🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
15. அழகிய அசுரா
அழகிய அசுரா
📖 அழகிய அசுரா · Chapter 15 of 41

அழகிய அசுரா

  • 2 Jul 2025
  • 370 reads
  • ☆ No ratings yet
  • 8 min read

Episode -14

இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் அஸ்வத்தாமன். ஆணும் பாவம் படத்தில் சைத்ராவின் நடிப்பு அபாரம் அதை விட இந்தப்படத்தில் அவள் சப்போட்டிங் ரோலாக நடித்திருந்தாள். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

திருமணம் ஆன பெண்ணாக நீலிமா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாள். ஐடி துறையில் வேலை செய்யும் ஹீரோவை திருமணம் செய்து கொள்வாள். இக்காலத்து பெண்கள் போல சிறு விசயங்களுக்கு ஹீரோவிடம் சண்டை போடும் நீலிமா. ஒரு கட்டத்தில் ஹீரோ அவளை அடித்துவிட அவனை பழி வாங்கும் நோக்கத்துடன் டைவர்ஸ் அப்ளை செய்து ஹீரோவிடன் இருக்கும் அனைத்து சொத்துக்களையும் கோர்ட்டின் மூலம் வாங்கி கொள்வாள். மனமுடைந்து ஹீரோ தற்கொலை செய்ய முயற்சி செய்வான். 

எதார்த்தமாக ஆரம்பித்த கதை. படு சுவாரஸ்யமாக முடியும். பெண்களின் மேல் தவறே இருந்தாலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் பெண்கள் என்ற காரணத்துக்காக அவர்களை பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கு சாதகமாக தான் உருவாக்கி வைத்திருக்கிறது. இறுதியாக கதையில் அனைவரும் வெறுத்து நீலிமாவை தூற்றும் வகையில் கதை முடிந்திருக்கும். மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நன்றாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. 

இது அவள் தான் சாமுத்ரிகா! மூணு வருசமா இவளை நான் எங்கே எல்லாம் தேடினேன். என அஸ்வத்தாமன் பதட்டத்துடன் எழுந்தான். 

“சஞ்சய்! ஹே சஞ்சய் இடியட்!..” என வேகமாக கத்திக்கொண்டே ஓடினான். இத்தனை நாள் இந்த மோகத்தில் திளைத்த முகத்தையும், வசீகர கண்களையும், அந்த மென் உதடுகள், சிவக்கும் கன்னங்கள். தொட்டால் சிலிர்க்கும் பெண்மை. என எத்தனை பெண்களிடம் தேடியிருப்பான் அஸ்வத்தாமன். 

இனி கொஞ்சம் கூட தாமதிக்கக்கூடாது. என்னை பார்த்தாள் ஓடி வருவாள்.  என் கடைக்கண் பார்வைக்கு ஏங்க துடிப்பாள். பைனலி அவளை பார்த்துட்டேன் கண்டு புடுச்சுட்டேன் என அஸ்வத்தாமன் முகத்தில் எதையோ சாதித்த உணர்வு தென்பட்டது. 

அதை விட உணர்வுகள் அனைத்தும் தவித்து கொண்டிருந்தது. தகித்து கொண்டிருந்தது. அவளை அள்ளி அணைக்க.. 

“சஞ்சய்! நான் நான் அவளை கண்டு புடிச்சுட்டேன். அவள் தான்டா! அன்னிக்கு என் கூட இருந்தாள். அவளை உடனே பார்க்கணும். இப்போவே போகனும். உடனே! என்னை பார்த்தா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியல” என அஸ்வத்தாமன் சொல்லிக் கொண்டிருக்க.. 

யாரு சார்? யாரை பத்தி பேசிட்டு இருக்கீங்க? எந்த பொண்ணு? என சஞ்சய் புரியாமல் விழித்தான். 

அஸ்வத்தாமன் வேகமாக “நீ முதலில் காரை எடு! அவளை இப்போவே பார்க்கணும். சாரு மோருன்னு டென்ஷன் பண்ணாத”  என முன்னால் நடந்தான். சஞ்சய் எதுவும் பேசாமல் காரை எடுத்தான். அஸ்வத்தாமன் துள்ளலுடன் அமர்ந்திருக்க.. 

அவனது செய்கைகள் அனைத்தையும் சஞ்சய் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே சாலையில் கவனம் செலுத்தினான். 

ஹெவி டிராபிக்கில் கார் சிக்கிக் கொண்டது. தமனது கால்களும் கைகளும் நிலையில்லாமல் துடித்தது. “அதற்கும் மேல் பொறுமையிழந்தவன் இப்போ எங்கே போகனும்? சொல்லுங்க சார்! வர வர உங்க கிட்ட வேலை செய்ய எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. வேலையை விட்டு நிக்கலாமான்னு பார்க்கிறேன்” என சஞ்சய் கடுப்புடன் கூறினான். 

“என்ன சஞ்சய் இப்படி சொல்ற?” 

“வேற என்ன சார் சொல்ல சொல்றீங்க?”

“டேய் என்ன டா சாருன்னு சொல்ற? நான் உன்னோட பிரென்ட் டா!”

“பிரென்ட்டா! உறவுகளுக்கு அப்பாற்பட்டவன் தானே அஸ்வத்தாமன். சரி அதை விடுங்க இப்போ எங்கே போகனும்? அதை தெளிவா சொல்லுங்க” என சோர்வுடன் பார்த்தான். 

தமனின் கண்கள் பளிச்சிட “சாமுத்ரிகா!” சாமுத்ரிகாவை பார்க்க போகனும். 

“எங்கே இருக்காங்க அட்ரஸ் சொல்லுங்க!”

“அட்ரஸ் தெரியல”

“என்ன சார் விளையாடிட்டு இருக்கீங்களா? இப்போ எங்கே போறது?” என கடுகடுத்தான் சஞ்சய். 

வெயிட் வெயிட் ஒரு நிமிசம் என போனை நீட்டினான். “ஆணும் பாவம்!.. இந்த படத்தோட போஸ்டர எதுக்கு என் கிட்ட காட்டுறீங்க?”

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“இவள் தான் நான் மூணு வருசமா தேடிட்டு இருக்க பொண்ணு. இவளை இப்போவே பார்க்கணும். இவள் எங்கே இருக்காள்ன்னு தெரியணும். என்னை அங்கே கூட்டிட்டு போ!”

“இந்த பொண்ணு  இவங்க.. ஹான் இவங்க அந்த ஆக்டர்.. சைத்ரா. இது தான் அவங்களோட முதல் படம். இந்த புரொடக்சன் கம்பனி கூட ரொம்ப புதுசா இருக்கு.” என சஞ்சய் கூற.. 

“நீ யாருக்காவது போன் பண்ணி கேட்டு சொல்லு டா. நான் இப்போவே இந்த நிமிடமே பார்த்தாகனும்.” என துள்ளல் குறையவில்லை தமனுக்கு. 

சஞ்சய் அந்த படத்தின் விவரத்தை கூகிளில் போட்டு யோசித்தவன். இந்த படத்தோட புரொட்சன் கொஞ்சம் கேள்விபடாத பேராக இருக்கே! என போனை எடுத்து அவனுக்கு தெரிந்த அனைத்தையும் விசாரித்தான். 

தமன் அவனது ஐ போனில் சைத்ராவின் படத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அவளின் முக வசீகரம் கொஞ்சம் கூட குறையவில்லை. 

நேற்று தான் தன் மகனின் பிறந்தநாள் முடிந்தது. அதனால் தன் மகனுடன் இருக்க எண்ணி சைத்ரா ரிசார்ட் சென்றுவிட்டாள். முதல் படம் நடித்திருக்கிறாள் என்பதை விட தன் மகனை  இத்தனை நாட்கள் பிரிந்து இருந்திருக்கிறாள். அரக்க பறக்க வந்து செல்வாள். அதனால் ஆரு மற்றும் சைத்ரா இருவரும் கேரளா பக்கம் ரிசார்ட் சென்றிருந்தார்கள். 

சஞ்சய் அனைவரிடமும் விசாரித்துவிட்டு போனை வைத்தான். என்ன செய்வதென தெரியவில்லை. 

“என்னாச்சு? சஞ்சய்?”

“டைரக்டர் கிட்ட தான் பேசணும். இந்த ஹீரோயினோட காண்டக்ட்ஸ் யார் கிட்டயும் இல்ல. ஆனால் டைரக்டர் புதுபட ஷூட்ல இருக்காரு. போன்ல சிக்னல் கிடைக்கல அதான் என்ன பண்றதுன்னு புரியல” 

“நோ நோ நான் இப்போவே பார்த்தாகணும். அட்லீஸ்ட் அவளோட போன் நம்பர்ராவது வேணும். பிளீஸ் எதுவும் பண்ணு சஞ்சய். ஐ கான்ட் கண்ட்ரோல் மை செல்ஃப் நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா? ஃபுல்ஃபில்லா இருக்கு. இன்னிக்கி தான் தொலைஞ்ச பொருள் திரும்ப கிடைச்ச மாதிரி இருக்கு” என தொடர்ந்து பேசினான். 

சஞ்சய் பெருமூச்சை விட்டபடி “அவர் இன்டீரியர் பிளேஸ்ல இருக்கார் சார். நான் எங்கிருந்து பேச முடியும். கொஞ்சம் பொறுமையா இருங்க. படத்தோட புரட்யூசர் பத்தி விசாரிச்சு பார்த்துட்டேன். சினி ஃபீல்டில் யாருக்கும் தெரியல. அவங்களோட வெப்சைட் போய் பார்த்தேன். டைரக்டர் விவரங்கள் தான் இருக்கு. அண்ட் போன் பண்ணா டிபால்ட் வாய்ஸ் கேட்குது. என்ன பண்றது சொல்லுங்க.” 

“சரி நான் அந்த படத்தை பத்தி ட்வீட் போட போறேன். கண்டிப்பா அதுக்கு அவள் ரெஸ்பான்ஸ் பண்ணுவா!” என அதே உத்வேகத்துடன் அஸ்வத்தாமன் அவனது அபீசியல் டிவிட்டர் பேஜில் இருந்து தட்டி விட்டான். 

அது காட்டு தீயை விட வேகமாக பரவியது. ஆணும் பாவம் படத்தின் அனைத்து கலைஞர்களும் தமணுக்கு நன்றி சொல்லி இரண்டு வரிகள் எழுதியிருந்தார்கள். ஆனால் புரொடக்ஷன் ஆபிஸில் இருந்து எந்த ஒரு செய்தியும் வரவில்லை. அதே போல நடிகை எந்த கருத்துக்களையும் பதிவிடவில்லை.

24 மணி நேரம் சைத்ராவை நினைத்து அமர்ந்திருந்தான் அஸ்வத்தாமன். சஞ்சய் அவனிடம் வந்து “சார் நான் சஞ்சயாக உங்க கிட்ட பேச வந்திருக்கேன்.”

“அச்சோ என்ன டா சஞ்சய் இது? வா கம் மேன் இன்னிக்கி நான் ஹேப்பியா இருக்கேன்.” என தமன் அழைக்க.. 

“இந்த பொண்ணை தான் மூணு வருசத்துக்கு முன்னாடி.. ஐ திங்க் நீ கொடுத்த 80 லட்சத்துக்கு மேல் ஒன் ருப்பி வச்சு கொடுத்தாலே! அந்த பொண்ணு இவள் தானா! நிஜமாவே இவள் தானா?” என வினவிக்கொண்டே நண்பனை பார்த்தான் சஞ்சய். 

“எனக்கு அதெல்லாம் நியாபகம் இல்ல. ஆனால் இவள் கூட நான் இருந்த மூணு நாள்! அது தான் என் வாழ்க்கையில் நான் அனுபவிச்ச அதிகப்படியான..” 

“போதும். அப்போ அந்த பொண்ணு தான் இவங்க. கண்டிப்பா இந்த பொண்ணு உனக்கு ரெஸ்பன்ஸ் பண்ண மாட்டாள். சம்திங் இஸ் ஃபிஸ்ஸி” 

“சான்சே இல்ல! என்னை அவளுக்கு ரொம்ப பிடிக்கும். என்னைய போலவே மேக் அப் பண்ணிட்டு வந்தாலே உனக்கு நியாபகம் இருக்கா! சென்னைல கூட நம்ம ஃபர்ஸ்ட் மூவி பார்க்க போனோம். நான் கூட வீரா தான் வரான்னு நினைச்சு அடிக்க போனேன். அவள் தான் இவள்.”

உன்னோட fan girl சரி தான.. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ஆமா கண்டிப்பா என்னோட ட்வீட்க்கு ரிப்ளை பண்ணுவா.” என காத்திருந்தான். 

சைத்ரா நடிச்ச படம் ஆணும் பாவம். ஆனால் இனி அஸ்வத்தாமன் பாவம். பஞ்ச் டயலாக்.  என்பதற்கு ஏற்ப.. அவளை பற்றிய விவரங்களை தேடி அலைந்தான் தமன். 

இங்கே ரெசார்டில்.. 

மேம் உங்களுக்கு போன்!. என பணிப்பெண் வந்து நீட்ட.. 

அதிரா! என புன்னகை ததும்ப காதில் வைத்தாள். 

“ஆரு எப்டி இருக்கான்? இங்கே ஆணும் பாவம் படம் சக்கை போடு போட்டுட்டு இருக்கு. வாழ்த்துக்கள் சைத்ரா”

இந்த கதைய choose பண்ணது நீங்க அதிரா. பேசாமல் இனி நான் நடிக்க போற எல்லா கதையையும் நீங்க தான் choose பண்ணனும். இந்த ஆருவுக்கு என்னை விட அம்மு தான் முக்கியம். போன் பண்ணு போன் பண்ணு அப்டின்னு இராவடி பண்றான். அவங்களை நீங்க அனுப்பி வச்சிருக்கலாம். 

“காரியம் கெட்டது. நீ அவளோட கண்ணில் படக்கூடாது.”

“ஓகே அதிரா நொ பிராப்ளம்!” என்றாள் சைத்ரா. 

“ஆனால் பிராப்ளம் ஒரு பிரபலத்துக்கு போட்டு பிரட்டி எடுத்திட்டு இருக்கு. நான் சொன்னது நடந்திட்டு இருக்கு.”

“என்ன சொல்றீங்க? புரியல அதிரா!” என சைத்ரா கேட்டாள். 

“உன்னைத்தான் தீவிரமா அஸ்வத்தாமன் தேடிட்டு இருக்கான். டைரக்டர் கிட்டருந்து கால் வந்துச்சு. நம்ம A square புரொடக்ஷன் கம்பனிக்கு அவனோட p.A சஞ்சய் நிறைய கால்ஸ் பண்ணிருக்கான். பிளஸ் டாப் ஸ்டார் தமன் கூட நிறைய டிரை பண்ணிருக்கார். அண்ட் ஃபைனலி தமன் சாரு உன்னோட படத்தை பத்தி ட்வீட் போட்டிருக்கார்” என்றான் வீரா. 

சைத்ரா அமைதியாக இருக்க.  வீரா வெற்றி களிப்புடன் “நான் தான் சொன்னேன்ல. இப்போ தெரிந்திருக்குமே உனக்கு. அவன் உன்னை இன்னும் மறக்கல.”

இனி மறக்கவே முடியாது. என சைத்ரா நீண்ட நாட்களுக்கு பிறகு நிம்மதியுடன் உணர்ந்தாள். 

சரி என்ஜாய் பண்ணிட்டு வா! நல்ல தரமான சிறப்பான சம்பவங்களை இனி பிளான் பண்றேன் என வீரா போனை வைத்தான். 

சைத்ரா நடிச்சது ஆண்பாவம். இனி அஸ்வத்தாமன் பாவம். 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 1 comment

  1. Super super super super super super super super super super super super super super super ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

Share your thoughts

error: Content is protected !!