🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
16. அழகிய அசுரா
அழகிய அசுரா
📖 அழகிய அசுரா · Chapter 16 of 41

அழகிய அசுரா

  • 2 Jul 2025
  • 381 reads
  • ☆ No ratings yet
  • 6 min read

Episode -15

சைத்ரா தன் மகன் ஆருத்ரனுடன் ரிசார்டில் ஒருவாரம் தங்கி எல்லா விதனாவிதமான அவுட் டோர் கேம்ஸ், அதனுடன் வாட்டர் கேம்ஸ் என அனைத்தையும் சந்தோசமாக விளையாடினாள். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

ஆரு தன் அம்மாவுடன் நன்றாக ஒட்டிக்கொண்டான். அதெல்லாம் அம்முவை பார்க்கும் வரைக்கும் தான். அவள் தான் ஆருவுக்கு பேபி டால். வெக்கேசன் மொத்தத்தையும் தன் அழகு அமுள் பேபியோட கொண்டாட்டம் முடித்து வீராவின் பொறுப்பில் கொண்டு போய் கொடுத்தாள் சைத்ரா. 

வீரா அவளை புன்னகையுடன் பார்த்தான். “என்ன அதிரா ஒரே லவ் மோட் போல சிரிப்பு ரொம்ப அழகா இருக்கே!”

மேடம பார்க்க A square – அ ஒரு பக்கம் தேடி அலைகிறார் தமன். அதனுடன் உனக்கு கிட்டத்தட்ட அஞ்சு நியூ புராஜக்ட்ஸ் வந்திருக்கு. அதுல மூணு படத்தில் ஹீரோ யார் தெரியுமா? 

யாரு? என நெற்றியை தேய்த்தாள் சைத்ரா. வேற யாராக இருக்க முடியும்? ஆருத்ரனின் தந்தை அஸ்வத்தாமன் தான். 

“அதிரா போதும் டென்ஷன் பண்ணாதீங்க” என ஆருவை இறக்கிவிட்டு அமர்ந்தாள் சைத்ரா. 

“என்ன சைத்து இதுக்கே இப்படின்னா? நாளைக்கு சாரை மீட் பண்ணா எப்டி இருக்கும் சும்மா அதிரும்ல”

“நான் படம் நடிக்க போகல!” என அவள் திரும்ப..  

“இனி தான் மேடம் பெர்பார்ம் பண்ணனும்.” என அவளுக்கான ஸ்கிரிப்டை நீட்டினான். 

என்னால ஹீரோயினா நடிக்க முடியாது. என ஸ்கிரிப்டை தள்ளினாள். 

உங்களை ஹீரோயினா நடிக்க சொல்லல. ஆன்டி ஹீரோயினா நடிங்க! அண்ட் ஹீரோவுக்கு சிஸ்டர் கேர்கடர் இருக்கு. நீங்க choose பண்றது தான் கேரக்டர். என்றான் சிரித்துக்கொண்டே.. 

சைத்ரா புன்னகையுடன் திரும்பி பார்க்க.. “இதை நீ எதிர்பார்க்கல இல்ல! சரி தானே!”

“அதிரா நீங்க வேற லெவல்” என உற்சாகத்தில் எழுந்தவள். “அப்புறம் அம்மு கூட அமர்களமா?”

“போர்கலமான்னு கேளு! இங்கே உங்க கதைய ஒட்டனும் ஓகேவா!”

ஹான் சரி சரி இப்போ எந்த கதையில் நடிக்கட்டும். நீங்க சொல்லுங்க. என ஸ்கிரிப்டை புரட்டினாள். 

“வில்லியா? சப்போர்டிங் ரோலா? நீ choose பண்ணு”  என வீரா சொல்ல.. 

“தங்கச்சியா இருந்தால் எப்டி இருக்கும்? நான் தங்கச்சியா நடிக்க போறேன்” 

“இது ஹீரோ சாருக்கு தெரிஞ்சா எப்டி இருக்கும்? அவனுக்கு ஹார்ட் அட்டாக் வரும் சைத்து” சைத்ரா மெல்ல வீராவை பார்த்தாள். 

“என்னாச்சு? ஏன் அப்படி பார்க்கிற?” என வீரா கேட்டான். 

“நீங்க என்னை அந்த வில்லன் கூட சேர்க்க எதுவும் திட்டம் போடலயே! அப்படி எதாவ்து உங்க தம்பி மேலே இறக்கம் வச்சிருந்தா! அதை தயவு செஞ்சு அழிச்சிடுங்க. என்னால எப்போவும் ஏத்துக்க முடியாது. அப்படி ஒரு காரியத்தை நான் செய்யவும் மாட்டேன்” என்றாள் சைத்ரா. 

வீரா சிரித்தபடி “உனக்கே சேருர மாதிரி ஒரு எண்ணம் இருந்தால் நீ மட்டும் போ! ஆருவை விட்டு அம்முவால இருக்க முடியாது. அவனுக்கும் அதே போல தான் முக்கியமா எனக்கு ஆரு வேணும்” என்றான். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அதிரா என பற்களை கடித்தபடி பார்த்தாள் சைத்ரா. 

“ஹே நான் சீரியசா பேசிட்டு இருக்கேன். எனக்கு ஆரு வேணும் மா”

அவன் பேசுவதை காதில் போட்டுக்கொள்ளாமல் அவளது அறைக்கு சென்றுவிட்டாள். 

தமன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். சஞ்சய் எதையும் கண்டுகொள்ளாமல் அவனது வேலையை பார்க்க.. 

“சஞ்சய் அவள் ஒத்துக்குவா தானே!”

“இதென்ன கேள்வி அவங்களுக்கு பிடிச்சிருந்தா கண்டிப்பா ஒத்துக்குவாங்க”

ஏன் பிடிக்காது? கண்டிப்பா பிடிக்கும் அதுவும் என்னை பிடிக்கும். என தனக்கு தானே சொல்லிக் கொண்டான். 

இதோ கால் வந்தது. தமன் வேகமாக சஞ்சயின் அருகில் வந்தான். “சொல்லுங்க சார்!” என்றவானது முகம் சடுதியில் மாறி போனது. “என்ன சொல்றீங்க நிஜமாவா?” என எள்ளல் சிரிப்பு சஞ்சையின் முகத்தில். “ஓகே சார் நான் இப்போவே தமன் சார் கிட்ட இன்ஃபார்ம்  பண்ணிடுறேன்.”

என்னாச்சு? கண்டிப்பா சாமுத்ரிகா கிட்டருந்து தானே கால் வந்தது. 

“ம்ம் ஆனால் பண்ணது அவங்க இல்ல. டைரக்டர் பண்ணார்.” 

சொல்லு சொல்லு ஓகே தான என அஸ்வத்தாமன் எதிர்பார்த்தபடி நின்றான். 

“அவங்க நடிக்க ஒத்துகிட்டாங்க”

“ஓ… உயா… யெஸ்.. I knew it!.. I knew it..”  எனக்கு தெரியும் சொல்லு சொல்லு! எந்த படத்துக்கு? என ஆர்வமாக கேட்டான் 

“ஹலோ மிஸ்டர் காதலா” மூவி டைரக்டர் தான் கால் பண்ணார் என சஞ்சய் சொன்னதும் துள்ளி குதித்தான் அஸ்வத்தாமன். 

“நான் மனசுல நினைச்சது இந்த படம் தான். சோ இன்னும் சூப்பர்.” என தலையை கோதினான்.

ஆனால் அவங்களுக்கு பெருசா சீன் இல்லையாம் டைரக்டர் சொன்னார் என்றான் சஞ்சய் லேப் டாப்பை தட்டியபடி..  

“என்ன? சீன் இல்லையா? அதுல ஹீரோயின் நேம் பூஜா தான! அந்த மொத்த படத்துலயும் அந்த பூஜா கேரக்டர் ஆதிரன் கூட டிராவல் ஆகுமே” என்றான் தமன். 

“ஆனால் ஆதிரனோட தங்கச்சி இருக்கே!”

அது யாரு? அப்படி ஒரு கேரக்டர் இருக்கா என்ன? எனக்கு தெரியல.. 

இருக்கு சார்! ஆதிரன் ஹீரோ அவரோட சிஸ்டர் பேர் அவந்திகா. அந்த கேரக்டர்ல தான் நீங்க சொல்லிட்டு இருக்கீங்களே சாமுத்ரிகா அவங்க நடிக்க போறாங்க என்றான் சஞ்சய். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

What the f*? தன்..  தங்.. தங்.. 

“தன்.. தங் தங் இல்ல தங்கச்சி! பாசமலர். உங்களுக்கு ச்சீ வராதா? ச்சீ!..” என கிண்டல் தொனியில் கூறினான் சஞ்சய். 

“No NO என்னால இதை அக்சப்ட் பண்ணிக்க முடியாது. என்னால முடியாது.”

ஒன்னும் பிரச்னை இல்ல. ஆல்ரெடி அந்த பொண்ணு ஆசிலேசன் மோட்ல தான் சொன்னதாம். வேற படத்தில் பிஸி அதனால் கால் சீட் இல்லையாம். உங்களுக்கு வேணாம்ன்னா ஓகே சார் நான் இப்போவே சொல்றேன். என சஞ்சய் போனை எடுத்தான். 

அய்யோ வேணாம்! அப்புறம் நான் அவளை மீட் பண்ண முடியாது. என கூறினான் சோகத்துடன். 

நீ எதுக்கு மீட் பண்றேன்னு எனக்கு தெரியாதா டா! மீட் பண்ணி அவளை மீட்டர் போட்டு மேட்டர் பண்ண கூப்பிடுவ என நினைத்தான் சஞ்சய். 

அடுத்ததாக இன்னொரு படத்தின் டைரக்டர் அழைத்தார். அஸ்வத்தாமன் சோர்வுடன் அமர்ந்தான். மனம் நொந்து போனது. சஞ்சயின் சிரிப்பு சத்தம் கேட்க.. 

இப்போ யாரு என மதுவை ஊற்றியபடி கேட்டான் தமன். 

சூரியனா? சந்திரனா?  மூவி டைரக்டர் கால் பண்ணார். 

அதுல ஹீரோயின் ரோல் என தமன் ஆரம்பிக்க.. 

“அதுல வில்லி ரோல் சந்திரிகா கேரக்டரில் சைத்ரா பிளே பண்ண போறாங்க” என சிரித்தவன்.  “சாரி பாஸ் டங்க் ஸ்லிப் ஆகி போச்சு. மிஸ்டர் காதலா படத்தில தங்கச்சி, இந்த படத்தில் வில்லி! அந்த பொண்ணு ரொம்ப பிரிலியன்ட் எனக்கு என்னமோ அந்த பொண்ணு சொல்லாம எதோ சொல்ல வராள்ன்னு தோணுது.”

அஸ்வத்தாமன் முகத்தில் கோபமும் ஆத்திரமும் பிரதிபலித்தது. அது அவளை பார்ப்பதற்கு முன் தான் பார்த்த பின் என்னவாகும்? பார்ப்போமே! இரு இதயம் ஒரு இதயமாக துடிக்க நினைக்க, நினைத்த வேளையில் அந்த இன்னொரு இதயமோ துடிக்க துடிக்க நொறுங்க வைக்க.. இப்பொழுது இன்னொரு இதயம் லப் டப் என துடித்துக் கொண்டே இன்னொரு இதயத்தை துடிக்க வைக்க போகிறது. 

சார்!.. சார்!.. என உரக்க கத்தினான் சஞ்சய். 

சொல்லு என உறுமல் குரல் வெளிப்பட்டது அவனிடமிருந்து. 

நாளைக்கு சூரியனா? சந்திரனா? படத்தோட பூஜை நடக்க போகுது படத்தோட ஹீரோயின் வினிகா, வில்லி சைத்ரா, அண்ட் நீங்க எல்லாரையும் டைரக்டர் வர சொல்லி மெயில் பண்ணிறுக்கார். இதோ போன் கால் நீங்க பேசுறீங்களா? இல்ல நான் பேசட்டுமா? என கேட்டான் சஞ்சய். 

நீயே பேசு! என்றுவிட்டு அவனது அறைக்கு சென்றான். அவனது படுக்கையில் அந்த குங்கும கலர் சில்க் காட்டன் புடவை அதனுடன் ஒரு தலையணைக்கு அவளின் ஜாக்கெட்டை அணிவித்திருந்தான். அதற்கு புடவை கட்டி வைத்திருந்தான். அவளின் வாசம் புடவையில் அடிக்கிறது என்பது தமனின் ஐதீகம். அவனது காதுக்களுக்குள் அஸ்வந்த் என சைத்ரா அழைப்பது போல ஒரு உணர்வு. 

“போடா பைத்தியக்காரா!” என அந்த புடவை சிரிப்பது அவனுக்கு தெரியவில்லை. 

ஒருவேளை நாளை தெரியுமோ? 

கண்டிப்பாக தெரியலாம் தெரியாமலும் போகலாம். 

தொடரும்.  

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 1 comment

  1. Super super super super super super super super super super super super super super super ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

Share your thoughts

error: Content is protected !!