Episode -20
யாருடா அது நிறைய பேருக்கு அல்வா கொடுத்த நம்ம அஸ்வந்த் தம்பிக்கே அல்வா கொடுத்திட்டு போயிருக்கான்னு அவள் சாதாரண ஆளுண்ணு நினைக்கிறயா? சிவாஜி என பணியாளை பார்த்து கேட்டான் வீரா.
டேய் what the hell? வாயை மூட்ரா இல்லன்னா உன்னை கொன்னுடுவேன் ராஸ்கல். என தமன் பொங்கிக் கொண்டு அடிக்க பாய்ந்தான் தன் அண்ணனை.
அந்த காட்சியை அனைவரும் ஆவென பார்த்தார்கள். ஒரே உருவத்தை கொண்ட இருவர்கள் அடித்துக் கொள்வதை பார்த்தால் எதோ சினிமா காட்சி போல தோன்றியது.
வீரா கிண்டலுடன் சிரித்தவன். சரி விடு நீ தான் பலசாலி நான் ஒத்துக்குறேன். விட்டு கொடுக்கிறேன் என்றான்.
தமன் கோபத்துடன் தள்ளி விட்டவன். அவ்விடத்தை விட்டு வேகமாக வெளியேறினான். உள்ளுக்குள் கோபம் கமன்று கொண்டிருந்தது. தமனின் பாடிகார்ட் அவ்விடத்தில் நின்று கொண்டிருக்க.. ஆனால் சைத்ராவின் காரை காணவில்லை. புருவத்தை சுருக்கி அவ்விடத்தை பார்த்தான். நான் ரிசப்ஷன்ல தானே இருந்தேன். எப்டி போனா? என யோசித்தவன். “சைத்ராவோட கார் இங்கே இருந்ததே! எங்கே? இப்போ காணோம்? அவங்க எப்போ வெளியே போனாங்க? நீங்க பார்த்தீங்களா?”
“பார்த்தோம் பாஸ் அவங்க கார்டன் வழியா வந்தாங்க போன் பேசிகிட்டே, அப்புறம் காரில் கிளம்பி போய்ட்டாங்க!” என கூறினான் கார்ட். “எவ்ளோ கிரிமினல் மூளை? ஏன் என்கிட்ட மறைக்கிறா? நான் என்ன பண்ணேன்? அய்யோ நான் நிறைய பண்ணேன்! அவள் என்னை அவாய்ட் பண்றா! அது நல்லாவே தெரியுது! ஆனால் இவளோட ஃபேமிலிய பத்தி தெரிஞ்சுக்க வேணும். எதாவது பண்ணனும் எனக்கு சக்தி வேணும் என தனக்கு தான் சொல்லிக்கொண்டவன். அவ்விடத்தை விட்டு கிளம்பினான்.
முன்பு குடிக்கு அடிமையானவன் போல இப்பொழுது இல்லை. மிகவும் தெளிவாக என்ன செய்ய வேண்டும் என யோசித்தான். அவள் வேணும். சக்தி வேணும்! என தாரக மந்திரங்கள் போல அதை சொல்லிக் கொண்டவன் அடுத்த நாள் விடியலுக்காக எதிர்நோக்கி காத்திருந்தான்.
அடுத்தநாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்தில் வந்திருந்தான். முன்பைவிட சுறுசுறுப்பும் ஒரு பிரிஸ்கும் அவனிடம் இருந்தது. அவனது ஸ்கிரிப்ட் பேப்பர் மற்றும் சீன்ஸ் அனைத்தையும் பார்த்தவன். டிப் டாப்பாக தயாராகி இருந்தான். அந்த ஒருவாரம் எந்த பிரச்னையும் இல்லாமல் சென்றது. அப்பாடி பழைய அஸ்வத்தாமன் திரும்ப வந்துட்டார். இனி படத்தை பத்தி எந்த பிரச்னையும் இல்ல. என முருக பாண்டியன் பெருமூச்சை விட்டார்.
சைத்ரா வழக்கம் போல திறம்பட அவளின் காட்சியை நடித்தாள். அஸ்வந்த் மேல் இருக்கும் மொத்த வன்மத்தையும் கொட்டினாள். இதற்கு வீராவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அடுத்ததாக ஒரு அதிரடி சண்டை காட்சிக்காக செட்டு போட்டிருந்தார்கள். முழுக்க முழுக்க அந்த இடத்திற்குள் தான் காட்சிகள் எடுக்கப்படும்.
சைத்ரா, அஸ்வத்தாமன், வினிகா மூவர்களிடம் முருக பாண்டியன் சீன்ஸ் மொத்தத்தையும் விளக்கியவர் சைத்ரா அங்கே வினிகாவை கட்டி போட்டிருப்பாங்க நீங்க அவங்ககிட்ட பேசிட்டு இருக்கும் போது உங்களுக்கு எதிராக உங்களை தாக்க ஆட்கள் வருவாங்க.. I மின் ஸ்டன்ட் ஆர்டிஸ்ட் வருவாங்க. நீங்க அங்கே இருந்து நகரும் நேரம் கார் மோதிடும்.. அதுல இருந்து சூரிய வன்ஷி உங்களை காப்பாத்துவார். ஆனால் நீங்க அதையும் மீறி அதுல சூரிய வன்ஷிய தள்ளிவிட்டு காரில் விழனும் என்றார்.
சரி என சைத்ரா அவளின் காட்சிகளை ஒத்திகை பார்த்தாள். கேமரா ஓடி கொண்டிருக்க.. ஒவ்வொரு காட்சிகளையும் ஸ்டண்ட் மாஸ்டர் சொல்லி கொடுக்க அனைத்து காட்சிகளும் திறம்பட வந்து கொண்டிருந்தது.
இதோ ஸ்டண்ட் களைஞர்கள் அந்த காட்சியில் நடிக்க விவரிக்க பட்டது. அவர்களும் காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் சொன்னதை போல சண்டை காட்சிகள் வர, சந்திரிகாவின் கண்களில் அதிர்ச்சியும் கோபமும் மின்னியது. அந்த சண்டை செய்துகொண்டிருக்கும் ஆட்களை பார்த்ததும் உள்ளுக்குள் கோபம் மின்னியது.
இவங்க!… இவங்க…!. என யோசித்தவழுக்கு அப்படியே காட்சிகள் பின்னோக்கி நகர்ந்தது. அன்று அந்த இரவு அவளின் வாழ்க்கை பாழாய் போன அந்த இரவில் சக்தி என்னும் அப்பாவி பெண்ணை நான்கு கயவர்கள் சுற்றி வளைத்தார்களே! அவர்கள் தான் இதோ இப்பொழுது சைத்ராவாக மாறியிருக்கும் சக்தியின் முன் சண்டை காட்சியில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உள்ளுக்குள் ரவுத்திரம், ரணம் என அனைத்தும் ஒட்டு மொத்தமாக கிளம்பியது. சார் ரெடி என அஸ்வத்தாமன் தயாரானான். சைத்ரா நீங்க ரெடியா? என முருக பாண்டியன் கேட்க.. டேக் போலாம் சார்! என உறுதியாக அவளின் குரல் ஒலித்தது.
கிளாப் போர்ட் தட்டப்பட்டது ரோலிங் கேமரா ஆக்சன் என அனைவரும் சீரியசாக காட்சியில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க.. அஸ்வத்தாமன் கயவர்களை அடித்து போட்டுவிட்டு நேராக வினிகாவின் பக்கம் சென்றான். சூரிய வன்ஷி வருவதை தெரிந்து கொண்ட சந்திரிகா கோபத்துடன் அவனை எதிர்க்க திரும்ப எதிற்பக்கம் கார் வருகிறது.
வினிகாவை ஆவேசமாக அதாவது கதையின் படி தள்ளி விடுகிறாள் சந்திரிகா! வினிகா மயங்கி சரிகிறாள். இந்த பக்கம் சூரிய வன்ஷி சந்திரிகாவை நோக்கி வருகிறான். கார் சந்திரிகாவை தூக்கி அடிக்க அவள் ஸ்பாஞ் மீது விழுகிறாள்.
கட் பண்ணுங்க என முருக பாண்டியன் கத்த அஸ்வத்தாமன் பதட்டத்துடன் அவளை காப்பாற்ற ஓடுகிறான். கேமராவை ரோல் பண்ணுங்க சார் என சைத்ரா கத்த, இல்ல மா என முருக பாண்டியன் படபடத்தார்.
டைரக்டர் என்ன பண்றீங்க? சக்தி என தமன் ஓடினான்.
சார் பண்ணுங்க என கத்தினாள். இதோ ரோல் செய்ய பட்டது. சக்தி என தமன் பதட்டத்துடன் அவளை பிடிக்க போக.. வேகமாக அவனை தள்ளி விட்டாள் சைத்ரா. அத்தோடில்லாமல் ஆவேசமாக அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தவள் உன்னை கொன்னு போடாமல் இந்த கட்டை வேகாது டா! நீ என்ன என்னை காப்பாற்ற! நீ பிச்சை போடுற இந்த உயிர் எனக்கு வேணாம் டா! என தனக்கு தானே வலு கொடுத்து நடந்தவள் ஒகே சார் என தம்ஸ் அப் காட்டி வலியில் சுணங்கி விழுந்தாள்.
ஸ்க்ரிட் படி இந்த காட்சியில் slap பண்றது வராதே! என டைரக்டர் மனதில் ஓடியது. அங்கிருக்கும் வினிகா கூட இதை கவனித்தாள். ஆனால் சந்திரிகா சூரிய வன்ஷியை அடித்த காட்சியும் அவள் பேசிய அந்த வீரவசனமும் அங்கிருப்பவர்களை கதையோடு பொருந்த வைத்தது. இந்த அரை மட்டுமில்லை எனில் இந்த காட்சி டம்மியாக இருந்திருக்கும். இது இன்டர்மிசன் ட்விஸ்ட். சைத்ராவின் நடிப்பு அபாரம்.
சக்தி என அவளை தூக்க கிட்ட வந்தான் தமன். Don’t touch me!.. you son of b* என கெட்ட வார்த்தையை அவனுக்கு கேட்கும் குரலில் கூறியவள் நிக்கிதா! என கத்தினாள். மேடம் என வேகமாக அவ்விடத்துக்கு பரபரப்புடன் வந்தவள் சட்டென கார்ட் 22 என அழைக்க.. தேனி கேசவன் என்னும் கார்ட் அவளை பூ போல தூக்கிக் கொண்டான்.
முருக பாண்டியன் சைத்ராவிடம் என்ன மா நான் வேணாம்னு சொன்னேனே! நீ ஏன் மா இப்படி இந்த ஷாட்டை நடிச்ச? நல்லா இல்லையா சார் ரீடேக் போலாமா என அடிபட்ட வலியை பொறுத்துக் கொண்டு கேட்டாள்.
இந்த சீனை நான் யோசிச்சத விட நீ சூப்பரா பண்ணிருக்க ஃபுல் கிரெடிட் உனக்கு தான். என கூறினார் முருக பாண்டியன். அங்கே தனித்து விடபட்டவன் தமன் தான். சார் என தேனி கேசவன் கணீர் குரலில் பேச.. சாரி மா! என வழிவிட கேசவன் தூக்கிக் கொண்டு முன்னால் சென்றான். முருக பாண்டியன் பின்னால் சென்றார்.
இனிமேல் மூன்று பாடல்களை ஷூட் செய்ய வேண்டும். இன்னும் 15 நாட்களுக்கு சைத்ராவுக்கு வேலை இல்லை.. அஸ்வத்தாமன் மூலையில் ஒரே விசயம் தான் திரும்ப திரும்ப ஓடிக் கொண்டிருந்தது. ஏன் அவள் என்னை பார்த்து கெட்ட வார்த்தையை பேசினாள். விருப்பப்பட்டு தானே என் கூட படுக்கையில் இருந்தாள்! ஆனால் இப்போ என்ன நடந்ததுன்னு இப்படி சொல்லிட்டு போறா! என மனமெல்லாம் பிசைந்தது.
இப்படியே ஒருவாரம் சென்றது. அந்த படத்தில் வேலை செய்த ஸ்டண்ட் ஆர்ட்டிஸ்ட் அதாவது யார் யார் சக்தியை வம்பு செய்தார்களோ அவர்கள் அனைவரும் ஜெயிலுக்கு அனுப்பி இருந்தாள் சக்தி.
எதற்கு என காரணம் அவர்களுக்கு தெரியவில்லை அவங்களுக்கே இந்த நிலைன்னா அப்போ நம்ம அஸ்வத்தாமன் நிலமை? என்னவாகும்? பார்ப்போம்.
சைத்ரா எப்பொழுது ஷூட்டிங் வருவாள் என காத்திருந்தான் தமன். அவளின் வீடு தெரிந்திருந்தால் நேராக அங்கு சென்றிருப்பான். என்ன தான் தன் அன்னையை சிறு வயதில் இருந்து பார்க்கவில்லை என்றாலும் இப்படி ஒரு வார்த்தை அதுவும் கிட்டதட்ட ஆறு வருடங்களாக எந்த ஒரு நடிகர்களும் நெருங்க முடியாத இடத்துக்கும், அதை விட மரியாதை அவனுக்கு எத்தனை ரசிகர் பட்டாளம், அவனுக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி இருக்கிறான். அப்படி இருக்கையில் சைத்ரா இப்படி ஒரு வார்த்தையை கூறி இருக்கிறாள்.
இதோ ஹலோ மிஸ்டர் காதலா ஷூட்டிங் அதாவது சைத்ரா அவனுக்கு தங்கச்சியாக நடிக்கும் படம். அவள் கேரவனுக்குள் அதிரி புதிரியாக உள்ளே நுழைந்தான்.
நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க? என சைத்ரா கோபத்துடன் எழ..
அவளை இருக்கையில் வலு கட்டாயமாக அமரவைத்து நெருங்கினான் தமன்.
சைத்ரா..?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels











💬 1 comment
Super super super super super super super super super super super super super super super ♥️♥️♥️♥️♥️