
மன்னவன் பூங்கொடி மார்பிலே
- 17 Aug 2025
- 1,894 reads
- ☆ No ratings yet
- 7 min read
அத்தியாயம் -1
Stil Single!! Ready to Mingle என்னும் வாசகம் முகம் பார்க்கும் கண்ணாடியில் எழுதியிருக்க.. அந்த கண்ணாடியின் ஒரு பக்கத்தில் இதழ் முத்தம் அதாவது இதழ் முத்த முத்திரை ஸ்டிக்கர் ஒட்ட பட்டிருந்தது.மூன்று முழம் குண்டு மல்லிகைபூவின் சரம் வாசத்தை பரப்பி கொண்டு குலுங்கி கொண்டிருந்தது. இந்த செட்டப் எல்லாம் எங்கே இருக்கும்? தனியார் பேருந்தின் ஓட்டுநர் இஞ்சின்க்கு முன்னால் தானே!.. ஆம் இந்த பேருந்து ஈரோடு to கரூர் மார்க்கம் வழி பேருந்து. சக்தி பஸ் வந்துடுச்சா? சக்தி பஸ்ல தான் போவேன். சக்தி பஸ்! சக்தி பஸ் சக்தி! சக்தி பஸ்ன்னு குமரி முதல் கிழவி வரை! இளம் இரத்தம் முதல் முதிர் நரை பெரியோர் வரை அனைவரும் விரும்பும் ஒரே பேருந்து அந்த ஓம் சக்தி தான். அதுக்கு காரணம் வேற யாராக இருக்க முடியும்?
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் என டிப்ளோமா நர்சிங் கவிதாவின் ரிங் டோன் பாடல் சிணுங்க.. அன்பே அன்பே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே? என ஸ்பின்னிங் மில் ஸ்டாக் செக்கிங் மேனேஜர் அகிலாவின் ரிங் டோன் சிணுங்கியது.
அன்பே பேரின்பே வாழ்வின் நிலழங்கள் வன்னமாகுதே! என பிகாம் செகண்ட் இயர் திவ்யாவின் போன் சிணுங்கியது. எல்லாம் அன்பை தேடி!..
எந்த அன்பு? அந்த ஓம் சக்தி பேருந்தின் கண்டக்டர் அன்பு செல்வனை பார்க்க தான் இத்தனை ஆட்களும் வெயிட்டிங்.
“சீட்டு!! சீட்டு!! சீட்டு!” என கேட்ட படி தனது பையை நேர்த்தியாக மாட்டியபடி பேருந்தில் ஏறினான் அன்பு செல்வன்.
“மிஸ்டர் அன்பு! நான் தான் சீட்டு தரேன்ல என் பக்கத்தில் உட்காரலாமே?” என திவ்யா அவனை உரச அருகில் வர..
“சில்லறை மீதி இந்தாங்க தங்கச்சி மா!” என நகர்ந்தான்.
அப்படியே பின்னால் கவிதா.. “ஹே என்ன அக்கா சொல்ற? டேய் நீ எனக்கு மாமா முறை டா” என பின்னாடி சீட்டில் ஒருத்தி கலவரம் செய்து கொண்டிருந்தாள்.
“பிளீஸ் வேலை செய்ய விடுங்க கா!” என கவிதாவிடம் சொல்லி விட்டு அன்பு அதே புன்னகை மாறா முகத்துடன் பின்னால் சென்றான். இந்த முறை டிக்கெட் டிக்கெட் டிக்கெட் என சொல்லி கொண்டே..
“இன்னிக்கி சினிமா போலாமா அன்பு டார்லிங் மகாராஜா தியேட்டர்ல கார்னர் சீட் இருக்கு அன்பு வாயேன் பிளீஸ்! என அகிலா கெஞ்சல் சிணுங்கல்” என அனைத்தையும் பயன்படுத்தி மன்னவனை மயக்க முற்பட.. எதுவும் எடுபடவில்லை.
“டிக்கெட் டிக்கெட்” என கேட்டபடி பின்னால் சென்றான் அன்பு செல்வன்.
அன்பு எப்படி?
பெயருக்கு ஏற்றவாறு அன்பு தான் அவனது பார்வையில் கூட.. யாரிடத்திலும் முகத்தை சுளிக்க மாட்டான். இல்லாதவர்களுக்கு உதவும் குணம் கொண்டவன் மொத்தத்தில் சொக்க தங்கம். நல்ல வாட்ட சாட்டமான உடல் வாகில். அந்த காக்கி சட்டை கச்சிதமாக பொருந்தி இருந்தது. இடையை இறுக்கி பிடித்து பேன்ட், உடலை இறுக்கி பிடித்த சட்டை என இல்லாமல் இலகுவாக.. யாரின் கவனத்தையும் ஈர்க்காமல் அவனது காக்கி சட்டை பேன்ட். முகத்தில் எப்பொழுதும் அவனது தாய் அன்னலட்சுமி வைத்து விடும் விபூதி, கைகளில் மஞ்சள் சாமி கயிறு, இன்னொரு கையில் வாட்ச். முகத்தில் திருத்தம் செய்யப்பட்ட தாடி, மீசை, நல்ல உயரம். சாதாரண ஆண்மகனாக அன்புச்செல்வன் இதோ அசாதாரணமாக அனைத்து கன்னி பெண்களின் கனவு நாயகன். அந்த அளவுக்கு அவன் மேல் விருப்பம் பிரியம்.
யாரேனும் அவனிடம் அதிகமாக பேசினாலோ வம்புக்கு வந்து நின்றாலோ புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்து கடந்து விடுவான். மொத்தத்தில் 70 கிலோ சொக்க தங்கம். ஹாங் ஒன்னு சொல்ல மறந்துட்டேன். கன்னத்தில் வெட்டு குளி! கூடவே உதட்டுக்கு கீழ் ஒரு வெட்டு குளி. ஹீரோவுக்கு உண்டான அனைத்து பொருத்தமும் அப்படியே செட் ஆகி இருக்கு.
இதோ காரனாம் பாளையம் தண்டவாளத்தில் கேட் போடபட்டிருக்க.. எதிரில் இருந்த பேனரை பார்த்து பெரு மூச்சை விட்டான் அன்பு.
என்ன டா என ஓட்டுநர் சசி புருவத்தை தூக்க.. ஒண்ணுமில்ல என தலையசைத்தான்.
என்ன பேனர் அது?
தனம் தனியார் பேருந்தின் உரிமையாளர். சிவராமன் – தனக்கொடியின் ஒரே புதல்வி செல்வி பூங்கொடி மற்றும் முத்து சாமி – மனோரஞ்சிதத்தின் மகன் குமாரன் சதீஸ் திருமண வரவேற்பு பேனர் என மொத்த குடும்பத்தின் புகை படங்கள் தயார் செய்யப்பட்ட பேனரை ஒட்டி கொண்டிருந்தார்கள் வேலையாட்கள்.
“ஹே ஓம் சக்தி பஸ்சு டி! ஹே போலாம் டி அவுட் பஸ்ல இன்னிக்கி கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுக்க தானே வர! வாடி அவுட் பஸ்ல போலாம். கேட்டு போட்டிருக்காங்க இப்போவே ஏறிக்கலாம்” என பூங்கொடியின் தோழி மணிமேகலை உசுப்பினாள்.
“எங்க பஸ்ஸே ஈரோடு – கரூர்ல மூணு ஓடுது. நாமக்கல் திருச்செங்கோடு வழியில் இன்னும் ரெண்டு பஸ் ஓடுது நான் அதுலயே போனதில்லை. ஆனால் அந்த ஓம் சக்தி! அதுல!! ச்சீ நான் போய் அந்த பஸ்ல ஏறுவேனா?” என எள்ளல் குரலில் அதற்கு பின்னால் வந்த கல்லூரி பேருந்தில் தனது திருமணத்துக்கு பத்திரிக்கை வைக்க ஏறி கொண்டாள் பூங்கொடி.
கேட் நீக்கப்பட.. பேருந்து சீரான வேகத்தில் செல்ல.. அன்பு அண்ணா! ஹே அன்பு அண்ணன் என கல்லூரி பேருந்தில் இருக்கும் அனைவரும் கத்தி கையசைக்க உள்ளே இருக்கும் ஒருவழுக்கு மிகவும் புகைச்சல் கோபம் ஆத்திரம் என அனைத்தும் வந்து ஒட்டி கொண்டது.
“டேய் ரமேசு ஒன்னு காலேஜ் பஸ்சை முன்னாடி விட்டு போ! இல்லன்னா நீ சரியான வேகத்தில் முன்னாடி போ! ரெண்டும் முன்னாடி பின்னாடி வர மாதிரி போகாத” என அன்பு நின்ற இடத்திலிருந்து உத்தரவு கொடுத்தான்.
ரமேஷ் ஒரு பெரு மூச்சை விட்டபடி கல்லூரி பேருந்தை முன்னால் விட்டு பின்னால் ஓட்டினான்.
இதோ ஈரோடு பேருந்து நிலையம் நுழைந்ததும் கன்னி சிட்டுகள் ஏக்க பெருமூச்சுடன் அன்பை கண்களில் நிறைத்து கொண்டு சிட்டாக பறந்து விட..
ரமேஷ் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து கொண்டு மச்சி! உங்களை கூப்பிடவே இல்லையா டா? அம்மா அப்பா ரெண்டு பேரும் இப்போ ஓகேவா? என கேட்டான்.
அவனது சிகரெட்டை பிடுங்கி தரையில் போட்டு நசுக்கிய அன்பு. தனம் அக்கா மட்டும் போன் பண்ணி சொல்லிருக்காங்க போல. அதுவும் அப்பா கிட்ட மட்டும் தான். என்ற அன்புவின் முகத்தில் விரக்தி சிரிப்பு ஒட்டி கொள்ள..
விடு டா! எப்படி இருந்தாலும் பூங்கொடி புள்ளைக்கு நீ தான் தாய்மாமன்! உங்க அக்கா கண்டிப்பா உன்னை கூப்பிடுவாங்க! என்றான் ரமேஷ்.
தாய் மாமனா? நீ வேற ஏன்டா? நான் ரெண்டாவது தாரத்து மகனாம்! யாரும் என்னை கூப்பிட மாட்டாங்க! என திரும்பினான்.
மச்சி என ரமேஷ் அவனை சமாதானம் செய்ய முற்பட…
அந்த நேரம் பார்த்து செக்கிங் இன்ஸ்பெக்டர் அன்பை அழைக்க.. வணக்கம் சார் என புன்னகையுடன் சென்றான் அன்பு.
இன்னும் ரெண்டு மாசத்துல கால்பார் பண்ண போறாங்க அன்பு. கண்டிப்பா இந்த முறை உனக்கு கவர்மென்ட் வேலை கிடைக்கும். என்றார் செக்கிங் இன்ஸ்பெக்டர் வேலாயுதம்.
ரொம்ப தேங்க்ஸ் சார்! என அன்பு புன்னகையுடன் கூற..
இந்த வாழ்க்கை எனக்கு உங்க அப்பா சக்கரவர்த்தி போட்ட பிச்சை பா! அன்னிக்கு உங்க அப்பா கொடுத்த காசுல தான் நான் லைசென்ஸ் எடுத்து வேலைக்கு சேர்ந்து இன்னிக்கி புரொமோஷன் வாங்கி எல்லார் முன்னாடியும் வாழ்ந்துட்டு இருக்கேன். என்றார்.
நீங்க இதை சொல்லி காட்ட அவசியம் இல்லை என அன்பு தன்னடக்கம் கொண்டு பேச..
வேலாயுதம் பெரு மூச்சை விட்டபடி, எப்படி வாழ்ந்த குடும்பம் உங்க குடும்பம். ஆனால் இன்னிக்கி தலைகீழா போச்சு. உங்க மூணு அக்கா புருஷனுக எல்லாம் இப்படி மொத்த சொத்தையும் உங்க அப்பா கிட்ட எழுதி வாங்கிட்டு உணக்குன்னு எதுவும் கொடுக்காம விட்டுடாங்களே என கூற..
அன்பு அவரை பார்த்து, எனக்கு எங்க அய்யன் இருக்காப்டி! எங்க அம்மா எங்க பரம்பரை வீடு இருக்கு. அதையும் எங்க அக்காங்க கேட்டால் கொடுப்பேன் நான். எனக்கு கை கால் மொடை இல்லை. என் அப்பா அம்மா ரெண்டு பேரையும் நான் ஜம்முனு பார்த்துப்பேன் சார்! என தன்னம்பிக்கையுடன் பேசினான் அன்பு.
இத்தனை நல்லவனா இருக்க கூடாது பா! ஆனாலும் உன்னை பார்த்து பெருமையா இருக்கு என பேசிவிட்டு நகர்ந்தார்
எல்லாரும் கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துடுங்க! என தனது வகுப்பு தோழிகள். பஸ் மேட் தோழிகள் என்று அனைவரையும் அழைத்தாள் பூங்கொடி.
ஹே போகும் போது அவுட் பஸ்ல போலாம். உன்னோட மாமா பஸ்ல! அவருக்கு பத்திரிக்கை வச்சீங்களா? உனக்கு சாங்கியம் எல்லாம் அவர் தானே பண்ணனும்? என மணிமேகலை கேட்க
எனக்கு மாமனே இல்ல அவன் என்னோட மாமன் இல்லன்னு எத்தனை தடவை உன்கிட்ட சொல்றது? என்னோட அம்மச்சி விஜயலட்சுமிக்கு அவன் பிறக்கல.. அவன் அன்னலட்சுமி பையன். அவன் யாரு எனக்கு சாங்கியம் பண்ண? சரியான பொம்பள பொறுக்கி! ச்சீ அவனை எனக்கு பிடிக்காது. என் கல்யாணத்துக்கு அவன் எதுக்கு வரணும்? எனக்கு சதீஸ் சாங்கியம் பண்ணுவான்.
அது உன்னோட அத்தை பையன்! ஆனால் தண்ணி ஊத்தி புது துணி எடுத்து கொடுக்கிறது எல்லாத்தையும் தாய்மாமன் தான் பண்ணுவாங்க. என்றாள் மணிமேகலை.
அவனே பஞ்ச பரதேசி! தயவு செஞ்சு தாய்மாமன்னு சொல்லி அந்த வார்த்தைய அசிங்க படுத்தாத! என்றவள் கோபத்துடன் வீட்டுக்கு கிளம்பினாள் பூங்கொடி.
**
என்ன சதீஸ் இதெல்லாம்? என சிவராமன் கேட்க..
ஆமா மாமா! ஒரே மேடையில் எனக்கும் பூங்கொடிக்கும், மகிழ் வேந்தனுக்கும் என்னோட தங்கச்சி சத்யாவுக்கும் கல்யாணம் நடக்கணும். அப்போ தான் இந்த கல்யாணம் நடக்கும் என்றான் சதீஸ்.
என்ன கா சொல்றான் சதீசு? என சிவராமன் தன் அக்கா மனோ ரஞ்சிதத்தை பார்க்க..
ஆமா தம்பி அது தான் சரின்னு படுது என்று கூறினார் மனோ ரஞ்சிதம்.
சிவராமன்..?
மகிழ் வேந்தன் என்ன சொல்ல போறான்?
பார்ப்போம்.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels










💬 1 comment
Story Enga poi padikrayhu mam