🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
23. அழகிய அசுரா
அழகிய அசுரா
📖 அழகிய அசுரா · Chapter 23 of 41

அழகிய அசுரா

  • 2 Jul 2025
  • 318 reads
  • ☆ No ratings yet
  • 7 min read

Episode -22

கண்களில் ஏற்பட்ட எரிச்சலில் கர்சீப் கொண்டு மறைத்தவன் வேகமாக மருத்துவமனை புறப்பட்டான். தயாரிப்பாளர் வெங்கடேஷ் தமனிடம் என்னாச்சு என கேட்க.. கண்ணு வலி தாங்க முடியல என காட்டிவிட்டு அடுத்த நொடி பேக் அப் ஆகியிருந்தான்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

இன்னொரு பக்கம் நிம்மதியாக சைத்ரா அவளது ஷூட்டிங் காட்சிகளை நடித்து முடித்து கிளம்பினாள். அவளுக்கு எதிரில் சஞ்சய் நின்றிருந்தான். 

அவனை விநோதமாக பார்த்தவள் எதையும் கண்டு கொள்ளாமல் புறப்பட.. “நில்லு சக்தி! தமனோட இந்த நிலைக்கு காரணம் நீ தானே!” என வழி மறித்தான். 

“ஹலோ மிஸ்டர் நான் சக்தி இல்ல என்னோட நேம் சைத்ரா. எனக்கு எதுவும் தெரியாது நீங்க சொல்ற மாதிரி..  நானா யாரு பிரச்சனைக்கும் போக மாட்டேன். பிளீஸ் வழிய விடுங்க” என திரும்பினாள். 

நீ இப்போ வீரா வீட்டில் தானே இருக்க? இதை பத்தி சொல்லட்டுமா அவன் கிட்ட..  என்றான் சஞ்சய்.

திடுக்கிட்டு பார்த்தவள். நான் எங்கே இருந்தால் உங்களுக்கு என்ன? உங்க வேலைய மட்டும் பாருங்க? என்னை பத்தி நீங்க எதுக்கு தெரிஞ்சுக்கணும்? தே.. தேவையில்லாம பேசாதீங்க. உலரிட்டு இருக்காதீங்க அவ்ளோ தான் சொல்லிட்டேன். நான் என்னை பத்தி எகஸ்ட்றா வேலை பண்ணீங்க அப்புறம் நடக்கிறதே வேற” என உச்ச ஸ்தானியில் கத்தி விட்டு நகர்ந்தாள் சைத்ரா. 

பிளீஸ் சக்தி நான் சொல்றத கேளு! அஸ்வத்த்தாமன் ஆரம்பித்தில் கெட்டவன் தான். கெட்டவன்னு சொல்றத விட அவனோட வாழ்க்கையில் அத்தனை பிரச்னை? அவ்ளோ வெறுமை அதனால் அவன் அப்படி இருந்தான்.  ஆனால் இப்போ அவன் மாறிட்டான். உன் மேலே பைத்தியமா இருக்கான். 

சக்தி இளன பார்வையுடன் “உங்களை பார்த்தால் பெர்சனல் அசிஸ்டன்ட் மாதிரி தெரியலயே! அவன் எதாவது பணம் கொடுத்து உங்களை பேச வைக்கிரானா? என்ன?” 

அதே நேரம் இங்கே அஸ்வத்தாமனின் முன் டிடெக்டிவ் ஏஜென்சி ஆட்கள் இருவர் நின்றிருந்தார்கள். சொல்லுங்க என்ன விசயம்? என தமன் சுரத்தே இல்லாத குரலில் கேட்க.. சார் நீங்க கண்டு பிடிக்க சொன்ன விசயத்தை ஓரளவுக்கு find பண்ணிருக்கோம் என்றான் டிடெக்டிவ் சாமுவேல். 

நான் எதையும் கேட்கிற மோட்ல இல்ல நீங்க கிளம்பலாம் என்றான் தமன். 

ஓகே சார் இது நாங்க கண்டு புடிச்ச சில போட்டோஸ் அதனால.. உங்களுக்கு தேவைபட்டால் இதை பாருங்க என நகர்ந்தார்கள். அஸ்வத்தாமன் அந்த கவரை எடுத்து வைக்க சென்றவன் கண்களில். சைத்ரா மற்றும் என்னை போலவே இன்னொருவன். இது food square மும்பை மார்கெட்டில் எடுத்த படங்கள் என தெரிந்தது. 

அப்போ இது வீரா!..  ஹே ஹலோ என அஸ்வத்தாமன் கத்த… கார்ட்ஸ் உடனே எட்டி பார்த்துவிட்டு டிடெக்டிவ் இருவரையும் அழைத்தார்கள். சார் எனி பிராப்ளம் என சாமுவேல் கேட்க.. 

“சொல்லுங்க என்ன கலெக்ட் பண்ணிருக்கீங்க எதுக்காக உங்கள நான் கூப்பிட்டேன் ஐ திங்க் அதிவீராவுக்கு கல்யாணம் ஆனதை பத்தியா ?” என தமன் பதட்டத்துடன் பார்த்தான். 

எஸ் சார்! உங்க அண்ணனுக்கு ரதின்ற பொண்ணு கூட மூணு வருஷத்துக்கு முன்னாடியே மேரேஜ் ஆகி இருக்கு.  

அப்போ அஃபார் யாரு கூட என தமன் கேட்க.. சாமுவேல் படங்களை காட்டிக் கொண்டே ஆக்டர் சைத்ரா தான் சார் அந்த பொண்ணு. உங்க பிளட் பிரதர் கிட்டதட்ட மூணு வருசமா அவங்க கூட ஒரே வீட்டில் இருக்கார். அண்ட் அவங்க வீட்ல ஒரு குழந்தையும் இருக்கு. அதோட பர்த் details எல்லாம் எங்களால் கலெக்ட் பண்ண முடியல. அது உதவும் கரங்கள் சேரிட்டி உள்ளே நுழைய முடியல. என்றார். 

அஸ்வத்தாமன் அனைத்து படங்களை அதிர்ச்சியுடன் பார்த்தான். என்னை என்னை பழி வாங்க தான் வீரா இதையெல்லாம் செய்கிறானா? என நினைத்துக் கொண்டிருக்க.. 

“இந்த ரதியொட முகம் எங்களால் கண்டு பிடிக்க முடியல சார்! மீதி விவரங்கள் கிடச்சதும் உங்களை பார்க்க வரோம்” என்றார் இம்மானுவேல்

அப்போ இவள் இந்த சக்தி வீராவோட காதலி! ச்ச! என்னை பிளான் போட்டு இந்த நிலைக்கு கொண்டு வந்துட்டா! எல்லாம் சதி வேலையா? என நினைத்தவன். சரி நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன் என யோசனையுடன் அமர்ந்திருந்தான். 

இருக்காது வீரா அம்முக்காக உயிரை பொருட்படுத்தாமல் துணிஞ்சு இறங்கி இருக்கான் அவங்களை காப்பாற்ற.. அப்போ இந்த ரதி யாரு? கண்டிப்பா அம்மு கிட்ட பேசியாக வேணும் என நினைத்தவன். உடனே வீராவின் வீட்டுக்கு அழைத்தான். 

“ஹலோ”

“அம்மு கிட்ட பேசணும் போன் கொடுங்க” என தமன் கேட்க.. உடனே போன் கொடுக்கபட்டது. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ஹலோ அம்மு நான் தமன் பேசுறேன்.”

“சொல்லுங்க சார்!” என்றாள் அம்மு. 

“அங்கே போனதும் என்னை மறந்துட்டீங்க ஒரு போன் கூட இல்ல. அந்த வீரா உங்களை கொடுமை பன்றானா?” என நலம் விசாரித்து ஆரம்பித்தான் தமன். 

“இல்ல சார் அப்படி இல்ல.. ஆருவை பார்த்திட்டு நேரம் போறதே தெரியல. நான் எனக்கென்ன வீரா எப்போவும் போல தான். ரொம்ப முறுக்கிட்டு இருக்கார்” என்றாள். 

தமன் மனதில் ‘இவள் கிட்ட சைத்ரா பத்தி விசாரிக்கலாமா வேணாமா? வேணாம். கண்டிப்பா அம்மு பேசுறது கால் ரெக்காடிங் கூட அந்த அரக்கன் பண்ணுவான்.’ 

ஹலோ சார் என அம்மு அழைக்க.. “சாரி அது ஒன்னுமில்லை. உங்களோட  உண்மையான பேர் என்ன?”

மறுபுறம் அமைதியாக இருக்க.. “ஹலோ அம்மு!” என மீண்டும் அழைத்தான் தமன். 

“எதுக்கு திடீர்னு?”

“இல்லை என்னோட படத்தில் அம்முன்னு ஒரு பொண்ணு நடிக்கிறாங்க! சட்டுன்னு உங்க நினைப்பு வந்தது அந்த பொண்ணுடய உண்மையான பேரு காவியா! அதான் உங்களோட பேர் உண்மையான பேர் என்னன்னு கேட்டேன்” 

அப்படியா என்னோட பேர் ரதி சார் என்றாள் அம்மு. 

அஸ்வத்தாமனுக்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது. “அப்போ வீரா அம்முவை தான் கல்யாணம் பண்ணிருக்கான். இந்த சக்தி!! இவள் எங்கிருந்து வந்தாள்?” என பைத்தியம் பிடித்தது. 

“நீங்க எப்டி இருக்கீங்க என பொதுவாக அம்மு கேட்க.. நான் நல்லாறுக்கென்” என சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தான் தமன். 

இப்பொழுது அஸ்வதாமனுக்கு என்ன தான் டா பிரச்னை அப்டின்னு கேட்டால் சக்தி எப்டி மாசமாகி இருப்பா? அந்த குழந்தைய பார்க்க அப்படியே வீரா போல இருக்கே என்பது தான்.. 

‘ஆருவொட அம்மா யாரு? சக்தியோட குழந்தை எங்கே?’ என கேள்விகள் மண்டையை குடைந்தது. அதற்கு காரணம் அஸ்வத்தாமன் ஒரு பெண்ணிடம் உறவு வைத்துக் கொள்ளவில்லை. நிறைய பெண்களுடன் உறவு வைத்திருக்கிறான். பாதுகாப்பான முறையில் உறவு வைத்துக்கொண்டாலும் அதன் பின் குழந்தை பிறப்பு எனும் ஒரு சம்பவம் இருப்பதை இந்த வளர்ந்த பையன் மறந்து போயிருக்கிறான். 

‘இப்போ சக்தியோட புருசன் யாரு? அவன் எப்படி சக்திய வீரா கூட ஒரே வீட்டில் தங்க வைத்தான்? இப்படி கிருக்குதனமான கேள்விக்கு பதில் அவந்தாண்டா நானு என சிங்கமுத்து வடிவேலு காமெடிய போல பதிலே கேள்வியை தேடிக்கொண்டிருக்கிறது. சக்திக்கு திருமணம் ஆகவில்லை ஆருவும் ருத்ரணும் ஒன்னு. அவன் உன்னோட குழந்தை டா’ அப்டின்னு அஸ்வத்தாமனுக்கு யார் சொல்வார்கள். 

‘என்னை கவுக்க சதி நடக்குது. என்னை கீழே தள்ள அந்த வீறாவின் தாத்தா சவுந்தர பாண்டியன் போட்ட திட்டமா இருக்குமா? எது எப்படி இருந்தால் என்ன? எனக்கு சக்தி வேண்டும்? அவளது பேச்சில் பொயில்லை. கல்யாணம் ஆனாலும் சரி எனக்கு அவள் வேணும் அதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன். நான் ஒன்னும் நல்லவன் இல்லையே நல்லத செய்ய.. நாட்டை போர் செய்து வெல்லும் ராஜா நல்லவன் எனில் நானும் நல்லவன் தான். என்னோட ராணி சக்தி தான் அவளுக்கு கல்யாணம் ஒரு தடவை தானே ஆகி இருக்கு இட்ஸ் ஓகே நானும் ஒன்னும் யோக்கியன் இல்லை. இனி சக்தி வேணும்’ என மீண்டும் சேற்றில் அடி வாங்க கிளம்பினான் அஸ்வத்தாமன். 

சக்தி வேணும்னா பூஸ்ட்ட பாலில் போட்டு குடி டா! இல்லன்னா ஹார்லிக்ஸ் வாங்கி குடி.. தேவையே இல்லாம செருப்படி வாங்கிட்டு ரிட்டன் ஆகாதே டா அவ்ளோ தான் சொல்லிட்டேன். 

அதுல சக்தி இல்ல வெறும் சுகர் தான் இருக்கு. என பஞ்ச் பேசிவிட்டு இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துவிட்டு ஃபிகரை கரெக்ட் செய்ய கிளம்பினான் தமன். 

நான்கு நாட்களுக்கு பின் வாங்கிய அடியில் மூடிக்கொண்டு இருப்பான் என சைத்ரா நினைத்தவள். அவளின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தினாள். 

அஸ்வத்தாமன் அவனுக்கு உண்டான காட்சிகளை நடித்து முடித்தான். மதியம் ஒரு சீன் காட்சி படி பார்த்தால் அஸ்வத்தாமன் தன் தங்கையின் தலையை வருடி அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டு ஆறுதல் சொல்ல வேண்டும். தமன் எப்பொழுது அந்த காட்சி வரும் என காத்திருந்தான்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

சைத்ரா இயல்பாக தன் அண்ணனிடம் பேசுவதை போல அனைத்து டைலாக்கையும் பேசினாள். இல்ல மா அஞ்சனா உன்னோட அண்ணா நான் இருக்கேன். கண்டிப்பா உனக்காக உயிரை கொடுப்பேன். என அவளின் தலையை வலுக்கட்டாயமாக மார்பில் புதைக்க வைத்தவன். இடையில் கைகளை வருடினான். 

சைத்ரா திடுக்கிட்டு பார்க்க.. நீ எனக்கு வேணும் சக்தி! நான் நல்லவனா உன்னை அடைய நினைச்சேன் நீ முரண்டு பிடிக்கிற! இனி உன்னை எப்படி என் வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும் டி! என மனதில் நினைத்தவன். அவனது விரல்களால் வயிற்று சுழியில் இருந்து இறுக்கி கட்டப்பட்ட இரண்டு பலூன்களின் மேல் பதித்தது. 

ஆவேசமாக அவனை தள்ளி விட்டாள் சைத்ரா. கட் என்னாச்சு மா? என கத்தினார் டைரக்டர். 

சைத்ரா கோபத்துடன் தமனை பார்த்தாள். 

அஸ்வத்தாமன்…? 

தொடரும்..

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 2 comments

  1. Sakthi venum na poi boost horlicks kudi da….thevai Ilama poi serupadi vangatha…..writer akkov sense of humor ulti….

Share your thoughts

error: Content is protected !!