Episode -62
ரிதம் அப்படியே திகைத்து போயி அந்த படத்தை வருடி பார்த்தவழுக்கு அவன் விட்ட அரையில் கண்ணம் வீங்கி வலிப்பது தெரிய போனை தூக்கி போட்டாள்.
அந்த நேரம் உணவுகளுடன் உள்ளே வந்தான் சத்ய தேவ்.
ரிதம் அவனை கண்டு கொள்ளாமல் திரும்பி படுக்க…
ரிதம் சாப்பிடு!! நீ கேட்டியே!! நீ சொன்னது போலவே மோர் குழம்பு, சூடான சாதம் அது கூடவே உருளை கிழங்கு பொரியல் செஞ்சிறுக்கேன் என நீட்டினான்.
ரிதம் அமைதியாக இருக்க..
“எழுந்து சாப்பிடு!!”
பதில் இல்லை..
தட்டை அருகில் வைத்தவன். அவளின் பாதத்தில் முத்தமிட்டான்.
“ச்சீ விடு!!”
போட்டோ பார்த்தியா என அவள் உதைக்கும் காலை நெஞ்சில் வைத்து கொண்டான்.
ரிதம் வேக மூச்சுடன் என்ன போட்டோ? இப்போ என்ன சீன் கிரியேட் பண்ண போற? வந்துட்டான் மயிரு மாதிரி போடா!! என எட்டி உதைத்தாள்.
புதுசா சீன் கிரியேட் பண்ணல!! இது நாள் வரை மறைச்சு வச்சிருந்த மாஸ்டர் பீசை உன் கிட்ட காட்டினேன். இது போல இன்னும் நிறைய இருக்கு. நீ ஷேமா இருக்கிறது வரைக்கும் வச்சிருக்கேன் என்றான் சத்ய தேவ்.
வெடுக்கென எழுந்து அமர்ந்தவள் அவனை நம்ப முடியாமல் பார்க்க..
சாரி டி!! தெரியாம எதோ கோபத்தில்.. ஒரு உரிமையில் அடிச்சுட்டென் என்றான் சத்ய தேவ்.
என் மேலே உனக்கு எந்த உரிமையும் இல்ல மைன்ட் யுவர் டங்க்.. I hate you.. புல்ஷிட் என கத்தினாள்.
ரிதம் என அவளின் பாதத்தில் வேகத்துடன் முத்தமிட்டான்.
அவனது வேகம் அவளின் கோபத்தை இழக்க செய்ய.. அதற்கு பதில் உடல்கள் சிலிர்த்து கொண்டது. ஹே விடுறா!! ஹே விடுன்னு சொன்னேன். என ரிதம் சொல்லி கொண்டே உதற முயற்சி செய்ய..
அடுத்து முத்தங்கள் விபரீதமாக பயணித்தது. ஆம் சத்ய தேவ் டீ சர்ட்டை கழட்ட..
ஹே எனக்கு பசிக்குது என அவள் பதட்டத்துடன் கூறவும் தான் விட்டான்.
ரிதம் சாப்பிட ஆரம்பிக்க.. கொடு நான் ஊட்டி விடுறேன். என தட்டை பிடுங்கினான்.
இரண்டு வாய் பிரச்னை இல்லாமல் வாங்கி கொண்டாள்.
ம்ம் ஆ சொல்லு என அவன் கேட்க..
ஐ ஹேட் யூ இந்த அடிய நான் எப்போவும் மறக்க மாட்டேன்.
ஓகே!! ஆ காட்டு.
என்னமோ ஃபோட்டோ வச்சிருக்கேன்னு சொன்ன? என்ன போட்டோ?
சத்ய தேவ் உதடுகள் கொஞ்சம் விரிய..
ஹே என்ன போட்டோ!! சிரிக்காத டா முதல்ல பல்லை காட்டுறத நிறுத்து. என உறுமினாள்.
ஆ காட்டு!
நீ முதல்ல காட்டு!! என ரிதம் திரும்பி கொள்ள..
Tab ல இருக்கு.
“பாஸ்வேர்ட் சொல்லு!”
“Love You”
ஹே பாஸ்வேர்ட் சொல்லு என ரிதம் அதட்ட..
“Love You தான் பாஸ்வேர்ட்” என்றான் சத்ய தேவ்.
ரிதம் அவனை முறைத்தபடி தட்டினாள். ஆனால் டாக்குமென்ட் திறக்க வில்லை.
டேய் விளையாடாத I hate you!!
சாரி பாஸ்வேர்ட் வந்து ம்ம் I love you ரிதம் என உணவை ஊட்டினான். இந்த வார்த்தையை அவன் ஒரு முறை கூட சொன்னதில்லை. அவளின் மொத்த வாழ்க்கையிலும்.. ரிதம் அப்படியே அமர்ந்திருக்க..
இது தான் பாஸ்வேர்ட்!! போடு நீ!! என சத்ய தேவ் கூற..
இல்ல வேணாம் என ரிதம் திரும்பி கொண்டாள்.
ஹே ஆ போடு!! என வாய்க்கு அருகில் நீட்டினான்.
அவன் முன் அழ கூடாது என்று இருந்தவள் இதோ இன்று கண்களில் நீர் திரண்டது. எதற்கு இந்த அழுகை? அந்த வார்த்தைக்காக தான் I love you என கூறினானே! இது வார்த்தை அல்ல வரம். செத்து பிழைத்து வந்தும் கூட இதை சொல்ல வில்லை.
ஹே என்னாச்சு எதுக்கு அழற? என சத்ய தேவ் கேட்க..
எனக்கு போதும் என்று பாத்ரூம் சென்றாள்.
ஹே ரிதம்!! கொஞ்சம் தான் சாப்பிட்டிருக்க!! என சத்ய தேவ் கூற..
எனக்கு போதும் பிளீஸ் லீவ் மி என கூறினாள்.
சத்ய தேவ் தட்டை கிச்சன் எடுத்து சென்றான்.
ரிதம் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவள். படுக்கையில் வந்து அமர்ந்தாள்.
அங்கே tab இல்லை.
ஒரு பெரு மூச்சுடன் அவள் திரும்ப tab நீட்டினான்.
அதில் வரிசையாக ரிதமின் படங்கள். மகியுடன் சிறு வயதில், போனி டெய்லில், ரெட்டை ஜடையில், மஷ்ரூம் கட்டிங்கில், பாப் கட்டிங்கில், ஸ்கட், பனியன், பேலட் டான்ஸ் உடையில், என வரிசையாக ரிதம்.
எதுக்கு இதையெல்லாம் நீ வச்சிருக்க? என ரிதம் கேட்க..
“Because I love you”
What? என ரிதம் கண்களை விரித்து கேட்க..
“யெஸ் நான் உன்னை காதலிக்கிறேன்.”
நான் நம்ப மாட்டேன் என ரிதம் திரும்பி கொண்டாள்.
“இது தான் உண்மை!!” என சத்ய தேவ் சொல்ல..
நீ ஹரிணிய தானே லவ் பண்ண? அதுவும் சின்ன வயசுல இருந்து? நீ எப்டி என்னை?
நான் உன்னை தான் லவ் பண்ணேன் சின்ன வயசில இருந்து. ம்ம் சரியா சொல்ல போனால் உன்னை பார்த்ததுல இருந்து. என்றான் சத்ய தேவ்.
ரிதமின் இதயம் வேகமாக துடிக்க உள்ளங்கை வியர்க்க அமர்ந்திருந்தாள்.
சத்ய தேவ் புன்னகையுடன் அவளை பார்க்க..
ம்ம் நல்லா ஏமாத்து!! நீயா என்னை கல்யாணம் பண்ணிக்கல!! மகி மாமி சொன்னாங்கன்னு கல்யாணம் பண்ணிக்கிட்ட டா! நான் உன் பின்னாடி நாய் மாதிரி சுத்தினேனே அப்போ இதை நீ சொல்லி இருந்தால் நான் நம்பி இருப்பேன். உன்னை நம்ப மாட்டேன் சத்ய தேவ்! பிளீஸ் போயிடு!! என ரிதம் முகத்தை திருப்பி கொண்டாள். கண்களில் நீர் கோர்த்தது இதயம் வேகமாக துடித்தது.
சரி தான் நான் உன் கிட்ட லவ்வை சொல்லல ஆனால் நான் உன்னை லவ் பண்றேன்.
போடா ** என கெட்ட வார்த்தையை பொழிந்தாள்.
சத்ய தேவ் அவளின் கையில் இருக்கும் படத்தை காட்டி, எங்க வீட்ல நீயும் அம்மாவும் சேர்ந்து இருக்க ஒரு போட்டோ எங்க பெட் ரூமில்.. இதோ இந்த போட்டோ இருக்கும் தூங்க போகும் போது உன்னோட முகத்தை பார்த்திட்டு தூங்குவேன். நீ சக்தி அண்ணான்னு கூப்பிடும் போது ஒரு மாதிரி எனக்குள்ள பண்ணும் டி!! ஆனால் நித்தினுக்கும் எனக்கும் நடந்த சண்டையில நீ என்னை விட்டு போய் அவனுக்கு சப்பொட் பண்ணி மிதுன் கூட நின்னியே அது எனக்கு பிடிக்கல டி! நீ என் பின்னாடி இருப்பான்னு நினைச்சேன். நீ மிதுன் கூட பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்காது.
மிதுன் யாரு தெரியுமா? உன்னை மாதிரி இல்ல டா அவன்!! அவன் எனக்கு எல்லா இடத்துலயும் என் கூட நின்னவன். மிதுன் என ரிதம் அவனது புராணம் பாட.. சத்ய தேவ் உடலை முன்னால் வளைத்து அவளின் உதட்டை கவ்வி கோபத்துடன் முத்தமிட்டவன். மூச்சுக்கு தவித்தவளை கொஞ்சம் ஆசுவாச படுத்தி கொள்ள நகர்ந்து “ஏன்னா நான் உன்னை விரும்புறேன் ஸ்டில் இப்பவும் எப்போவும்.”
நான் நம்ப மாட்டேன் சத்ய தேவ். அந்த ஹரினியும் நீயும்!! அவள் அவளை நீ லவ் பண்ணது எனக்கு நல்லா தெரியும். என ரிதம் திரும்பி கொள்ள..
சத்ய தேவ் சிரித்து கொண்டே எனக்கு அது தான் தேவை பட்டது. நீ எனக்காக ஏங்கனும்ன்னு நான் நினைச்சேன். என்னை லவ் பண்றேன்னு நீ சொல்லனும்னு நான் நினைச்சேன். ஆனால் இது வரை இந்த அஞ்சு வருஷ கல்யாண வாழ்க்கையில் நீ அந்த வார்த்தைய சொல்லவே இல்லையே! இப்போ கூட நான் தானே உன்னை விரும்புறதாக சொல்லி இருக்கேன். கடைசியாக நம்ம பாப்பா வயித்துல இருக்கும் போது நீ கஜுராஹோ போய் நான் அப்பா ஆக போறேன்னு சொன்ன!! ஆனால் லவ் யூ சொல்லலையே!!
ரிதம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..
இப்போ பதில் சொல்லு டி!!
நான் நம்ப மாட்டேன் சத்ய தேவ்! என எழுந்தாள்.
சத்ய தேவ் அவளின் கை பிடித்து லண்டன் ல இருந்து நம்ம ஃப்ளைட்ல வரும் போது ஏர்போர்ட் ல என்னை தெரியாத மாதிரி சண்டைக்கு வந்தியே அப்போ உன் மேலே ஈர்ப்பு வந்தது.
பிளீஸ் விடு சத்ய தேவ்!;
நீ நம்ப மாட்டேன்னு தெரியும் ஆனால் நீ அன்னிக்கு ட்ரெயின்ல மும்பையில் இருந்து சென்னை R ac அதுவும் தேர்ட் கிளாசில் வந்ததுக்கு கூட நான் தான் காரணம். என்றான் சத்ய தேவ் அவளை பார்த்து கொண்டே
ரிதம் அதிர்ச்சியுடன் திரும்ப..
சத்ய தேவ்..?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels