🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
35. அழகிய அசுரா
அழகிய அசுரா
📖 அழகிய அசுரா · Chapter 35 of 41

அழகிய அசுரா

  • 2 Jul 2025
  • 338 reads
  • ★ 5.0 (1)
  • 8 min read

Episode -34

எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்? என அந்த ஒரே செய்தியையே திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருந்தான் தமன். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அவனது குறுஞ்செய்திகள் சிங்கிள் டிக்கில் தான் இருக்கிறது. விடாமல் போன் செய்வான். எடுக்க மாட்டாள் சக்தி. 

இதோ வீட்டுக்கே வந்துவிட்டான். ஹாய் ப்பா! எனக்கு ரெண்டு அப்பா! அம்மு பாரேன் எனக்கு ரெண்டு அப்பா! இவன் ஒரு அப்பா, வீராப்பா ஒரு அப்பா! என ஆரு திக்கி திணறி நீ எப்டி எங்க டாடி போல இருக்க என அஸ்வத்தாமனின் முகத்தை பிச்சு பார்த்தான் இழுத்து பார்த்தான். 

உனக்கு என்ன வேணும்? என ஆருவிடம் முத்தமிட்ட படி அஸ்வத்தாமன் கேட்க.. நானுக்கு கார் வேணும், நானுக்கு கார்ல வருவேன். தனியா போவேன். பாப்பாவை சீட் பெல்ட் போட்டு விட்டு, குட்டி தம்பிய உட்கார வச்சு நானுக்கு போகனும்! என பால் பற்களில் அழகாக பேசினான் ஆருத்ரன். 

நானுக்கு இல்ல சாமி! நான்! எனக்கு அப்படி சொல்லணும் டா கண்ணா என அம்மு ஆருவை கொஞ்சிட.. சாரி அம்முமா! எனக்கு ஓகே மா! வா! என மழலை மொழியில் அழகாக பேசினான் ஆரு குட்டி. ( ஆருவின் பிறப்பு அவனது சேட்டைகள் அனைத்தையும் படிக்க ஆசை படுபவர்கள் அதிரடிக்காரன் மச்சான் டி -2 ல படிங்க) 

படியில் நடந்து வரும் சத்தம் கேட்க..  அச்சோ ஆரு மம்மி வராங்க. அஸ்வந்த் சார் நான் போறேன் பை என இரண்டு குழந்தைகளையும் தூக்கி கொண்டு அம்மு போர்ட்டிகோ பக்கம் செல்ல.. நான் அம்மு மா கிட்ட போறேன். பை டா என தமனிடம் சொல்லிவிட்டு ஆரு நகர.. 

உனக்கு கார் வேணுமா? வேணாமா? என அஸ்வந்த் கேட்டு கொண்டிருக்க.. 

ஆருஉஉஉ! என கத்திய படி ராட்சஸியாக வந்தாள் சக்தி. 

அம்மா! வந்திட்டியா நீ! இங்கே பாரு வீரா டாடி மாதிரி இவன் இருக்கான். நான் செக் பண்ணிட்டு இருக்கேன். இவன் நானுக்கு கார் வாங்கி தரேன்னு சொன்னான். என ஆரு சொல்ல..

இங்கே வா! அம்மா கிட்ட வா என தமனை முறைத்தபடி குழந்தையை இழுத்தாள் சக்தி. 

“எதுக்கு இப்படி ஹர்ஷா நடந்துக்குற?” என அஸ்வத்தாமன் பற்களை கடித்தான். 

“என் பையன்! கண்டிச்சு வளக்கணும். இல்லன்னா ஊர் மேய.. ” என நிருத்தியவள். “ஆரு யார் என்ன வாங்கி தரேன்னு சொன்னாலும் வேணாம்னு சொல்லிருக்கென் தான!”

“ஆனால் இவன் டாடி போல இருக்கான் மா!”

அஸ்வத்தாமன் வேதனையுடன் இருவரையும் பார்த்தான். 

ஆரு என அம்மு அழைக்க.. பை நான் பாப்பா கிட்ட வரேன். என ஓடி சென்றான். 

உன் பையன கண்டிக்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. என்னை போல அவன் ஊர் மேய வேணாம். என தமன் அவளிடம் கூற.. 

“எதுக்கு இங்கே வந்தீங்க?”

“நான் சொன்ன விசயம் என்னாச்சு? தெளிவா பேச ஆரம்பிச்சுட்டான். எப்போ மேரேஜ் பண்ண போறோம்? நீயும் யோசிக்க ஆறு மாசம் டைம் எடுத்துக்கிட்ட! என்ன சொல்லு எப்போ பண்ணிக்கலாம்?”

“எனக்கு!..என்னால முடியாது”

“உனக்கு அன்பா சொன்னா பிடிக்காது போல! அடாவடி தனம் தான் வேணும் போல! உன்னோட விசயத்துல தான் பொறுமையா போறேன்னு நீ கொஞ்சம் ஓவரா போற! நீ ஒத்துக்கல.. ஆரு கார்ல கூட்டி போக அந்த ரெண்டு குட்டிய சொல்லிட்டு இருக்கான். தட் மீன்ஸ் அவங்க ரெண்டு பேரும் தான் அவனோட சிப்ளிங்ஸ்ன்னு சொல்லிட்டு இருக்கான்.” 

கஷ்டபட்டு எட்சிலை விழுங்கியபடி சைத்ரா அவனை பார்க்க.. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“அவனுக்கு ஓன் பிளட்ல சிப்லிங்க் ரெடி பண்ணுவேன். உனக்கே தெரியும் என்னோட சாப்ட்டே உன்னால லோட் பண்ண முடியல.. நான் என்னோட முழு வேகத்தை காட்டினேன்னு வை ஒரு வாரத்துக்கு படுக்கையில் இருந்து எழுந்துக்க மாட்ட நீ! எப்படி வசதி?” என தாடியை நீவினான். 

“ஹே கிட்ட வந்த உன்னை கொன்றுவேன் வீரா கிட்ட சொல்லுவேன்”

நான் உன்னை தூக்கிட்டு போய் எனர்ஜி வேஸ்ட் பண்ண மாட்டேன். இதோ இங்கே இதே வீட்ல தூக்கிட்டு போய் என இரு புருவம் தூக்கி கொண்டு அருகில் நெருங்கினான். 

“ஹே! நான் எனக்கு யோசிக்க ரெண்டு நாள் டைம் கொடு”

நல்லா யோசி! எங்க ஜீன் கொஞ்சம் பாஸ்ட்டா ஸ்விம் பண்ணும் நீயே பார்த்தியே அம்மு கைல ரெண்டு பாப்பா! வீராவுக்கு ஒண்ணுமே தெரியாது அவனுக்கே ரெண்டுன்னா. ஆனால் நான் ஊர் மேயிற… சோ! என அவளை சீண்டும் எண்ணத்தில் இன்னும் அருகில் வந்தான். 

சரி ப… பண்ணிக்கலாம். ஆனால் இங்கே வேணாம். என அவள் பெரு மூச்சை விட.. 

வேற எங்கே? என தமன் கேட்க.. 

அம்மி, அருந்ததி, ஓமம், தாலி இந்த மாதிரி எந்த ஒரு விஷயமும் எனக்கு பிடிக்காது. கடவுள் மேலே எனக்கு நம்பிக்கை இல்ல. அந்த கடவுளை நான் பார்க்கவும் விரும்பல. சோ ரிங் மாத்தி சிம்பிளா சர்ச்ல நடக்கணும். அதுவும் இங்கே நடக்க கூடாது லண்டன்ல பண்ணலாம். இது ஒப்புக்கு பண்ற கல்யாணம் உங்களை இஷ்டபட்டு பண்ணிக்கல இதுக்கு ஓகே அப்டின்னா எனக்கும் ஓகே. என்றாள் சக்தி. 

இவ்வளவு தூரம் வந்ததே பெரிது என பெரு மூச்சை விட்டான் தமன். இது அனைத்தும் போரில் மூச்சு விடும் அகதியை போல உணர்வு.

சரி நான் ஏற்ப்பாடு பண்ணிட்டு சொல்றேன். என பாதி தூரம் சென்றவன். அப்புறம் ஃபர்ஸ்ட் நைட்டுக்கும் ரெடி ஆகிடு என்றான். ஆருவின் பொம்மை துப்பாக்கியை தூக்கி அவன் மேல் ஆவேசமாக வீசினாள். 

அய்யோ தமன் ஓடிடு கொன்னு போட்டுடுவா என ஓடியே விட்டான். அவன் சென்றதும் பெரு மூச்சை விட்டவள். அம்முவின் பக்கம் சென்றாள். 

“அம்மு அதிரா எப்போ வருவார்?”

ஸ்டடி ரூமில் இருக்கார்ன்னு நினைக்கிறேன். என அவள் கூற.. நேராக வீராவின் முன்னால் சென்றாள். 

என்னாச்சு? எதுவும் பிரச்னை பண்ணானா? ஏன் ஒரு மாதிரி இருக்க? என வீரா கேட்க.. 

உங்க கிட்ட ஒரு விசயம் அதிரா என அனைத்தையும் கூறினாள் சக்தி. 

ம்ம் என ஒற்றை பதில் கொடுத்தான் வீரா. 

“அவ்ளோ தானா உங்க ரியாக்ஷன்? நான் எவ்ளோ பெரிய விசயத்தை சொல்லிட்டு இருக்கேன். நீங்க.. “

“இது உன்னோட life சக்தி. உனக்கு எது சரின்னு படுதோ அதை பண்ணு.”

“அதிரா நான்”

“இது உன்னோட வாழ்க்கை சக்தி.  நான் சொல்லி ஒன்னு செஞ்சு நாளைக்கு என்னால தான் அதிராவால தான்! அப்டின்னு நீ சொல்லிட கூடாது. உனக்கு எப்போவும் நீ எடுக்கிற முடிவுகளுக்கு நான் துணையா இருப்பேன். இந்த வீட்ல அம்மு எப்படியோ அதே போல உனக்கும் எல்லா உரிமைகளும் இருக்கு. என் குடும்பத்தில் நீ ஒருத்தி. நீ அவனை கட்டிகிட்டாலும் சரி இல்லைன்னாலும் சரி வீராவோட வீட்டு கதவு எப்போவும் திறந்து இருக்கும்.” என்றான் வீரா. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

சரி என அவ்விடத்தை விட்டு நேராக அவளது அறைக்கு சென்றாள் சக்தி. 

ஷூட்டிங் ஸ்பாட்டில் மோகம் முத்தாடுது படப்பிடிப்பில் இருந்தார்கள். 

தமன் நேராக அவளின் அருகில் வந்தவன். “இந்த படம் ஷூட்டிங் முடியட்டும் போலாம். ஆருவ கூட்டிட்டு வா!”

“முடியாது! நான் மட்டும் தான் வருவேன். அண்ட் உங்க கூட யாரும் வர கூடாது. உங்க அம்மா, அப்பா, யாரும் கூடாது. இது சாங்கிய கல்யாணம்” 

“அதுவும் நல்லதுக்கு தான் அவங்க எல்லாரும் எதுக்கு? நம்ம மேரேஜ் முடிச்சிட்டு அப்படியே ஸ்விட்சர்லாந்து போய் ஹனிமூன்” என தமன் அவளிடம் கேட்க.. 

தாராளமா போயிட்டு வாங்க மைத்ரேயி அங்கே தான் இருக்காங்க. அனிகா, ஹாரிகா கூட இருக்காங்க Fivesome டிரை பண்ணுங்க உங்களால கண்டிப்பா முடியும் என சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். 

எப்டி பேசினாலும் நம்மள அவமான படுத்திடுறா ஈசியா! என தாடியை கோதினான் தமன். 

படப்பிடிப்பு ஒரு பக்கம் வேகமாக நடந்து கொண்டிருக்க.. இன்னொரு பக்கம் அவளின் கோபம் மிரட்டல் உருட்டல் அதிகமாக இருந்தது. ஒரு மாதிரியாக சுற்றி கொண்டிருந்தாள். 

படத்தின் காதல் காட்சி மற்றும் ஒரு படுக்கை அறை காட்சி அதில் பெரிதாக எதுவும் இல்லை. ஆனால் முத்தமிட்டு கட்டி கொண்டு கழுத்தில் முகம் புதைக்கும் காட்சி தான் அந்த பாடல் முழுக்க வரும். 

இந்த சீனை தயவு செஞ்சு கட் பண்ணிடுங்க பிளீஸ் என்று டைரக்டர் சிவசக்தியிடம் பேசி கொண்டிருந்தாள் சைத்ரா. 

இந்த படத்தை தெலுங்கிலும் போட போறோம் மா! தெலுங்கு ஆடியன்ஸ் இந்த மாதிரி கொஞ்சம் எதிர் பார்ப்பாங்க. பெருசா வேற எந்த சீண்சும் இல்ல மா! அஸ்வத்தாமன் சாருக்கு தெலுங்கில் நிறைய ரசிகர்கள். இந்த படத்தை மூணு மொழியில் ரிலீஸ் பண்ண போறோம் அதுக்கு தான். ரொம்ப அபத்தமா எடுக்க மாட்டோம் நம்புங்க என எவ்வளவோ எடுத்து கூறினார் சிவ சக்தி. 

பாதி படம் வந்து விட்டது. இப்பொழுது நடிக்க மாட்டேன் என்று சொன்னால் என்ன செய்வது என கவலையுடன் இருந்தார் சிவசக்தி. 

என்னாச்சு சிவா? என தமன் கேட்க.. 

சார் சைத்ரா மேடம் அந்த சாங்ல நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. இப்போ என்ன பண்றதுன்னு தெரியல. ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி கேட்கிறாங்க. என்னோட கதையில் கூட இந்த பாட்டு இல்ல தான். ஆனால் புரோட்யூசர் தான் பாதி கதைய அப்படி இப்படின்னு மாத்தி இப்படி ஒரு பாட்டை சேர்த்துட்டார். என்கிட்ட சைத்ரா மேடம் எதார்த்த கதை தான் கேட்டாங்க. இப்போ!.. என வருத்தத்துடன் கூறினார். 

தமன் தீவிரமாக யோசித்து விட்டு நான் ஒரு ஐடியா கொடுக்கவா? உங்களுக்கு ஓகே அப்டின்னா பண்ணலாம் இல்லன்னா வேணாம் என்றான். 

சொல்லுங்க என்ன விசயம்? என சிவசக்தி சோர்ந்த முகத்துடன் கேட்க.. 

“டூப் போட்டு எடுக்கலாம்”

என்ன சொல்றீங்க? என சிவசக்தி புரியாமல் கேட்க.. 

“படுக்கை அறை காட்சியை கொஞ்ச மங்கலான வெளிச்சத்தில் எடுப்போம். நான் சைத்ராவை துரத்தி பிடிக்கிறது நெருங்கி போற சீன எல்லாம் ஒரிஜினலா வச்சிப்போம். மத்த சீன்ஸ எல்லாம் டூப் வச்சு எடுக்கலாம்.”

குரு நீங்க எங்கேயோ போயிட்டீங்க. ஸ்டண்ட் டூப் போட்டு பார்த்திருக்கேன். முதல் முறையா ரொமான்டிக் சீன டூப் போட்டு எடுக்கலாம்ன்னு வேற லெவல் ஐடியா கொடுத்திருக்கீங்க. இதை செய்வோம். கிஸ்ஸிங் சீன் எல்லாம் VFX பண்ணிடுவோம். என நிம்மதியுடன் சிவசக்தி இந்த விடயத்தை சைத்ராவிடம் சொல்ல சென்றான். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

தமனின் முகத்தில் வேதனை குடி கொண்டது. ஒரு பொண்ணால இந்த அளவுக்கு வெறுக்க முடியுமா? நான் அந்த அளவுக்கு கெட்டவனா? என்னோட வர்புறுத்தலில் தான் இப்போ கல்யாணம் பண்றா! இல்லன்னா என்னை.. அப்போ அவ்ளோ தானா எல்லாமே! இனி சக்தி என்னை ஏத்துக்கவே மாட்டாளா? என முகத்தை அழுத்தி தேயித்து ஊற்றான கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்து கொண்டான். 

அவளை மறக்க முயற்சி பண்ணனும் இல்லன்னா படம் முடிஞ்சு போகும் போது செத்து போயிடுவேன்னு நினைக்கிறேன். என தனக்கு தானே சொல்லி கொண்டவன் அவளுள் வீழ கூடாது என எழுந்தான். 

ஆனால் அவன் எழும் நேரத்தில் அவள் வீழ தொடங்கினாள். எல்லாம் அந்த பாடல் தான் காரணம். 

சக்தியை போலவே உடல்வாகு கொண்ட ஒரு பெண்.. 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode ★ 5.0 (1)

💬 1 comment

  1. Super super super super super super super super super super super super super super super ♥️♥️♥️♥️♥️

Share your thoughts

error: Content is protected !!