🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
24. அழகிய அசுரா
அழகிய அசுரா
📖 அழகிய அசுரா · Chapter 24 of 41

அழகிய அசுரா

  • 2 Jul 2025
  • 344 reads
  • ☆ No ratings yet
  • 9 min read

Episode -23

என்ன சார் ஆச்சு? என டைரக்டர் கேட்க.. அஞ்சனாவுக்கு தான் எதோ பிரச்னை போல.. என்னாச்சு அஞ்சனா? என தமன் கூலாக கேட்டான். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

வேக மூச்சுடன் சைத்ரா அவனை முறைத்து பார்க்க.. என்ன மா? என்னாச்சு? 

சார் அது அது வந்து அவர் என்னோட காலை மிதிச்சிட்டார் ரொம்ப பெயினா இருக்கு என சைத்ரா சமாளித்தாள். 

அய்யோ சாரி அஞ்சு என சொல்லிய படி அஸ்வத்தாமன் அருகில் வர.. தேனி கேசவன் அவளை நெருங்காமல் அணை கட்டினான். 

தமன் கைகளை முறுக்கிய படி முறைத்தான். சார் 5 நிமிடம் டைம் கொடுங்க ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன் என வேகமாக சென்றுவிட்டு வந்தாள். அவளுக்கு டச் அப் செய்ததும் மீண்டும் காட்சி ஆரம்பமானது. 

நீ எதுக்கும் கவலை படாதே அஞ்சனா என தமன் வெகு சிரத்தையாக டயலாக் சொல்லிக் கொண்டிருக்க.. மீண்டும் அவனது கைகள் அவளின் உடைக்குள் சென்றது. சைத்ரா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றுகொண்டிருக்க.. அவன் அவளின் மென் பகுதிகளை வருடிவிட்டு மெல்ல அழுத்தினான். டயலாக் பேசிக் கொண்டே..  லவ்வர் போர்சன் நடிக்கிரானா? இல்ல பாசமலர் தங்கை போர்சன் பன்றானா? அதுவும் அவர்களை சுற்றி மொத்த யூனிட்டும் இருக்க இப்படி ஒரு அழிச்சாட்டியம் செய்கிறான்? இது எந்த ஊரில் நடக்கும். 

அவனது தொடுதலுக்கு மறுப்பு வரவில்லை என தெரிந்ததும் இன்னும் வசதியாய் போனது தமனுக்கு. அஞ்சனா நிமிர்ந்து பார்த்து டயலாக் பேசுங்க.. அண்ணா என்னால தான் உனக்கு பிரச்னை. இனி நான் எதுவும் நடக்காத மாதிரி பார்த்துக்கிறேன் அப்டின்னு சொல்லிட்டு நீங்க கண்ணை துடைச்சுக்கிட்டு நகரனும் அஞ்சனா என டைரக்டர் சொல்ல.. அதே போல சைத்ரா சொல்லிய படி விலகினாள். 

ஷாட் ஓகே! அடுத்த சீனுக்கு ரெடி ஆகுங்க அஸ்வந்த் சாருக்கு டச் அப் பண்ணுங்க என சொல்லிவிட்டு டைரக்டர் டீ குடிக்க நகர.. அச்சோ அஸ்வந்த் சார்! என ஒப்பனை கலைர்ஞகள் கத்தினார்கள். 

என்னாச்சு எதுக்கு கத்துரீங்க? என தமன் திரும்பி பார்க்க.. சார் உங்க இடுப்புக்கு கீழ் இரத்த காயம் பாதி சட்டை நனைஞ்சிருக்கு.. எப்படி ஆச்சு அய்யோ என ஆள் ஆளுக்கு ஒவ்வொன்றை சொல்ல.. சைத்ரா ஓரிடத்தில் அமர்ந்து கிரேப் ஜுஸ் குடித்துக் கொண்டிருந்தாள் கூலாக.. 

அஸ்வத்தாமன் வெடுக்கென தன் இடையின் பக்கம் திரும்பி தொட்டு பார்த்தான். புது பிளேட் கொண்டு பிளேட் போட்டிருக்கிறாள். இப்பொழுது தான் மெல்ல மெல்ல காயத்தில் இருந்து எரிச்சல் தெரிந்தது. கைகளை இறுக்கி மடக்கினான். 

அச்சோ எப்படி இது ஆச்சு? திடீர்னு என டைரக்டர் முதல் டெக்னீசியன் வரை அனைவரும் படபடப்பாக இருந்தார்கள். ஒன்னும் பிரச்னை இல்ல அது எனக்கு த்ராம்போசைட் டிபிசியன்சி இருக்கு. அதனாலே இப்படி ஆகி போச்சு! நான் உடனே மெடிக்கேசன் எடுத்துக்க போறேன். என அவ்விடத்தை விட்டு நகர்ந்தவன் பார்வை சைத்ராவை துளைத்தது. 

எல்லாரும் கேட்டோம் ஆனால் சைத்ரா அவர விசாரிக்கவே இல்லையே என அங்கிருக்கும் ஒரு சிலர் நினைப்பதற்கு முன் எழுந்திருந்தாள் சைத்ரா. நேராக அவன் பக்கம் சென்றவள் அண்ணா! அச்சோ அஸ் அஸ்வந்த் சார் என அழைத்தாள் கத்தி… 

வேகமாக அருகில் சென்றவள். எப்டி ஆச்சு என பதட்ட படுவதை போல பாவனை வைத்துக் கொண்டவள். இடுப்பில் போட்ட கோட்டை உன் கழுத்தில் போட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்ன்னு இனி நீ யோசிக்கணும். என் பக்கத்தில் வர யோசிக்கணும் டா ராஸ்கல்.. தொடுற!.. ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம.. என்ன பிறப்போ! த்தூ நீயெல்லாம் திருந்தவே மாட்டல்ல புல்ஷிட் என்றாள் சைத்ரா. 

எனக்கு ஒண்ணுமில்ல சைத்ரா ஃபீல் பண்ணாதீங்க என சத்தமாக கூறியவன் அவளின் காதுக்கு அருகில் வந்து எப்டி இருந்தது என்னோட பிரஸிங் என்றான் அஸ்வத்தாமன். அவனது முகத்தில் கவலை துளி கூட இல்லை. வெட்கம் கெட்ட ஜென்மம் என்பதை பார்த்தாலே சொல்லலாம். 

அவன் சொன்னதை கேட்டதும் கோபம் தலைக்கேறியது. அதே சமயம் உள்ளுக்குள் ஒரு வித பதட்டம் பரவியது. சரி அதை விடு அதுக்கு முன்னாடி என்னோட டவுட்ட க்லியர் பண்ணு. உனக்கு அம்மா கேரக்டர்ல நடிக்கிறவங்க கிட்டயும் இப்படி தான் நடந்திப்பியா என்ன? என்றாள். 

இதை கேட்டால் அனைத்து ஆண்களுக்கும் கோபம் வரவேண்டும். ஆனால் அஸ்வத்தாமன் சிரித்த படி, என் பையனுக்கு அம்மாவா இருக்க பொண்ணு கிட்ட இப்படி என்ன இதை விட  நடந்துப்பேன் என சொல்லிவிட்டு நிற்காமல் வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். 

சைத்ராவின் மனதில் ஒரு நடுக்கம் பரவியது. இப்போ இவன் என்ன சொல்ல வரான்? ஒருவேளை ஆரு விசயம் தெரிஞ்சிடுச்சா? அய்யோ தெரிய கூடாது. தெரிஞ்சுட்டா அவ்ளோ தான். இனி இவன் கூட எந்த படத்தையும் கமிட் பண்ணிக்க கூடாது பழி வாங்கினது எல்லாம் போதும். இனி ஹீரோயின் கேரக்டர் வேண்டாம். ஒரு குழந்தைக்கு அம்மாவாக கூட நடிக்கலாம். ஆனால் ஹீரோயின் கேரக்டர், சைட் ரோல் அய்யோ இவன் கூட இனி எந்த படமும் கூடாது என முடிவெடுத்தாள். 

நாட்கள் மெல்ல நகர்ந்தது. நல்லவேளை அதன் பின் பெரிதாக அஸ்வத்தாமனும் சைத்ராவும் சேர்ந்து நடிப்பது போல எந்த காட்சியும் இல்லை. கொஞ்சம் நிம்மதியாக இருந்தது அவளுக்கு. ஆனாலும் அந்த அஸ்வத்தாமன் எனும் கட்டிளம் குதிரை அவளை தான் வட்டம் போட்டது. 

ஹலோ மிஸ்டர் காதலா படத்தை முதலில் நடித்து முடித்திருந்தாள் சைத்ரா. இப்பொழுது கைவசம் அவளுக்கு சூரியன் சந்திரன் படம் மட்டுமே இருக்கிறது. எந்த படமும் இல்லை. இரண்டு மூன்று புரட்க்சன் கம்பனியில் இருந்து சைத்ராவுக்கு கதைகள் வந்திருந்தது. வீராவிடன் எடுத்து சென்று கதையை தேர்வு செய்யலாம் என யோசித்தாள். ஆனால் இப்பொழுது அம்மு கருவாக இருக்கிறாள். அவர்களுக்கான நேரத்தில் தான் நடுவில் கரடி போல எதற்கு என தோன்றியது. 

ரொமான்டிக் ஸ்டார் என்றால் அஸ்வத்தாமன் ஆக்சன் ஸ்டார் என்றால் சர்வா அதாவது சர்வா என்னும் சர்வேஷ்வரன். அவனுடன் ஒரு படம் வந்திருந்தது. அவள் இந்த அளவுக்கு பிரபலமடைய காரணம் ஆணும் பாவம் படத்தின் மூலம் தான்..  அந்த படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்த சிவசக்தி என்பவர் தான் ஆக்சன் ஸ்டார் சர்வேஷ்வரனை இயக்க போகிறார். கதையை படித்து பார்த்தாள். மெகா பட்ஜெட் திரைப்படம். என்ன செய்வது என ஒரே யோசனையாக இருந்தது. சரி பண்றதுன்னு முடிவாகி போச்சு. நம்ம சர்வா படத்திலேயே நடிப்போம் என ஒப்பந்தம் செய்தாள் சைத்ரா அதனால் வரப்போகும் விபரீதங்கள் அறியாமல்.. 

படப்பூஜை தொடங்கியது. சர்வேஷ்வரன் கம்பீரமாக வந்து நின்றான். அவனாக எந்த நாயகியிடமும்  பேசமாட்டான். அவனை போலவே சைத்ரா ஓரிடத்தில் நின்றிருந்தாள். சர்வேஷ்வரனின் தாத்தா மற்றும் தந்தை என அனைவரும் திரை துறையை சார்ந்தவர்கள். அவனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது வாரிசு நடிகர் யாரும் சினிமாவை ஆண்டதில்லை. ஆனால் அந்த பெயரை வீழ்த்தி தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி இருக்கிறான். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

சர்வா- 20 என எழுதி படத்தின் பூஜை தொடங்கியது. சிவசக்தி ஓட்டமும் நடையுமாக சுற்றி கொண்டிருந்தார். இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என அனைவரும் பூஜையில் கலந்து கொண்டு நல்லபடியாக முடித்தார்கள். 

சைத்ராவுக்கு அதே வாரத்தில் சூரியனா சந்திரனா படப்பிடிப்பின் இறுதி காட்சி. அதை முடித்துவிட்டு அந்த தமன் என்னும் கிராதகன் முகத்தில் விழிக்க வேண்டாம் என கும்பிடு போட்டுவிட்டு வந்து சேர்ந்தாள். 

ஸர்வா-20 படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் ஒருவாரம் நடைபெற்றது. இனி பிரச்னை இல்லை என சைத்ரா படத்தில் கவனம் செலுத்திக் கொண்டு தன் மகனுடன் நேரத்தை செலவிட்டாள். 

அடுத்தநாள் காலை மீடியா பரபரப்பானது. தேதிகளில் கால்சீட் பிரச்னையால் சர்வா -20 நிறுத்தி வைக்கபட்டது என்று காலை 10 மணிக்கு செய்திகள் பரவியது. சிவசக்தி, சைத்ரா சர்வேஷ்வரன் என மூவரின் படமும் மாறி மாறி திரையில் வந்தது. 

‘என்ன இப்படி ஆகிடுச்சு? இப்போ என்ன பண்றது?’ என சோகமாக சைத்ரா அமர்ந்திருக்க..  அந்தநேரம் பார்த்து சிவசக்தியிடம் இருந்து அழைப்பு வந்தது. 

“சார்” என சைத்ரா அந்த அழைப்பை ஏற்றாள். 

“அது வந்து மா! இந்த நியூஸ்ச நீங்களே கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன் மா! அதனால….” என்று சிவசக்தியை தயங்கினார். 

“சார் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. எல்லாமே நல்லபடியா நடக்கும். கூடிய சீக்கிரத்தில் கண்டிப்பா நம்ம இந்த படம் பண்ணுவோம். கொஞ்சம் பொறுமையா இருக்கலாம். நேரம் காலம் அமையட்டும்” என்று அவள் ஆறுதலாக பேச…

“அதேதம்மா நானும் நினைக்கிறேன். இருந்தாலும் கொஞ்சம் வருத்தமா இருக்கு. சரி பாத்துக்குவோம். எவ்வளவோ போராடிட்டேன் இதுக்கு மேல” என்று நிறுத்தினார்.

“சார் கவலைப்படாதீங்க. நாங்க எல்லாரும் இருக்கோம்” என்று சொல்லி சைத்ரா ஃபோனை வைத்தாள்.

இப்போ அடுத்து என்ன பண்ண போற? என்று பிளாக் டேனியல் 20 வருடம் பழைய சரக்கை சியர்ஸ் செய்த படி சர்வேஸ்வரன் அஸ்வத்தாமனிடம் கேட்டான். 

“வேற என்ன பண்றது? ஆட்டம் பாட்டம் அமர்க்களம் தான். இனி என்னோட ஆட்டம் ஆரம்பிக்க போகுது மச்சிஇஇஇ! எனக்கு ஆல் த பெஸ்ட் சொல்லுடா” என அஸ்வத்தாமன் கேட்க… 

சர்வேஸ்வரன் சிரித்தபடி பெஸ்ட் ஆப் லக் மச்சி என உற்சாகமாக கூறினான். 

“தமன்னா ஒருவேளை நீ இந்த படத்துல கமிட் ஆகப் போறேன்னு தெரிஞ்சி அவள் விலக நினைச்சா என்னடா பண்ணுவ?” என்று சர்வேஸ்வரன் கேட்க… 

தமன் ஒரு மிடறு விழுங்கியபடி “வாய்ப்பு இருக்கு அதுவும் 100% இருக்கு. கண்டிப்பா சொல்லுவா.  அதுக்கு ஒரு டீமை ரெடி பண்ணி வச்சிருக்கேன்.  அவ அதை பத்தி டைரக்டர் கிட்ட சொல்றதுக்கு   முன்னாடியே நியூஸ் ஓடும்.  நான் ரெடி பண்ண டீம் அதை சிறப்பா பண்ணிடுவாங்க..  அவளே பிரஸ் மீட் வச்சு படத்தில் நடிக்கிறேன்ன்னு சொல்லுவா. நான் சொல்ல வைப்பேன் என்று உறுதியாக கூறினான். 

சர்வேஸ்வரன் தீர்க்கமான பார்வையுடன் எது எப்படியோ எல்லாம் உனக்காக மட்டும் தான் செய்யறேன். எப்போ ட்ரீட் வைக்கப் போற அதுவும் நீ ரெண்டு ட்ரீட் கொடுக்கணும் நீஇஇஇ! என இழுவையுடன் முடித்தான்.  

அஸ்வத்தாமன் சிரித்தபடி நம்ம ரெண்டு பேரும் எதிரிகள்னு உனக்கு தெரியாதா டா!  உனக்கு என்னை சுத்தமா பிடிக்காது… நான் போற பங்க்ஷன்க்கு நீ வர மாட்ட! நீ அட்டென்ட் பண்ற ஃபங்ஷனுக்கு நான் வரமாட்டேன் என்றான் குலுங்கி சிரித்தபடி.. 

இது போலதான் நிறைய ஆட்கள் இருக்கிறார்கள் வெளியே பிடிக்காததை போல இருந்து கொண்டு அவர்களுக்குள் சிரித்து பேசி ஒன்றாக இருப்பார்கள். அனைவருடனும் சிரித்து பேசி சினேகமாக இருந்து விட்டால் எப்படி சம்பாதிக்க முடியும்? 

போதையில் குளரிய குரலுடன் அ.. ஆ..அத மட்டும் நீ மறக்கவே கூடாது! இந்த காசிப் தான் உன்னையும் என்னையும் இந்த அளவுக்கு வளர்த்து விட்ருக்கு மச்சி!… நீ நெனச்சா ட்ரீட் கொடுக்கலாம். எங்க எப்போ எப்படின்னு சொல்லு என்று சர்வா கேட்க..

சுவிட்சர்லாந்து போ! உனக்கு பிடிச்சவள நீ சூஸ் பண்ணு நான் அனுப்பி வைக்கிறேன் என்றான் தமன். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அஸ்வத்தாமனே ராமனாகும்போது நான் ரகுவரன் ஆக மாட்டேனா? என்ன?  என சிரித்தபடி கூறினான் சர்வேஸ்வரன். 

ரகுவரன் ஒன்னு தான் ராமனும் ஒன்னு தான் எங்க அண்ணன் மாதிரி இராவணன் ஆகாமல் இருந்தால் சரி! என அஸ்வத்தாமன் கூற… உனக்கு உன்னோட அண்ணன் இராவணன். எனக்கு என் கூட ஒட்டி பிறந்த சைத்ரேஷ்வரன் இராவணன் என்றான்  சர்வா! விரைவில் நான் பொல்லாதவன்ல பார்க்கலாம். பிரதிலிபியில்

அப்போ ஓகே மச்சி நான் கிளம்புறேன் முன் பக்கமா… அண்ட் நான் போனதும் நீ கிளம்பு என முதலில் அஸ்வத்தாமன் கிளம்பினான். 

இதோ சர்வா விலகிய படத்தில் தமன்..? இந்த படம் எடுத்து முடிக்கிறதுக்குள் இத்தனை பிரபலமாகிடிச்சே இப்போவே நிறைய தயாரிப்பு நிறுவனங்கள் இந்த படத்தை விலைக்கு வாங்க முன்வந்துட்டாங்க என அனைத்து சேனலுக்கும் கண்டெண்டை உருவாக்கி கொடுத்தான் அஸ்வத்தாமன். 

சைத்ரா என அழைத்தபடி வந்த அம்மு அவளிடம் இப்போ என்ன பண்ண போறீங்க? அஸ்வந்த் சார் கூட நடிக்க போறீங்களா? அவரை புறிஞ்சுக்கோங்க. நிஜமாவே அவர் நல்லவர் என அம்மு சொல்ல.. 

சைத்ரா…? 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 1 comment

  1. Super super super super super super super super super super super super super super super ♥️♥️♥️♥️♥️♥️

Share your thoughts

error: Content is protected !!