மன்னவன் பூங்கொடி மார்பிலே

by Pradhanya kuzhali
442 views

Episode -50 

மாமா என வழக்கம் போல அன்பு செல்வனின் முன்னால் வந்து நின்றாள் பூங்கொடி. ஒரு பெரு மூச்சுடன் எதிரில் இருப்பவளை பார்த்தான் அன்பு. 

அவனிடம் தேவையில்லாமல் பேச கூடாது. செயலில் அனைத்தையும் நிரூபிக்க வேண்டும். காதலை முதற்கொண்டு என முடிவெடுத்தாள். அதற்காக அவள் செய்த முதற்படி நேராக சமையலறை சென்று உணவை செய்ய கற்று கொண்டாள். இட்லி இப்படி ஊத்த வேணும். நிறைய தண்ணி கலக்க கூடாது என அன்னம் சொல்லி கொடுக்க, அவனுக்கு என்ன பிடிக்கும் என அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டவள் அதை எல்லாம் கற்று கொண்டு உணவை எடுத்து வந்து இதோ அவன் முன் நீட்டினாள். 

அன்பு செல்வன் மறுக்கவில்லை, எதுவும் சொல்லாமல் உணவை வாங்கி சாப்பிட ஆரம்பித்தவன். ஒரு நொடி அவளை நிமிர்ந்து பார்த்தான். 

என்னாச்சு? என பூங்கொடி கேட்க, 

ஒண்ணுமில்ல என தலையை ஆட்டினான். 

அடுத்து அவன் வெளியே புறப்பட, அன்பு செல்வன் இந்த பக்கம் சென்றதும் சதீசுக்கு அழைத்தாள் பூங்கொடி. 

என்னை மன்னிச்சிடு பூங்கொடி என சதீஸ் பேச, நான் சாகிற வரைக்கும் உன்னை மன்னிக்க மாட்டேன். 

பூங்கொடி என அவன் உருக்கமாக பேச..

என் மாமா மேலே நீ தான கம்பளைன்ட கொடுத்த! ஒழுங்கு மரியாதையா அதை வாபஸ் வாங்குற இப்போவே! அதே போல என் மாமா கிட்ட போய் மன்னிப்பு கேட்கிற. இதெல்லாம் நடக்கல? அனுசுயா பியானிசி ஜெகன் மினிஸ்டர் பையன். அதனால நான் உன்னை.. என நிறுத்தினாள். 

சதீஷ் முதிர்வுடன் இந்த அளவுக்கு நீ எதுவும் செய்ய வேண்டியது இல்ல. நான் இன்னிக்கி அங்கே தான் போலாம்னு இருந்தேன். கண்டிப்பா உனக்கு நல்ல செய்தி வரும் என புறப்பட்டான். அந்த நாளின் முடிவில் வீடு தேடி வேலாயுதம் வந்து அப்பாயின்ட்மென்ட் லெட்டர் கொடுத்து விட்டு சென்றார். சக்கரவர்த்திக்கு அத்தனை சந்தோஷம். அரசாங்க வேலை என்றால் சும்மாவா? அதில் பெருமை இருக்கிறது. சர்கார் உத்தியோகம் அரசு பணி. 

தாத்தா பாயசம் பண்ணவா? என கேட்டு கொண்டே அவ்விடத்துக்கு வந்தாள் பூங்கொடி. 

சமைக்க தெரியுமா? என்ற பொண்ணுக்கு என தனக்கொடி வீட்டுக்குள் நுழைய..

சமைக்க சொன்னதே இல்ல நீ! என தன் அன்னையிடம் கூறியவள் நேராக அன்னத்தின் பக்கம் சென்று, எல்லாம் எங்கே இருக்குன்னு சொல்லுங்க என மரியாதையுடன் கேட்டாள். 

நான் செஞ்சு தரேன் அமுலி என அன்னம் கூற.. 

ப்ச் அன்னம் நீ கொஞ்சம் அமைதியா இரு. அமுலி ஆசை பட்டு கேட்கிறாள் செய்யட்டும் என்ற பேத்தி என சந்தோஷத்துடன் கூறினார் சக்கரவர்த்தி. 

போனை வைத்து கோதுமை பாயசம் செய்தாள் பூங்கொடி வீடே மணந்து கிடந்தது. 

அடேங்கப்பா!! என தனம் கிண்டலடிக்க.. 

அக்கா வாசனை நல்லாருக்கு முதல்ல எனக்கு என சங்கீதா வந்து நின்றாள். 

பூங்கொடி ஆசையுடன் ஊத்தி கொடுக்க, சூப்பர் அக்கா என ஓரிடத்தில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தாள் சங்கீதா..

மாலை ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தான் அன்பு. சரியாக அவன் வந்த நேரம் பூங்கொடி அவளது அறைக்கு சென்று விட்டாள் குளிக்க.. 

கண்ணு சந்தோஷமான விஷயம் என சக்கரவர்த்தி ஆர்டர் காப்பியை நீட்ட.. வாங்கி பார்த்தவனின் கண்கள் பணித்தது. ஆனால் பெரிதாக சந்தோஷப்பட முடியவில்லை. இது அவன் காத்திருந்து எதிர்பார்த்த ஒன்று. தீவிரமாக காத்திருந்தான். ஆனால் அது காலம் கடந்து கையில் கிடைத்திருக்கிறது. எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்? 

அன்பு இந்தா பாயசம்! இன்னிக்கி சந்தோஷமான விஷயம் என அன்னம் நீட்ட, அதே நேரம் அங்கு வந்த ஜெயக்கொடி, நானும் அதை தான் சொல்ல வந்தேன். என்றவர் சாதீசுக்கும் மேனகாவுக்கும் திண்டல் முருகன் கோவில்ல வர செவ்வாய்கிழமை கல்யாணம் பண்றதாக முடிவு எடுத்திருக்காங்க ப்பா என கூறினார். 

இதை கேட்டதும் தனக்கொடி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார். 

ஜெயக்கொடிக்கு சதீஷ் மேல் கோபம் மன வருத்தம் இருந்தாலும் சிறு வயதில் இருந்தே பார்த்திருக்கிறார். நல்ல குணமான பையன் தான் என்பதை விட இப்பொழுது வேறு வழி இல்லை. சதீஷ் இன்னும் ஒரு மாதத்தில் பாரின் செல்ல இருக்கிறான். அவன் தன் மகளை நல்ல படியாக பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தது. 

அப்படியா இதுவும் சந்தோசம் தான். நல்ல முடிவு எடுத்த ஜெயா கண்ணு. என சக்கரவர்த்தி தன் மகளை அருகில் அமர வைத்து கொண்டவர் ஆறுதலாக பேசினார். ஜெயாவின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது. 

ம்ம் பாயசம் நல்லாருக்கே! என தன் அன்னையின் தோல் மேல் கை போட்டு கொண்டான் அன்பு. 

பாயசம் செஞ்ச கைக்கு என்ன கொடுப்ப? என அன்னம் கேட்க.. 

என்ன வேணும்? என்ற அன்னத்துக்கு என அன்பு செல்வன் புன்னகையுடன் கேட்டான். 

பெருசா ஒன்னும் வேணாம். அன்னம் கடைய பூங்கொடி கடையாக மாத்திடு என்றார் சாதாரணமாக. 

அன்பு செல்வன் வெடுக்கென திரும்பி பார்க்க, எதுக்கு சித்தி? என்று தனக்கொடி கேட்டாள். 

இல்ல தனம். நம்ம வீட்டு வாரிசை பாப்பா சுமக்குது. நாளைக்கு வேலையில கூட பாப்பா தம்பிக்கு ஒத்தாசையா இருக்கும். அன்பு பஸ்சுக்கு போயிட்டா! பாப்பா எல்லாத்தையும் பார்த்துக்கும்ள அதுக்கு தான். அதை விட இந்த பாயசத்தை செஞ்சதே அமுலி தான் என்றார் அன்னம் பெருமையாக.. 

அன்பு செல்வன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, என்ன கண்ணு யோசிக்கிற? என அன்னம் உலுக்கினார். 

ம்ம் உன்னோட விருப்பம் மா! என்று விட்டு எழுந்தான் அன்பு. 

பூங்கொடி தலைக்கு துண்டை கட்டி கொண்டு வெளியே வர அதே நேரம் அன்பு செல்வனும் வந்தான். அவனை பார்த்ததும் தலையை குனிந்து கொண்டு சென்று விட்டாள். 

இரவு உணவை நேரமே சாப்பிட்டவள் அங்கும் இங்கும் நடந்தாள். குமட்டி கொண்டு வருவதை போல உணர்வு அவளுக்கு. தூக்கம் கண்ணை கட்டி கொண்டு வர, நேராக படுக்கையறை சென்றவள் பாயை விரித்து கீழே படுத்து கொண்டாள். 

அன்பு செல்வன் போன் பேசியபடி அறையில் நுழைந்தான். அவளை பார்க்க இன்னும் கோபம் கோபமாக வந்தது. பூங்கொடி என அழைத்தான். 

மெல்ல கண் விழித்தவள். ஏதாவது வேணுமா என கேட்டாள். 

இப்போ எதுக்கு கீழே படுத்திருக்க? இத்தனை நாள் காலேஜ் போகல சரி. இனி என்ன போக வேண்டியது தானே! என்ன ப்ரூஃப் பண்ண நினைக்கிற? என கோபத்தில் கேட்டான். 

இனி நான் காலேஜ் போக போறதில்லை. என்றாள் பூங்கொடி. 

“ஏன்?”

நான் என் மாமனுக்கு பொண்டாட்டியா வாழ ஆசை படுறேன் என்றாள். காதலுடன்.. 

நமட்டு சிரிப்பு அவனது உதட்டில்.. 

நீங்க என்னை மன்னிக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். இருந்தாலும் என்றவள் நிறுத்தி விட்டு நான் என்னை ப்ரூஃப் பண்ண நினைக்கிறேன். நான் பண்ணது தப்பு தான். அம்மாச்சி கிட்ட அப்படி பேசி இருக்க கூடாது. உங்ககிட்ட அப்படி பேசியிருக்க கூடாது. இப்போ எல்லாத்தையும் செஞ்சிட்டு உங்க முன்னாடி கூனி குறுகி நிக்கிறேன். என்னை உங்களுக்கு நிரூபிக்க நினைக்கிறேன். ஒரு பொண்டாட்டியா..  நீங்க ஒதுங்கி போனாலும் என்னால ஒதுங்கி இருக்க முடியாது மாமா. இதை நான் செஞ்ச எல்லாத்துக்கும் தண்டனையாக எடுத்துக்கிறேன் என மீண்டும் படுத்து கொண்டாள். 

உடைந்த கண்ணாடியை ஒட்ட வைக்க முடியாது என அவளுக்கு தெரியவில்லை. ஆம் அன்பு செல்வன் உடைந்து விட்டான். 

***

என்னமா? என மகிழ் வேந்தன் வந்தான் தனத்தை பார்க்க, 

நீ அந்த பொன்னை கட்டிக்க.. 

என்னால யாரையும் கட்டிக்க முடியாது. என கோபத்தில் கத்தி இருந்தான் மகிழ். 

நீ சவுந்தர்யாவை கட்டி தான் ஆகணும் என தனக்கொடி அதிகாரத்துடன் கூறி விட, ஒரு நொடி ஸ்தம்பித்து போனவன் தனது அன்னையின் பக்கம் திரும்பி பார்த்தான். 

தனக்கொடி கண்களில் நீருடன், யாரு பாவமும் நமக்கு வேணாம். அந்த பொன்னை உனக்கு பிடிக்கும் தானே!! வயித்துல குழந்தையோட இருந்தால் என்ன? நீ விரும்பின பொண்ணு தானே. அவளோட புருஷன் இறக்க நம்ம பஸ் கூட ஒரு காரணம் தான். நம்ம பஸ் மேலே அவனோட விதி எதுக்கு முடியணும்? வாழ்க்கை நம்ம கையில் இல்ல. ஆனா உன்ற அப்பா செஞ்ச பாவம் தான் பூங்கொடி வாழ்க்கையில் ஒரு கண்டம் போல எவ்ளோ பெரிய விசயம் நடந்து போச்சு. இதுக்கு எல்லாம் ஒரே வழி நீ அந்த பொன்னை கட்டிக்கிறது தான் என்றார். 

மகிழ் வேகமாக கண்களில் நீர் கோர்க்க தன் அன்னையை கட்டி கொண்டான். 

என்னடா பண்ற? சாராய வாடை வருது. 

இல்ல மா இனி நான் குடிக்கவே மாட்டேன். எனக்கு சவுந்தர்யா வேணும். அவள் மட்டும் போதும் என தன் அன்னையை பார்த்தான் பாசத்துடன்.. 

கண்டிப்பா!! என தனம் கையை பிடித்து கொள்ள.. 

ஆனால் இதுக்கு சவுந்தர்யா ஒத்துக்க மாட்டாள் மா. என்னை வேணாம்னு சொல்றா! அதை விட உன்னோட புருஷன். என நிறுத்தியவன்.  எல்லாமே அந்த ஆள் தான் காரணம். என தலையை கோதினான். 

நான் இருக்கேன். சவுந்தர்யா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குவா! 

மா என மகிழ் பேசவர,

அவளை ஒத்துக்க வைப்பேன். ஆனால் நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும். 

என்ன? 

இனி நீ குடிக்கவே கூடாது. அம்மா மேலே சத்தியம் பண்ணு. என தனக்கொடி கேட்க.. 

மகிழ் தனது அன்னையின் கையை பிடித்து கொண்டவன். சத்தியமா இனி குடிக்க மாட்டேன் மா என உறுதியாக கூறினான். 

தொடரும்.. 

You may also like

Leave a Comment