கொண்டு மடியில் படுத்து கொண்டான் அஸ்வத்தாமன்.
வீரா அவன் தான் ஜெயிச்சான். நான் தோத்து போயிட்டேன். அவன் கிட்ட சந்தோஷம் நிறைய இருக்கு.. அந்த குட்டி குஞ்சன் ஆரு எவ்ளோ அழகு? வீராவோட பையன். அது போல எனக்கு ஒரு பையன் வேணும் சக்தி. உன்னோட வயிற்றில்.. என்னோட குழந்தை. நீ கவலை படாத நான் தரேன். அண்ட் அவனை நானே பார்த்துப்பேன். டயப்பர் change பண்ணுவேன் எல்லாமே நானே பண்ணுவேன் சக்திஇஇஇ என உலரிய படி கண்களை மூடினான் தமன்.
இதையெல்லாம் கேட்க கேட்க சக்திக்கு தூக்கி வாரி போட்டது. அய்யோ ஆருவ பத்தி சொல்றான் என நகத்தை ஆவேசமாக கடித்தாள். காட் டேம்ன் அதிராவோட குழந்தைன்னு நினைச்சிட்டு இருக்கான். அது வரை சந்தோஷம். இவனோட குலந்தைன்னு தெரிஞ்சா உறவு கொண்டாட வருவானா? வருவான்! என்னை இப்போ உயிரெடுக்கிறது பத்தாதுன்னு டெய்லி உயிரை எடுப்பான். கூடாது. சீக்கிரம் இந்த படத்தை நடிச்சு கொடுத்திட்டு மொத்தமா கண் காணாத இடத்துக்கு போயிடனும். ஆனால் அது வரை ஆரு இவனோட கண்ணில் படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தாள் சைத்ரா.
மணி எட்டு தொட அவ்விடத்தை விட்டு வேகமாக கிளம்பினாள். சக்தி பிளீஸ் இரு! Don’t leave me என இழுத்து பிடித்தான். அவனை வெடுக்கென தள்ளி விட்டவள் “எட்டு மணி ஆகிடுச்சு மிஸ்டர் அஸ்வத்தாமன் இனி நான் என்னோட குடும்பத்தை பார்க்க போகனும்” என கிளம்பிவிட்டாள் சைத்ரா.
நாயை விட கேவலமாக கிடந்தான் தமன். பண்ணிய பாவங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லையே அவளுடன் படுக்கையில் இருந்தது ஒரு பக்கம் இருக்கட்டும். அவளின் வாழ்க்கையையே தலை கீழாக புரட்டி போட்டுவிட்டான் படுபாவி. ஒருவேளை சக்தி வீராவின் காரில் விழாமல் வேறு ஒருவர் காரில் விழுந்திருந்தால்? அவன் அவள் மேல் வண்டியை ஏற்றி இருந்தால்? அவளின் உயிருக்கு அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால்?
இது எதுவுமில்லாமல் சக்தியின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்காக அவள் வாழ எண்ணி அதை வேறு சூழலில் வீராவை சந்திக்காத பட்சத்தில் இந்த சமுதாயத்தில் குழந்தையுடன் இருந்தால் அவளை இந்த உலகமும் ஊரும் என்ன சொல்லும்? இப்படி பல கேள்விகள் ஹைப்போதெட்டிக்கலாக எழ அஸ்வத்தாமனே காரணம். விருப்பப்பட்ட பெண்ணை அவளின் விருப்பத்துடன் உறவு கொள்வது தவறில்லை என்பது நாகரீகமாக எடுத்துக் கொண்டால் அவள் மீது அத்து மீறுவது என்பது மனித தனம் ஆகுமா? வினை விதைத்தவன் நிச்சயமாக அறுவடை செய்ய வேண்டும். வேதனைபட வேண்டும். அவனை மன்னித்து ஏற்று கொள்ள சக்தி ஒன்றும் ஜீசஸ் இல்லையே! சாதாரண மனுஷி. இன்னும் செய்யலாம் இதற்கு மேலும் செய்யலாம்.
எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது. அஸ்வத்தாமன் இதுவரை அவளிடம் எல்லை மீறியதில்லை. ஆனால் அதற்கு பதிலாக எல்லாவற்றையும் செய்தான். “இப்படி என் பக்கத்தில் வந்து ஒட்டி உரசிகிட்டு தான் உட்காரணுமா?” என சைத்ரா முகத்தை சுழித்தாள்.
வேற எங்கே உட்கார சொல்ற சக்தி? என அவளின் கழுத்தில் முத்தமிட்டான். அவனுக்கு தடை எப்பொழுதும் இல்லை அவளிடம். பல பிளாக் மெயில் செய்து அவளை கட்டுபடுத்தி வைத்திருக்கிறான்.
சக்தி என மூச்சுக்கு முன்னூறு முறை அழைத்து மூக்குடைபட்டு அதே இடத்தில் சோகாட்சியாக அமர்ந்திருப்பான் தமன். வல்லவன் இல்லை இப்பொழுது நொந்தவன். நிறைய பன் வாங்கியவன்.
அவனது கைகள் அவளின் அங்க வளைவை வருடி கொடுத்தபடி இருக்க திணறிய படியே அமர்ந்திருந்தாள் சக்தி. அஸ்வந்த் அவளின் உணர்வுகளை படித்தவன் மெல்ல முத்தமிட ஆரம்பித்தான். ஒட்டு மொத்த உணர்வுகளை அடக்கி கொண்டாள் சக்தி. அப்படியே ஜடம் போல இருந்தாள்.
சக்திஇஇஇ! என் மேல உனக்கு ஃபீலிங்எஸ் வருது ஆனால் நீ ஏன் அதை கட்டுபடுத்திட்டு உட்கார்ந்திருக்க? தாராளமா வெளிப்படுத்தலாம் டி! லவ் யூ என உதட்டை மென்றான்.
அவள் மெல்ல சிரித்தாள். அந்த சிரிப்பில் அவன் மயங்கித்தான் போனான். என்ன சிரிக்கிற! ஆனாலும் உன்னோட சிரிப்பு அழகா இருக்கு என அவன் கைகள் உடலுக்குள் சென்றது.
மீண்டும் சிரித்தவள் அடக்கி கொண்டு அமர்ந்திருந்தாள்.
“என்னன்னு சொல்லு சக்திஇஇஇ!”
உங்களோட இடத்தில் யார் இருந்தாலும் நான் இப்படி தான் நடந்திறுப்பேன். ஏன்னா இப்போ உங்க கூட நாலு மாசம் ப***திட்டு இருக்கேன். நாளைக்கு உங்களை மாதிரியே நிறைய பேர் பிளாக் மெயில் பண்ணி என்னை நிறைய பேர் **தியாவா வச்சுக்க கூப்பிடுவாங்க என்றாள்.
செருப்பை சானியில் முக்கி அடித்தது போல ஒரு உணர்வு தோன்ற.. தமன் முகம் கோபத்தில் மாற அவளின் கழுத்தை இறுக்கி பிடித்தவன் முத்தமிட அருகில் நெருங்கினான். ஆனால் கொடுக்க முடியவில்லை. இப்படி ஒரு வார்த்தை சொல்லி விட்டாலே! என உடல் ஆட்டம் கண்டது.
சார் மணி எட்டு. நான் வீட்டுக்கு போகனும். என சக்தி கூற.. தலையை குனிந்த படி அமர்ந்திருந்தான். கண்கள் சிவந்திருந்தது. அழறயா? இன்னும் நீ அழவேணும் டா நிச்சயமா அழுவ என திருப்தியுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
அடுத்த நாள் தவறாமல் அவளை பிக் அப் செய்து கொண்டான். தினமும் அழைத்து வருவான் அவளையே பார்ப்பான். பேச மாட்டான் எட்டு மணி ஆனதும் அனுப்பி விடுவான். நாட்கள் இப்படியே சென்றது.
இப்படியே போனால் என்னாவது?
அவளுக்கு திருமணம் ஆகவில்லை. ஆரு தனக்கு பிறந்த குழந்தை என தெரிய போகும் நாளும் இதோ வந்து சேர்ந்தது. அதிவீரா+ அம்முவின் சீமந்தம் நிகழ்வில் மொத்தமும் உடைந்து போனது. அவள் வாயாலேயே ஒத்துக் கொண்டாள்.
பார்ப்போம்..
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels











💬 2 comments
Ayyo oavam
Dei…..unaku pavam pakka oru reason vachu irukiya nee….ellame loosithanama panni vachu iruka ashwant