Episode-24
மூச்சு வாங்கியபடி நெஞ்சு கூடு ஏறி இறங்க அவனை பார்த்தாள் பூங்கொடி.
நெற்றியில் இருக்கும் பட்டை பொட்டுக்கும் அவனது பவ்ய பாவமான முகத்துக்கும் இப்பொழுது அவன் இளவட்ட கல்லை வெற்றிகரமாக தூக்கி சாதனை புரிந்ததற்கும் துளி கூட சம்மந்தம் இல்லை.
ஏனுங் அம்மணி ரெடிங்களா? என கேட்டு கொண்டே மூச்சு வாங்க அவளின் முன்னால் வந்து நின்றான் அன்பு.
வியர்வை சுரப்பிகள் பன்னீர் தெளிப்பான் போல அவன் மேனியில் துளிர்த்து இருக்க, அந்த திருநீற்று பட்டை நெற்றியில் வழியும் வியர்வையுடன் ஊறி போய் இருந்த தடம் தெரியாமல் கரைந்திருக்க.. சொடக்கு போடும் சத்தம் கேட்டது.
சட்டென சுயநினைவுக்கு வந்தவள் அவனை ஏறிட்டு பார்க்க, என்னாச்சு? என புருவத்தை தூக்கியவன்.
என்ற வீட்டுக்காரம்மா சொன்னதை போல இளவட்ட கல்லை தூக்கி ஒரு விசயத்தை நிரூபிச்சுட்டேன். அதாவது பலம் இருக்குன்னு என மீசையை நீவியவன். இப்போ ஆண்மை என நிறுத்தி விட்டு அவளை பார்த்தான்.
இதயம் படபடக்க வேகமாக அவளரையை நோக்கி ஓடினாள் பூங்கொடி.
பாப்பா நில்லு! இன்னிக்கி விட மாட்டேன் என அன்பு அவளை துரத்தி கொண்டு சென்றான்.
ஹே பூங்கொடி நாங்க ப்ளாக் தண்டர் போக ரெடி ஆகிட்டோம் நீ வரலையா? என மணிமேகலை ஓடும் அவளை பார்த்து கேட்க,
மேடம் கொஞ்சம் பிஸி நீங்க போயிட்டு வாங்க மா!! என அன்பு கூறி கொண்டே அவளை பின் தொடர்ந்தான்.
சரி சரி என மணி மேகலை சிரித்து கொண்டே சென்று விட்டாள்.
இந்த பக்கம் ஜெகன், அனுசுயா கூட வரவில்லை என சொல்லி விட்டார்கள். மொத்த பட்டாளமும் கிளம்பி இருக்க இரண்டு ஜோடிகள் மட்டுமே அங்கு இருந்தார்கள் ஒன்று நிச்சயிக்கப்பட்ட நான்வேஜ் தம்பதிகள் இன்னொன்று திருமணமாகியும் வெஜ் தம்பதிகள். வேறு யாரு இன்னும் சைவமாக இருக்கும் அன்பு பூங்கொடி தான்.
ஹே பாப்பா கதவை திற என தட்டினான்.
உள்ளே அவளுக்கு மூச்சு வாங்க வெளியே அவனுக்கு மூச்சு வாங்கியது. இத்தனை நாள் எதுவும் தெரியவில்லை. உணர்வுகள் கட்டுக்குள் இருந்ததை போல உணர்ந்தான். ஆனால் இன்று இன்று முற்றிலும் மாறி போனது அவனது எண்ணங்கள். அதே போலத்தான் கதவுக்கு உள்ளே இருப்பவள் இருக்கிறாளா? தெரியவில்லை. ஆனால் பூங்கொடிக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. அவனுடன் ஒட்டி கொள்ள ஆசை தான். ஆனால்…?
ஒரு பெரு மூச்சை விட்டவள் கதவை திறக்க, அடுத்த நொடி உள்ளே வந்தான் அன்பு.
என்ன பண்ண போற? என்று கதவை தாழிட்ட படி கேட்டான்.
அவனுக்கு முதுகு காட்டி நின்றவள் கைகளை பிசைந்து கொண்டிருக்க,
அன்பு பெரு மூச்சுடன் எதுவும் வேண்டாம் என்று சொல்ல வரும் நேரம் வாய் திறந்தாள். என்னால மாமான்னு கூப்பிட முடியாது. எனக்கு அப்படி தோணல! தோ தோணும் போது கூப்பிடுறேன். என திக்கி கூறி முடித்தாள்.
பூங்கொடியின் மனதில் கொள்ளை ஆசை தான் மாமா என்று அழைக்க, ஆனால் வெட்கமாக இருக்குமே? இதுவரை அவள் யாரையும் மாமா என அளத்ததே இல்லை. சதீசை கூட வாடா போடா என்றும் பெயர் சொல்லியும் தான் அழைத்திருக்கின்றாள். திடீரென மாமா அதுவும் அன்பு செல்வனை..? நினைக்கவே உள்ளுக்குள் கரண்ட் ஷாக் அடித்தது. இதோ இப்பொழுது கூட அடித்து கொண்டிருக்கிறது.
சரி என அன்பு செல்வன் சொல்லி விட்டு கதவின் பக்கம் செல்ல…,
கிஸ் பண்றேன்! என்றாலே பார்க்கலாம்.
அன்பு செல்வன் சுற்றிலும் பார்த்தவன் உதடுகள் புன்னகையில் விரிய உள்ளுக்குள் ஷாக் அடித்தது. கீழ் உதட்டை கடித்து கொண்டவன். பின்ன தலையை வருடியபடி அவள் பக்கம் திரும்பினான்.
பூங்கொடி வேக மூச்சுடன் கைகள் நடுங்க உள்ளங்கை வியர்க்க திரும்பினாள்.
கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியபடி அவளை பார்த்தான் அன்பு.
அவனை பார்க்கவே முடியவில்லை பெண்ணவளுக்கு இதற்கு முன் இப்படி ஒரு அவஸ்தையை அவள் அனுபவித்தே இல்லை. ஒரு பெரு மூச்சை விட்டவள். வெட்கத்தை மறைத்து கொண்டு அருகில் வந்தாள்.
அன்பு இது நிஜம் தான்டா! பூங்கொடி டா! அமுலி டா!! உன்னோட அமுலி உனக்காக பிறந்தவ! என உள்ளுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடிட.. இந்த நொடிக்காக காத்திருந்தான். இதோ நெருங்கி விட்டாள். அவனும் ஆவலுடன் காத்திருந்தான். இருவரும் சுய நினைவில் கொடுக்கும் முதல் முத்தம்.
அவர்களின் திருமண வாழ்க்கையில் தாம்பத்யம் என்னும் அத்தியாயம் ஊறுகாய் அளவில் கூட தொட்டு கொள்ள வில்லை என்பதே உண்மை. இதோ பூங்கொடி அவளுக்கு எதிரில் குட்டையாக இருந்தாள். அவன் அவளுக்கு ஏற்ற உயரத்தில் இருந்தான்.
அது வந்து என மெல்ல நிமிர்ந்து பார்த்தவள்.
எங்கே வேணும்?
உனக்கு எங்கே விருப்பமோ அங்கே!! என கரகரத்த குரலில் கூறினான். அவனது உணர்வுகள் துடித்து வெடித்து விடும் நிலையில் திணறி கொண்டிருந்தது.
பூங்கொடி உடையை திருகியபடி நின்றிருக்க,
அவ்ளோ கஷ்டபட்டு கொடுக்க வேணாம் விடு என அன்பு பெரு மூச்சுடன் திரும்ப..
ஹே இல்ல! நான் டாடி மேலே சத்யம் பன்னிருக்கேன் அதனால கிஸ் கொடுத்தே ஆகணும் என சட்டை காலரை பற்றி திருப்பி அவன் முகத்தை பார்த்தாள்.
அன்பு வேறு புறம் திரும்பி கொண்டான். இங்கு இருவரும் இருக்கும் நேரம் அவளின் தந்தைக்காக இந்த முத்தமா என கோபம் வந்து ஒட்டி கொள்ள.. இங்கே பூங்கொடி இன்னும் திணறினாள்.
இது வேலைக்கு ஆகாது என வேகமாக நெற்றியில் இருக்கும் பட்டையை எப்படி பூசினானோ அதே போல துடைத்து அழித்து விட்டு அவளை சுவற்றில் ஓட்டி மோவாய் பிடித்தான் அன்பு செல்வன்.
அவனது திடீர் செய்கையில் கொஞ்சம் கிறங்கி கொஞ்சம் திணறி மலங்க விழித்தாள் பெண்ணவள். உதடும் உதடும் ஒட்டி கொள்ள கொஞ்சம் தான் இடைவெளி. பூங்கொடியின் இதயம் வேகமாக துடிக்க, அவன் முத்தமிட நெருங்கியதும், அவளின் கண்கள் தன்னிச்சையாக மூடி கொள்ள, உதட்டில் ஒட்டினான்.
அன்பு செல்வனின் கைகள் இரண்டும் அவளின் கன்னங்களை தாங்கி கொள்ள உதடுகள் உதட்டை கவ்வி கொண்டது. பூங்கொடிக்கு அவனது மூச்சு காற்றும் முத்த சுவையும் உள்ளுக்குள் cyclone உருவாக்கியது. இந்த நொடி இன்னும் இன்னும் வேண்டும் என்று தோன்ற, அவனது கேசத்துக்குள் கைகளை நுழைத்தாள்.
விரும்பியவளை மனம் செய்து கொள்வது வரம் எனில், அவளின் விருப்பத்துடன் ஒன்றி முத்தமிடும் இந்த நொடி போதை எனலாம். இருவரும் அதே சூழலில் தான் இருந்தார்கள். ஒற்றை முத்தத்துக்கு இத்தனை அக்கப்போரா என கேட்டாள் கொடுப்பவன் அன்பானவன் தான் ஆனால் வாங்குபவள் கொஞ்சம் அடாவடி அமுலி.
முத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீண்டது. அவளும் முழுதாக ஒத்துழைத்தாள். இதோ ஒரு ஜோடி அசைவத்தில் முதல் அடி எடுத்து வைத்தது. கண்ணமெல்லாம் சிலிர்க்க அன்பு செல்வனின் மேல் சொக்கி கிடந்தாள்.
அன்பு செல்வன் நினைவில் ஒரு விசயம் ஆழமாக பதிந்தது இந்த ரெண்டு வருஷம் தொந்தரவு பண்ணாத! குழந்தைக்கு தயாராகல என பூங்கொடி அவனிடம் கூறியிருக்கிறாள். அதே போல அவளாக வந்து முத்தமிடவில்லை. எதுவோ பேசி அது பந்தயத்தில் முடிந்து இப்பொழுது முத்தத்தில் வந்து நிற்கிறது. ஆக அவளாக முன் வரவில்லை. தன் மேல் அவளுக்கு என்ன பிடிப்பு இருக்கிறது? அந்த பிடிப்பு வரும் வரை அவளை நெருங்க கூடாது. போதும் இந்த ஒற்றை முத்தம் என்று முடிவுக்கு வந்திருந்தான்.
உதடுகள் ஹூக் போட்டு கொண்டிருக்க, விடுபடவே மிகவும் சிரமமாக இருந்தது. கஷ்டபட்டு அவளிடமிருந்து பிரிந்தான். அடடே என்னும் நிலையில் இருந்தாள் பூங்கொடி.
மூச்சு வாங்க நெஞ்சை பிடித்த படி நின்றிருந்தாள்.
அன்புசெல்வன் தண்ணீர் ஃப்லாஸ்க் எடுத்து குடித்து விட்டு அவளுக்கு நீட்டினான்.
இருவரிடமும் மவுனம். அவள் மோன நிலையில் இருந்தாள்.
பாப்பா!! என அன்பு நீட்ட..
ப்ச் பாப்பா சொல்லாதன்னு எத்தனை தடவை உனக்கு சொல்றது? இடியட் என திட்டி கொண்டே வாங்கியவள் மெல்ல குடித்தாள்.
சரி இனி கூப்பிடல!! என்றவன் என்ன செய்வதென எதையோ யோசித்து விட்டு, அமுலி நான் கிளம்பட்டுமா? என கேட்டான்.
பூங்கொடிக்கு புரை ஏறிட.. ஹே என்னாச்சு என தலையை தட்டி விட்டான்.
ஓகே நான் நல்லாருக்கேன்! என ஆசுவாச படுத்தி கொண்டு அவனை பார்த்தாள்.
அது இனி இங்கே எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல!! என அன்பு சொல்லி கொண்டிருக்க,
பிடிக்கலனா கிளம்பிடு!! என சொல்லி விட்டு படுக்கையில் கோபமாக போய் அமர்ந்தாள்.
அன்பு செல்வன்..?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels