Episode -5
அழகான கெண்டை கால்களை தொட்டு வருடி கொடுத்தவனின் உதடுகள் தைஹை எனப்படும் தொடையில் வழிசலுடன் கடித்தது. மோக முனகலுடன் கிறக்கமாக பார்த்தாள் தான்யா.
இந்த இடம் அவ்ளோ அழகு டிஇஇ என ரசித்து பாராட்டினான். தமன் இன்னும் எவ்ளோ நேரம் அங்கேயே தொட்டுட்டு இருப்ப! வாடா! என இழுத்தாள். சொக்கி கொண்டே தமன் தமன் என அந்த அறையின் ஒவ்வொரு மூலையிலும் பெயர் எதிரொலித்தது.
அந்த கெஸ்ட் ஹவுஸ் வீட்டின் செக்யூரிட்டி பிரம்மாண்டமான வீட்டை பார்த்துக் கொண்டிருந்தார். ‘பணம் இருந்தால் என்ன வேணா பண்ணலாம். நாளைக்கு லோன் காரன்ல இருந்து, வீட்டு ஓனர், குழந்தை குட்டிக்கு பீஸ்ன்னு எல்லாம் லைனா வந்து நிர்ப்பாங்க! வாரத்தில் ஒருத்தன் உல்லாசத்துக்கு மட்டும் இருக்கிற இந்த வீட்டுக்கு நான் காவல்காரன் வேலை பார்க்கிறேன். அந்த பொண்ணுங்களுக்கு கொடுக்கிற பணம் தான் நான் சாகிற வரைக்கும் கூட சம்பாதிக்க முடியாத தொகை. முடியாதவர்களுக்கு உதவி செய்யிரானுங்க ஆனால் கண்ணுக்கு முன்னாடி கஷ்ட படுற என்னை மாதிரி ஏழைகளுக்கு உதவி செய்ய யார் இருக்கா?’ என அன்னாடங்காட்சியாக அவரின் நெஞ்சு குமுறல் பெங்களூர் பனியில் நடுங்கி கொண்டே விடும் மூச்சு காற்று போல அந்த காற்று இன்னும் உறைந்து போனது.
AC அறைக்குள் போர்வையில் அவளை வேர்க்க விறுவிறுக்க செய்யும் பணியில் செவ்வன செயலாற்றி கொண்டிருந்தான் அஸ்வத்தாமன் என்றால் குதிரையின் புனிதத்தை குறிக்கும் குரலாம். ஆம் இவன் குதிரை சாதிதான் எந்த நேரத்தில் பெயர் வைத்தார்களோ குதிரை வேகத்தில் சாமுத்ரிக லட்சணத்தை தேடி தேடி தமன் உறவு கொண்ட அனைத்து பெண்களும் கண்ணுக்கு கவர்ச்சியாக சங்கினி அத்தினி என்னும் அதிக காம உறவில் ஈடுபடும் பெண்களிடம் எங்கேனும் தேடினாலும் புரண்டாலும் கட்டிலில் பரமபதம் விளையாடினாலும் கிடைக்க மாட்டாள் பத்தினி. அவளை அத்தினி சங்கினியாக நினைத்து கைவைத்தால் பத்தினி யாரென உணர்த்தும் நாள் தொலைவில் இல்லை..
சனிக்கிழமை முடிந்ததும் சிட்டாக பறந்து விட்டாள் அந்த சங்கினி பெண் பெருத்த தொடையும் பின்னழகும் அழகே இல்லை.. என்று நான் கூறுவேன். அனைத்தும் தீராத ஆசை பொன், பொருள்,போதை அந்த போதையில் மூன்று வகை உண்டு மது, மாது, சூதாட்டம் ஆகியன.. எவ்வளவு சுகித்தாலும் இடம் பார்த்து நிறம் பார்த்து, என சதை பற்று மோகத்தை இன்னும் தேடுகிறான் அதிகமாக..
ஒரு வாரத்துக்கு உணர்வுகளை ஒத்திவைத்துவிட்டு படப்பிடிப்பில் நடிக்க கிளம்பினான் அஸ்வத்தாமன்.
“மீட் மிஸ் சக்தி” என அவளை அறிமுகம் செய்தார் HOD.
தெலுங்கா, மலையாளமா, தமிழா என மார்னிங் ஷிப்ட் பெண்கள் கூட்டம் மொத்தமும் சுற்றி வளைத்தது.
கமிட்டடா? சிங்கிலா? என அவளை வழிசல் ஊற்றிக் கொண்டு பார்த்தார்கள் ஆண்கள் அனைவரும்.
கையில் ராக்கி கயிருடன் நுழைந்தவள் பாரபட்சம் பார்க்காமல் அனைவரின் கையிலும் கட்டி விட்டாள்.
“என்ன மா இப்படி பண்ற?” என அனைவரும் கோபம் மற்றும் ஏமாற்றத்துடன் பார்க்க, நான் ஆஃப்னேஜ்ல வளர்ந்தேன். எனக்கு அக்கா தங்கை அண்ணன் தம்பி யாருமே இல்ல. இந்த பெங்களூர் எனக்கு புதுசு. உங்க கிட்ட தான் இதை எதிர்பார்த்து வந்திருக்கேன். உங்களுக்காக என்ன ஹெல்ப் வேணாலும் செய்வேன் என பாவமான பூனை குட்டி போல பார்த்தாள் சக்தி.
மொத்த டீமும் ஒரே நொடியில் கண்ணீர் சிந்தாத குறை தான். வா வந்து கட்டி விடு தங்கச்சி என ஒருவன் கூற.. ஹப்பா என பெரு மூச்சுடன் அனைவருக்கும் கட்டி விட்டாள் சக்தி. ஹே சென்ட்டிமெண்ட் காட்டி வேலையில் இருந்து தப்புக்கணும்னு நினைக்காத நான் தான் மா உன்னோட ட்ரெயினர் என கூறினான் ஒருவன்.
“அண்ணா நான் ரொம்ப நல்ல பொண்ணு” என கூறி அவளின் வேலையில் காட்டினாள்.
ஒரு வாரம் என்பது சக்திக்கு அதிகமாக இருக்க, மூன்று நாட்களில் ட்ரெயினிங் முடித்து விட்டாள். ஹே சக்தி இதை செக் பண்ணிடு! சக்தி மா இந்த க்லைன்ட் கிட்ட பேசணும் டா அதுக்கு கண்டன்ட் ரெடி பண்ணி கொடு டா சக்தி! என ஒவ்வொரு வேலைக்கும் மொத்த டீமும் அவளை எதிர்பார்த்தது. அந்த அளவுக்கு சுட்டி பெண்ணாக வலம் வந்தாள். அனைவருக்கும் செல்லமாக இருந்தாள்.
வித்யாவுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவளும் இங்கே மாறுதலுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள். அந்த புராஜக்ட் ஆறு மாதம் காலக்கெடு கொடுத்து ஐந்து மாதங்களில் முடித்திருந்தார்கள் இந்த வருடம். அதனால் கம்பனியலிருந்து வரும் வெள்ளிக்கிழமை HOG ஒரு பார்ட்டிக்காக கெஸ்ட் ஹவுஸ் புக் செய்திருந்தார்.
எல்லாரும் கண்டிப்பா கலந்துக்கணும். Foods, எண்டர்டெயின்மெண்ட், கேம்ஸ் என அனைத்தும் ஒரு நாளைக்கு முழுவதும் மொத்த செலவையும் கம்பனியே ஏற்று கொண்டது. “சக்தி நீ என்ன ட்ரெஸ் போடுற?”
நான் HOG சொன்னதுக்காக தான் கா வரேன். வித்யா வீட்ல அவங்க தாத்தா பாட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை ஃபங்ஷன் கா அதனாலே நான் அங்கே போகனும். அப்படியா செல்லம் ஒன்னும் பிரச்னை இல்ல. அங்கேயிருந்து ஆபிஸ் கார்ல போயிடு. ஓகே தான..
ஓகே டன் என சக்தி அந்த வாரம் முடிக்க வேண்டிய அனைத்து பணிகளையும் முடித்தவள் வித்யாவுக்கு அழைத்தாள்.
“ஹே ரெடி தான? வேலைன்னு சொன்ன அவ்ளோ தான்” என வித்யா மிரட்டினாள்.
“வாட்ஸ் அப் பாரு டிக்கெட் டிடெயில உனக்கு சென்ட் பண்ணிருக்கேன் வேற என்ன பண்ணனும்?” என சக்தி கேட்க.. வித்யா அசட்டாக சிரித்தவள். “அதுக்கில்லை டி சக்தி உனக்கும் எனக்கும் ஒரே போல ட்ரெஸ் எடுத்து வச்சிருக்கேன். கூடவே புது கொலுசு அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வாங்கிருக்காங்க நம்ம ரெண்டு பேருக்கும் தெரியுமா? அம்மா உன்னை டெய்லி விசாரிப்பாங்க. நானும் உன்னை பேசுடின்னு சொல்றேன் நீ தான் கேட்க மாட்டுக்கிற முதல் தடவை வீட்டுக்கு வர போற? அதான் ஜாலியா இருக்கும் டி”
வரேன் வந்து தங்களின் அன்பை பெற்று கொள்கிறேன் என சக்தி கூற, “உனக்காக ஒரு சீக்ரெட் இருக்கு.”
என்ன?
இல்ல நீ வந்தால் தான் சொல்லுவேன்.
“ஹே என்னன்னு சொல்லு! இந்த திங்ஸ் எதுவும் வாங்கி கொடுத்த, நான் வாங்கிக் மாட்டேன்.” என்றாள் சக்தி.
“அந்த அஸ்வத்தாமன் படம் ரிலீஸ் ஆகுதே!”
“ஆமா வித்யா மா! இப்போ எல்லாம் என்னால தேட்டர்க்கு போய் பார்க்க முடியல! லேப்டாப்ல தான் பார்க்கிறேன். நான் அஸ்வந்தை ரொம்ப மிஸ் பண்றேன். நான் இருக்க இதே ஊரில் தான் அஸ்வந்த் இருக்கார். பட் என்னால எட்டத்தில் இருந்திட்டு கூட பார்க்க முடியல”
அய்யோ புலம்பாத! விடு இந்த தடவை ஒரு படம் ரிலீஸ் ஆகி இருக்கே! நல்ல ஃபேமிலி டிராமா போல அதுல உன் ஹீரோ தமன் சூப்பரா நடிச்சிருக்கார்ன்னு எல்லாரும் சொல்றாங்க சோ சக்தி மேடம் வந்தீங்கன்னா தாத்தா பாட்டியோட மணி விழாவை முடிச்சிட்டு படத்துக்கு போலாம் ஃபேமிலி டிராமா சோ எல்லாரும் சேர்ந்து போலாம். நான் இப்போவே டிக்கெட் புக் பண்ணிட்டேன் என்றாள் வித்யா.
சூப்பர் ஹை ஜாலி போலாமே என உற்சாகத்துடன் கூறினாள் சக்தி. அதுக்கு மேடம் இங்கே வரணும். சீக்கிரம் வாங்க.. ஓகே வரேன் ஆபிசர் என சக்தி சிரித்த படி உற்சாகத்துடன் பேசினாள்.
ஒரு வாரமும் ஊருக்கு செல்லும் உற்சாகத்துடன் வித்யாவிடம் போன் பேசினாள் சக்தி. இதோ பார்டிக்கான நாளும் வந்தது.
அக்கா முன்ன பின்ன நான் இந்த மாதிரி மாடர்ன் ட்ரெஸ் போட்ட பழக்கமே இல்ல என சக்தி சிணுங்க.. “ஹே பாப்பாவை கம்பல் பண்ணாதீங்க. பாப்பு உனக்கு என்ன ட்ரெஸ் புடிச்சிருக்கோ அதையே போட்டுக்க” என்றாள் பெரியவள் ஒருத்தி.
அனைத்து உடைகளையும் எடுத்து பார்த்தாள். ஒரு டிஸ்யூ காட்டன் புடவையை வருடி பார்த்தாள். அரக்கு வண்ணத்தில் பச்சை வண்ண பிளவ்ஸ் பார்க்கவே எந்த உருத்தலும் இல்லாமல் இருக்க இதையே கட்டிக் கொள்ள முடிவெடுத்தாள் சக்தி.
இரவு ஏழு மணிக்கு அனைவரும் கிளம்பினார்கள். ஹே யாந்ரே! கொல்ற டி! சம்பேஸ்தானு! அழகு சுந்தரி என தெலுங்கு மலையாளம் கன்னடத்தில் மிரட்டி உருட்டி அவளின் தோற்றத்தை பார்த்து பொறாமை கொண்டார்கள். “என்ன கா இது வேணாமா சுடி போட்டுக்கட்டா?” என சக்தி கேட்க..
வேணாம் வேணாம் அழகா இருக்க! இன்னிக்கி பார்டில பியூட்டி நம்ம சக்தி குட்டி தான். பேசாம மூடிட்டு நம்மலும் சாரி கட்டிருக்கலாம் என புலம்பிய படி அனைவரும் கிளம்பினார்கள்.
ஹே சக்தி! அய்யோ சக்தி இன்னிக்கி தங்க சிலை மாதிரி இருக்காளே! என மொத்த கூட்டமும் அழைத்து செல்ஃபி எடுத்துக் கொண்டது.
“பேபி மா! ஒரு கேட் வாக் பண்ணலாமா? சக்தி கூட யாரு?”
எல்லாருமே என கத்தினார்கள்.
டேய் ராஸ்கல்ஸ் என பெண்கள் முறைத்து பார்க்க, அண்ணன் டா! தங்கச்சி டா என்றார்கள் கோரஸ்சாக.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஒன்பது மணி வரை அவர்களுடன் இருந்தாள்.
அவளுக்கு ட்ரெயின் 11.10 சரி போதும் கிளம்புவோம் என சக்தி முடிவெடுத்தாள்.
பக்கத்து கெஸ்ட் ஹவுஸ்க்கு அதாவது அஸ்வத்தாமன் அவனது கெஸ்ட் ஹவுஸ்க்கு ரெஸ்ட் எடுக்க வந்து சேர்ந்தான்.
பார்ப்போம்.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels











💬 1 comment
Ayyo enna nadaka pogutho