🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
28. அழகிய அசுரா
அழகிய அசுரா
📖 அழகிய அசுரா · Chapter 28 of 41

அழகிய அசுரா

  • 2 Jul 2025
  • 291 reads
  • ☆ No ratings yet
  • 7 min read

Episode -27

காரில் செல்லும் அவளை திருப்தியுடன் பார்த்து புன்னகைத்தான் அஸ்வத்தாமன். அவ்ளோ திருப்திக்கு காரணம் என்ன? ஏக்க பார்வையுடன் ஏன் அவளை விட வேண்டும்? அவள் எனக்கு சொந்தமானவள்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

சைத்ரா உடையை மாற்றி கொண்டிருக்கும் நேரம் அவளை பார்த்தவன் அப்படியே விட்டு விடவில்லை. சுவற்றில் அவளை தள்ளி உதட்டை கவ்வி கொண்டான். ஆவேசமாக.. எத்தனை முத்தம் கொடுத்தாலும் பத்தவில்லை. இவளை தனக்குள் புதைத்து கொள்ள வேண்டும் போல தோன்றியது. கடிவாளம் போட்டது போல எண்ணங்கள் அவளை சுற்றி என்ன செய்ய? 

உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தாள். அவனது தீண்டல் ஒவ்வொரு முறையும் நெருப்பில் விழுந்த உணர்வை கொடுத்தது. மெல்ல கீழ் இறங்கி ஊறிய தேகத்தை இன்னும் ஊற வைத்து கூர்மையாக்கி பட்டை தீட்டினான். 

எட்டு மணி இப்பொழுது அரை மணி நேரத்தை விழுங்கி இருந்தது. குனிந்து நின்றிருந்தான். “இன்னும் எவ்ளோ நேரம்? பிளீஸ் விடுங்க என் வீட்டுக்கு போகனும்!” என பற்களை கடித்தபடி கூறினாள். 

ம்ம் என உதட்டை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவன் சிவந்த கண்களுடன் போலாம் என நகர்ந்தான். மீண்டும் உள்ளாடையை அணிந்து உடையை அணிந்து கொண்டவள் வேகமாக அவ்விடத்தை விட்டு கிளம்பினாள்.

காரில் ஏறியதும் அவள் கண்ணில் இருந்து கண்ணீர் சிந்தியது. நடந்தவற்றை நினைக்க நினைக்க  நரக வேதனையாக இருந்தது. எவன் ஒருவனை வேதனை படுத்த வேண்டும் வாழ்ந்து காட்ட வேண்டும் என நினைத்தாலோ அவனிடம் கட்டுபட்டு இருக்க வேண்டிய நிலை வந்து விட்டதே என மனம் நொந்து போனது.

நிக்கிதா அழைத்தாள். “சொல்லு”

“மேடம் நான் வீரா சார் கிட்ட இதை பத்தி சொல்லவா?”

“வேணாம். நான் வீட்டுக்கு கிளம்பிட்டேன். ஒன்னும் பண்ண முடியாது. இப்போ தான் அதிரா கொஞ்சம் சந்தோசமா இருக்கார். அதை கெடுக்க வேண்டாம் விடு நிக்கி”

“அதுக்கில்ல நான்” என நிக்கிதா ஆரம்பிக்க.. 

“வேணாம் சொல்றத கேளு! அந்த ஆளுக்கு எதுவும் தெரியாது. அவனுக்கு என் கிட்டறுந்து என் உடம்பு மட்டும் தான் தேவை! இந்த ஒரு படம் முடிச்சுட்டு நான் என் பையன தூக்கிட்டு இந்த நாட்டை விட்டே போயிடலாம்ன்னு இருக்கேன் நிக்கி. வீரா கிட்ட சொல்லி அப்புறம் இந்த ஆளுக்கு ஆரு இருக்கிற விசயம் தெரிஞ்சா பெரிய பிரச்னை ஆகிடும். எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு அதுக்கு தான் சொல்றேன்” 

சரிங்க மேடம் பத்திரமா வீட்டுக்கு போங்க என போனை வைத்தாள் நிக்கி. 

அடுத்த நாள் அதேபோல இருவரும் வந்தார்கள் கெஸ்ட் ஹவுஸ்க்கு.. வழக்கம் போல யாரும் இல்லை. 

“ஹே சக்தி எனக்கு ரொம்ப தலை வலிக்குது ஒரு டீ போடு பிளீஸ்”

“எனக்கு அதெல்லாம் தெரியாது”

“சும்மா சொல்லாத!” என தமன் தலையை பிடித்தபடி பார்த்தான். 

“அப்போ டீ போட்டு கொடுத்தால் என்னை விட்டுடுவீங்களா! இன்னிக்கி!..” என கேட்டாள். 

“மாட்டேன்! விட மாட்டேன் இந்த கொஞ்ச நேரம் தான் நீ எனக்காக நேரம் செலவழிக்கற. என்னால உன்னை விட முடியாது. எட்டு மணி வரைக்கும் நீ என் கூட தான் இருக்கணும்” என அஸ்வத்தாமன் உறுதியாக கூறினான். 

அவள் பற்களை கடித்தபடி ஒரிடத்தில் நின்றிருந்தாள். 

ஆனால் எனக்கு டீ வேணும். போட்டுட்டு வா! என தமன் சொல்ல… 

எனக்கு தெரியாது என உண்மையை கூறினாள் சைத்ரா. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

சக்தி பிளீஸ் டி போட்டுட்டு வாஆஆ! என ஆசையுடன் அழைத்தான். 

இதோ போறேன் என சென்றவள் டீ மேக்கரில் அரை கிளாஸ் தண்ணீரும் பெரிய ஸ்பூனில் மூன்று ஸ்பூன் டீ தூள் போட்டு ஒரு ஸ்பூன் உப்பு இரண்டு ஸ்பூன் சக்கரை என பற்ற வைத்தாள். 

மில்க் ஆட் பண்ணாத எனக்கு பிளாக் டீ வேணும் என கூறினான். 

இதோ கொண்டு வரேன் என அசுர புன்னகையை வெளிப்படுத்தியவள். அதை ஒரு ஃபில்டர் செய்து அவனுக்கு கொண்டு வந்து நீட்டினாள். 

“எடுத்துக்கோங்க”

ஒரு மிடுக்கு குடித்தவன் அவளை வேதனையுடன் பார்த்தான். திருப்தி புன்னகையுடன் அவனை பார்த்தவள். “நிஜமாவே எனக்கு தெரியாது சார்.”

“எப்படி தெரியாம போகும் வேணும்னு பண்றயா டி!” என பற்களை கடித்தான். 

“நான் ஏன் வேணும்னு பண்ணனும்? நீங்க கேட்டீங்க நான் உண்மைய சொன்னேன். நீங்க போட்டுட்டு வான்னு கம்பள் பண்ணீங்க அதான் கொண்டு வந்தேன். எனக்கு நிஜமாவே தெரியாது” என்றாள் சைத்ரா. 

“உன்னோட வளர்ப்பு சரி இல்ல. இது கூட தெரியல!” என எழுந்தான். 

நீங்க சொன்னது சரிதான் சார் வளர்ப்பு சரி இல்லாதது போல என்னோட பிறப்பும் சரி இல்ல.  அதான் என்னை குப்பை தொட்டியில் தூக்கி போட்டுட்டாங்க. என்றாள் சாதாரணமாக.. 

திடுக்கிட்டு பார்த்தான் அஸ்வத்தாமன். 

சைத்ரா அவளது போனை பார்த்தாள். இன்னும் ஒரு மணி நேரம் இருக்கே! என நெளிந்து நின்றாள். 

என்ன சொல்ற? என தமன் கேட்க.. 

ம்ம் என்ன சொன்னேன்? என அவனை விசித்திரமாக பார்த்தாள் சைத்ரா. 

“இப்போ சொன்னயே! அது பொய் தானே!” 

“நான் ஏன் பொய் சொல்லணும் அதிரா! என நாக்கை கடித்துக் கொண்டவள். “சாரி நான் பொய் சொல்லல சார். உங்க கிட்ட கூட சொன்னேனே! என்னை மாதிரி இருக்க அனாதைகளுக்கு நீங்க நடிக்கிற பணத்தில்” என்றாள் சைத்ரா. 

அஸ்வத்தாமனுக்கு ஒரு மாதிரி ஆகி போனது. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவன். அவள் செய்த டீயை மீண்டும் குடிக்க ஆரம்பித்தான். 

அவள் எதுவும் பேசாமல் போனை நோண்டி கொண்டிருந்தாள். அவளுக்கு இந்த விசயங்கள் அனைத்தும் பழகிய ஒன்று ஆனால் அஸ்வத்தாமனுக்கு எதோ அடைப்பது போல இருந்தது. வேறு நபராக இருந்திருந்தால் இந்த அளவுக்கு அவனை பாதிக்காமல் இருந்திருக்குமோ என்னவோ! அவள் சொன்னது உண்மையாகவே உள்ளுக்குள் எதோ செய்தது. 

அப்போ நீ வளர்ந்தது? படிச்சதெல்லாம்! என அவளின் முகத்தை பார்த்தான். 

நான்! என சிரித்தவள். என்னை பத்தி உங்களுக்கு என்ன சார்! விடுங்க.. எனக்கு டைம் ஆகிடுச்சு நான் கிளம்பவா? என கேட்டாள் சைத்ரா. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அஸ்வத்தாமன் வேகமாக அவளின் அருகில் வந்து பாய்ந்து கட்டிக் கொண்டான். என்ன செய்வதென தெரியவில்லை இப்போதைக்கு கட்டிக்கொள்ள வேண்டும் என தோன்றியது. அதை செய்தான். 

சைத்ரா எந்த உணர்வும் இல்லாமல் அப்படியே நின்றாள். சில நொடிகள் கழித்து விலகினான். 

நான் கிலம்பலாமா! பிளீஸ் என கெஞ்சும் தொனியில் கேட்டாள். 

ம்ம் என அவன் ஒற்றை பதில் கொடுக்க… அவளின் முகத்தில் அத்தனை சந்தோஷம் கூடவே நிம்மதியும் தோன்றியது. என்னை விட்டு சென்றால் தான் இவளுக்கு நிம்மதியா? என்னுடன் இருக்க இவளுக்கு விருப்பம் இல்லையா? என யோசனையுடன் அதே இடத்தில் நின்றான். கண் இமைப்பதற்குள் அவ்விடத்தை விட்டு காலி செய்திருந்தாள் சைத்ரா. 

அவள் நகர்ந்ததும் முன்னாள் சக்தி இந்நாள் சைத்ரா பற்றி விசாரிக்க பிரைவேட் ஏஜென்சிக்கு தொடர்பு கொண்டான் தமன். 

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. வழக்கம் போல ஷூட்டிங் ஆனால் அதில் சைத்ராவுக்கு கூடுதலாக நிம்மதி. 

இன்று தமனுக்கு எந்த காட்சிகளும் இல்லை. அவளுக்கு மட்டுமே ஷூட்டிங் காட்சிகள் இருந்தது. அதனால் எப்படியும் இன்று வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விடலாம். அந்த கேடு கெட்டவன் கையில் அகபட வேண்டியதில்லை என அவள் பணிகளை செவ்வேன செய்தாள்.

ஆனால் மாலை அவள் எதிர்பாராமல் காரில் வந்திருந்தான். அவளின் காரை தடுத்து நின்றான். 

இவன் நல்லாவே இருக்க மாட்டான். அதிரா முகத்தை வச்சுட்டு இருக்குறதால யோசிக்க வேண்டியதாக இருக்கு என இறங்கி அவனை பார்த்தாள். 

மேடம் சார் இந்த காருக்கு வர சொன்னாரு என ஓட்டுநர் இறங்கி கூற..

இதோ வரேன் என தயங்கிய படி இறங்கினாள். எல்லாம் என் நேரம் சீக்கிரம் இந்த படம் சீக்கிரமா முடிஞ்சுட்டா போதும் இந்த இடத்தை விட்டு நான் கிரேட் எஸ்கேப் என நினைத்திருந்த நேரத்தில் இப்படி வந்து நிற்கிறான். இவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது வரவும் கூடாது என கோபத்துடன் அவனை பார்த்தாள் ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. 

நேராக கதவை திறந்தாள். அவள் ஏறியதும் இடையை வருடினான். கோபம் தலைக்கு ஏறியது. சுற்றிலும் பார்வையை சுழற்றியவள் பிளீஸ் இங்கே எல்லாரும் வந்திட்டு போயிட்டு இருக்காங்க நீங்க காரை கொஞ்சம் அந்த பக்கம் எடுத்திட்டு போங்க நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன். என்றாள் தன்மையான குரலில். 

இல்ல இப்போவே வா! என்கூட வர யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. வா சக்திஇஇஇ! என கொஞ்சும் குரலில் அழைத்தான். 

ப்ச் விடுங்க சார்! எனக்கு பிடிக்கல.. நீங்க கொஞ்ச தூரம் போங்க நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன் பிளீஸ் என சொல்லி வேகமாக கதவை ஸாத்தி விட்டு நகர்ந்தாள். 

சக்தி! ஹேய்  என தாவிகொண்டு அவன் வெளியே வர அதற்குள் அவளது காரில் ஏறியவள் அவ்விடத்தை விட்டு நகர்ந்திருந்தாள். 

F* you! என கோபத்துடன் கத்தியவன். “காரை எடுங்க” என ஆவேசமாக உள்ளே ஏறினான் பைத்தியக்காரன் போல… 

மேடம் வீரா சார் கிட்ட சொல்லிடலாமா என ட்ரைவர் கேட்க.. வேண்டாம் அண்ணா அப்படி எதுவும் பண்ணிட வேணாம். இப்போ கொஞ்சம் வேகமா போங்க அவுட்டர் போனதும் வண்டிய நிறுத்துங்க.. அண்ட் தமன் சார் கெஸ்ட் ஹவுஸ் பக்கம் வந்துடுங்க. எட்டு மணிக்கு ஷார்ப்பா வந்துடுங்க. என கூறினாள். 

அதற்குள் அஸ்வத்தாமானின் கார் முன்னால் வந்து தடுத்தது. 

சட்டன் ப்ரேக் போட்டு நிறுத்தினான் தேனி கேசவன். 

“என்னாச்சு அண்ணா!” என அவள் திடுக்கிட்டு பார்க்க.. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அவர் தான் மேடம் என பதட்டத்துடன் பார்த்தான். 

சரி அவுட்டர் தானே நான் பார்த்துக்கிறேன். நீங்க வாங்க என காரை விட்டு வெளியே சென்றவள். அவனது காரில் வேகமாக ஏறினாள். 

“சார் என்ன வேணும் உங்களுக்கு? நான் தான் வரேன்னு சொல்லிருந்தேனே அப்புறம் என்ன? என அவள் கூறி முடிப்பதற்குள் ஆவேசமாக இழுத்து முத்தமிட்டான். 

பளார் என அவனை ஒரு அரை விட்டாள் சைத்ரா. 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!