Episode -21
ஹலோ மிஸ்டர் காதலா படத்தின் ஷூட்டிங் யூனிட் பிஸியாக ஒரு பக்கமிருக்க, இன்னொரு பக்கம் அஸ்வத்தாமன் படத்தின் புரட்யூசர் வெங்கடேசுடன் பேசிய படி சைத்ராவின் கேரவன் பக்கம் வந்தார்கள்.
ப்ரட்யூசர் வருவதால் கார்ட்ஸ் நகர்ந்து கொண்டார்கள் அதற்கு காரணம் சைத்ராவின் இன்ஸ்ட்ரக்சன்ஸ் தான். யாரை வேண்டுமானாலும் அனுமதிக்களாம் ஆனால் அஸ்வத்தாமனை அனுமதிக்க கூடாது என உறுதியாக கூறி இருந்தாள்.
ஹலோ அம்மா! உங்களுக்கு இப்போ ஹெல்த் எப்டி இருக்கு என கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் வெங்கடேஷ்.
ஹான் பரவாயில்லை சார்! என்ன நீங்க இங்கே வந்திருக்கீங்க? ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நானே உங்களை பார்க்க வந்திருப்பேன் சார் என பெருந்தன்மையாக சைத்ரா கூறி முடிக்க.. அவளுக்கு பின்னால் அஸ்வத்தாமன் வந்து நின்றான்.
அவனை பார்த்த அடுத்த நொடி அவளின் முகம் தீ ஜுவாலைகள் போல தகிக்க தொடங்கியது. எதோ அசிங்கத்தை மிதித்தைதை போல பார்த்ததை போல முகம் மாறியது.
வெங்கடேஷ் அவளிடம் பேச்சு கொடுக்க, வைத்த கண் வாங்காமல் தமன் அவளை பார்வையில் ஊடுருவிக் கொண்டிருந்தான்.
படத்தை பற்றியும் உடல் நலத்தை பற்றியும் கேட்டு விசாரித்தவர். பத்திரம் மா என சொல்லிவிட்டு அஸ்வத்தாமனை பார்க்க.. நெக்ஸ்ட் சீன் ஒத்திகை பார்க்கணும் சார். நீங்க முன்னாடி போங்க நான் பின்னாடி வரேன் என சொல்லி விட்டு வெங்கடேசை வெளியே அனுப்பி வைத்தவன் கதவை சாத்தினான்.
அவனது திட்டம் பற்றி பாவம் அந்த நடுத்தர மனிதர் வெங்கடேஷ்க்கு தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் அனைவரின் முன்னும் அஸ்வந்த் இன்னும் நடிகன் ஒழுக்க சீலன். அவனது பண்பு என நல்ல பெயர் மட்டுமே. தமன் என்பவனின் மன்மத லீலை அந்த வயதான ஆளுக்கு தெரிய வாய்ப்பில்லை.
உங்களுக்கும் எனக்கும் பெருசா சீன்ஸ் இல்லையே! பிளீஸ் தயவு செஞ்சு வெளியே போங்க! என சைத்ரா சொல்ல.. முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு அவளின் அருகில் நெருங்கியவன். “எதுக்கு டி என்னை பார்த்து அப்படி ஒரு வார்த்தையை சொன்ன?”
“எந்த வார்த்தை? என்ன சொன்னேன்? கதவை ஓபன் பண்ணி வைங்க! நகருங்க!” என அவளின் கண்களில் ரவுத்திரம் பொங்கியது.
“நடிக்காத சக்தி! எனக்கு தெரியும் நீ என்னை பார்த்து ஏன் அந்த வார்த்தையை சொன்ன? உன்னோட மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க?”
“யாரு சக்தி? என்னோட பேர் சைத்ரா ஹே ஒரு தடவை சொன்னால் புரியாதா? வெளியே போடா ராஸ்கல்! பொம்பள பொறுக்கி” என்றாள் சைத்ரா ஆவேசமாக..
“பொம்பள பொறுக்கியா? நான் பொறுக்கி ட்டு இருந்ததை நீ பார்த்தியா? தேவையில்லாம பேசுற? சக்தி!” என அவளின் அருகில் நெருக்கமாக வந்துவிட்டான்.
ஹே ச்சீ தள்ளி போ! இல்லைனா நடக்கிறதே வேற என சைத்ரா எழுந்து கொள்ள முயற்சி செய்ய.. தாமனின் கண்களில் கோபம் மின்ன.. “என்ன டி திமிரா விட்டால் ஓவரா போற? பொருக்கியா நான் பொம்பள பொறுக்கின்னு சொல்ற? என் பிறப்பை பத்தி தப்பா பேசின உன்னை நான் சும்மா விடுவேன்னு நினைச்சியா சக்தி” என அவளின் கைகளை பிடித்தான்.
ஹே don’t touch me ராஸ்கல்! என ஆவேசமாக அவனை தட்டி விட்டாள். அஸ்வத்தாமன் அவள் மேல் உள்ள மோகத்தில் தவிப்பில் மோவாய் பிடித்து முத்தமிட்டான். ஆவேசமாக… அருகில் இருக்கும் பெப்பர் ஸ்ப்ரேவை எடுத்து ஒரு கண்ணில் அடித்தாள் சைத்ரா.. எதற்கும் இருக்கட்டுமே என வாங்கி வைத்திருக்கிறாள்.
“ஹா burning…!!!” என கத்தினான். கண்களை விழிக்க முடியவில்லை குடைந்தது. பொம்பள பொறுக்கி தான் டா நீ! அதுக்கு தகுந்த ஆதாரமும் இருக்கு என் கிட்ட என்றவள். மூன்று வருடங்களுக்கு முன் ரயில்வே ஸ்டேஷனில் அவளை சுற்றி வளைத்த ரவுடி கும்பல் ஆட்களையும் சூரியன் சந்திரன் படத்தில் நடித்த ஸ்டன்ட் கலைஞர்கள் வீடியோவையும் என இரண்டும் அஸ்வத்தாமனின் ஒற்றை கண்களில் தெரியும் படி காட்டினாள்.
அவனுக்கு கண் எரிச்சலை விட இப்பொழுது அவள் என்ன பேசுவாளோ என்பது தான் இதயத்தை சுட்டது போல இருந்தது. “பார்த்துக்கோ இப்போ நீ பொம்பளை பொறுக்கின்னு ஒத்துக்கிறயா? என்னை திட்டம் போட்டு உன்னோட வலையில் விழ வச்சிருக்க.. நீ எவ்ளோ மானம் கெட்டவனா இருப்ப? சொல்லு!”
“ஹே அது அப்படி இல்ல சக்தி!”
“என்ன டா? என்ன உன்னோட நாடகத்தையும் நடிப்பையும் சக்தியா இருந்த அந்த கிறுக்கி நம்பி இருக்கலாம். ஆனால் இந்த சைத்ரா நம்ப மாட்டாள். உன்னை எவ்ளோ பெரிய இடத்தில் வச்சிருந்தேன் தெரியுமா? என்னை இப்படி இப்படி என்னோட வாழ்க்கைய அழிச்சிட்டல்ல..”
“அப் அப்போ உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னது பொய் தானே! அந்த குழந்தை உன்னோடது இல்ல தானே!” என தமன் நம்பிக்கையுடன் அவளை பார்க்க… “என்னோட பெர்சனல் பத்தி உன்கிட்ட நான் எதுக்கு சொல்லணும். முதல்ல வெளியே போ ராஸ்கல்” என பெப்பர் ஸ்ப்ரே எடுத்தாள்.
கண்கள் வெளியே வந்துவிடும் அளவுக்கு எரிச்சல். “ஹே சக்தி! பிளீஸ் ஒரே ஒரு நிமிடம் என வலியை பொறுத்துக் கொண்டவன். நான்!.. நான் பண்ணது தப்பு தான்! நான் அப்படி பண்ணிருக்க கூடாது. எதோ புத்தி கெட்டு போய் பண்ணிட்டேன்.”
“உன்னோட விளக்க மயிரு எனக்கு தேவையில்லை வெளியே போ!” என சைத்ரா கைகளை தூக்கினாள்.
“சக்தி பிளீஸ் எனக்கு அப்போ தெரியல! ஆனால் உன் கூட இருந்ததுக்கு அப்புறம் நான் நானாக இல்ல. உன்னை தான் என்னோட..”
“என்ன? உன் உடம்பு தேடுது போல அதுக்கு தான் இப்படி வெட்கம் இல்லாம வந்து நிக்கிற அப்படி தானே! ஆனால் ஒரு தடவை தொட்ட பொண்ணை மீண்டும் தொட மாட்டியே நீ!”
“அய்யோ சக்தி பிளீஸ்!. நான் சொல்றத கேளேன். ந.. நான் இப்போவெல்லாம் அப்படி இல்ல. எனக்கு எனக்கு நீ வேணும். உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன். உன் கூட இருக்கணும். நீ தான் என்னோட நிம்மதின்னு தெரிஞ்சுக்கிட்டேன்.”
இதை கேட்டு சக்தி வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
“கல்யாணமா? யாருக்கு கல்யாணம் எதுக்கு கல்யாணம்? பார்த்துக்கோ நீ! எனக்கு குழந்தை இருக்கு. இது நான் மாசமா இருக்கும் போது எடுத்த போட்டோ ஷூட் எனக்கு பையன் இருக்கான் என்னை கண்ணுக்குள் வச்சு பார்த்துக்க அவர் இருக்கார். சோ நீ உன்னோட வேலையை பார்த்திட்டு எல்லா சட்டைரையும் சாத்திட்டு போறியா?” என்றாள்.
ஸ்ப்ரே அடித்த கண்களில் நீர் வழிய அந்த படங்களை பார்த்தாள். குழந்தையின் கைகளை பிடித்த படி ஹாஸ்பிடல் படுக்கையில் சக்தி படுத்திருக்கும் படத்தை காட்டினாள்.
அஸ்வத்தாமனின் முகம் இன்னும் இருண்டு போனது. சைத்ரா நிம்மதியுடன் அவனை பார்த்து “உன்னால தான் என்னோட புனிதமே போச்சு”
நீ என்னை விரும்புறேன்னு தானே சொன்ன? எப்டி உன்னால இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்க முடிஞ்சது? என தமன் கண்களில் நீர் வழிய முழிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டே அவளை பிடிக்க கைகளை காற்றில் அலைபாய விட்டான்.
ஆமா சொன்னேன்? உன்னை லவ் பண்றேன்னு சொன்னேன். அன்னிக்கு அந்த நைட் தான் என்னோட நேசம் காதலா மாறுச்சு நூத்துக்கு நூறு உண்மை உன்னை அவ்ளோ விரும்பினேன். என்னை உனக்கு அந்த நைட் தான் தெரியும். ஆனால் உன்னை எனக்கு எப்போ நீ சினிமா நடிக்க ஆரம்பிச்சு தொண்டு செஞ்சிட்டு இருந்தியோ உன்னோட கொடை பண்பை பார்த்து உன்மேலே பாசம் வச்சேன். அது காதலை விட அதிகம் ஒரு பைத்தியக்காரதனம் உன் மேலே என்றாள் சைத்ரா.
தமன் பேச வர.. “ஹே நான் இன்னும் பேசி முடிக்கல! நீ கொடுத்தியே 80 லட்சம்!.. நியாபகம் இருக்கா?”
தமன் எட்சிள் கூட்டி விழுங்கினான். சைத்ரா அவளின் இருக்கையில் அமர்ந்தபடி.. அந்த மூணு நாலு நாள் உன்னோட நான் இருந்ததுக்கு கூலி கொடுத்து அனுப்பின பார்த்தியா? அது உனக்கு திரும்ப எண்பது லட்சத்து ஒரு ரூபாயாக வந்திருக்குமே! நியாபகம் இருக்கா? என்றாள் பெண் சிங்கமாக..
அஸ்வத்தாமன் விக்கித்து நின்றான். சைத்ரா அவனை பார்த்து “அன்னிக்கு தான் உன்மேல என்னோட பைத்தியக்கார தனமான காதல் செத்து போய் உன்மேல பைத்தியக்கார தனமான அதாவது உன்னை வெட்டி கூறு போடுற அளவுக்கு ஆத்திரம் வந்தது. அதான் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கினேன். என் குழந்தை எங்க ரெண்டு பேரையும் கண்ணுக்குள் வச்சு பார்த்திக்கிற அவர். நீ மட்டும் அவர் கண்ணில் பட்ட உன்னை..” என கைகளை முறுக்கினாள்.
நிராயுதபானியாக நின்றான் அஸ்வத்தாமன் கண் சிவந்து வீங்க ஆரம்பித்தது. “இதுவே லாஸ்ட் அண்ட் ஃபைனலா இருக்கட்டும் என்கிட்ட எதுவும் வந்து கேட்டுட்டு என் முன்னாடி வந்து நின்னு தொலையாத”
தமன் அதே இடத்தில் நிற்க.. என்ன? உன்னோட வாழ்க்கையில் என்னை மட்டும் தான் தொட்ட மாதிரி பில்ட் அப் கொடுக்கிற? எத்தனை பொண்ணுங்க கூட இருந்திருக்க.. அந்த ஒரு நாள் நான் நேராக சென்னை கிளம்பி இருந்தால் உன்னை பார்த்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது. எல்லாம் என்னோட விதி! இப்படி புரட்டி போட்டு.. என பெருமூச்சை விட்டவள்.
இனி என்னோட வழியில் வராதே! என அவளின் வேலையை தொடர்ந்தாள். அதற்கு மேல் அஸ்வத்தாமனால் பேச முடியுமா? இல்லை அங்கு நிற்க அருகதை இருக்குமா? போடா என கூறி விட்டாள்.
இனி அஸ்வத்தாமன் என்ன பண்ண போறா?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels











💬 1 comment
Super super super super super super super super super super super super super super super super ♥️♥️♥️♥️♥️♥️