Episode -7
சக்தி வேகமாக சமையலறையை நோக்கி ஓட, அஸ்வத்தாமனின் இருமல் சத்தம் வித்தியாசமாக மாறியது. மேஜையில் வைத்திருந்த அவளின் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து சோபா கவுக்சில் மறைத்தான்.
மெல்லிய கொழுசொலியும் வேக மூச்சு சத்தமும் அருகில் கேட்க நெஞ்சத்தை பிடித்துக்கொண்டு கண்கள் சிவக்க இறும்பினான்.
அஸ்வந்த் ஒண்ணுமில்ல தண்ணி குடிங்க சரியா போயிடும் என அருகில் அமர்ந்து அவனுக்கு நீட்டினாள் சக்தி.
தமன் வாங்கி குடித்தவனின் இருமல் இன்னும் அதிகமானது. அய்யோ என்னாச்சு டாக்டரை வர சொல்லவா? அய்யோ என சக்தியின் முகத்தில் கலவரமும் பயமும் தாண்டவம் ஆடியது. அஸ்வந்த் ஒன்னுமில்லை. ஒன்னுமில்லை சரியா போயிடும் என தலையை கோதி கொடுத்து முதுகை வருடினாள் சக்தி.
அந்த நொடி தமனின் உள்ளுணர்வு அவளை சோபாவில் கிடத்தி உதடுகளை கொய்ய துடித்தது. எவ்வளவு அழகாக கோதி கொடுக்கிறாள். முத்தமிடும் போது இந்த பிஞ்சு விரல்கள் தன்னை தழுவினால் எப்படி இருக்கும் என கற்பனை தறிகெட்டு ஓடியது.
இப்போ ஓகேவா என சக்தி அழைத்ததும் தான் சுயநினைவுக்கு வந்தவன். மீண்டும் மெல்ல இருமி சத்தமிட்டுக்கொண்டே ம்ம் ஓகே எனக்கு பப் ஹக்கு ஹொக்கு என மீண்டும் இரும்பியவன் தன்னை அசுவாச படுத்திக்கொண்டு சாரி என்னால உங்களுக்கு டென்ஷன்? சாரி என இரண்டு மூன்று முறை கேட்டான்.
அச்சோ இதுல என்ன இருக்கு? நான்!. நீங்க எவ்ளோ கிரேட் மேன்! உங்களுக்கு இப்படி செய்யறது என்னோட புண்ணியம் சார் என அவனிடமிருந்து தள்ளி அமர்ந்தாள்.
அவள் விலகி அமர்வதை பார்த்ததும் தமனின் மூளை கணக்கு போட ஆரம்பித்தது. ஓ இவள் அந்த மாதிரி பெண்ணில்லை.. தன்னிடம் அவளின் பெண்மையை கொடுக்க மாட்டாள் என அவளின் முகத்தை ஒருமுறை பார்த்தே ஆராய்ந்து விட்டான். Do something தமன்? என யோசிக்க நேரமெடுத்தவன் அவளிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.
அன்னிக்கு தெரியாம உங்களை அடிக்க வந்துட்டேன் சாரி! நீங்க என்னை போல மேக் அப் பண்ணிட்டு வந்தீங்களா? நான் உங்களை என தமன் அவளின் முகத்தில் கவனம் செலுத்தினான்.
ச்ச என்ன கண்ணு டா! Oh f* இவளை விட கூடாது. இந்த கண்ணுக்காக ஒன் டைம், இந்த உதடு.. இது தான் உதடு நல்ல பதமா இருக்கு.. என இன்ச் இஞ்சாக ரசித்தான். பிரம்மன் செதுக்கிய சிலை இது தான். நேராக இந்திரலோகத்தில் இருந்து வந்திருப்பா போல.. இந்த புடவை இன்னும் கிளாமர் கூட்டுதே! நியூடா நிக்கிரத விட இந்த புடவை இன்னும் கிக்கா இருக்கு உஃப் என தலையை கோதினான் தமன்.
அந்த மாதுளை முத்துக்கள் போல அடுக்கிவைக்க பட்ட பளபளவென இருக்கும் முத்து பற்களில் மொட்டு வாய் திறந்து வார்த்தைகளை உதிர்த்தாள். இல்ல அஸ்வந்த் உங்கள பார்க்கணும்னு எனக்கிருந்த கியூரியாசிட்டில வந்துட்டேன் வேற ஒன்னும் இல்ல. உங்களை மாதிரி ஜென்யூன் யாருமே இல்ல தெரியுமா? உங்களை மாதிரி ஒரு பெர்சனாலிட்டிய இது வரைக்கும் நான் பார்த்ததே இல்ல. அய்யோ இது கனவா நிஜமான்னு கூட என்னால யோசிக்க முடியல அந்த அளவுக்கு இருக்கு. என் முன்னாடி அஸ்வத்தாமன் இருக்கார்” என ஆயிரம் முறை விழி இமைகள் படபடக்க கூறினாள்.
அப்படியா என்னோட எந்த படம் உங்களுக்கு பிடிக்கும்? என மெல்ல பேச்சை ஆரம்பித்தான்.
எல்லா படமும் பிடிக்கும்! இது கேள்வியா? உங்களோட நடிப்புக்கு நான் தீவிர ரசிகை உங்களோட எக்ஸ்பிரசனுக்கு நான் அடிமை. உங்களை அவ்ளோ பிடிக்கும் என சக்தியின் மொத்த செல்களும் உத்வேகம் உணர்ச்சி பொங்க பேசி கொண்டிருந்தது.
நான் அந்த அளவுக்கு எதுவுமே பண்ணலயே என அவன் நிமிர்ந்து அமர்ந்தான். ஒரு பக்கம் அவளின் பேச்சு அவனை மொத்தமாக மயக்கியது. நேரத்தை பார்த்தவள் அய்யோ டைம் ஆகிடுச்சு நான் கிளம்புறேன் அஸ்வந்த் இந்த நாளை நான் மறக்கவே மாட்டேன். என்னோட ஸ்டார் கூட நான் டைம் ஸ்பென்ட் பண்ணிருக்கேன் இது தான் என் லைஃப்ல ரொம்ப ரொம்ப expensive-ஆன நேரம் என்றவள் எழுந்தாள்.
அய்யோ போகாத டி I need you.. I want you immediately bluddy என நினைத்தவன். இருங்க மேடம் அட்லீஸ்ட் ஒரு காபி, டீ ஜுஸ் எதாவது குடிச்சிட்டு தான் போகனும். நீங்க வந்ததுக்கு என அஸ்வத்தாமன் சொல்ல.. “இல்ல வேணாம் சார் இன்னொரு நாள்..”
இன்னொரு நாளா? No way இப்போவே தான்! நீங்க என்னோட ரசிகை. என்னை எந்தளவுக்கு பெரிய இடத்தில் வச்சிருக்கீங்க இதோ என்னோட இருமலுக்கு தண்ணி கொடுத்து ஹெல்ப் பண்ணிருக்கீங்க இப்படி போனால் என்ன அர்த்தம் இருங்க மேடம் என கிச்சன் பக்கம் சென்றவன். எடுத்திட்டு வரவா இல்ல போறீங்களா?
சரி ஒகே உங்களுக்காக தான் சார் என சக்தி புன்னகைத்தாள். எனக்காக தாண்டி நீ! என தலையை கோதியவன். நேராக கிச்சன் சென்றான் டிரபிக்கானா கிரேப் ஜூசை இரண்டு கிளாசில் ஊற்றியவன். சக்தியை பார்த்தான் வெகு நேரம் அப்படியே நின்றான். 5 நிமிடங்களுக்கு மேலானது. இன்னும் என்ன பண்றார் நேரம் வேற ஆச்சே என சக்தி சமையலறையை நோக்கி வர, தமன் இப்போ எடுத்திட்டு போ! சாமுத்ரிகா வரா என உள்ளுக்குள் பட்சி பறந்தது.
அவள் கார்பெட்டின் மீது நடந்து வருவதற்கும், தமன் கிளாசுடன் திரும்பி கார்பெட்டில் கால் வைத்தவன் வழுக்காக கார்பெட்டை வழுக்கி விடுவது போல ஆக்சன் செய்து கிரேப் ஜூசை அவளது நெஞ்சில் கொட்டியிருந்தான்.
அய்யோ கொட்டிடுச்சு என அவளின் உதடுகள் குழந்தையை போல பிதுக்க..
“Oh shit! எதுக்கு இங்கே வந்தீங்க? இப்போ இப்படி ஆகிடுச்சே வாஷ் எப்படி பண்றது? ட்ரெஸ் இப்படி நாஸ்தி ஆகிடுச்சே என்றவன். வாங்க அட்லீஸ்ட் டிஸ்யூ வச்சு க்லீன் பண்ணுங்க” என பாத்ரூம் அழைத்து சென்றான் உள்ளார்ந்த தந்திரத்துடன்.
ட்ரயினுக்கு நேரம் வேற ஆச்சு? என புலம்பியவள் வேகமாக வாஷ் ரூம் சென்றாள்.
3..2..1 என புன்னகையுடன் திரும்பிய தமன். மேடம் சாரி சொல்ல மறந்துட்டேன். சவருக்கு அடியில் நிக்காதீங்க அது சென்ஸ் பண்ணிட்டா தண்ணி உங்க மேல கொட்டிடும் என கூறி முடிப்பதற்குள் அஸ்வந்த் என தண்ணீரில் நனைந்தபடி கத்தியிருந்தாள் சக்தி.
இப்போ நனைய வேண்டிய நேரம் என வெற்றி களிப்பில் உள்ளே சென்றவன். அவளுக்கு முன் போய் நின்றான். அவனும் கொஞ்சம் நனைய.. சக்திக்கு இருந்த பதட்டத்தில் இதை எப்டி நிறுத்த? என பதட்டத்தில் உதடுகள் தந்தியடித்தது.
அச்சோ நீங்க இந்த ஸ்கொயர்லருந்து நகர்ந்தாலே அட்டோமெட்டடா தண்ணி ஸ்டாப் ஆகிடும் வாங்க. இப்படி தொப்பலா நனைஞ்சுட்டீங்க என அவளின் கையை பிடித்து அழைத்து வந்தான் வெளியில்..
உடலுடன் ஒட்டிய உடையில் இன்னும் சக்தி கவர்ச்சியாக தெரிந்தாள். கப்பொட்டில் இருந்து பூந்துண்டை அவளிடம் கொடுத்தவன். தலையை துவட்டிக்கோங்க சளி பிடிக்கும் என அவளின் முன் சட்டையை கழட்டினான்.
ஜுஸ் கொட்டபட்டது. அதன் பின் அவளுடன் தண்ணீரில் நனைந்தாகி விட்டது. இப்போ அடுத்து.. வேறென்ன அவளை தன் வசம் கொண்டு வர வேண்டும் என நினைத்தவன் மெல்ல அவளின் அருகில் நெருங்கினான்.
சக்தியின் கவனம் அவன் மீதில்லை.. என்ன கண்டுக்கவே மாட்டிக்கிரா? என தீவிரமாக யோசித்தவன். Trip பாக்சை பார்த்தான். மெதுவாக அருகில் சென்று trip லைனை மிகவும் force கொடுத்து ஆன் ஆஃப் செய்தான்.
கரண்ட் கட்டானது. அச்சோ என சக்தி பதட்டத்துடன் திரும்ப “பயப்படாதீங்க என்னன்னு தெரியலையே trip ஆகிருக்கும் so சாரி எல்லாமே என்னால தான்” என தமன் கூற, இட்ஸ் ஓகே சார் என அவள் நகர,
இருங்க கேண்டில் எடுத்திட்டு வரேன் என சென்றவன். Scent candles எடுத்து வந்து ஆங்காங்கே ஏற்றி வைத்தான்.
“சார் எப்படி வெளியே போறது. கதவு கிட்ட விடுங்க! அய்யோ என்னோட போன் என யோசித்தாள்.
அச்சோ என்னோட போன்? என தமனும் யோசித்தான் வேண்டுமென்றே!
சோ sad இப்போ என்ன பண்றது? என வேகமாக அவளின் பக்கம் வந்தவன். இந்த டிரால போன் இருக்கா பாருங்க! என தேட சொன்னவன் அவளின் அருகில் வந்து உரசிய படி நின்றான்.
இல்ல சார்! என அனைத்திடங்களிலும் தேடினாள். ரொம்ப வியர்க்குது பாருங்க உங்களுக்கு ஸ்வாட் ஆகுது என பூந்துண்டுடன் அருகில் நெருங்கியவன் மெல்ல துடைக்க அவளின் முகத்தில் சிறு தடுமாற்றம் தோன்றியது.
நீங்க போறேன்னு சொன்னதும் ஜுஸ் கொட்டிடச்சு, சவர்லருந்து தண்ணி கொட்டுது, இப்போ கரன்ட் கட், இதெல்லாம் ஒன்னு திரும்ப திரும்ப சொல்லுது. நீங்க போறது இந்த வீட்டுக்கு பிடிக்கல போல..
“அஸ்வந்த்!” என அவள் நிமிர்ந்து பார்க்க, நீ ரொம்ப அழகா இருக்க.. I fall in you. என்றவன் அடுத்த நொடி ஆவேசமாக அவளின் உதட்டை கவ்வி கொண்டான்.
நம்ப முடியாத அதிர்ச்சியில் சக்தி சிலையாக நின்றிருக்க, முத்தமிடும் போதே அவனது கைகள் அவளின் இடையை பிடித்திருந்தது. இன்னதென அறியாத ஒரு அதிர்ச்சியிலும் அவனது திடீர் முத்தத்திலும் தடுமாறி போனவள் மூச்சு திணற நின்றாள் சக்தி.
சட்டென அவளிடமிருந்து விலகியவன். “ஹே சாரி நான் வேணும்னு பண்ணல.. I can’t.. சாரி என்றவன் வேக மூச்சுடன் உன்னோட விருப்பம் இல்லாம கிஸ் பண்ணிட்டேன். நீ ரொம்ப அழகு. உன்னோட கண்கள்.. சாக் அடிக்குது! உன்னை மாதிரி ஒரு பொண்ணை நான் பார்த்ததே இல்ல.”
It’s okay என்றவள் அமைதியாகி போனாள். அவனது முகத்தை பார்க்க தயக்கமாக இருந்தது. சரி தொடைச்சுக்கோ! ரொம்ப ஸ்வெட் ஆகுது. உன்னோட ட்ரெஸ் ஈரமா இருக்கு பாரு என சொல்லிக் கொண்டே ஜன்னலை திறந்து விட்டான்.
காற்று வீசியதில் அடுத்த நொடி எல்லா கேண்டிலும் அணைந்து போக, அவளுடன் கட்டிலில் கால் இடரி விழுந்தவன் உதடுகள் அவளின் உதட்டில் ஒட்டிக் கொண்டது.
சக்தியின் கால்கள் இரண்டுக்கும் நடுவில் அவனது ஒரு கால்.. மீண்டும் உதட்டுடன் உதடு ஒட்டி கொள்ள, I want kiss you என சொன்னவன் அவளிடம் எதிர்ப்புகள் இல்லை என தெரிந்ததும் முத்தமிட ஆரம்பித்தான் ஆவேசமாக..
“அஸ்வந்த் நிஜமா என்… என்னை பிடிச்சிருக்கா?”
“ரொம்ப பிடிச்சிருக்கு! உன்னோட கண்கள் உன்னோட மூக்கு, உன்னோட கொழுசொலி, உன்னோட தேன் குரல், இப்படி சொல்லிட்டே போலாம்! நீ என்னை ரசிக்கிறது அதை விட பிடிச்சிருக்கு” என்றவன் முத்தத்திலிருந்து அடுத்து கொஞ்சம் அவளின் உடையை களைத்தான்.
முத்தங்கள் அடுத்த கட்டத்துக்கு சென்றது. அவளின் முகத்தை பார்க்க முடியவில்லை. என் நினைக்கும் நேரம் கரன்ட் வந்தது. சட்டென அவனிடமிருந்து விலகினாள் சக்தி.
ஒரு கனெக்சன் மொத்தமும் Trip ஆகியிருப்பதை வீட்டின் எலக்ட்ரிசியன் சரி செய்திருப்பார். அதனால் கரன்ட் வந்து விட்டது. அதற்கு காரணம் கேண்டிள் எடுக்க சென்றவன். அவனது போனில் இருந்து அரை மணி நேரம் கழித்து trip சரி செய்ய உத்தரவிட்டு குறுஞ்செய்தி அனுப்பினான். ஒரு முறை சட்டவுன் செய்து ஆன் செய்தால் மொத்த வீட்டுக்கும் கரன்ட் வந்து விடும். அதே போல பணியாள் அரை மணி நேரம் கழித்து செய்துவிட்டார்.
உள்ளுக்குள் தடுமாற்றமடைந்த மனது அவன் முன் இப்படி நிற்க தகுதி இல்லாமல் எழுந்து கொண்டாள் சக்தி.
தமன் முகம் கோபத்தில் சிவந்தது. பெண்களே அவன் மடியில் வந்து விழ வேண்டும். அவன் முதுகு காட்டி நின்றிருக்க..
“க்கும் என தொண்டையை கணைத்தவள். அஸ்வந்த் நான் போகட்டுமா?” என முதுகின் பின்னால் நின்றிருந்தாள் சக்தி.
ம்ம் என மெல்லிய குரலில் அஸ்வத்தாமன் சொல்ல.. சக்தி வெட்கத்துடன் “கிஸ் பண்ணனும்னு சொன்னீங்களே!” என கைகளை பிசைந்த படி நின்றாள்.
அஸ்வத்தாமன் மனதில் அப்படி வாடி என் சாமுத்ரிகா சாத்வீகா! என அணைத்தான் இறுக்கி..
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels











💬 1 comment
Adipavi