Episode -36
பூங்கொடி சொன்ன வார்த்தைகள் அனைத்தும் ஊசி போல அவனை தாக்க, இந்த இடத்தில் வேறு எந்த ஆண்மகனாக இருந்தாலும் அவளது கன்னம் சிவந்திருக்கும். ஆனால் அன்பு செல்வன் மற்ற ஆண்களை போல அல்லவே. கைகளை இறுக்கி மடக்கியவன் கோபத்தையும் உணர்வுகளையும் கட்டுபடுத்தி கொண்டு சென்று விட்டிருந்தான்.
அத்துடன் இரண்டு நாட்கள் ஓடி இருந்தது. கல்லூரி முடிந்து முகத்தை தொங்க போட்டு கொண்டு கல்லூரி பேருந்தில் ஏறி இருந்தாள்.
பூங்கொடி! பூங்கொடி என அரக்க பறக்க ஓடி வந்தாள் மணிமேகலை.
ப்ச் என்ன? என முகத்தை சுளித்தபடி நிமிர்ந்தாள் பூங்கொடி.
ஹே ஹே என மூச்சு வாங்க பேச வந்தாள்.
என்னடி? என கோபத்துடன் முறைத்தாள்.
ஹே உன்னை கூட்டி போக அன்பு அண்ணா வந்திருக்காப்டி! உனக்காக வெயிட் பண்றாப்டி. அதான் சொல்ல வந்தேன். எந்திரி என பையை எடுத்தாள் மணிமேகலை.
என்னால வர முடியாது. நீ மூடிட்டு உன்னோட வேலைய பாரு என அப்படியே ஜன்னல் பக்கம் சாய்ந்தாள் பூங்கொடி.
மணிமேகலை சுற்றிலும் பார்த்தவள். அப்பா எமக்கிராதகி இரு டி உன்னை எப்டி வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும் என மனதுக்குள் சொல்லி கொண்டு சிரித்தவள். முகத்தை தீவிரமாக வைத்து கொண்டு அருகில் அமர்ந்தாள்.
எதுக்கு இப்படி ஒட்டி உட்கார்ந்து இருக்க? என எரிச்சலுடன் கேட்டாள் பூங்கொடி.
அதுவா அந்த கெஸ்ட் லெக்சர் மேடம் விவேகா வந்து அன்பு அண்ணா கிட்ட பேசிட்டு இருக்காங்க. நான் போகும் போதே லிஃப்ட் வேணும்னு கேட்டாங்க. என்றாள் மணிமேகலை.
வேகமாக விழித்தவள் அப்படியே ஜன்னலில் எட்டி பார்த்தாள். கோபங்கள் அனைத்தும் மலையேறி சென்று இருந்தது. பையை எடுத்து கொண்டு படபடவென கீழே இறங்கியவள். மிகவும் இயல்பாக இருப்பதை போல கேட்டை நோக்கி நடந்தாள்.
ஓகே அன்பு இன்னொரு நாள் பார்க்கலாம் என சொல்லி விட்டு விவேகா நகர்ந்து சென்று விட, அன்பு செல்வன் பூங்கொடியின் கையில் இருக்கும் புத்தக பையை வாங்கி முன்னால் வைத்து கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான். அவளும் ஏறி அமர்ந்து கொண்டாள்.
கோபம் போயிடுச்சா அமுலி என கண்ணாடியில் அவள் முகம் பார்த்தான் அன்பு.
வாயை மூடிட்டு வண்டிய ஓட்டு இல்லன்னா இறங்கி போயிடுவேன் என கோபத்துடன் கூறினாள் பற்களை கடித்து கொண்டு, அதற்கு மேல் எதுவும் பேச முடியுமா என்ன? அவள் இவ்வளவு தூரம் மலையிறங்கி வந்ததே பெரிய அதிசயம் தான்.
சிறிது தூரம் சென்றதும் வேண்டுமென்றே வம்பிழுத்தாள். டேய் எதுக்கு வேணும்னே குண்டும் குழியில் வண்டிய விடுற? என கோபத்தில் புருவம் சுருக்கி பேசினாள்.
அன்பு செல்வன் திடுக்கிட்டு ரோட்டை பார்த்தான். எந்த குண்டும் குழியும் இல்லை. இவளின் கண்னுக்கு மட்டும் எப்படி தெரிகிறது? என யோசித்தவன் உதட்டில் புன்னகை பரவ, அப்போ வேணும்னு வம்பு பண்றா. அப்போ சமாதானம் ஆகிட்டா! என தனக்கு தானே சொல்லி கொண்டவன். அமைதியாக ஓட்டினான்.
அந்த விவேகா கிட்ட என்ன பேசின?
தெரிஞ்ச பொண்ணு. என அவன் அடுத்து பேச வருவதற்குள் பூங்கொடி ஆக்டிவேட் ஆகினாள்.
வண்டிய நிறுத்து. எப்டி தெரியும்? அவள் இந்த ஊர் இல்லையே? எப்டி பழக்கம் என கேள்விகளை வரிசையாக வைத்தாள்.
அன்பு திகைத்து விழித்தவன். வேகமாக போனை எடுத்து அவனது கல்லூரி நண்பன் விஷ்வாவின் புகைபடத்தை காட்டி அமுலி இது என் காலேஜ் பிரெண்ட் அவனோட தங்கச்சி. எனக்கும் தங்கச்சி. அவ்ளோ தாண்டி நீ நினைக்கிற மாதிரி ஒன்னுமே இல்ல நம்பு பாப்பு என்றான்.
அவள் எந்த ஊரு? உன்கிட்ட எதுக்கு லிஃப்ட் கேட்கிறா?
லிஃப்ட்டா? விவேகா பெருந்துறை பக்கம் புள்ளைக கூட தங்கி இருக்குது. என்கிட்ட லிஃப்ட் கேட்கலையே? எதுக்கு அமுலி இப்படியெல்லாம் கேட்கிற? என அவளை பார்த்தான்.
எதுவும் பேசாமல் ஏறி கொண்டாள். ஹே மணி உன்னை கோவில் மணி ஆக்கறேன் டி என மனதுக்குள் சொல்லி கொண்டாலே தவிர, அவனுடன் செல்லத்தான் மனம் துடித்து கொண்டிருந்தது.
அவர்கள் வீடு வந்து சேர வாசலின் முன்னால் சக்கரவர்த்தி அமர்ந்திருந்தார். தாத்தா என கையசைத்தாள் பூங்கொடி. ம்ம் என் அப்பா கிட்ட மட்டும் பேசுவா ஆனால் என்கிட்ட பேச மாட்டாளா? என நினைத்து கொண்டு உள்ளே சென்றான் அன்பு.
வரேன் தாத்தா!! என நேராக அறைக்கு சென்றவள் பிரஷ் ஆகி வந்து கட்டிலில் அமர்ந்தாள்.
அன்பு செல்வன் அங்கு இல்லை. வெளியில் சிரிப்பு சத்தம் கேட்டது.
நான் இங்கே தனியா இருக்கேன். என்னை விட்டு போயிட்டான் என போனை எடுத்து அவனுக்கு அழைத்தாள்.
சில நிமிடங்களில் அவள் முன்வந்தான் அன்பு. பாப்பா போன் பண்ணியா?
போ போய் உன்ற அம்மா கிட்ட டீ போட்டு வாங்கிட்டு வா என்றாள் அதிகார தொனியில்..
அடுத்த நொடி அவளின் முன்னால் டீ இருக்க, அவனோ வைத்து விட்டு வெளியே திரும்பினான்.
எங்கே போற? என பூங்கொடி கேட்க,
வெளியே!! என்றவன். உனக்கு எதுவும் வேணுமா? என்று தயக்கத்துடன் கேட்டான்.
போ!! அப்படியே போயிடு என வீம்புக்கு புத்தகத்தை எடுத்து வைத்தாள்.
அமுலி.. என அன்பு அருகில் வந்தான்.
ம்ஹும் அவள் புத்தகத்தில் கவனம் செலுத்த, சென்று விட்டிருந்தான்.
சிறிது நேரத்தில் இரவு உணவை அவளுக்காக எடுத்து வந்தான்.
எதுவும் பேசாமல் வாங்கி சாப்பிட்டவள். மீண்டும் படிப்பில் மூழ்கி போனாள்.
தம்பி நேரமாச்சு போய் தூங்கு கண்ணு என அன்னத்தின் குரல் கேட்க, பூங்கொடி அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டிருந்தாள்.
உள்ளே வந்தவன் தரையில் படுக்கையை விரித்தான். அவளின் ஓர பார்வை அவ்வப்பொழுது படிந்தது. இரண்டு நாட்களும் கீழே தான் படுத்து கொள்கிறான்.
அன்பு போனை சைலண்டில் போட்டு விட்டு திரும்ப அவனையே முறைத்து பார்த்தாள்.
உஃப் என பெரு மூச்சை விட்டவன். என்னாச்சு அமுலி என கேட்டான்.
எல்லாம் உன்னால தான் வாழ்க்கையே வெறுப்பா இருக்கு டா!!.. என கண்களில் நீர் முட்டி கொண்டது.
நான் என்ன பண்ணேன்?
நடிக்காத என முகத்தை திருப்பி கொண்டாள்.
நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டேன். மேடம் ரொம்ப டெரரா இருக்கீங்க எனக்கு என அன்பு சொல்ல, ப்ச் நிறுத்து!! உன்கிட்ட என்ன சொன்னேன்? என்னை அவாய்ட் பண்ணாதன்னு சொன்னேன். எனக்கு ஒரு கால் பண்ணி சொல்லி இருக்கலாமே! என்னை விட உனக்கு நிறைய முக்கியமானது இருக்கா? என மூக்கு விடைக்க பேசினாள்.
சாரி அமுலி தப்பு தான். என் மேலே தான் தப்பு என்னை மன்னிச்சிடுடி! மாமா வேணும்னு பண்ணல தெரியாம நடந்துச்சு. இனி அப்படி நடக்காம நான் பார்த்துக்கிறேன் என்றான் அன்பு.
பிளீஸ் இனி இப்படி பண்ணாத!! And நான் இன்டென்சனா உன்னை எதுவும் சொல்லல. எல்லாமே கோபத்தில் வந்த வார்த்தைகள் தான். என்றாள்.
ம்ம் தெரியும் கோபம் வந்தால் நீ நீயா இருக்க மாட்ட என்றான் தீவிரமாக..
அதை கேட்டதும் அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது. காரணம் snickers விளம்பரம் நினைவில் வந்தது.
அப்பாடி சிரிச்சிட்டா என் பொண்டாட்டி! என்றவன் பெரு மூச்சுடன் கீழே தலையணையை போட்டு கொண்டு படுத்தான் விட்டத்தை பார்த்தபடி,
பூங்கொடி பாத்ரூம் சென்று வந்தவள் மேலே படுத்து கொண்டாள்.
வா என்று அவள் அழைக்கவில்லை. சொல்ல போனால் அவனை கீழே படு என அவள் சொல்லவே இல்லை. அவனாக படுத்து கொண்டான்.
முதுகு காட்டி படுத்தவளின் கெண்டை கால் பகுதி அன்பு செல்வனுக்கு நன்றாகவே தெரிய, கும் என தொண்டை கவ்வ, லைட்ட ஆஃப் பண்றேன் என எழுந்தான்.
இல்ல வேண்டாம் எனக்கு பயமா இருக்கு என்றாலே பார்க்கலாம்.
என்ன பயம் நான் இருக்கேனே? என அன்பு கூற..
என் பக்கத்தில் யாரும் இல்லையே என்றவள் அவனை எட்டி பார்க்க, கண்களை சட்டென மூடி கொண்டான்.
கிட்ட தட்ட அரை மணி நேரம் புரண்டு புரண்டு பார்த்தவள். அவனை எட்டி பார்க்க ஒருக்களித்து படுத்திருந்தான் அழுத்தக்காரன்.
அவனது உள்ளங்கால் பாதத்தை நுனி விரல் கொண்டு வருடினாள்.
கண்ணக்குழி கொஞ்சம் சிணுங்கியது. ஆனால் அப்படியே உறங்குவது போல படுத்திருந்தான்.
வென்பஞ்சு மேகங்கள் போல அவளின் வனப்புகள் இரண்டும் ஸ்ட்ராபெரியின் முனை போல அவனது முதுகில் பட, உதட்டை கடித்து உணர்வுகளை அடக்கினான் அன்பு.
மாமா என ஆசையுடன் அழைத்தாள். அவளின் பக்கம் திரும்பியவன். என்னாச்சு என எதுவுமே தெரியாததை போல கேட்க..
அவனது கண்களை பார்த்தாள். மயக்குகிறான் எதுவும் செய்து கீழ் உதட்டை கடித்து கொண்டவள் சட்டென எழுந்து கொள்ள முயற்சி செய்ய, கையை பற்றி இழுத்தவன் உதட்டில் முத்தமிட்டான். நீண்ட நெடிய முத்தம். அவனது கைகள் அங்கும் இங்கும் மேய்ந்தது.
எதுக்கு கீழே படுத்த? என வேகமாக விலக்கி விட்டாள் கோபத்துடன்..
என் மகாராணி கொடியிடை பேரழகி என் மேலே கோபமா இருந்தாங்க அதான் நாட்டு பிரஜை என்ன செய்வேன்? அதான் கீழே படுத்துட்டேன்.
மகாராணி மனச ஏமாத்திட்டு போனால் கோபம் வராதா? கொஞ்சுவாங்களா? என உதட்டில் முத்தமிட்டாள். மீண்டும் நீண்ட முத்தம்.
மகாராணி என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்க ரெடியா இருக்கேன் என அவன் விலக..
விடிய விடிய… கொஞ்சனும் என்றாலே பார்க்கலாம்.
அப்டியே ஆகட்டும் மகாராணி என முத்தமழை பொழிய ஆரம்பித்தான்.
மாமா மாமா என அந்த அறையின் ஒவ்வொரு மூலையிலும் எதிரொலித்தது.
இருவருக்கும் கட்டில் கூட தூரமாக இருக்க தரையிலேயே சொர்க்கம் சென்று வந்தார்கள்.
அதிகாலை மன்னவன் பூங்கொடி மார்பிலே.. காலையில் அவளின் உதட்டை கவ்வி கொண்டான் வேகத்துடன்.
பூங்கொடி அவனுக்கு இளகி இசைந்தாள். இன்னிக்கி சினிமாவுக்கு போகணும் நைட்டு ஷோ என பூங்கொடி அவன் முகம் பார்க்க,
அன்பு..?
தொடரும்..