Episode -26
தன்னை இப்படியே பூமி இழுத்துக் கொள்ளாதா? என்னை புதைத்து கொல்லாதா? என ஒவ்வொரு நொடியும் தோன்றியது சைத்ராவுக்கு. அவன் அருகாமையில் அருவருப்பும் அசிங்கமும் தோன்றியது.
ஆனால் அஸ்வத்தாமன் அப்படியே எதிர் பதமாக காட்சியளித்தான். யாராவது நல்லா எழுதுற பேனா கொடுங்கன்னு டீச்சர் கேட்டு உன்னோட பேனா ரொம்ப நல்லா எழுதுது அப்டின்னு சொல்லும் போது ஒரு பெருமிதம் வருமே அது போல.. அந்த அழகான பேனா தான் சைத்ரா. யாருக்குமே கிடைக்காத ஒன்று தனக்கு கிடைத்திருக்கும் உணர்வில் இன்னும் பிரகாசமாக காட்சியளித்தான்.
என்ன தான் மழுங்கி போன மூளையுடன் சுற்றி கொண்டிருந்தாலும். அந்த அழகான பேனாவை தூக்கி போடும் எண்ணம் நிச்சயமாக அவனுக்கு இல்லை. அதை இதயத்தின் அருகில் வைத்து பார்த்துக் கொள்வான். அந்த பேனா தொலைந்தால் உயிர் போகும் வலி கூட ஏற்படும்.
எனக்கு கஷ்டம் மட்டும் தான் துரத்தி அடிக்குது இது வரை என தளர்ந்து போனாள் சைத்ரா. இப்பொழுது அவர்கள் வந்திருப்பது வழக்கமான அவளுக்கு தெரிந்த சாட்டர் டே கெஸ்ட் ஹவுஸ். அங்கிருக்கும் ஆட்கள் அனைவரும் மாறி இருந்தார்கள். வீட்டின் வண்ணம் மாறி இருந்தது. மாறாமல் இருக்கும் ஒரே ஆள் அவன் மட்டும் தான்.
அவளை அணைத்தபடி உள்ளே அழைத்து வந்தான் அஸ்வத்தாமன். ஒவ்வொரு நொடியும் ஓராயிரம் உணர்வுகள். உள்ளே அழைத்து வந்த அடுத்த நொடி அவளை முத்தமிட்டான் ஆசை தீர.. ஆனால் சைத்ராவின் முகத்தில் உணர்ச்சிகள் செத்திருந்தது.
கண்ட்ரோல் தமன் அவள் முன்னாடி இப்படி பலவீனமா இருக்க? என உள் மனம் கேட்க.. பின்ன என்னைக்கு முதல் தடவை ஆணும் பாவம் படத்தை பார்த்தேனோ அன்னையில் இருந்து காஞ்சு போய் சுத்திட்டு இருக்கேன். ( எந்த பெண்ணையும் தொட வில்லையாம்) எப்படி சும்மா இருப்பான் என் தம்பி! என உள்ளுக்குள் ஒரே வாக்கு வாதம்.
சைத்ரா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அஸ்வத்தாமன் அவளை அமர வைத்து விட்டு நேராக படுக்கைக்கு சென்றவன். அவளின் சிவப்பு வண்ண புடவையை அலுங்காமல் தூக்கி முத்தமிட்டு நியாபகர்த்தமாக கப்போட்டில் வைத்துக் கொண்டான். அவளின் உள்ளாடையையும் சேர்த்து.
“சக்தி! சக்தி!” என கூவினான்.
அவள் அதே இடத்தில் அமர்ந்திருக்க.. இவள் கிட்ட அன்பா இருக்கலாம்னு நினைச்சா விட மாட்டா போல! அடாவடி தனம் தான்! என அவள் இருக்கும் இடத்துக்கு சென்றான். “எத்தனை தடவை கூப்பிடுறேன். பதில் சொல்ல மாட்டியா நீ? என்ன உனக்கு கொழுப்பா?”
எப்போ கூப்பிட்டீங்க? என அவனை புரியாமல் பார்த்தாள்.
“சக்தி சக்தின்னு காட்டு கத்தா கத்திட்டு இருந்தேன். நீ எப்போ கூப்பிட்டன்னு கேட்கிற?”
“என்னோட நேம் சைத்ரா! சக்தி இல்ல!” என்றாள் எந்த உணர்வும் இல்லாமல்.
“ப்ச்” என தலையை கோதிய படி அவளை பார்த்தான். ரோபோ போல நேராக அமர்ந்திருந்தாள்.
எனக்கு நீ சக்தி தான்! உன்னை சக்தின்னு தான் கூப்பிடுவேன் என்றான் அஸ்வந்த்.
“எந்த பேரா இருந்தால் என்ன? நீங்க வைக்கிற பேர் தானே எனக்கு! என நிறுத்தியவள். அவனை பொருள் பொதிந்த பார்வையுடன் இதை நீங்க தான் சொன்னீங்க. சோ இனி உங்க விருப்பத்துக்கு எப்படி வேணாலும் கூப்பிடுங்க நான் ரெஸ்பான்ஸ் பண்ணுவேன். அது சக்தி, சைத்ரா, சாமுத்ரிகா இப்படி எந்த பேராக இருந்தாலும் எனக்கு ஓகே. அண்ட் நான் வெளியில் இருக்கிற நினைப்பில் அப்படி பேசிட்டேன். இது உங்க இடம்ன்னு இப்போ தான் மூளைக்கு உரைக்கிது. சொல்லுங்க நான் என்ன பண்ணனும்?” என கேட்டாள்.
அவளின் பேச்சை கேட்டதும் அஸ்வத்தாமனின் முகம் சடுதியில் மாறி போனது. இந்த அளவுக்கு அவள் பேசுவாள் என அவன் நினைக்கவில்லை.
சார்! என அவள் அழைக்க..
முன்னால் நடந்தவன். உள்ளே வா என படுக்கை அறை சென்றான்.
உப்பை தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும். என நினைத்தவள் இறுகிய மன நிலையுடன் அவன் பின்னால் சென்றாள்.
அஸ்வத்தாமன் மிகவும் பதட்டத்துடன் காணபட்டான். அவள் அறைக்குள் வந்ததும் வாசலிலேயே நிற்க.. கம் சக்தி என அருகில் சென்றான்.
அவள் அதே இடத்தில் நிற்க.. அவளின் கைகளை பிடித்து விரல்களுக்கு முத்தம் வைத்தான். அவளை கட்டிக் கொண்டான். ஒரு மாமிச மலை அவளை போட்டு இறுக்குகிறது. மூச்சு முட்ட நின்றிருந்தாள். ஆணின் ஸ்பரிசம் ஒரு முறை தான் தீண்டியது அவள் வதனத்தை அதுவும் இப்பொழுது மூன்று வருடங்கள் கடந்த நிலையில் எல்லாருக்கும் ஏற்படும் இயல்பான கூச்சம் அவளுக்கும் இருக்க கட்டு படுத்திக் கொண்டு நின்றவள் விலக்க முடியாமல் திணறினாள். நரகமாக இருந்தது. உதட்டை அழுத்தி கடித்து உணர்வுகளை அடக்கினாள்.
அவளின் கையை பிடித்து இழுத்தவன். படுக்கையில் அமர்ந்து அவளை மடியில் அமர்த்தி கொண்டான். ஒரு நிமிசம் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.
ம்ம் என கழுத்தில் முத்தமிட்டு கொண்டே அவனது கைகள் அவளின் மார்பில் படர்ந்தது.
“நான் இங்கே எவ்ளோ நேரம் இருக்கணும்?” என வினவினாள்.
“24 ஹவர்ஸ்” என்றான் உடனே..
அவ்.. அவ்ளோ நேரம் இருக்க முடியாது. ஷூட்டிங் முடிஞ்சு தானே உங்க கூட இருக்க சொன்னீங்க? எப்படி இருந்தாலும் நான் நைட் எட்டு மணிக்கு வீட்டில் இருக்கணும். என்னோட பையன் தேடுவான் என்னை என்றாள் சைத்ரா.
“எதுக்கு?” என கேட்டான் அஸ்வத்தாமன்.
இவன் நிஜமாவே மானுட ஜென்மமா? எதுக்குன்னு கேட்கிறான்? பைத்தியக்காரன் என மனதில் நினைத்தவள். “எதுக்குன்னு கேட்டால் என்ன அர்த்தம்? குழந்தை அம்மாவை தேடும்! சாப்பிட வைக்கணும். எனக்கும் ரெஸ்ட் வேணும். என் பையனோட தூங்கினால் தான் தூக்கமே வரும்” என்றாள் சைத்ரா.
அஸ்வத்தாமன் அவளின் உதட்டில் முத்தமிட.. அவள் ஜடம் போல அமர்ந்திருந்தாள். முத்தமிட்டு கொண்டே உடையினுள் கைகளை நுழைத்தான். வேறு புறம் திரும்பிக் கொண்டாள். மெல்ல படுக்கையில் அவளை சாய்த்து முகம் பார்த்தான்.
அவளின் முகத்திலும் சரி உடலிலும் சரி உணர்வுகள் செத்திருக்க மரக்கட்டை போல காட்சி கொடுத்தாள். இதுக்கு அந்த புடவை எவ்வளவோ பரவாயில்லை என தோன்றியது.
சரி விடுறேன் உன்னை நீ கேட்ட நேரத்துக்கு விடுறேன் என்றான் தமன்.
அவனை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். தமன் அவளின் முகத்தை வருடி உதட்டை தடவியவன். அஸ்வந்த்ன்னு கூப்பிடு எனக்கு ஆசையா இருக்கு. என்றான்.
அஸ்வந்த் என்றாள் இயந்திர குரலில்.
இப்போதைக்கு இவ்வளவு தான் ஒர்க் ஆகும். ஒரே நாளில் எல்லாமே மாறும் அப்டின்னா? அது எப்படி நடக்கும்? ரொம்ப கஷ்டம். கொஞ்சம் நேரம் கொடுக்கணும். என நினைத்தவன் அவளின் அருகில் படுத்துக் கொண்டு மார்பில் கைகளை வைத்தான்.
உடலை தடவினான். அவனது பார்வை மொத்தமும் முகத்தில் குடியிருக்க.. சக்தியின் ஒவ்வொரு உணர்வுகளையும் இமை வெட்டாமல் பார்த்தான். அவளை அவன் புறம் திருப்பி முத்தமிட்டான் உதடுகளில்.. முத்தங்கள் மோகத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை. அவள் மேல் இருக்கும் தீரா ஆசையும். பிரிவின் தவிப்பை நன்றாகவே காட்டியது.
இதுவே அழகிய அசுரன் அஸ்வத்தாமனாக இருந்திருந்தால் கட்டில் பாடத்தில் பாதி பக்கம் சென்றிருப்பான். ஆசை நூறு வகையில் 50 சுவையையை சுவைத்திருப்பான். ஆனால் இப்பொழுது இருக்கும் அஸ்வத்தாமன் அப்படி அல்லவே! தனக்கு எதிரில் இருக்கும் பெண்ணின் மீது காதல் பித்து கொண்டிருக்கிறான்.
முத்தங்கள் முடிந்து மார்பில் முகம் புதைத்தான். இதை ரிமூவ் பண்ணு டி! என அவனது சட்டையை காட்டினான்.
சக்தி அவனை உணர்ச்சியில்லாமல் பார்த்தாள். அவளது டாப் தூக்கி வீச பட்டது. உள்ளாடையுடன் இருந்தாள். முகம் புதைத்துக் முகர்ந்தான். அவளின் வியர்வை உள்ளுக்குள் போதை கொடுத்தது. சக்தி ஐ லவ் யூ! என வாய் மொழியாக கூறினான்.
-அமைதி –
எந்த எதிர்வினையும் இல்லை. கடிகாரத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். எப்பொழுது மணி எட்டு தொடும் என அவளின் கவனம் மொத்தமும் அங்கு இருக்க.. அவனோ அவளின் வலது புறம் இடது புறம் என மாறி கொண்டிருந்தான்.
இதோ மணி எட்டை தொட்டது. மார்பில் இருந்து இறங்கவில்லை அஸ்வத்தாமன். ஒரு கை வழக்கம் போல இந்த வழக்கம் என்பது அவளின் மகன் ஆருவின் பழக்கம். மார்பில் பசியாறும் போது ஒன்று வாய்க்குள் இன்னோரு கை இன்னும் மார்பில் அழுத்தி பிடித்தபடி அது தூங்கும் கொஞ்சம் விலகினாலும் கத்தும். ஆரு என்னும் குட்டி குஞ்சான். ஆனால் அந்த பழக்கம் இந்த கிராதகனின் பழக்கம் அது தான் உடலை உருக்குகிறது. தாய் பால் மறந்தாலும் கூட இரண்டு கைகளையும் அங்கு வைத்துக் கொண்டு தான் தூங்குவான். என்ன ஒரு கேவலமான பழக்கம் ச்சீ! என் மகன் இவனை போல வந்து விட கூடாது என யோசித்துக் கொண்டிருந்தாள்.
மணி எட்ட தொட சார்! சார் என அழைத்தாள். ம்ம் சக்தி என அவளின் நெஞ்சில் தான் அவனுக்கு உறக்கம். நீண்ட நாள் கழித்து நிம்மதியான உறக்கம்.
மணி எட்டாகுது. நான் போகனும் சார்! பிளீஸ் என அவள் கேட்க…. இன்னும் கொஞ்ச நேரம்.. என அவளை கட்டி அணைத்தான்.
மிஸ்டர் பிளீஸ் என அவள் விலக.. ஓகே வெயிட் போலாம் போலாம் என முனையில் இருந்து விலகினான்.
ஊறி இருந்தது அவளின் அங்கங்கள். வேகமாக அவ்விடத்தை விட்டு எழுந்தவள் டிஸ்யூ கொண்டு துடைத்தபடி பாத்ரூம் ஓடினாள். மொத்தமும் களுவிக் கொண்டு துடைத்தவள் உடையை போட்டுக் கொண்டாள்.
தமனின் பார்வை அவளை விட்டு விலக வில்லை.
இது எத்தனை நாள் நடக்கும்?
பார்ப்போம்
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels











💬 1 comment
Super super super super super super super super super super ♥️♥️♥️♥️♥️♥️♥️