மன்னவன் பூங்கொடி மார்பிலே

by Pradhanya kuzhali
572 views

Episode -53 

ஈரோடு அழைத்து சென்றான் அன்பு. பூங்கொடி எதுவும் பேசவில்லை மிகவும் அமைதியாக இருந்தாள். தவறு அவள் மேலும் தானே இருக்கிறது.

மருத்துவமனை சென்று OPD பார்க்க அனைத்து பரிசோதனைகளும் மேற்கொண்டார்கள். இறுதியில் மருத்துவர் பரிந்துரைக்கு காத்திருந்தார்கள். 

பூங்கொடி அன்பு செல்வன் என செவிலி பெண் அழைக்க, உள்ளே சென்றார்கள் இருவரும். 

குழந்தை எப்படி இருக்கிறது என்று பார்த்த மருத்துவ பெண்மணி, ஹார்ட் பீட் நல்லாருக்கு. தாயும் சேயும் நல்லாருக்காங்க என்றவர். பரிசோதனை விவரங்களை பார்த்து விட்டு, ரத்தம் கம்மியா இருக்கு நல்லா சாப்பிடுங்க. ரத்தம் அதிகமாகவும். எடை கூடணும் அப்போ தான் குழந்தை ஆரோக்கியமா இருக்கும் என கூறினார். 

என்னென்ன சாப்பிடனும் டாக்டர் என அன்பு செல்வன் கேட்க.. 

மருத்துவர் உணவுகளை பரிந்துரைத்து அதனுடன் மாத்திரைகள் மற்றும் நிறைய தண்ணீர் குடிக்கும் படி சொல்லி அனுப்பி வைத்தார். 

இருவரும் எதுவும் பேசவில்லை. வீட்டுக்கு வந்ததும் அன்னம் அத்தனை முறை விசாரித்தார். 

நல்லா இருக்கு பாப்பா!! ரத்தம் கம்மியா இருக்குதாம். நிறைய தண்ணி குடிக்கணுமாம். ரத்தம் ஊற அதுக்கு தகுந்த உணவு பழங்கள் காய்கறி எல்லாம் எடுத்துக்க சொல்லியிருக்காங்க என்றான் அன்பு. 

நல்லா சாப்பிட மாட்டியா பூங்கொடி? என மிரட்டினார் தனம். 

எதுக்கு புள்ளைய மிரட்டுற? என சக்கரவர்த்தி கடிந்து கொண்டவர். அமுலி நீ போய் ஓய்வு எடு கண்ணு என அனுப்பி வைத்தார். 

தனக்கொடி சட்டென நினைவு வந்தவராய், நான் ஒரட்டு சவுந்தர்யாவை பார்த்திட்டு வந்துடுறேன். அன்பு இன்னிக்கி சாயங்காலம் உன்கிட்ட முக்கியமா பேசணும். மகிழ் வரட்டும் வரேன் கண்ணு என சொல்லி விட்டு சென்றார். 

அன்னம் உள்ளிருந்து முருங்கை கீரை வணக்குறேன் அன்பு. இன்னும் பத்து நிமிசத்தில் பாப்பா சுட சுட சாப்பிடட்டும். நீ ஒரு இளநீர் வெட்டி கொடு. ஓடு என அனுப்பினார். 

ஒரு பெரு மூச்சுடன் நேராக அறைக்குள் நுழைந்தான் அன்பு. படுக்கையில் சோர்ந்து அமர்ந்திருந்தாள். 

நேராக அருகில் சென்றவன் அவளின் முகத்தை பார்த்தான். அவனை பார்த்ததும் எழுந்து கொண்டாள். 

உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன். டைட்டாக பாவடை கட்டாத!! என்றான். 

ஹாங் என பூங்கொடி அதிர்ச்சியுடன் பார்க்க, அவளின் இடையில் இருக்கும் பாவடையை புடவையுடன் அவிழ்த்து விட்டவன். இங்கே பாரு அச்சு பதியுது. அது நல்லதுக்கு இல்ல. உப்புசமா இருக்கும் உனக்கு. அது குழந்தைக்கும் பாதிக்கும் என்றான் அன்பு. 

ம்ம் என பூங்கொடி நகர, கழுத்து எலும்பில் விரல் வைத்து வருடினான். 

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, அவ்விடத்தை விட்டு பூங்கொடி நகர செல்ல, ப்ச் இரு!! என கையை பிடித்து மெதுவாக இழுத்தான் அன்பு. 

எதுவும் பேசாமல் அப்படியே நின்றாள். அருகில் நெருங்கியவன் மெல்ல உதட்டில் முத்தமிட்டான். 

பூங்கொடி சிணுங்கியபடி நிற்க, அடுத்தடுத்து வேகமாக முன்னேறினான். மின்சாரமும் மின்சாரமும் ஒரு முனையில் தொட்டு கொண்டு தூக்கி வீசப்படும் நிகழ்வு போல, அவளை தொட்டதும் உடல்கள் எம்பி இணைய துடித்தது. 

உடை மொத்தத்தையும் களைத்து விட்டவன். வேக மூச்சுடன் கண்ட இடத்தில் எட்சில் செய்தான். 

பூங்கொடி மறுவார்த்தை பேசாமல் ஆதரித்தாள். அனைத்தும் முடிய இருவரும் இணைய வில்லை. அவள் மேல் வெள்ளப்பெருக்கு. 

பூங்கொடி கண்களை மூடி கொண்டு கிடந்தாள். நல்லாருக்கு ரொம்ப நல்லாருக்கு. கோபமும் இருக்கு. ஆன பேச மாட்டார். என்னன்னா என்ன? அவ்ளோ தான்ல. இருக்கட்டும் இருக்கட்டும். 

இப்படியே எத்தனை நாளைக்கு அப்டின்னு பார்க்கலாம். 

இளநீர் வெட்டி கொடுத்தான். அவனது முகத்தில் துளி சலனம் கூட இல்லை மிகவும் இயல்பாக இருந்தான். பூங்கொடி தான் தடுமாற்றத்துடன் இருந்தாள். சிறிது நேரம் கழித்து இருவரும் மதிய உணவை சாப்பிட்டார்கள். 

சிறிது நேரம் நடந்தவள். தூக்கம் கண்ணை கட்டி கொண்டு வர, படுக்கையில் சென்று உறங்கி விட்டாள். 

எப்படியோ மாலை ஆனது. சொல்லு கா என்ன விசயம்? என அன்பு செல்வன். எதிரில் மகிழ் நின்றிருக்க.. 

தனக்கொடி புன்னகையுடன், சவுந்தர்யாக்கு வளைகாப்பு பண்ணலாமா? ஏழு மாசம் ஆகிடுச்சு தானே!! நான் விசாரிச்சத்துல ஏழு மாசம்னு சொன்னா! அதான் அதை பத்தி உங்ககிட்ட பேசலாம்னு நினைச்சேன். 

இன்னும் ஒரு வாரம் தான் இருக்குது. அப்புறம் நோம்பி சாட்டும் பண்றாங்கம் அதுக்கு தான் முன்னாடியே வளைகாப்பு பண்றதா ஒரு முடிவு எடுத்தேன். 

மா என மகிழ் கட்டி கொண்டான். அன்பு செல்வனுக்கு கூட சந்தோஷமாக இருந்தது. அப்போ அதுக்கான ஏற்பாடு பண்ணிடலாம் நான் ரெடி. அம்மா அவள் கிட்ட நீங்க சொல்லுங்க என மகிழ் உற்சாகத்துடன் வீட்டுக்கு சென்றான். 

தனக்கொடி தனது மகனை ஆசையுடன் பார்த்தார். கண்களில் ஆனந்த கண்ணீர். 

என்னாச்சு கா? என அன்பு கேட்க.. 

என் பையன ரொம்ப வருஷம் கழிச்சு சந்தோஷமா பார்க்கிறேன் அன்பு. இது முன்னாடியே நடந்திருந்தால் அவன் குடிச்சிட்டு உதாரியா சுத்தி இருக்க மாட்டான்ல.. என்றார். 

நடந்தது நடந்து போச்சு. இன்னும் அதை பத்தி பேச என்ன இருக்குது கா? அதை விடு என்றவன். சிறிது நேரம் கழித்து, மாமா!! என கேட்க.. 

அந்த ஆளு திருந்தாத ஜென்மம் கண்ணு. விடு தம்பி நீ!! என்று பெரு மூச்சை விட்டார். 

அடுத்த நாள் பரபரப்புடன் விடிந்தது. தனக்கொடி வளைகாப்பு விசயத்தை சொல்லி கேட்டார். 

அவர் வரட்டும் அத்தை கேட்டு சொல்றேன் என சவுந்தர்யா கூற.. 

அவனுக்கு அவ்ளோ சந்தோசம் கண்ணு. எல்லாமே நல்லபடியா முடியும். நீ கவலை படாத. நல்லா சத்தா சாப்பிடு என பேசி விட்டு கிளம்பினார். 

தனக்கொடி இந்த பக்கம் கிளம்பிய அடுத்த நொடி போன் செய்து மகிழை வரவைத்தாள் சவுந்தர்யா. 

ஆசையுடன் ஓடி வந்திருந்தான் மகிழ். வந்ததும் வராததுமாக யாரை கேட்டு வளைகாப்பு முடிவு பண்ணீங்க? என குதித்தாள் சவுந்தர்யா. 

மகிழ் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. சவுந்தர்யா நான் சொல்ல வரத கேளு என மகிழ் கூற.. 

என் குழந்தைக்கு வளைகாப்பு பண்ண நீங்க யாரு? என கோபத்துடன் பொங்கி வெடித்தாள் சவுந்தர்யா. 

மகிழ் வேந்தன் அவளை வேதனையுடன் பார்த்தான். 

நானும் சொல்ல கூடாது, வேணாம். பொறுமையா இருக்கலாம், கோபத்தை கட்டு படுத்தலாம் அப்படி இப்படின்னு நினைச்சு இருந்தால் நீங்க ரொம்ப ஓவரா போறீங்களே! எனக்கு உங்களையே சுத்தமா பிடிக்கல. வேற வழியே இல்லாம தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். பிளீஸ் தயவு செஞ்சு என்னை தொந்தரவு பண்ணாதீங்க என சொல்லி விட்டு நகர்ந்தாள் சவுந்தர்யா. 

பிடிக்காத ஒரு விசயத்தை வற்புறுத்த கூடாது என மருகி கொண்டே அங்கிருந்து புறப்பட்டான் மகிழ். 

யூரின் செல்லும் போது இரண்டு நாட்களாக ஒரே எரிச்சல் உணர்வு. ஹாஸ்பிடல் செல்ல வேண்டும் என நினைத்தவள் எதற்கு அன்பு செல்வனை தொந்தரவு செய்ய வேண்டும்? வந்தால் கூட தன்னிடம் பேச மாட்டான் என நினைத்தவள். மதியம் ஹாஃப் சொல்லி விட்டு நேராக ஹாஸ்பிடல் புறப்பட்டாள். 

யூரின் டெஸ்ட் மற்றும் அதனுடன் இன்னும் சில பரிசோதனை கொடுத்தவள். தன் தந்தைக்கு போன் செய்து பணம் வாங்கி கொண்டாள். சிவராமனுக்கு பூங்கொடி மேல் எந்த கோபமும் எப்போதும் வந்ததில்லை. தினமும் மகளிடம் பேசுவார். அவளும் அப்படிதான் எதுவாக இருந்தாலும் தன் தந்தையிடம் பகிர்ந்து கொள்வாள். 

Infection ஆகி இருக்கு மா! அதுக்கு பவுடர் எழுதி கொடுக்கிறேன் தண்ணில கலந்து குடிங்க. ரொம்ப hydrated ஆக இருக்கணும். மாத்திரைகளை எடுத்துக்கோங்க. அடுத்த வாரம் பார்க்கலாம். நடுவில் ஒரு டெஸ்ட் கொடுத்திட்டு போங்க. தொந்தரவு தொடர்ந்து இருந்தால் வாங்க பார்த்துக்கலாம் என கூறி அனுப்பி வைத்தார். 

மருத்துவமனையில் இருந்து புறப்பட்டவள் நேராக பஸ்டாண்ட் சென்றாள். எதேச்சையாக திரும்பினாள் காக்கி சட்டையில் கம்பீரமாக நின்று டிக்கெட்டுகளை சரி பார்த்து கொண்டிருந்தான் அன்பு. 

அச்சோ மாமாவோட பஸ்ல போக வேணாம். இல்லன்னா ஆயிரம் கேள்வி கேட்டு குடையும். என் மேலே மறுபடியும் கோபப்படும் என நினைத்தவள் அங்கிருந்து இன்னொரு தனியார் வண்டியில் ஏறி கொண்டாள். கிட்ட தட்ட பாதி தூரம் வந்ததும் தான் டிக்கெட் எடுத்தாள். 

அண்ணா தெற்கு புதுப்பாளையம் ஒன்னு என பணத்தை நீட்டினாள். 

கண்டெக்டர் விசில் அடித்து விட்டு திருப்ப, என்னங்க இந்த பக்கம் திரும்புது. மொடக்குறிச்சி வழின்னு போடவே இல்லையே? என பூங்கொடி கேட்க.. 

ஒரு ட்ரிப் இந்த வழியில் போவோம் கண்ணு. என கண்டெக்டர் கூற, அப்போ நான் இங்கனயே இறங்கிக்கிறேன் என்றவள் சோலார் பிரிவு வரை காசு கொடுத்து விட்டு காத்திருந்தாள்.

தண்ணீரை குடித்து விட்டு காத்திருந்தாள். அன்பு செல்வனின் பேருந்து தான். பூங்கொடி பின்னால் ஏறி கொண்டவள் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள். 

டிக்கெட் டிக்கெட் என கேட்டு கொண்டே அனைவரிடமும் பேசி கொண்டு வந்தான் அன்பு. ஒரு திருமணத்துக்கு ஒப்பனை செய்து முடித்து விட்டு அன்பு செல்வனின் பேருந்தில் தான் ஏறினாள் திவ்ய பாரதி. அவள் பூங்கொடி இருப்பதை கவனிக்கவில்லை. பேருந்து கொஞ்சம் கூட்டமாக இருந்தது. 

அம்பு செல்வன் ஓடுவது அரசு பேருந்து.ஹாய் அன்பு என கையை காட்டியவள். நேராக திவ்யா அவனது இருக்கையில் போய் அமர்ந்து கொண்டவள் டிரைவரிடம் பேசி கொண்டே வந்தாள். பூங்கொடி மனதில் ஒருவித பதட்டத்துடன் நின்றிருந்தாள். அன்பு தன்னை பார்த்து விட கூடாது என்று. 

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் குறைய,  இதோ பூங்கொடி இருக்கும் பக்கம் திருப்பினான். அதற்குள் திவ்யா, அன்பு போன் கொடுங்க முக்கியமான கால் பேசணும் என வேகமாக அவனருகில் வந்தாள். ஒரு நிமிசம்  என அவன் சொல்லி விட்டு டிக்கெட் கொடுத்து விட்டு திரும்ப, சீக்கிரம் சீக்கிரம் என சிணுங்கி கொண்டே கேட்டாள். 

அந்த பொண்ணுக்கு போனை கொடு பா என அருகில் இருப்பவர்கள் கூற, தேங்க்ஸ் என அவனது கையில் இருந்து பிடுங்கி கொண்டு போய் அமர்ந்தாள். 

இப்பொழுது தான் பூங்கொடியின் பார்வை கொஞ்சம் ஆழமாக திவ்யாவின் மீது படிந்தது. 

டிக்கெட் என அன்பு செல்வன் பின்னால் வர, தெற்கு புதுப்பாளையம் என காசை நீட்டினாள் பூங்கொடி.

அன்பு..? 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment